விடை பெறுகிறேன்

Posted on Updated on

அண்ணே வணக்கம்ணே !
அனுபவஜோதிடம் டாட் காமோட பேண்ட் விட்த் எக்ஸீட் ஆயிருச்சு. ( ஒரு மாசத்துல இத்தனை ஹிட்ஸ் தான் வரனும்.அதுக்கு மேல போனா அதை பேண்ட் விட்த் எக்ஸீட் ஆயிருச்சுங்கறாங்க)
எனவே மேற்படி அ.ஜோ சைட் ஆகஸ்ட் 1 ஆம் தேதிதான் ஓப்பன் ஆகும். அதனால இந்த வோர்ட் ப்ரஸ் தளத்துல இந்த பதிவை போடவேண்டியதாயிருச்சு. இனி தலைப்புக்கு வந்துர்ரன்.
பதிவுலகத்துல அப்பப்போ விலகிக்கிறேன்னு ஃபிலிம் காட்டனும்.  ( இது நம்ம கேரியர்லயும் நடந்தது. எவனோ ஒரு பிக்காலி ஒரு கமெண்ட் போட்டான்  -ரஜினிய கிழிச்சதும் வந்த கமெண்டுங்கறதால -அது ரஜினி ரசிகன் போட்டதா தான் இருக்கனும்.
“ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறே” இதான் கமெண்ட்.ஒடனே நாம உ.வ பட்டு பலான தேதிக்குள்ள இத்தீனி ஃபாலோயர் சேரலின்னா பதிவுலகத்துலருந்து விலகிக்கிறேன்னு பதிவு போட்டுட்டன்.
அப்பாறம் கொஞ்சம் தெளிஞ்ச பிறவு “பதிவுலகத்துல இதெல்லாம் சகஜமப்பான்னு லூஸ்ல விட்டுட்டு கன்டின்யூ ஆயிட்டன்.
இப்பம் விடை பெறுகிறேங்கறது டெம்பரரி. இதுக்கு மிந்தி தினசரி ரெண்டு மூனு பதிவெல்லாம் போட்ட நாள் போயி வாரம் ஒரு பதிவுக்கே சிங்கியடிக்கிறம்.
அந்தளவுக்கு கற்பனை வறண்டு போயிருச்சுன்னு  நினைக்கப்போறிங்க.அதெல்லாம் புஷ்கலமா இருக்கு. வேலை சாஸ்தி. (வருமானமும் சாஸ்திதேன்) .முடியலை.
மிந்தி தினசரி ரெண்டு வேளை ஊர்வலம் நடக்கும். இப்பம் ஒரு வேளையாகி – கடந்த ஒருவாரமா வீட்டுச்சிறை. இதெல்லாம் வேலைக்காகாது. இப்படியே போனா சட்டைய கிழிச்சுக்கவேண்டியதுதேன்.
அதனால விடை பெறுவது என்னமோ கியாரண்டி ஆனா டெம்ப்ரரியா விடை பெற டிசைட் ஆயிட்டன். முக நூல் ஆக்டிவிட்டீஸ் கூட ரெம்ப குறைச்சாச்சு. அதனால நிலுவையில உள்ள வேலைகள் பைசல் ஆற வரைக்கும் – என்ன மேக்சிமம் 20 நாள் -பதிவுலகபக்கம் திரும்பறதா இல்லை. சாரி !
என்னடா இது .இந்த புலம்பலுக்கே இந்த பதிவு சரியா போச்சான்னு பேஜாராயிராதிங்க. மேட்டருக்கு வரேன்
கடந்த பதிவுல கேது காதலோட லட்சணத்தை பார்த்திருப்பிங்க. ஒரு மன்சன் தப்பு பண்றான்னா ஏதோ ஒரு காரணம் இருக்கும். ஒரு மன்சனுக்கு தண்டனை கிடைக்குதுன்னா அவன் ஏதோ தப்பு பண்ணியிருப்பான். இந்த லாஜிக்கெல்லாம் கேது காதல்ல செல்லாது.( கேது தசை கேது புக்தி நடக்கிறவுக மேட்டர்லயும் செல்லாதுங்கோ).
காரணம் இல்லாம ஒருத்தன் தப்பு பண்றான் -தப்பே பண்ணாம ஒருத்தன் தண்டனை அனுபவிக்கிறான்னா ஒன்னு ஜாதகத்துல கேது பல்பு வாங்கியிருக்கனும் -இல்லை கேது தசையோ கேது புக்தியோ நடக்கனும் -அதுவும் இல்லின்னா கேது காரகம் கொண்ட பெண்ணை கண்ணாலம் கட்டியிருக்கனும்.
நமக்கு போன ரவுண்டுல  ஜன்மத்துல கேது -ஏழுல ராகு வந்தப்போ – கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டமா செமர்த்தியா நாறிட்டம். அந்த இம்பாக்ட் இன்னமும் நம்ம இமேஜ் மேல இருக்குன்னா பார்த்துக்கங்க.
ஆனால் 1997 ல சுக்கிரதசையில கேது புக்தி நடந்தப்போ வடிவேலு ஏதோ படத்துல சொல்றாப்ல “சனங்க எடுத்த முடிவெல்லாம் நமுக்கு சாதகமாவே இருந்ததா “பிழைச்சோம்.
அஃதாவது அப்பா டிக்கெட் போட்டாரா?  – அண்ணன் தம்பிங்க ஊட்ல சேர்க்க மாட்டேன்னுட்டாய்ங்க – அண்ணிக்காரி ஹால் சோஃபால கூட உட்கார விடாம கேட்டை பூட்டி சாவி வச்சுக்கிட்டா – காலனி கணக்கா ஊடு இருக்கிற நண்பன் இவன் இருக்கிற நிலைக்கு இவன் எங்கே வாடகை தரப்போறான்னு மறுத்துட்டான்.
தான் வீடு கட்டற – சிமெண்டு இத்யாதி ஸ்டாக் வைக்க தன் ப்ளாட்டுக்கு பக்கத்துல இருந்த அண்ணன் காரன் ஃப்ளாட்ல ஒரு குடிசை போட்டு வச்சிருந்தான். ஒத்தையா ஓலை போட்டது-அதுவும் பலவருசமானது என்னா கதியில இருக்கும் கணக்கு போட்டுக்கங்க.
அதை காட்டி அதுல வேணம்னா இருன்னான். நமக்கு அதைவிட பெட்டர் சாய்ஸ் எதுவுமில்லை. மழையும் , சூரிய ஒளியும் சந்திர ஒளியும் சீன,பாக் படைகள் போல ஊடுருவும். தரை வெறும் மண்ணு.சுவரு இடுப்பளவுதேன். கோதாவுல இறங்கிட்டம்.
அந்த நேரம் நடந்த கேது புக்திக்கு அதுதான் அயனான பரிகாரம்னு அப்ப தெரியாது. அப்பாறமா டாலி பண்ணிக்கிட்டம்.
இவர் ஞான காரகன், மோட்ச காரகன் என்பதால் ஞானத்தை, மோட்சத்தை  மட்டும் தரனும் . ஞானம் எப்போ வரும்? எல்லாத்தயும்  இழந்தால் தான் வரும்.
மேலும் ஞானம் எங்கே கிடைக்கும்? போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,ஆஸ்பத்திரி,சுடுகாடு மாதிரி ஸ்கூல்ஸ்ல பல்க்கா கிடைக்கும்.
மோட்சம் எப்போது கிடைக்கும் கரும பலன் எல்லாம் அநுபவித்து முடித்தபின் வரும். கரும பலன் களை கழிக்க என்ன நடக்கும்? சோதனை மேல் சோதனை வரும்.
கேது கொடுக்கிறது ரெண்டே சாய்ஸ்.ஒன்னு செயின்ட் (சன்யாசி) அடுத்தது பெக்கர் (பிச்சைக்காரன்).
நீங்க செய்ன்டை போல வாழ்ந்தா கோடிகள் புரட்டலாம். அதை விட்டுட்டு உலக வாழ்க்கைய அனுபவிக்க நினைச்சா பெக்கராயிருவிங்க. இதான் சூட்சுமம்.
ஒரு இருபது நாள் பொறுத்துக்கோங்க. கேது காதலுக்கான டீட்டெய்ல்ட் பரிகாரங்களை பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s