உத்தராகாண்ட் உயிர் பலிகள்: காரணம் இயற்கையா? அலட்சியமா?

Posted on

SHIVA BEFORE FLOODS AND AFTER
அண்ணே வணக்கம்ணே !
இதுக்கு மிந்தி 2009 லன்னு ஞா . நாகார்ஜுன சாகர் பிழைக்குமான்னு ஒரு பதிவு போட்டேன். ஆரும் கண்டுக்கலை. கடுப்பாயித்தான் செக்ஸ் ஜோக்கும் -மனோ தத்துவமும்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சு லீடிங் ப்ளாகராகி ரெண்டு நாளா அனுபவஜோதிடம் டாட் காம் பெண்ட் விட்த் எக்ஸீடட்னு சொல்ற ரேஞ்சுக்கு வந்துட்டம்.
ஆனாலும் பொறுப்புன்னு ஒன்னிருக்கில்லியா. அதனாலதேன் இந்த பதிவு . உத்தராகாண்ட்ல ஏற்பட்ட இமாலய சுனாமி,ஜல பிரளயம், மரணத்தின் கோர தாண்டவம் அதனோட வீரியம் பத்தில்லாம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும்.
இந்த பதிவு நடந்தபோனதை  புலம்பறதுக்கில்லை. தாளி.. ஒரே ஒரு லட்ச ரூவா செலவழிச்சிருந்தா மேற்படி இயற்கை பேரிடரை -பேரழிவை தவிர்க்க முடியலின்னாலும் உயிர் நஷ்டங்களை யாவது தவிர்த்திருக்கலாம். என்னா அது லட்ச ரூவா ஐட்டம்? ஜஸ்ட் ஒரே ஒரு சாட்டிலைட் ஃபோன். அதனோட விலை ஒரு லட்சரூவாயாம்.
இத்தனைக்கும் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை கடந்த 4 வருசமா தலபாடா அடிச்சிட்டே இருந்திருக்கு.”கொய்யால.. இந்த டெலிஃபோன்,செல்ஃபோன்லாம் டுபாகூரு. புயல் ,வெள்ளம் மாதிரியான  எமர்ஜென்சியில வேலைக்காகாது. கு.பட்சம் மாவட்ட மையங்களிலாவது சாட்டிலைட் ஃபோன் இருந்தாகனும்”னு ப்ரப்போஸல் அனுப்பிக்கிட்டே இருந்திருக்கு.
ஆனால் மத்திய உள்துறை இதெல்லாம் வெட்டிச்செலவுன்னு ஃபைலை திருப்பியடிச்சிட்டே இருந்திருக்கு. திட்ட கமிஷன் அலுவலகத்துக்கு கோடிகள் செலவழிச்சு கக்கூஸு கட்டறது மட்டும் வெட்டி செலவில்லையாம்.
இதுமட்டுமில்லை. டெஹ்ராடூன் வானிலை அறிக்கை மையம் 48 மணி நேரத்துக்கு மிந்தியே இந்த மேரி பேய்  மழை வரப்போகுதுன்னு எச்சரிக்கைல்லாம் கொடுத்திருக்கு. கண்டுக்கறவன் தான் காணோம். இப்பம் கேட்டா நிலைமையின் தீவிரத்தை விவரிக்கலின்னு சொல்றாய்ங்களாம்.
சரி ஒழியட்டும் வருமுன்னர் தான் காக்கலை. கு.ப வந்த பின்னாவது வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கனும்ல? ஊஹூம்.ஊழித்தாண்டவம் துவங்கி 72 மணி நேரம் களிச்சுத்தான் மொத  மீட்பு க்ரூப் ஃபீல்டுல இறங்கியிருக்கு. சோகம் என்னடான்னா அவிக கிட்டயும் சாட்டிலைட் ஃபோன் கிடையாது.
பெரும்சோகம் என்னன்னா எல்லா அழிவும் நந்த முடிஞ்ச பிற்காடு 100 சேட்டிலைட் ஃபோன் உத்தராகாண்ட் அரசுக்கு  தரப்பட்டிருக்கு (அதிலாவது அதிகாரிகள் மதியத்துக்கு என்ன குழம்புன்னு கேட்காம இருக்கக்கடவராக)
48 மணி நேரத்துக்கு மிந்தியே எச்சரிக்கை வந்தும் தூங்கி வழிஞ்ச பிரதமர் அலுவலகம்,மத்திய உள் துறை , இயற்கை பேரிடர் மேலாண்மை துறைகள் டிவி நியூஸ் பார்த்துத்தான் அலார்ட் ஆகியிருக்காய்ங்க.
இவிகளை தில்லியில உள்ள ஏதாச்சும் சலூன்ல உட்கார வச்சாலே போதும் போல (அங்கதான் டிவி இருக்குமில்லை) இவிகளுக்கெல்லாம் ஒரு ஆஃபீஸு ,கம்ப்யூட்டரு, செகரட்டரி.
தூத்தெறிக்க..!

6 thoughts on “உத்தராகாண்ட் உயிர் பலிகள்: காரணம் இயற்கையா? அலட்சியமா?

  Muthamizh C said:
  June 30, 2013 at 7:30 pm

  Indha mathiri periya iyarkai perazhivugalai..jothidam moolamaga munnarivikka mudiuma? thulliamaga? Gujarat boogambathayo..thane puyal ayo yarenum munname solli irukirargala?

   sambargaadu responded:
   July 3, 2013 at 7:47 am

   வாங்க முத்தமிழ் !
   ஜோதிடங்கற கடல்ல இயற்கை பேரிடர்களை கணிப்பதும் ஒரு முத்து. ஆனா என்ன பண்றது சனம் எங்களை வேற மாதிரியில்லை யூஸ் பண்றாய்ங்க. ஒரு ரூட்டுல போயிட்டமா .. ரூட் (வேர்) டை மறந்துட்டம்

  துடிமன்னன் said:
  July 1, 2013 at 5:44 am

  /–
  திட்ட கமிஷன் அலுவலகத்துக்கு கோடிகள் செலவழிச்சு கக்கூஸு கட்டறது மட்டும் வெட்டி செலவில்லையாம்.
  –/
  சிவில் வேலைகள்-லதான் சாமி பணம் அடிக்க முடியும். எவ்வளவு காங்க்ரீட் போட்டான் எத்தன மண் நிரவுனான் இதெல்லாம் Non-Measurable.
  சேட்டிலைட் போன் வாங்குனா எப்படிப் பணம் பண்ண முடியும்?

  இன்னொரு விஷயம் என்னன்னா, எவ்வளவுதான் எச்சரிக்கை கொடுத்தாலும் வேடிக்கை பாக்கப் போயி சாகற மக்களும் கணிசமான அளவுல இருக்காங்க.
  சுனாமி வந்தப்போ வேடிக்கை பாக்கப்போயி சிக்கி உயிர் விட்டவங்க எத்தனையோ பேரு.
  நமக்கு ரெண்டு வீடியோ ஃபார்வார்ட் ஆகி வந்தது.
  ஒரு வீடியோல, ஒரு கும்பல் நட்ட நடு ஆத்துல போயி நின்னுகிட்டு தண்ணி குழியில விழறத போட்டோ எடுத்துக்கிட்டு இருக்காங்க. வெள்ளம் பெருகி வர்ரதப் பாத்த சில பேரு ஓடி கரைக்கு வந்தர்றாங்க. ஆனா அஞ்சு பேரு தண்ணில நின்னுக்கிட்டே இருக்காங்க. அவங்க தண்ணில அப்படியே அடிச்சுக்கிட்டுப் போறத வீடியோ எடுத்துருக்காங்க. பாக்கவே சகிக்கலே.

  இன்னொரு வீடியோல, ஒரு பஸ் , ஏற்கனவே நிலம் சரிஞ்சு கிடக்கிற பாதையில வருது. அது கவிழ்ந்து ஆழமான பள்ளத்துல விழுது. லைவா வீடியோ எடுத்துருக்கானுக. பஸ்ல இருந்தவன் ஒருத்தன் கூடப் பிழைச்சிருக்கச் சான்ஸ் ரொம்பக் கம்மி. இதுல நாம யோசிக்க வேண்டியது என்னன்னா அது ஒரு லக்ஸரி பஸ். அப்படீன்னா இவனுக டூர் போயி செத்துருக்கானுக. அதான் மழ பேஞ்சு கொட்டிக்கிட்டிருக்குதே, இவனுக வீட்ல கிடக்கலாமே. எதுக்கு டூர் போயி சாகணும்?

   sambargaadu responded:
   July 3, 2013 at 7:45 am

   வாங்க துடிமன்னன்!
   ஆன்மீகம்ங்கறதே ஒரு வித முதிர்ச்சியற்ற மன நிலை தான். மன நோய்னு கூட சொல்லலாம். சில நோய்கள் நம்ம பாடியை கண்டிஷனிங் பண்ணிட்டு போகும் .அந்த வகையில ஆன்மீகத்தை சகிச்சுக்கறேன்.

   ஆனால் ஆன்மீகம்ங்கற பேர்ல நடக்கிற அன் ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டீஸை .. ஊஹூம் சகிச்சுக்கவே முடியலை.

  துடிமன்னன் said:
  July 1, 2013 at 5:47 am

  இந்த ரெண்டு வீடியோவுமே கேதார்நாத் -ல எடுத்ததுண்ணு சொல்றாங்க.

   vinoth said:
   July 16, 2013 at 8:10 am

   வீடியோ லிங்க் இருக்கா ஜி ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s