9ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

Posted on Updated on

DSC_4456

அண்ணே வணக்கம்ணே !
அம்மா பிரதமராக – தமிழகத்தை மின்மிகு மானிலமாக்க பல யோசனைகளை எல்லாம் தந்ததுல நேத்திக்கு சுக்கிரனை டீல்ல விட்டுட்டம். இன்னைக்கு பார்த்துரலாம்.
சுக்கிரன் லக்னாத் சுபரா இருந்து 9 ல இருந்தா நெல்லதுதான். அப்பா நல்ல கலைஞரா இருக்கலாம் .வாகன,கிருக யோகம் ஏற்படும்.அப்பா வழி உறவுகளின் உதவி கிடைக்கும். சுக்கிர காரக தொழில்களில் தேர்ச்சி -அனுகூலம் ஏற்படும். (உ.ம் ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்) அதில் முதலீடு செய்து பொருளீட்ட வாய்ப்பு கிடைக்கும்.தங்கள் சேமிப்பை வீடா ,வாசலா மாத்த ஒரு சான்ஸ் கிடைக்கும்.  சீக்கிரத்துலயே ஃபோர் வீலர் வாங்கிருவாய்ங்க. தூர தேச தொடர்புகளாலும் அனுகூலம் ஏற்படும்.
சுக்கிரன் ஒரு வேளை பாபரா இருந்து 9 ல இருந்தா அப்பாவோட மேரேஜ் லேட் மேரேஜா இருக்கலாம் ,ஒன்னுக்கு ரெண்டா கட்டியிருக்கலாம். அல்லது ஒன்னை வச்சிருக்கலாம். பெண்கள் விஷயத்துல அப்படி இப்படி இருந்து சொத்தை கரைச்சிருக்கலாம். அப்பா வழி உறவுகள் முக்கியமா பெண்கள் ஜாதகருக்கு ஆப்பு வைக்கலாம்.
ஜாதகரும் பிழைப்பை விட விருந்து ,போஜனம் ,கலை ,கில்மாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஆளா வளரலாம். தூர தேசமே போனாலும் அங்கன ஒரு குட்டிய கரெக்ட் பண்ற வேலைய பார்க்கலாம்.ஆரம்பத்துல வீடு,வாசல்,வண்டி ,வாகனம்னு எல்லாம் இருந்தாலும் போக போக ஒவ்வொன்னா இழந்துரலாம். அல்லது காதல்,திருமணம் ஆகிய விஷயங்களில் வில்லங்கம் வரலாம்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? ஆகவே ஜாதகரும் அப்பாவோட ரூட்ல போகவே அதிக வாய்ப்பு. கலையில் தன்னை தொலைத்தவனுக்கு காமத்தை விட படைப்புத்தான் பிடித்தமானதா இருக்கும்.
கலையில் மூழ்கி தன்னை கண்டுக்காத ஆண் மேல பெண்ணுக்கு ஆட்டோமெட்டிக்கா கவர்ச்சி கூடும். தன் சொத்தையெல்லாம் தாரை வார்த்தாச்சும் அவனை தன்னுடையவனாக்கிக்க ட்ரை பண்ணுவாள் .
அவன்  எந்த தேசத்துல இருந்தாலும் விடமாட்டாள் .தேடி வருவாள். இதெல்லாம் நடக்கனும்னா 9 ல் உள்ள சுக்கிரன் லக்னாத் சுபனா இருக்கனும். தான் நின்ன இடத்துல பலம் பெற்றிருக்கனும்.
அப்படி இல்லின்னா சீன் ரிவர்ஸ் ஆயிரும். ஜாதகர்  கலைகள் விஷயத்துல அரைகுறை பார்ட்டியா இருப்பாரு. அதை தூண்டில் புழுவாக்கி குட்டிகளை மடக்க பார்ப்பாரு. பெண் தன்னை தேடி வருபவனை நிச்சயம் நெக்லெக்ட் பண்ணத்தான் செய்வாள்.இவன் அதை பாலன்ஸ் பண்ண காசு பணத்தை வாரி இறைச்சு,வீடு,வாசல்னு எழுதி வச்சு, வாகனங்களை பரிசா தந்து மடக்கப்பார்ப்பான். ஒரு கட்டத்துல போண்டியாயிருவான்.
9ங்கறது தூர தேசங்களை காட்டுமிடம். சுக்கிரன் கலைகளுக்கு காரகன். ஜாதகர் தூர தேசத்து கலைகளை எல்லாம் பயின்று தேர்ச்சி அடைவார்.வெளி நாட்டு சரக்குன்னாலே நம்மாளுங்களுக்கு ஜொள்ளு சாஸ்தியாச்சே. இதனால ஜாதகர் செமர்த்தியான சில்லறை பார்ட்டியா மாறிருவாரு.
இது சுக்கிரன்  9  ல் நின்ற பலன். நாளை 11,12 பாவங்களை முடிச்சுட்டு மீள் பதிவுகள் போட திட்டம். உ.ம் ஆண் பெண் வித்யாசம். ஏறக்குறைய ரீரைட் பண்ணலாம்னு நினைக்கிறேன். உங்க கருத்து ? கமெண்ட்ல சொல்லுவிங்கல்ல?

Advertisements

16 thoughts on “9ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

  piyes said:
  May 20, 2013 at 6:37 am

  ஐய்யா வணக்கம்!. துலா லக்னமாயிருந்து லக்கினாதிபதி சுக்கிரன் 9ல் மிதுனத்தில் இருக்காருன்னு வச்சுக்கவம். சுபராயிருந்தாலும் சொல்லியிருக்கும் பலன்கள் நடைபெற வாய்ப்புண்டு. அதே சுக்கிரன் 9ல் சூரி+சந்+செவ்+புதன் கூட்டணி பொட்டு அமர்ந்திருந்தால் நிலைமை என்னவாகும்?
  நாளைய பதிவில் சுக்கிரன் 10ல், 11ல் மற்றும் 12ல் இருக்கும் பலன்களை சொல்லிவிட்டு கிரக வாரியான பலன்களை ஆண்,பெண் வித்தியாசங்களை மீள் பதிவாக போடலாமே தலைவா.

   sambargaadu responded:
   May 20, 2013 at 1:13 pm

   வாங்க அய்யா!
   சந்திரனை சூரியன்,சூரியனை புதன்,புதனை செவ் டாமினேட் செய்வாய்ங்க. ஆக 9 ல் செவ் இருக்கிறதா கருதி பலனை பார்த்துக்கறது நல்லது. இருந்தாலும் டிகிரிய பாருங்க. என்னவா இருந்தாலும் உங்க அனுபவம் தான் முக்கியம். உங்க அனுபவம் என்ன சொல்லுது?

    piyes said:
    May 21, 2013 at 9:27 am

    ஐய்யா வணக்கம். என் குடும்ப வட்டத்தில் ஒருவருக்கு மேலே குறிப்பிட்ட அமைப்பு உள்ளது. நான் கண்ட அனுபவத்தில் ஜாதகரின் தந்தை ஒரு விவசாயி. மகனால் பாதிக்கப்பட்டு (ஜாதகரின் சகோதரன்) அறுவை சிகிச்சை நடந்தது.ஜாதகரே அக்கறையுடன் கவனித்து தற்ச்சமயம் ஜாதகரின் வீட்டில் தான் வாசம். இது ஒரு வேளை தாங்கள் கூறியபடி சுக்+செவ் சேர்க்கையின் பலன்தான். வீடு நில புலன் இருந்தும் பெற்றோர்களுக்கு ஆதரவற்ற நிலை.
    எப்படி இருப்பினும் சூ+சந்+புதன்(ஆட்சி) கூட்டணி பயனற்று போனதா?.
    இந்த அனுபவம் தங்களுடைய கருத்தில் எப்படியிருக்கும் நிலை?

    sambargaadu responded:
    May 21, 2013 at 1:21 pm

    ஐயா,
    சந்திரன் எப்போ கூட்டணியில சேர்ராரோ அப்பமே ஸ்திர பலன் அடிப்பட்டு போயிரும்.ஒன்னுக்கொன்னு எதிரான பலன் நடக்கும். மாறி மாறி நடக்கும்

   sambargaadu responded:
   May 20, 2013 at 1:14 pm

   அய்யா,
   இது நல்ல லீடா இருக்கே. ஒவ்வொரு கிரகமும் ஆணுக்கு எப்படி பலன் தரும்? பெண்ணுக்கு எப்படி பலன் தரும்.. 9+9 18 = நாட்களுக்கு சரக்கு ஓகே.

  piyes said:
  May 20, 2013 at 6:41 am

  அண்ணே! நீங்கள் கழுத்தில் சிகப்பு நிற கயிற்றில் கோர்த்து இருக்கும் டாலர் “ஓம்” என உள்ளதா? அறிந்து கொள்ள ஆவல்.

   sambargaadu responded:
   May 20, 2013 at 1:11 pm

   வாங்க பொன்னுசுவாமி !
   ஓம் ? இருக்கு.. நிச்சயமா இருக்கு என்ன விசேஷம்?

    piyes said:
    May 21, 2013 at 9:13 am

    நண்பர் அவர்களுக்கு வணக்கம். உங்கள் படத்தில் உள்ள டாலரைப் பார்த்ததால் கேட்டோம்.டாலரை சிகப்பு கயிற்றில் கட்டியுள்ளதில் ஏதும் விக்ஷேசம் உள்ளதா அன்பரே!. ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் அம்மன் உருவமும் உள்ள டாலரை சிகப்பு நிறமுள்ள கயிற்றில் கட்டிக்கொள்ளலாமா?

    sambargaadu responded:
    May 21, 2013 at 1:20 pm

    ஐயா ,
    மல்ட்டி கலர் த்ரெட் யூஸ் பண்னுங்க( ராகு கேதுதானே பிரச்சினை)

  வினோத் said:
  May 20, 2013 at 9:01 am

  மீள் பதிவு மட்டும்போடாம புது பதிவுடன் சேர்த்து போடலாமே…

  பழய வாசகர்களுக்கு 1 புதுசு, புதிய வாசகர்களுக்கு 2 புதுசு..

   sambargaadu responded:
   May 20, 2013 at 1:10 pm

   வாங்க வினோத்ஜீ !
   நல்ல யோசனை. அப்படியே செய்யலாம். பி.எஸ்.என்.எல்ல இருந்து ஐடியா -ஐடியாலருந்து பி.எஸ்.என்.எல் ,விண்டோஸ் 7ல இருந்து எக்ஸ்பி,எக்ஸ்பிலருந்து விண்டோஸ் 7 இப்படி மாறி இப்பத்தான் ஒரு மாதிரியா செட்டில் ஆச்சு. செய்துருவம்.

  pravin said:
  May 21, 2013 at 8:50 am

  9 la sukran sevvai serkai . risaba lakanam na

   sambargaadu responded:
   May 21, 2013 at 1:23 pm

   ப்ரவீண்!
   ரிஷப லக்ன காரவுகன்னா ஏறக்குறைய சினிமாவுல வடிவேலு கேரக்டர் மாதிரி. ( சாப்பாடு – கில்மா -டைம் பாஸ்) ஆனால் லக்னாதிபதியோட செவ் சேர்ந்ததால நீங்க கொஞ்சம் டிஃப்ரன்டா இருப்பிங்க. இருங்க. உ.ம் மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்கங்க.ஜிம் போங்க எஃபெக்ட் குறையும். அப்பா கொஞ்சம் நிம்மதியா இருப்பாரு

    pravin said:
    May 24, 2013 at 12:40 am

    thank u sir ,

    sambargaadu responded:
    May 24, 2013 at 4:44 am

    Pravin !
    Thank you for the visit and comment.

  pravin said:
  May 24, 2013 at 12:48 am

  anna . jothidar la neenga oru rowdy jothidar na , ellarum suthi valachu pesuna neenga nethiyadi aana real aaa pesureenga ……. super anna

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s