எட்டுல சுக்கிரன் என்ன செய்வாரு?

Posted on

swamy7867

சாதாரணமா கிரகங்களுக்கு எட்டுங்கறது மறைவுஸ்தானம். ஆறு ,எட்டு,பனிரண்டை  துஸ்தானம்னு சொல்றோம். அதே சமயம் லக்னாத் பாபிகள் இங்கன நின்னா நல்லதுங்கறோம்.
6,8,12 அதிபதிகள் மேற்படி 6,8,12 ஸ்தானங்களில் மாறி உட்கார்ந்தா நல்லதுங்கறோம்.(ஆனால் இவிகளுக்கு இவிக நின்ன ராசி ஆட்சி வீடா இருக்கக்கூடாது + பரிவர்த்தனம் கூடாது)
சனி ஆயுள்காரகன்ங்கறதால இவரு எட்டுல இருக்கலாம் ஆயுள் பெருகும்னு ஒரு விதி. ஆனால் சனி தொடர்பான வியாதிகள் லந்து பண்ணும்.(உ.ம் கால்கள்,நரம்பு,ஆசனம்) இதுவே மகர,கும்ப லக்னங்களுக்கு சனி எட்டுல நின்னா வாழ்க்கையே இழவு வீடு மாதிரி ஆயிரும்.
ஜோதிடத்துல உள்ள சிக்கல் என்னன்னா பரஸ்பரம் முரண்பாடான அனேக விதிகள் இருக்கும். இது சப்பை எது ஆப்பு எதுன்னு ஜட்ஜ் பண்ணிக்கனும் அதான் முக்கியம்.
சரி சுக்கிரனோட கதைக்கு வரும். சுக்கிரன் எட்டுல இருக்காரு. லக்னம் துலாம் அ ரிஷபம்னு வைங்க ஆப்புதேன். மத்த லக்னங்களுக்கு? இப்போ பார்ப்போம்.
எட்டுங்கறது இன உறுப்பை காட்டும் பாவம்.சுக்கிரன் பாலுணர்வை குறிக்கும் கிரகம். பாலுணர்வு இன உறுப்பில் மையம் கொண்டால் தப்பு என்னன்னு  தோனும்.
செக்ஸ்ல உள்ள அடிப்படை சிக்கலே ஆணுக்கு 7 -பெண்ணுக்கு 23 . ( நான் சொல்றது உச்சம் பெறுவதற்கான அசைவுகள் ).சுக்கிரன் எட்டில் நின்றால் பெண் சீக்கிரம் உச்சம் அடைய ஒரு வாய்ப்பிருக்கு. ஒரு வகையில இது நல்லதுதான்.
ஆனால் இந்த கிரக ஸ்திதியை பத்தி தெரியாத செக்ஸ் பார்ட்னர் ரோட்டீனா ஃபோர் ப்ளே அது இதுன்னு நேரத்தை வீணாக்கினா அவள் பயங்கர கடுப்பாயிருவா. அதே போல தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கிறதால மையத்தின் மீதான தாக்குதல் குறைஞ்சுரலாம்.
ஆக்சுவலா உடலுறவின் போது  மனித உடலின் ஒவ்வொரு அணுவும் செயல்படனும். ரெஸ்பாண்ட் ஆகனும்.ஜஸ்ட் இன உறுப்பு மட்டும் ரெஸ்பாண்ட் ஆகும்னா சுவாரசியம் குறைஞ்சுரும். இது அப் நார்மல் கூட.
ஒரு ஆணின் ஜாதகத்துல எட்டுல சுக்கிரன் நின்றால்?
இது பயங்கர ரிஸ்க். இவனோட உணர்வுகள் எல்லாம் இன உறுப்பிலேயே மையம் கொண்டிருந்தால் -இவனோட செக்ஸுவல் பார்டனர் நார்மல் கேட்டகிரியா இருந்தா பயங்கர காண்டாயிருவா. மேலும் இவன் ஆர்வம் எல்லாம் அதோடயே நின்னுரும். இது சுய இன்பத்துக்கு வழி வகுக்கலாம். துரித ஸ்கலிதத்துக்கும் வழி வகுக்கலாம்.
அடுத்து எட்டுங்கறது ஆயுள் ஸ்தானம் கூட . இதனால ஜாதகரோட மரணத்துக்கு இவரது செக்ஸ் பழக்க வழக்கங்களே காரணமாயிரலாம். அஹ்..அதெப்படி பாஸ்.. நீங்க ச்சொம்மா ஊத்தறிங்கன்னுவிங்க.  இல்லிங்க தலைவா..எட்டுங்கறது ஹை ரிஸ்கை காட்டும் இடம். இங்கன சுக்கிரன் நின்னா கில்மாவுக்காக ஜாதகர் ஹை ரிஸ்க் எடுப்பாரு. எல்லா நேரமும் ஒரே மாதிரியா இருக்கும். கெட்ட நேரத்துல பல்பு வாங்கி டிக்கெட்டே கூட போட வேண்டி வரலாம்.
சுக்கிரன்னா வெறும் கில்மா மட்டுமில்லை. தூக்கம் ,அறுசுவை உணவும்தான். ஏற்கெனவே ஒரு முறை சொன்னதா ஞா .கில்மா மேட்டர்ல அரைகுடம் தான் தளும்பும். ஐ மீன் நியூட்ரிஷன். பாடி பாதம்,பிஸ்தாவையே தின்னு  மெத்த கொழுத்துப்போனாலும் பேட்டரி டவுன் ஆயிரும்.டவுன் ஆனதுக்கான காரணத்தை புரிஞ்சுக்காம இழந்த சக்தி வைத்தியர்கள் கிட்டே போனா காம்ப்ளிக்கேட் ஆயிரும்.
நியூட்டன் விதி ஞா இருக்குல்ல. ஃபார் எவ்ரி ஆக்ஷன் தேர் வில் பீ என் ஈக்வல் ரியாக்ஷன்.  வைத்தியர் கொடுக்கிற மருந்து மிஞ்சிப்போனா அந்த பகுதியை மரத்துபோக செய்யலாம் (இது துரித ஸ்கலிதத்தை தவிர்க்கும்) அல்லது புடைக்க செய்யலாம்.
பாடி காட்பாடியா இருக்கிற சமயம் இந்த மாதிரி ஓவர் டைம் எல்லாம் செய்ய வச்சா படுத்துரும். பாடி ஹெல்த்தியா இருந்தா மருந்துக்கே தேவையில்லையே.
மேலும் மனித உடல் விசித்திரமானது. இதை எந்தளவுக்கு சிரமப்படுத்தினா – ஐ மீன் உழைப்பு -அந்தளவுக்கு ஸ்ட்ராங் ஆகும். எந்தளவுக்கு சுகம்மா வச்சிருந்தா அந்தளவுக்கு வீக் ஆயிரும்.
சுக்கிரனை எட்டுல வச்சுக்கிட்டு வெறுமனே தின்னு -தூங்கி -கில்மா மட்டும் வாழ்க்கைன்னு இருந்தா பயோ கெமிஸ்ட்ரியே மாறிரும். இதுல ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது  -இனப்பெருக்க மண்டலம்  வேலை செய்யாது. இ.பெ மண்டலம் வேலை செய்யும் போது ஜீ.ம வேலை செய்யாது. அப்படி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினா ஒன்னு கில்மா மேட்டர் ஒர்க் அவுட் ஆகாது. இல்லின்னா  ஜீரண ப்ரக்ரியை ஸ்டாப் ஆகி க்யாஸ், அல்சர்னு ஆப்பு வச்சுரும்.
பலதும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இதுல ஒன்னையே பிடிச்சுக்கிட்டு தொங்கினா மத்ததெல்லாம் பல்பு வாங்கிரும். ஆக எட்டு சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் இல்லேன்னாலும் எட்டுல சுக்கிரன் உள்ளவுக  கொஞ்சம் அலார்ட்டா இருந்து அடக்கி வாசிக்கிறது பெட்டர்.

Advertisements

One thought on “எட்டுல சுக்கிரன் என்ன செய்வாரு?

    Thirumalaibaabu said:
    May 23, 2013 at 3:37 am

    Thanks for the post

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s