நீதி மன்ற தீர்ப்புகளும் மக்கள் கருத்தும்

Posted on Updated on

scales-justice

ஜன நாயகம் என்றதும் ஆறங்கிளாஸ் பையன்ல இருந்து அரசியல் மேதைகள் வரை சுட்டுவது ஆபிராஹாம் லிங்கனின் “ஃபார் தி பீப்புள் -பை தி பீப்புள் ” எட்செட் ராதான். அண்ணா “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்றார்.
ஒரு காலத்தில்  பத்திரிக்கை துறையில் லீகல் ரிப்போர்ட்டர்னா அவரு தள்ளு கேஸு. இரட்டைக்கொலை மாதிரி எதுனா கேஸ் வந்தா கொஞ்சம் ஆக்டிவா ரிப்போர்ட் பண்ணுவார். இன்னைக்கு சூப்பர் ஸ்டாரே லீகல் ரிப்போர்ட்டடர் தான்னு ஆயிருச்சு.
இந்த ட்ரெண்ட் எப்ப ஆரம்பமாச்சுன்னு பார்த்தா இந்திரா எம்பியா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாதுன்னு அலகாபாத் ஹை கோர்ட் தீர்ப்பு கொடுத்தப்போ ஆரம்பமாகியிருக்கலாம்.
சட்டம், நிர்வாகம், நீதித்துறைகளை ஜன நாயகத்தூண்கள்னு சொல்வதுண்டு. பத்திரிக்கை துறைய  நான்காவது தூண் என்று சொல்கிறார்கள். எப்போ முதலாளிகள் எல்லாம் பத்திரிக்கை ஆரம்பித்தார்களோ அப்பவே பத்திரிக்கை துறை சந்தேகஸ்பதமானதாகிவிட்டது.
எமர்ஜென்சி பீரியட்ல இண்டியன் எக்ஸ்பிரஸ் குரூப் பத்திரிக்கைகள் அதுக்கு எதிரா போராடியிருக்கலாம்.இல்லேங்கலை .ஆனால் அவிக காரணங்கள் வேறயா இருந்திருக்குமோன்னு இப்பம் தோனுது.
நீதித்துறை ஆக்டிவா செயல்படறதுல நமக்கு எந்த வித அப்ஜெக்சனும் இல்லை. வரவேற்கிறோம் கூட. ஆனா இந்த ட்ரெண்ட் வர்ரதுக்கு என்ன காரணம்? சட்டத்துறையும், நிர்வாகமும் அழுகிப்போச்சு. இதனால நீதித்துறை பிரம்பை கையில் எடுக்க வேண்டியதாயிருச்சு.
எடுக்கட்டும் வேணாங்கலை.  நீதித்துறைங்கறது ஜன நாயக அமைப்புல ஒரு தூண் தான். அதுவே ஜன நாயகம் இல்லை. நீதி வழங்குவதுங்கறது அரசியல் சாசனம் , ஐபிசி, நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் ,சாட்சிகளை அடிப்படையாக கொண்டது.
மொதல்ல நம்ம அரசியல் சாசனமே ஒரு போலி. ஜெராக்ஸ். ஐபிசிங்கறிங்களா அதுவும் ஒரு ஜெராக்ஸ். இதுல சாட்சி, ஆதாரங்களை திரட்டறது யாரு? அதே சட்ட ,நிர்வாகத்துறை புலிகள் தான். இவையே குறைப்பட்டதாய் இருக்கும் போது தீர்ப்புகள் மட்டும் எப்படி குறைபடாததாய் இருக்கும்.
ஜன நாயகத்துல மக்கள் கருத்துதான் முக்கியம். தேர்தல்களில்   முறைகேடுகள் நடப்பதை பார்க்கத்தான் செய்கிறோம்.  மக்கள் கருத்து எந்தளவுக்கு வெளிப்படுதுங்கறதையும் பார்த்துக்கிட்டே தான் இருக்கம். இதனால ஜன நாயகமே கேலிக்கூத்தா மாறுது.
ரெண்டு சதவீதம் ,ஏன் ஒரு சதவீதம் வாக்கு வித்யாசத்துல கூட கட்சிகள் ஆட்சிக்கு வருது. ஆளும் வாய்ப்பை இழக்குது. நான் என்ன சொல்றேன்னா பார்லிமென்டுல உள்ள எல்லா சீட்டுக்கும் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கனும்.(ப்ரியாரிட்டி பேசிஸ்) .
கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தை பொருத்து பாராளுமன்றத்துல சீட்டுகள் ஒதுக்கப்படனும். கட்சிகள் தங்கள் முன்னுரிமை அடிப்படையில் தயாரித்த  வேட்பாளர் பட்டியலில் உள்ள வேட்பாளர்களை  முன்னுரிமை அடிப்படையில் எம்.பிக்களாக்கனும்.பட்டியல்ல உள்ள எம்பி செத்துப்போனா பட்டியல்ல அடுத்து உள்ள எம்பியை ப்ரப்போஸ் பண்ணிரனும்.
இந்த முறைய கொண்டு வந்தா மட்டும் போதாது. தேர்தல் ஒரு வாரத்துக்கு நடக்கனும். குறைஞ்ச பட்சம் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகனும். அப்பத்தேன் தேர்தல்ல உண்மையான மக்கள் கருத்து வெளிப்படும்.  இந்த  தேர்தல் முறைய அமல் படுத்தினா ஆட்டோமெட்டிக்கா சட்ட ,நிர்வாக துறைகள் உருப்படும். நீதிமன்றத்துக்கும் வேலை குறையும்.
இல்லின்னா குடம் கொடுத்து,மூக்குத்தி கொடுத்து,கவர்ல பணம் கொடுத்து  எம்பி எம்.எல்.ஏவா செயிச்சவன் என்னா மாதிரி சட்டத்தை கொண்டு வருவான். என்னா மாதிரி நிர்வாகத்தை கொடுப்பான். நீதித்துறை ஓவர் டைம் செய்தாலும் இந்த குறைகளை பைசல் பண்ண முடியாது.
தேர்தலை விடுங்க. கூடங்குளம் மின்சாரம், இந்திராகொலையை அடுத்து நடந்த கலவரங்கள் ஆகிய விவகாரங்களில் நீதி மன்றங்களின் கருத்து மக்கள் கருத்துக்கு விரோதமா வெளிப்பட்டிருக்கிறதை கவலையோட பார்க்கிறேன்.
அரசியல் சாசனம், ஐபிசி, சாட்சியங்கள் ஆதாரங்களோட லட்சணத்தை ஏற்கெனவே கோடி காட்டியிருக்கேன். இவற்றை மட்டுமே அடிப்படையா வச்சுக்கிட்டு வெறுமனே பட்டை கட்டிக்கிட்ட குதிரை கணக்கா தீர்ப்புகள் வழங்க சொல்லி சொல்லப்படலை.நீதிபதிகள் தங்கள் கான்ஷியசை அடிப்படையா கொண்டு தீர்ப்புகள் வழங்கலாம்னு சொல்லப்பட்டிருக்கு.
சீக்கிய கலவரம்னா ஜஸ்ட் ஒரு கிரிமினல் கேஸுங்கற கோணத்துல பார்க்கப்படலாம்.ஆனால் கூடங்குளம் அணு  உலை?
நாளைக்கே கதிர்வீச்சு ஏற்படுது. கசிவு ஏற்படுது .இதுக்கு யார் பொறுப்பு? எத்தனை தீர்ப்புகள் அமல்படுத்தப்படாம நொண்டியடிக்குது. இந்த மாதிரி க்ரூஷியல் விஷயங்களில் நீதிபதிகள்  பொது வாக்கெடுப்பை  உத்தரவிடலாம். மேற்படி அணு உலையால யாரு பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறதோ அவிக தீர்மானிக்கனும் அணு உலை வேண்டுமா வேணாமான்னு.
இடையில வந்த பல தீர்ப்புகள் அரசாங்கத்தின் மன ஓட்டத்தை ஒட்டி அமைஞ்சதையும் பார்த்தேன். உ.ம் ஜகன் மோகன் ரெட்டிக்கு பெயில் மறுப்பு . முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி “பெய்ல் ஈஸ் எ ரைட் அண்ட் ரெஃப்யூசல் ஈஸ் என் எக்செப்ஷன்”னு சொல்லியிருக்காரு.
சிபிஐ சாட்சிகளை கலைச்சுருவாருன்னு மாய்மாலம் பண்ணுது. சிபிஐயோட லட்சணத்தை நிலக்கரி சுரங்க ஊழல்லயே பார்த்தோம். சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவிச்சிருக்கு.
ஜகன் மோகன் ரெட்டி ஒரு எதிர்கட்சி தலைவரு. மத்திய மானில அரசாங்கங்களுக்கு எதிரான ஆசாமி. ஒரு விக்டிம். அவரால எந்தளவுக்கு சாட்சிகளை கலைக்கமுடியும்? மேலும் அவர் ஒரு வி.வி.ஐ.பி தும்மினா இருமினாலும் அது செய்தி. ஒரு பப்ளிக் ஃபிகர் எப்படி “நிழலான” காரியங்களில் ஈடுபட முடியும்.
இன்னைக்கு 350 நாள் ஆச்சு.வழக்கு விசாரணைக்கு  இன்னம் நாலு மாசம்  டைம் கொடுத்திருக்கு சுப்ரீம். கேஸ்ல இன்னும் எஃப்.ஐ.ஆர் தான் போட்டுக்கிட்டிருக்காய்ங்க. அதுவும் ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னு. சிபிஐயோட நோக்கம் அடுத்த தேர்தல் வரை ஜகனை  ஒரு சந்தேக வட்டத்துலயும் -ஜெயில்லயும் வச்சிருக்கிறதுதான்.இது சன்னல் வச்ச ஜாக்கெட்ல முதுகு போல  நமக்கே ஸ்பஷ்டமா தெரியுது.  ஆனால் நீதிபதிகளுக்கு தெரியலை. எங்கன போயி முட்டிக்கிறது.
ஒரு சினிமா நடிகன் அவனை ஜெயில்ல போட்டா தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்னு “சரணடைய”கெடு கொடுக்கிறாய்ங்க.
ஆனால் ஒரு எம்பி அதிலயும் அகில இந்திய அளவில் ஹிஸ்டாரிக்கல் ரிக்கார்ட் லீடிங்குல செயிச்ச ஆசாமி. அவரை உள்ளே வச்சிருந்தா அந்தாளுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் பாதிக்கப்பட மாட்டாய்ங்களா?
ஒரு வேளை எதிர்காலத்துல ஜகன் மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் போலின்னு தெரியவருது. அப்போ இந்த 350+120 நாள் சிறைவாசத்துக்கு என்ன ரெமிடி? என்ன இழப்பீடு? இதையும் ரோசிக்கனுமில்லியா?
என்னமோ போங்க களி திங்கற காலம் வந்துருச்சா என்ன தெரியலை . இந்த பதிவு கோர்ட் அவமதிப்பு கீழே வருமா? அல்லது ரைட் டு ஒப்பீனியன் காப்பாத்துமா புரியலை . என்னமோ சொல்ல தோனிச்சு.சொல்லிட்டன்.
சோதிடப்பதிவுகள் நாளைமுதல் வழக்கம் போல் தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s