சுக்கிரன் மறைவும் -காமசுகக் குறைவும்: 2

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
சுக்கிரனுக்கு லக்னாத் 3,7,10 பாவங்கள் மறைவு ஸ்தானம் -இதனால ஆரம்பத்துல “கில்மா”மேல நிறைய ஆர்வம் இருந்து அந்த ஆர்வமே செக்ஸ் பவருக்கு ஆப்பு வச்சுரும்னு கடந்த பதிவுல சொன்னேன்.
இது எப்படி சாத்தியம்னா.. ஒரு பாத்திரத்துல ஒரே ஒரு ஸ்பூன் பாலை ஊத்தி காய வச்சா ஒரு செகண்ட்ல பாலும் சுண்டி -பாத்திரமும் பாழா போயிரும்.
இதுவே ஒரு பாத்திரம் நிறைய பாலை வச்சு காய வச்சா பாலும் ஒழுங்கா காயும் -பாத்திரமும் சேஃபா இருக்கும்.
நீங்க செல்ஃபோன் பேட்டரி மேட்டர்ல பார்க்கலாம். இன்னும் ஒரு பாய்ண்ட் இருக்கு மாப்ளேனு பேசிட்டிருந்தா  கொஞ்ச நேரத்துலயே “சுத்தம்”ஆயிரும்.
செக்ஸ் பவரும் அப்படித்தான் அது குறைவாக இருக்கும் பட்சம் அட்வான்ஸா – அகாலமா -உடனே வெளிப்பட்டு எக்ஸாஸ்ட் ஆயிரும்.
இதுல இன்னொரு மேட்டர் இருக்கு.(இது வெறும் சுக்கிரனுக்கு மட்டுமில்லை மத்த 6 கிரகங்களுக்கும் பொருந்தும்)  சப்த கிரகங்களும் சப்த தாதுக்களுக்கு காரகம் வகிக்குது.  இந்த தாதுக்கள்  எந்த உலோகத்துல அதிகமா இருக்கோ அந்த உலோகத்தை குறிப்பிட்ட கிரகத்துக்கு அகந்த உலோகமா   நிர்ணயம் செய்திருக்காய்ங்க. உ.ம் :குரு =தங்கம்
ஒரு கிரகத்தோட பலம் குறைவா இருக்குன்னா அந்த கிரகம் தொடர்பான உலோகத்தை சமைக்க -சாப்பிட உபயோகிச்சா அந்த கிரகத்தோட தாதுக்கள் பாடிக்கு  கிடைக்கும்ங்கறதுதான் இதுக்கான அடிப்படை.
இதுல ஒரு சிக்கல் இருக்கு. நம்ம பாடி இருக்கே தாளி.. விசித்திரமான ஒரு இயந்திரம். ஃபாரின் மேட்டரை அவ்ள சீக்கிரம் ஆக்செப்ட் பண்ணாது. (பாப்பாவுக்கு மலச்சிக்கல்னா அதனோட ஆசனத்துல வெற்றிலை காம்பை செருகுவாய்ங்க. ஒடனே சரக்கு வெளிய வரும். பாடியோட நோக்கம் வெற்றிலை காம்பை திரஸ்கரிப்பது தான். ஆனால் பை ப்ராடக்டா “ஆயும்” வந்துருது.
ஆகவே எதுவா இருந்தாலும் வெளிச்சரக்கை பாடி அவ்ள சீக்கிரம் ஏத்துக்காது. அடப்போங்க சார் உறுப்பு மாற்று சிகிச்சையெல்லாம் நடக்குது. அடுத்தவனோட உறுப்பையே ஏத்துக்குதே பாடின்னு கேப்பிக.
சொல்றேன். இதுல மேட்டர் இன்னாட்டான்னா இந்த உ.மா.சி செய்யும் போது முடிஞ்ச வரை எல்லாவிதமான டெஸ்டும் எடுத்து “ஸ்பேர் பார்ட்” பொருந்துதான்னு ரெம்ப டீப்பா பார்த்துதான் உறுப்பு தானத்தை ஏற்கிறாய்ங்க.
இதோடு பாடி அந்த உறுப்பை ரிஜெக்ட் பண்ணிராம இருக்கிறதுக்கு பாடியோட இம்யூன் சிஸ்டத்தையே சில காலத்துக்கு பை பாஸ் பண்ணிர்ராய்ங்க.
உடலில் பற்றாக்குறையே இருந்தாலும் -உடம்புக்கு தேவையானதாவே இருந்தாலும்  எந்த சத்தா எந்த தாதுவா இருந்தாலும் அது உணவு வடிவத்தில் உள்ளே போய்  பாடியில ப்ராசஸ் ஆகனும். அப்படியே ப்ராசஸ்  ஆனாலும் அந்த தாதுவை கிராஸ்ப் பண்ணிக்கிற மெக்கானிசம் பாடியில இருக்கனும். .அப்பத்தான் கியாரண்டி.
வெளியில இருந்து தந்தா அது எவ்ள சீக்கிரம் ஸ்டோர் ஆச்சோ அவ்ள சீக்கிரம் எக்ஸாஸ்ட் ஆயிரக்கூடிய ஆபத்தும் இருக்கும்.
இந்த கில்மா மேட்டர்ல செக்ஸ் பவரை கூட்ட கொடுக்கிற மருந்து மாயம்லாம் செய்றது ஜஸ்ட் கிம்மிக் தான்.  உணவே மருந்துங்கறது ஒத்துக்கொள்ள வேண்டிய சித்தாந்தம் தான். எனவே செக்ஸ் பவர் வேண்டுமா அதை தின்னுங்க -இதை தின்னுங்கன்னு சொல்வாய்ங்க.
அப்படியே தின்னாலும் “வேலை” மட்டும் நடக்காது. இதுக்கு காரணம் தின்னதை ப்ராசஸ் பண்ற கப்பாசிட்டி அந்த பாடிக்கு  குறைவா இருக்காலாம் -அல்லது ப்ராசஸ் பண்ணாலும் அதை கிரகித்துக்கொள்ளக்கூடிய கப்பாசிட்டி குறைவா இருக்கலாம்.
ஜாதகத்துல சுக்கிரன் மறைஞ்சிருந்தா இதே பிரச்சினை ஜாதகரோட இல்லற சுகத்துக்கு ஆப்பு வச்சுரும்.
இதுல இன்னொரு கோணம் இருக்கு. கிரக பலம் அமோகமா இருந்தா அந்த கிரக்த்தோட தாதுக்களும் ப்ளென்டியா இருக்குமாங்கற கேள்வி வருது.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு .டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். ஒரு குடத்துல தளும்ப தளும்ப தண்ணியிருந்தா அதுலருந்து முகர்வது தலைவலி.( மொள்ளுவது).இதுவே அதுல ரெண்டு தம்ளர் தண்ணி குறைவா இருந்தா ஈசியா மொள்ளலாம்.
பாடியில எல்லா விட்டமின்ஸும் -எல்லா சத்தும் – எல்லா மினரல் சால்ட்டுகளும் ,எல்லா தாதுக்களும் தன்னிறைவு பெற்றிருந்தா பசியும் எடுக்காது – வீம்புக்கு தின்னாலும் எதுவும் பாடியோட ஃபங்சனிங்குல  சேராது.(உபரியா எங்கனா கிடக்கும் -அதுவே நோய்க்கு வழி வகுக்கும்)
பேட்டரி ஃபுல் ஆனபிறவு எப்படி சார்ஜிங் ஆட்டோமெட்டிக்கா நின்னுப்போகுதோ அதே இழவுதான்.
ஆக கில்மால ஆர்வம் வரனும்னா கொஞ்சமே கொஞ்சமாச்சும் “எதுவோ”குறைவாயிருக்கனும்.  நிறைகுடம் தளும்பாதும்பாய்ங்க.  பாடியும் நிறைகுடமாயிட்டா தளும்பாது.
காளைகளுக்கு காயடிக்க மனசில்லாதவுக அதனோட ” செக்ஸ் பவரை “ஒழிக்க என்ன செய்வாங்க தெரியுமா? அதை அளவுக்கு மேல தீனி போட்டு கொழுக்க வைப்பாய்ங்க. சூப்பர் ஒர்க் அவுட். காயடிச்சிருந்தாலும் கர்பம் ஆகாதே தவிர “மூட்” வரும்ல. ஆனால் கொழுத்துப்போவதால் “செக்ஸ் பவரை “இழந்த காளைக்கு மூட் கூடவராது.
ஹ்யூமன் பாடி டெம்பரேச்சர் 98.4 டிகிரிங்கறாய்ங்க. இது கூடினாலும் நாஸ்தி -குறைஞ்சாலும் நாஸ்தி. அதுக்குன்னு ஒரு ஆசாமிக்கு  மருந்து மாயம்லாம் கொடுத்து 365 நாள் ஒரே டெம்பரேச்சர் இருக்கிறாப்ல செய்துட்டா டெம்பரேச்சரை அட்ஜஸ்ட் பண்ற  பாடி மெக்கானிசமே ஃபணால் ஆயிரும்.அவனை வெளிய விரட்டி விட்டா பதினைந்து நிமிட பவர் கட்ல ஏ.சி வேலை செய்யலின்னா டிக்கெட் போட்டுருவான். மாலை வெயில்ல கூட சன் ஸ்ட் ரோக் வரலாம்.
ஆக பாலன்ஸ் முக்கியம். அந்த பாலன்ஸ் அப்பப்போ கொஞ்சம் போல தவறுவது.. அந்த இம்பாலன்ஸை அட்ஜஸ்ட் பண்ணிக்கிற கப்பாசிட்டியும் முக்கியம்.
இதை தருவது கிரகங்கள் . சுக்கிரன் மறைஞ்சு தொலைச்சா பாலன்ஸ் தவறிப்போய் – அட்ஜஸ்டிங் மெக்கானிசமும் வேலை செய்யாம -குறைஞ்ச சக்திங்கறதால அது சகட்டுமேனிக்கு எக்ஸாஸ்ட் ஆகி தாம்பத்யமே தகராறாயிரும்.
இந்த பிரச்சினையை எப்படி தீர்க்கலாம்? அடுத்த பதிவுல பார்ப்போம்.உடுங்க ஜூட்டு.

Advertisements

4 thoughts on “சுக்கிரன் மறைவும் -காமசுகக் குறைவும்: 2

  piyes said:
  May 8, 2013 at 6:44 am

  ஐயா!, வணக்கம்,
  ///சுக்கிரனுக்கு லக்னாத் 3,7,10 பாவங்கள் மறைவு ஸ்தானம்///-
  என்பதில் கொஞ்சம் விளக்கம் தேவை.சுக்கிரனுக்கு, 3,7,10 ல் லக்னாதிபதி இருந்தால் மறைவு ஸ்தானமா? அல்லது லக்னாதிபதிக்கு 3,7,10 ல் சுக்கிரன் இருந்தால் மறைவு ஸ்தானமா? அல்லது லக்னத்திற்கு 3,7,10 ல் சுக்கிரன் இருந்தால் மறைவு ஸ்தானமா?- விளக்கம் அளித்தால் நன்று.

   sambargaadu responded:
   May 8, 2013 at 7:11 am

   ஐயா வாங்க !

   லக்னாதிபதிக்கு 3,7,10 ல் சுக்கிரன் இருந்தால் மறைவு. இதை தான் நான் லக்னாத்னு குறிப்பிட்டேன்.

  துடிமன்னன் said:
  May 8, 2013 at 7:01 am

  இலக்னத்துக்கு 6-8-12 ல் சுக்கிரன் மறைவு இல்லையா…

   sambargaadu responded:
   May 8, 2013 at 7:10 am

   வாங்க துடிமன்னன் !
   இதான் சுக்கிரனுக்கும் -மற்ற கிரகங்களுக்கும் இடையில் உள்ள வித்யாசம். சுக்கிரன் 6 ல் இருந்தால் ஊடல் ஏற்படும் (ஆனால் மனைவி இருப்பாய்ங்க) ஊடலுக்கு பின்னான கூடல் சூப்பரோ சூப்பர். எட்டுல இருந்தா பலான மேட்டர்ல உள்ள அதிக ஈடுபாடு காரணமா மரணம் ஏற்படலாம். சாவு எல்லாருக்கும் தான் வருது.இப்படி ஒரு மரணம் கூட யோகம் தானே. அடுத்து விரயம். இங்கே சுக்கிரன் இருந்தால் “பலான”மேட்டருக்காக எவ்ள வேணா செலவழிப்பாய்ங்க. ஓகேவா.

   3-7-10 ல் ஏன் இருக்கக்கூடாதுன்னு நாளைக்கு விரிவா எழுதறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s