நண்பர்கள் – ஒரு ஜோதிட அலசல்
“உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே “னு ஆரம்பிச்சு திருக்குறள் எல்லாம் சொல்லமாட்டேன். “உயிர் கொடுப்பான் தோழன்”னு சினிமா டேக் லைன்லாம் சொல்ல மாட்டேன். பயந்துக்காதிங்க.
நம்ம லைஃப்ல அப்பாவோட கேர் ஆஃப்ல இருந்த வரை நண்பர்கள்ங்கறது நம்ம பெரிய லூப் ஹோலா இருந்தது. அதுவும் நாம நாமர்தாவா இருந்தப்ப – கூட்டாளிங்க மட்டும் ஜென்டில் மேனாவா இருந்திருப்பாய்ங்க.
கலப்பு கண்ணாலம் கட்டி எதிர் நீச்சல் போட ஆரம்பிச்ச பிறவு – அப்பா கொஞ்சம் இன்ஃப்ளுயன்ஸ்ட் பர்சனுங்கறதால சொந்தக்காரவுக எல்லாம் பாய் காட் பண்ணிட்டாய்ங்க. நமக்கு நல்லது கெட்டது எது நடந்தாலும் நண்பர்களால தான் நடக்கனும்ங்கற நிலை வந்துருச்சு.
அப்பா போன பிறவு இது இன்னம் ஸ்பஷ்டமாயிருச்சு.ஆரம்ப காலத்துல ஆருனா சின்னதா ஒரு உதவி செய்தா போதும் ஒடனே உ.வ பட்டு நான் நல்ல நிலைக்கு வந்தான்னு ஆரம்பிச்சு வாக்குறுதிகளை அள்ளி கொட்டுவேன். அல்லது அவனுக்கு என்னெல்லாம் செய்ய முடியும்னு கனவு காண ஆரம்பிச்சிருவன். ப்ராக்டிக்கலா செய்யவும் முயற்சி பண்ணுவன்.
ஆனால் காலப்போக்குல குறிப்பிட்ட நபர் மனித குல மாணிக்கம்லாம் இல்லை – ஏதோ ஒரு சக்தி அவரோட கழுத்தை பிடிச்சு தள்ளப்போய்தான் அவர் நமக்கு ஹெல்ப் பண்ணாருங்கற யாதார்த்தம் புரியவரும்.
உதவற நிலையில உள்ளவுகளுக்கு நேச்சுரலாவே ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துரும். ஆனால் 1989 ல திருச்சி ரா.கி மடத்துலருந்து கழண்டுக்க சார்ஜுக்கு பணம் கொடுத்த ராமகிருஷ்ணன் என்ற பெரியவர் ஒரு விஷயத்தை சொன்னாரு.
“உதவறது பெரிய விஷயமில்லை. உதவின்னு கேட்கிறது தான் பெரிய விஷயம். உதவறதுக்கு வாய்ப்பு கொடுக்கிறதுதான் பெரிய விஷயம். இன்னைக்கு நான் உங்களுக்கு செய்ததை நீங்க திருப்பனும்னு இல்லை.வேற யாருக்காச்சும் செய்ங்க. அது போதும்”
சரி மொக்கை போதும்னு நினைக்கிறேன். இந்த ரூட்ல நாம ரோசிக்க காரணம் முக நூல்ல சொன்னாப்ல 1972 முதல் ஒன்னா படிச்ச நண்பர்கள் ஒன்னு கூட போறோம் (ஒருங்கிணைப்பு: நண்பர் கார்த்திகேயன்) இந்த ஒரு செய்திதான் இந்த ரோசனைகளை எல்லாம் கிளறி விட்டுருச்சு.
2007 வரைக்கும் கூட – அதாவது 40 வயசு வரைக்கும் கூட எவர் க்ரீன் ஹீரோ போல இருந்த நானே மாமா போல ஆயாச்சு. இன்னம் மத்தவுக என்னாவா ஆகியிருக்காய்ங்க? பாடில மட்டும் மாற்றம் வந்திருக்குமா? மைண்டுலயும் வந்திருக்குமா? கொஞ்சமாச்சும் மெச்சூரிட்டி வந்திருக்குமா? வாழ்க்கையில நடக்கிற நல்லது கெட்டது செல்ஃப் ரியலைசேஷனை தந்திருக்குமா? ஆன்மீக சிந்தனைகள் புஷ்பித்திருக்குமா?
அல்லது புதிய மொந்தையில பழைய கள்ளு கணக்கா இருக்காய்ங்களா? ச்சொம்மா ஒரு க்யூரியாசிட்டி அம்புட்டுதேன். நம்ம மனோ தத்துவ ஆராய்ச்சிக்கு கொஞ்சம் ஸ்டஃப் கிடைக்கும்ல .அதனால போகத்தான் போறேன். அந்த அனுபவங்களையும் எதை எழுத முடியுமோ அதை மட்டும் எழுதத்தான் போறேன்.
இப்பம் நண்பர்கள் பற்றிய ஜோதிட அலசலுக்கு போயிருவம். நண்பர்களில் 9 வகை உண்டு .
1.விழிப்பை கொடுத்தவர்கள் – லட்சியத்தின் பால் முடுக்கியவர்கள்
2.ஜஸ்ட் ..ஒரு ரிலீஃப் – ஒரு இளைப்பாறுதல் தருபவர்கள்
3.சாகசங்களில் தோள் கொடுத்தவர்கள்
4.இதர மொழியினரா இருந்து இடையில அறிமுகம் ஆறவுக
5.நம்ம செல்வாக்கால் கவரப்பட்டு நட்பு கொள்ளுவோர்
6.நமக்கு வாய்க்கும் அடிமைகள்
7. நண்பர்கள் மூலம் நட்பாகும் நபர்கள்
8.நம் சோதனைகாலத்தில் அறிமுகமாகி – புதிய வேதனையில் ஆழ்த்தி – ஞானம் தரும் நபர்கள்
9.நாம நெல்லா இருக்கும் போது மட்டும் கூடி வெந்ததை தின்று – திண்ணை பேச்சு பேசி பிரியும் நபர்கள்
உங்க நண்பர்களை இப்படி 9கேட்டகிரியா பிரிச்சு டீல் பண்ணிங்கனா பிரச்சினையே இல்லை. ஒரு கேட்டகிரியை இன்னொரு கேட்டகிரியா பிரமிச்சு -கமிட் ஆனா ஏமாற்றம் ,கசப்பு,விரோதம்தான் மிஞ்சும். ஓகேவா உடுங்க ஜூட்டு..
May 5, 2013 at 10:36 am
சகோ! நண்பர்களை தரம் பிரித்துள்ளீர்கள்.ஆனால் ஜோதிட ரீதியான அலசல் எப்போது?. வலைதள அன்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே?.
May 5, 2013 at 6:43 pm
ஐயா !
9 பிரிவாக பிரித்திருக்கிறேன் . இது வரிசையாக சூ,சந்திரன்,செவ்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் என்ற கிரகங்களின் ஆதிக்கம் கொண்டதாகும். எந்த கிரகம் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறதோ அந்த வகை நண்பர்களால் துன்பம் ஏற்படாது. அதே போல எந்த கிரக காரக நண்பகள் அனுகூலமாய் இருக்கிறார்களோ அந்த கிரகம் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ளது என்று அருத்தம்.