ஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் – காமக்கலையும்: 2

Posted on Updated on

Imageஅண்ணே வணக்கம்ணே !
சுக்கிரனுக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம்னு ஆருனா சோசியரை கேட்டா புஸ்தவத்துல இருக்கும்பாரு. இல்லின்னா எங்க குரு அப்படித்தான் சொன்னாருன்னு சொல்லிருவாரு.ஆனால் நாம விதிவிலக்காச்சே. அதே பதிலை நம்மகிட்டே எதிர்ப்பார்க்க முடியாதே.

குழந்தைகள் துவக்கத்துல தம் ஆசனத்து மேல கவனம் வைப்பாய்ங்கன்னு சொன்னேன். இந்த கேட்டகிரி குழந்தைகள்  திங்கறதும் -கழியறதுமாவே இருக்கும்.பேச்சு வந்த  பிறகு ஓயாம பேசும் அவ்வளவுதான். ( நிறைய பேரு குடு குடு கிழமான பிறவும் இப்படியே வாழ்ந்து போய் சேர்ந்துர்ராய்ங்க. அது வேற கதை – இதுல ஹோமோவா மாறிர்ரதும் உண்டு)

ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்புறம் கவனம் இன உறுப்பு மேல திரும்பும். அப்போ ஆட்டோமெட்டிக்கா   பேச்சு குறைஞ்சுரும். திங்கறது மேல கவனமிருக்காது.மலச்சிக்கல் கூட ஏற்படும். டீன் ஏஜ் வயதுள்ள  மகன் அல்லது மகள் பத்தி நிறைய பேரன்ட்ஸ் இதே கம்ப்ளெயின்ட் தான் .
எப்போ கவனம் இன உறுப்பின் மேல் திரும்பிருதோ அங்கே வாய்க்கும் -ஆசனத்துக்கும் முக்கியத்துவம் குறைஞ்சு போகுது.

நம்ம கவனம் எந்த உறுப்பின் மேல் இருக்கிறதோ அதனோட  எஃபிஷியன்ஸி அதிகமாகும். மத்ததெல்லாம் சோர்ந்து படுத்துக்கும்.

எப்போ இன உறுப்பின் மீது கவனம் திரும்புதோ  அவன் இயற்கையின் பிடிக்குள்ள வந்துர்ரான். இயற்கையின் ஒரே அஜெண்டா ” உயிர் வாழனும் -இனப்பெருக்கம் செய்யனும் -பரவனும்” ஒரு மனிதன் இந்த அஜெண்டாவுக்கு உட்பட்டு வாழ்ந்தான்னா இயற்கையின் கொடையை அவன் முழுக்க முழுக்க அனுபவிக்கிறான்.

காதலிக்கிறவன்  தற்கொலை பண்ணி செத்துப்போகலாம். ஏன்னா காதல் என்பது மனிதனின் படைப்பு.  இது அனியற்கை .

ஆனால் எவனாச்சும் எவளையாச்சும் படுக்கப்போடனும்னு நினைச்சா ( ஐ மீன் அது அவன் சப் கான்ஷியஸ்ல கூட அதிர்வுகளை ஏற்படுத்தனும்) அவன் தற்கொலை பண்ணிக்கிறதில்லை.

நடிகைகள் மேட்டர்ல பார்த்திங்கனா அவிக கிழவியான பிறவும் கூட இளமையில வசதியில்லாம இருந்த  – நடுவயசுல வசதி வந்த  புண்ணாக்கு வியாபாரி – மிளகாய் வியாபாரில்லாம் படம் எடுத்தாச்சும் படுக்க போடுவான்.
ஏன்னா அவனோட கோரிக்கை இயற்கையானது.

ஆகவே இன உறுப்பின் மீது கவனத்தை திருப்பியவனுக்கு இது பாதி – இன்னொரு பாதி எங்கே என்ற தேடல் வந்துரும். எதிர்பாலினரை தொடர்பு கொள்ள தவிப்பான்.

அவனுக்கு “அது” கிடைக்க எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் இயற்கை இயற்கையாவே அவனுக்கு வழங்க ஆரம்பிக்குது. இதுல அழகு ,அலங்காரம்,ஆடை ,அணி கலன் ,வண்டி வாகனம் எல்லாமே அடங்கிருது.
இன்னம் சொல்லப்போனா அவன் எதுக்கு இதையெல்லாம் சேர்க்கிறான் -ஏன் இதெல்லாம் அவனை தேடிவருதுன்னு  அவனுக்கே  தெரியாது . இதெல்லாம் இயற்கையின் அஜெண்டா. அவன் ரசிகனாகிறான். ரசனை அவனை கலைஞனாவே மாத்திருது.  கலை பெண் தன்மையை தரும் .அது பெண்ணின் ஆண்மை குறித்த அச்சத்தை விலக்கும்.

சுக்கிரனோட காரகத்தை எல்லாம் பார்த்திங்கன்னா எல்லாமே எதிர்பாலினரை கவருவதாவே இருக்கும்.  இதுல சிக்கல் என்னடான்னா இந்த காரகங்கள் தானா வந்து அமையனும். இவனா அலைஞ்சு பறைசாத்தி  சேர்த்துட்டே போனா உபயோகமில்லை.

வேணம்னா சின்னதா சர்வே எடுக்க சொல்லுங்க. வண்டி வண்டின்னு கனவு கண்டவுக -வண்டி வாங்கின பிறகு தங்கள் செக்ஸ் பவர் குறையறதை உணர முடியும். வீடு மேட்டர்னா சொல்லவே தேவையில்லை. வீடு கட்டி முடிக்கிறதுக்குள்ளள இவன்ல இருந்த உருவாக்கும் சக்தி (இதான் செக்ஸ் பவர்) ஃபணாலாயிருக்கும்.

ஆமாம் இன்னைக்கு சுக்கிரன் 2 ல் இருந்தால் என்னபலன்னு சொல்லனுமே .. சொல்லிருவம்ல. அதுக்கு மிந்தி இந்த பதிவை அனுபவஜோதிடா ப்ளாக்ல போடலாமா – ஒரு விபத்து மாதிரி முடக்கத்துல இருந்து மீண்டு வந்த அனுபவஜோதிடம் டாட் காம்ல போடலாமானு ஒரு தர்ம சந்தேகம். கெட்ட நேரத்துல உதவியான்னு கூட சொல்ல முடியாத ஒரு ஆக்சிஜன் குழாய் போல  இருந்த அனுபவஜோதிடாவை அலட்சியப்படுத்தறது தர்மம் கிடையாது.

அதே சமயம் ஆத்தா உத்தரவில்லாம எந்தவித ப்ரொஃபெஷ்னல் எக்செலன்ஸியும் இல்லாம  முடங்கியிருந்த அனுபவஜோதிடம்  தளத்தை நானே செயல்பாட்டுக்கு கொண்டுவந்திருக்க முடியாது. இதை அலட்சியப்படுத்தினா ஆத்தா கோவிச்சுக்கவும் வாய்ப்பிருக்கு.
இப்ப  என்ன பண்ணலாம்?  அனுபவஜோதிடாவா? அனுபவஜோதிடமா?
ஒன்னு பண்ணுவம். எவ்ள டைம் பிடிச்சாலும் சரி அனுபவஜோதிடம் வலைதளத்தை  ஒரு ப்ரொஃபெஷ்னல் டச்சோட கொண்டுவரனும். பதிவுகளை சாதி பிரிச்சு – தொடர்களை தொகுத்து  சூப்பரா ரெடி பண்ணனும். அதுவரை புதிய பதிவுகளை அனுபவஜோதிடாவுலயே போடலாம். வேணம்னா பழக்க தோஷத்துல அனுபவஜோதிடம் பக்கம் வர்ரவுகளுக்கு புதிய பதிவுகளோட தொடுப்புகளை அன்னன்னைக்கு கொடுத்துரலாம்.ஓகேவா?

சுக்கிரன் இரண்டில் நின்றால்:
லக்னாத் சுபராகி பலம் பெற்று  நின்றால் அழகான கண்கள் ,சிறந்த கண் பார்வை இருக்கும். ஒப்பற்ற  பேச்சாளர்கள் ,பாடகர்கள் ஆகலாம்.எதிர்பாலினரால் தனலாபம் ஏற்படும் (ஜாதகர்  பெண்ணா இருந்தா பைசா வரதட்சிணை இல்லாம கண்ணாலமாகும்,பெரிய மருமகளா போயி கணவன் வீட்டை ரூல் பண்ணுவாய்ங்க-சொத்துக்களை நிர்வாகம் பண்ணுவாய்ங்க -ஆணா இருந்தா மாமனார்சொத்து வரும் -இல்லின்னா கேணச்சி எவளாச்சும் மாட்டுவா அவளோட உழைப்புல மஞ்ச குளிப்பாய்ங்க). குடும்பத்துல உறுப்பினர்கள் கூடிக்கிட்டே போவாய்ங்க.

சைட் எஃபெக்ட்:
ஹய்யா.. இத்தனை யோகமான்னு துள்ளிக்குதிக்காதிங்க. இரண்டில் உள்ள கிரகம் எட்டையும் பார்க்கும். சீக்கிரமே பேட்டரி அவுட். தம்பதிகளிடையில் பிரிவு வரலாம். வேறு பெண் சகவாசம் ஏற்பட்டு உசுருக்கே கூட ஆபத்து வரலாம், வழக்கு வில்லங்கம் , சிறை செல்ல  கூட வாய்ப்பிருக்கு.
லக்னாத் பாபராகி பலம் பெற்று நின்றால்… கெட்ட கெட்ட வார்த்தையா பேசுவாய்ங்க(அதுலயும் எல்லாமே எவர் கிரீனா இருக்கும்)  பேச்சுல இருக்கிற வேகம் செயல்ல இருக்காது. (கில்மால கூட)  பல கப்பல்கள் காணாம போன – எத்தனை பேர் தொட்ட முலை –  எத்தனை பேர் நட்ட குழியில இவிகளுக்கு காணாம போவாய்ங்க. சொத்து சுகம்லாம் அதுலயே போயிரும்.

ஆரோ ஒரு  நடிகர். பெண் குழந்தைகள் .வீட்டுல ஒரு ஹால் . ஹாலுக்கு மேல கல்யாண மண்டபம் போல அறைகள் இருக்குமாம் . ஹால்ல பார்ட்டி நடக்குமாம். வந்தவுக ஆரு புடிச்சிருக்கோ அவிகளோட மேல ரூமுக்கு போயிருவாய்ங்க. இவரோட மகள் ,மனைவி உட்பட.
இப்படியும் சில பிரகிருதிகள் இருக்கு. நம்மால ஆகாத வேலை -அவியளால ஆகுது ஆகட்டுமேங்கறவுக.

நாளைக்கு சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானங்களான 3-7 ல் நின்றால் என்ன பலன்னு பார்ப்போம். உடுங்க ஜூட்டு.

Advertisements

8 thoughts on “ஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் – காமக்கலையும்: 2

  s.n.ganapathi said:
  May 4, 2013 at 12:21 pm

  anbudan vanakam ::::
  kalakreenga ..

   sambargaadu responded:
   May 4, 2013 at 7:14 pm

   எஸ்.என்.கணபதி ஐயா !
   இறங்கினது வைரச்சுரங்கத்துலயாச்சே. கலக்கறது அற்ப வஸ்துவா இருந்தாலும் கலங்கறது வைரக்குவியல் தானே .

  Saravanan said:
  May 4, 2013 at 3:03 pm

  தலைவரே, நம்மளுது துலா லக்ன ஜாதகம். லக்னாதிபதி சுக்ரன் 2ஆம் இடம் விருச்சிகத்தில். அதே சமயம் 2ஆம் இடம் மற்றும் 7ஆம் இட அதிபதியான செவ்வாய் 10ஆம் இடம் கடகத்துல நீசம். என்ன பண்ண போகுதோ தெரியலையே

   sambargaadu responded:
   May 4, 2013 at 7:13 pm

   வாங்க சரவணன் !
   சுக்கிரன் என்ற கோணத்துலயே பார்க்காதிங்க. அவரு உங்களுக்கு லக்னாதிபதி. இரண்டில் இருந்தால் சொந்த முயற்சியில் பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள துறையில் (சுக்கிரகாரகம்) சாதிப்பீர்கள்.

   2-7 க்குடையவர் நீசம் பெற்றால் லிக்விட் கேஷ்ல பற்றாக்குறை இருக்கும்,பேச்சு கொஞ்சம் வேகமா வந்துரும் அவ்ளதான். அதே போல மனைவிக்கு போதிய முக்கியத்துவம் தரமாட்டீங்க போல. அவிக ஹெல்த்தும் ட்ரபுள் பண்ணும்.அவ்ளதான். சுக்கிரன் உங்களுக்கு அஷ்டமாதிபதியும் கூட .. அவர் ரெண்டில் நிற்கும்போது பணம் ,பேச்சு விஷயங்கள் அதிகமாவே பாதிக்கும்.

  piyes said:
  May 5, 2013 at 7:01 am

  தலெ!வணக்கம். ஒரு வேளை துலா லக்ன ஜாதகருக்கு லக்னாதி சுக்கிரன் 11ல் அதாவது சிம்மம் (பகை வீட்டில்) இருந்தால்,பொதுவிதியான குறைந்த முயற்ச்சி குறைவில்லாத பலன் தருமா. தலீவரே என்னோடதில்லை.தெரிஞ்சக்கார்து. சனி வேறெ பத்துலே கடகத்திலே(அதும் பகைதேன்). 2ல் ராகு,8ல் கேது. 7ம் ஆதி 9ல்.
  சூ+பு 12ல் கூட்டணி.இது தேருமா பாபூ!

   sambargaadu responded:
   May 5, 2013 at 6:44 pm

   ஐயா,
   ப்ளீஸ் வெய்ட் .ஹோல்சேலா அனுப்பத்தானே போறேன்.

  Thirumalaibaabu said:
  May 6, 2013 at 9:50 am

  Thank you brother….Nice topic with useful messages.

  Ajay said:
  April 5, 2016 at 10:52 am

  Sir வணக்கம்,
  எனது ராசிகட்டத்தில :விருட்சக லக்னம் …..7ல் ( ஆட்சி பெற்ற சுக் + சூரி + குரு + புத).
  நவாம்சத்தில்: துலா லக்னம்….. 7ல்( சூரியன் உச்சம்+ செவ்வாய் ஆட்சி)……..11ல் சுக்கிரன்.

  இது marriage life ku any serious ஆப்பு ?…. இதுவரைக்கும் love life கூட கொஞ்சம் ஆப்பாயிடிச்சு……..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s