ஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் – காமக்கலையும்

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகத்துல பாவாதிபதிகள் நின்ற பலன் –  கிரக  சேர்க்கை பலன்னு ஒழுங்காபோயிட்டிருந்தம். சுக்கிரனோட மற்ற கிரகங்கள் சேர்ந்தா என்ன பலன்னு எழுதனும். ஆனால் இதை இன்னைக்கே முடிச்சுட்டா நாளைக்கு சிங்கியடிக்கனும்.
மேலும் வலையுலக மாத்ருபூதம் – ஜோதிட ஓஷோன்னெல்லாம் பட்டம் கொடுத்து வச்சிருக்காய்ங்களே அவிக தாங்கள் விருதை தப்பா கொடுத்துட்டதா நினைக்க கூடாதில்லையா?

மேலும் ஒரு மணி நேரத்துக்கு 118 ஆ இருந்த வ்யூஸ் இன்னைக்கு 48 க்கு விழுந்துருச்சு. இதையெல்லாம் தூக்கி நிறுத்தனும்னா இதான் ஒரே வழி . அதனால சுக்கிரன் ஜாதகத்தில் நின்ற பலன் -சுக்கிரனோடு இதர கிரகங்கள் சேருவதன் பலன் எழுத ஆரம்பிச்சா 12+8 ஆக இருபது நாட்களுக்கு பயமே இல்லை.

Image

மேட்டருக்கு போயிரலாம்.

மொதல்ல சுக்கிரனோட காரகங்களை பார்ப்போம்.(அவரே சொல்றாப்ல எழுதியிருக்கன்)

வசதியான வீடு , வாகனம், அழகான மனைவி, செக்ஸ், படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள்,  நடனம், சங்கீதம் எல்லாவற்றிற்கும் நானே காரகன். தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்பு,சுக்கில,சுரோணித சுரப்புகள் என் பொறுப்பு.

வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே.  கலா ரசனை,கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸ், கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி,  நாடகம்,பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு,  ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்  ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டி எல்லாத்துக்கும் தான் நான் அதிபதி.

இப்போ சுக்கிரன்னா உங்களுக்கே ஒரு ஐடியா வந்திருக்கும்.இப்படியா கொத்த சுக்கிரன் ஜாதகத்துல லக்னம் முதல் விரய ஸ்தானம் வரை உள்ள  12 பாவங்களில் நின்றால் என்ன பலன்னு பார்ப்போம்.

Image

அதுக்கு மிந்தி பதிவோட தலைப்பை பற்றி சின்ன விளக்கம். ஜாதகத்தில் சுக்கிரன் நிலையும்  – காமக்கலையும்ங்கறது தலைப்பு. காமக்கலைங்கறது ஜஸ்ட் ஒரே ஒரு சுக்கிரன் பெட்டர் பொசிஷன்ல இருந்துட்டா கைவந்துராது. பனிரண்டு பாவங்களும் – நவகிரகங்களும் அனுகூலமா இருந்தாதான் காமக்கலையில கலக்க முடியும்.

ஆனால் மத்த கிரகமெல்லாம் அனுகூலமா இருந்து இந்த சுக்கிரன் மட்டும்  பல்பு வாங்கியிருந்தா நிலைமை ரெம்ப கவலைக்கிடமாயிரும். அதே சமயம் மத்த கிரகம் எல்லாம் பிரதி கூலமா இருந்தா சுக்கிரன் மட்டும் அனுகூலமா இருந்தா ” காமாதுரானாம் ந சிக்கு நா லஜ்ஜா”ங்கறாப்ல ஆனந்தமா வாழ்ந்துரமுடியும்.(வாழும் வரை) காமவயப்பட்டவனுக்கு வெட்கம் இருக்காதுங்கறது மேற்படி சுலோகத்தோட அருத்தம். இதான் சுக்கிரனோட முக்கியத்துவம்.

அடுத்தது காமக்கலைங்கற வார்த்தைய உபயோகிச்சிருக்கேன். காம வேகம் ,காம நோய் ,காம உணர்வு இப்படி பல சாய்ஸ் இருக்கு.ஆனால் கலைங்கற வார்த்தைய யூஸ் பண்ணியிருக்கேன்.

ஏன்னா சரியான ஆண் – சரியான ஆணா இருந்தா அவனோட  காமம் ஒரு கலை கணக்கா வெளிப்படும். மனிதன் ஒரு மிருகம் . அவனை ஒரு கணமேனும் மனிதனா மாத்தறது ரசனை தேவனாகவே மாற்றுவது கலை.

ஆரம்பகாலத்துல இந்த மேட்டர்ல நிறையவே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கம். இருந்தாலும் அந்த மேட்டரோட சாரம் மட்டும் இங்கே.
காமம் இதை அறியாதவன் எவனும் இல்லை.ஆனால் புரிந்தவன் ? லட்சத்துல ஒருத்தங்க இருந்தா சாஸ்தி.

இந்த மேட்டர்ல முடியாதவங்க தேன் நிறைய முயற்சி பண்றாய்ங்க. முடியுமோ இல்லையோங்கற சந்தேகமுள்ளவுக மிக அதிகம் முயற்சி பண்றாய்ங்க. முடிஞ்சவங்க கூட முடியாத போது முயற்சி பண்ணி மொக்கை ஆயிர்ராய்ங்க.
முடிஞ்ச போதெல்லாம் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டுக்காத இருந்துட்டவுக மனசுல முடியாத போது ஆயிரத்தெட்டு கேள்விகள். இந்த கேள்விகளுக்கு கிடைக்கிறதெல்லாம் இழந்த சக்தி வைத்தியர்களின் துரோக பதில்கள் தான்.

இது ஒரு கலை. ( பெண்ணின் ஆடையை கலைப்பதல்ல) கலையில் தேர்ச்சிக்கு தேவை ரசனை. ரசனை எந்தளவுக்கு  உயர்தரமா இருக்கோ அந்தளவுக்கு கலையில ஈடுபாடு வரும்.ஈடுபாட்டை பொருத்ததுதான் தேர்ச்சி.

இந்த மேட்டர்ல நிறைய தொடர்பதிவெல்லாம் கூட போட்டாச்சு. புதிய வாசகர்களுக்காக அவற்றின் சுட்டிகள் கீழே. ஒடனே மேட்டருக்கு போயிரலாம்.

8+8 வகையான கில்மா பார்ட்டிகள்
https://anubavajothida.wordpress.com/2012/07/02/88-sexuallives/
லூனார் மனிதர்களின் கில்மா
https://anubavajothida.wordpress.com/2012/07/04/lunar-sex-desires/
8+8 வகையான  கில்மா பார்ட்டிகள்
https://anubavajothida.wordpress.com/2012/07/02/88-sexuallives/
7 வெர்ஸஸ் 23 = சூப்பர் கில்மா
https://anubavajothida.wordpress.com/2012/04/24/7×23-super-gilma/
கில்மா கனவுகள்: மேஷம்
https://anubavajothida.wordpress.com/2012/01/31/gilma-dreams-mesham/
சுக்கிரன்னா வெறும் கில்மா தானா?
https://anubavajothida.wordpress.com/2011/09/20/venus-love-sex-audio/

எச்சரிக்கை:

அவசரத்துக்கு கிடைச்சது இதான். இன்னம் மஸ்தா கீது.ஏக் தம் ஹெவி சீரியல்ஸே இருக்கு. புதை பொருள் ஆராய்ச்சி கணக்கா நோண்டி நுங்கெடுக்கலாம் ( என்ன ஒரு கெட்ட வார்த்தை)

இன்னைக்கு லக்னத்தில் நிற்கும்   சுக்கிரன் என்ன செய்வாருன்னு பார்ப்போம்.
குழந்தைகள் ஆரம்பத்துல தங்கள் ஆசனத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். இதை சைக்காலஜியில ஆசனப்பருவம்னு சொல்றாய்ங்க.சில குழந்தைகள் தங்கள் கழிவையே கையில் எடுத்து “நொள”வேலைல்லாம் செய்வாய்ங்க.

ஆனால் லக்னத்துல சுக்கிரன் இருந்தால் நோ ஆசனப்பருவம்.டைரக்டா இவர்கள் கவனம் இன உறுப்பின் மீது போகலாம்.

லக்னாத் சுக்கிரன் பாபரா இருந்தா இது சுய இன்பத்தில் கொண்டு விடலாம். அல்லது கில்மாவுக்கே வாய்ப்பு கிடைத்தாலும் விந்து முந்தலாம்.சுக்கிர காரகங்கள் எல்லாமே கண்ணாமூச்சி காட்டும்.(உ.ம் வீடு,வாகனம்,காதல்) போக போக இவிக ரசனை மட்டமா போகும். நீலப்படங்களுக்கு இவிக தான் மொத ரசிகர்களா இருப்பாய்ங்க.காஞ்ச மாடு கம்பங்கொல்லையில விழுந்த மாதிரின்னா அது இவிகளுக்குத்தான் பொருந்தும்.

சுபராக இருக்கும் பட்சத்தில் ஆணாக இருந்தால் மென்மை மிளிரும்.பெண்ணாக இருந்தால் பெண்மை பூத்துக்குலுங்கும்.கலைகளில் ஆர்வம் இருக்கும். பயிற்சி கிடைக்கும். தேர்ச்சியும் அடைவர். இந்த கலைகள் எதிர்பாலினரை இவர் நோக்கி கவரும். ஆடை அலங்காரங்களில் கவனம் செலுத்தலாம். சுக்கிர காரகங்களை தேடி இவிக போகமாட்டாய்ங்க.அதெல்லாம் இவிகளை தேடிவரும். உயர்ந்த ரசனை கொண்டவர்களாக இருப்பார்கள் . செக்ஸ்ல கூட ஒவ்வொரு அணுவையும் ரசிக்கனும்னு நினைப்பாய்ங்க.

சுக்கிரன் இரண்டில் நின்றால் என்ன பலன் என்பதை அடுத்த பதிவுல பார்ப்போம். உடுங்க ஜூட்டு.

Advertisements

One thought on “ஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் – காமக்கலையும்

    Ajay Kannan said:
    April 4, 2016 at 6:44 pm

    Sir, லக்னாத் சுக்கிரன்-னு எதை mean பன்றீங்க ??……u mean சுக்கிரன் இருக்கும் வீட்டின் அதிபதி???…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s