கிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
ஆன்லைன்ல ஜாதகவரத்து மானாவாரியா இருக்கிறதால பத்து பத்து ஜாதகங்களை ஒரு க்ரூப்பா பிரிச்சு -அவிகளை பந்தி கணக்கா உட்கார வச்சு மொதல்ல முன்னோட்டம் -பிறவு பரிகாரம்னு அனுப்பிக்கிட்டிருக்கேன்.

ஒரு ஜாதகத்தை எடுத்தா அதை பைசல் பண்ணிட்டு அடுத்த ஜாதகத்துக்கு போறதுதான் முறை.ஆனால் ஒரு நாளைக்கு அஞ்சு பேரை கூட திருப்தி படுத்தலின்னா இந்தாளு காசை எடுத்துதண்ணி போட்டு எந்த சாக்கடையில விழுந்துகிடக்கிறானோன்னு நினைச்சுருவாய்ங்க.

அதனாலதான் இந்த பந்தி ஃபார்முலா. இதுல உள்ள மைனஸ் என்னடான்னா அடுத்த பந்திக்கு காத்திருக்கிறவுக செமை கடுப்பாயிருவாய்ங்க.

இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா சமீப காலமா பதிவுகள் டெலிக்ராம் லேங்குவேஜ்ல வந்துக்கிட்டிருக்கு. ஆதியோடந்தமா பதிவு போட்டு ரெம்ப நாளாச்சு.

நேத்திக்கு ஓவர்டைம் செய்து நேரம் மிச்சம் பிடிச்சு இந்த பதிவை போட்டுக்கிட்டிருக்கேன். அதை சொல்லத்தான் இந்த மொக்கை.

சரி பதிவுக்கு போயிரலாம் .இன் ஜெனரல் கேது தசை / புக்தி யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார்.  துன்பங்கள் மூலம் தான் தேடல் -தேடலின் பலன் தான் ஞானம். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி துறையிலோ , சன்னியாச வாழ்விலோ இருந்தாலன்றி கேது நற்பலனை தரமாட்டார்.

இதை எப்படி அடிச்சு சொல்றேன்னா அனுபவம் தேன். ஒரு பக்கம் அஷ்டம சனி -இன்னொரு பக்கம்  கேது புக்தி நடந்துக்கிட்டிருந்தப்பதேன் எந்த வித முயற்சியும் செய்யாம பூர்விக சொத்து வித்து -ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூவா கைக்கு வந்தது. அனுபவம்.

அன்னைக்கு நான் வாழ்ந்தது ஒரு குடிசையில. உஞ்ச விருத்தி பிராமணனை விட ரெம்ப டிசிப்ளினோட இருந்தமுங்கோ.

கேது தனியா இருந்தாலே இதான் விதி. கேது 3,4, 6,10,11,12 ல இருக்கலாம்ங்கறது விதி. இந்த இடங்கள்ள இவர் வேறு கிரகங்களோட சேர்ந்தா ? என்ன ஆகும்?

இவரை போலவே 3,6,10,11 ல இருந்தா நன்மை தரக்கூடிய கிரகங்கள் சூரி,செவ்,சனி இதே பாவங்கள்ள இந்த கிரகங்களோட கேது சேர்ந்தா பரவாயில்லியான்னு கேப்பிக.

தீர விசாரிக்கலாம் இருங்க. 3 இளைய சகோதரஸ்தானம் ,காதை காட்டும். இங்கே கேது/சூ-செவ்,சனி சேர்ந்தா இது ரெண்டும் ஃபணால்.

11 மூத்த சகோதர ஸ்தானம்,மற்றும் பாதம்,முழங்காலுக்கு இடைப்பட்ட பகுதியை காட்டுமிடம்.  இங்கே இங்கே கேது/சூ-செவ்,சனி சேர்ந்தா இது ரெண்டும் ஃபணால்.

சரி ஒழியட்டும் 6-10 ல கேது/சூ-செவ்,சனி சேர்ந்தா பரவாயில்லியான்னு கேப்பிக. சொல்றேன்.

ஆறு நமக்கு கடன் கொடுத்தவன் – நம்ம கிட்டே கடன் வாங்கினவன், நம்ம மேல வழக்கு போட்டவன், நாம ஆரு மேல வழக்கு போட்டமோ அவனை காட்டும்.இங்கே  கேது/சூ-செவ்,சனி சேர்ந்தா அவிகல்லாம் காலி. இது தாய் மாமனை காட்டுமிடம் .ஸோ அவரும் காலி . இது வயிறை காட்டுமிடம். ஆக கிரைண்டருக்கும் ஆப்பு.

பத்தாமிடத்துக்கு பேரே கர்மஸ்தானம். நம்ம தான தருமங்களை காட்டுமிடம் 9 இதை தர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. பத்துல பாவியிருந்தா ஓஹோம்பாய்ங்க. இது உலகியல் ரீதியா ஓகேதான்.ஆனால் பத்துல சுபர் இருந்தாலும் அய்யோ பாவம் பார்த்து – நீக்கு போக்கா நடந்து ரூவா புரட்டுவோம். இதுவே இங்கே பாப கிரகம் இருந்தா?

பொஞ்சாதிய லாட்ஜுக்கு அனுப்புடா எனக்கென்ன.. என் காசை எண்ணி வை. ஒனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு நானே ஆள் அனுப்பறேங்கற ரேஞ்சுக்கு போயிருவம். இதனால கருமம் கூடும்.அதை தொலைக்க எடுத்தாக வேண்டிய பிறவிகளின் எண்ணைக்கையும் கூடும்.

ஆக கேது எங்க இருந்தாலும் ஆப்பு ஆப்புதான். இவரு நமக்கு கொடுக்கிறதெல்லாம் ரெண்டே சாய்ஸ் ஒன்னு பெக்கர் அடுத்தது செய்ன்ட்.செய்ன்ட் கணக்கா வாழ முடிஞ்சா கேது அவரு பாட்டுக்கு சைடு கொடுத்துட்டு போயிக்கினே இருப்பாரு. இல்லின்னா பிச்சைக்காரனாக்கிட்டு தான் மறுவேலை பார்ப்பாரு.

ஓரளவுக்கு கேதுவை பத்தி ஒரு ஐடியா வந்திருக்கும்னு நினைக்கிறேன். இவரோட இதர கிரகங்கள் சேர்ந்தா பலன் எப்படியிருக்கும்னு ச்சொம்மா கோடி காட்டறேன்.

கேது+சூ :
கேது =ஞானகாரகன் சூரியன் =ஆத்மகாரகன். நீங்க ஆத்ம ஞானமே நோக்கமா வாழ்ந்தா நோ ப்ராப்ஸ்.இல்லின்னா சூரிய காரகம் மொத்தம் ஃபணால் .

கேது+சந்தி:
கேது =ஞானகாரகன் சந்திரன் =மனோகாரகன் .உங்க மனமெல்லாம் ஞானத்தால் நிரம்பியிருந்தால் நோ ப்ராப்ஸ்.இல்லின்னா சந்திரகாரகம் மொத்தம் ஃபணால்.

கேது+செவ்
கேது =ஞானகாரகன் செவ் =புரட்சிக்கு காரகன் நீங்க ராமானுஜரை போல புரட்சிகர ஆன்மீக தற்கொலை படையா இருந்தா நோ ப்ராப்ஸ்.இல்லின்னா ரத்தம்கெட்டு நாறிப்போகவேண்டியதுதான்.

கேது+குரு:
கேது =ஞானகாரகன் குரு =வேதங்கள்,புராணங்கள் நீங்க வேதங்கள் புராணங்கள்ள மூழ்கி ஞான முத்துக்களை சேகரிக்கிறதே வேலையா வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ். அல்லது நாத்திக செம்மலா இருந்தாலும் பிரச்சினையில்லை. இல்லின்னா குரு காரகம் ஃபணால்.

கேது+சனி:
கேது =ஞானகாரகன் சனி உங்களை கருமமே கண்ணாயினாரா மாத்தக்கூடிய கிரகம். (கண் துஞ்சார் பசி நோக்கார்..கவிதை தெரியும்ல) நீங்க ஞானத்தை நோக்கமாய் கொண்டு அப்படி மாறினா ஓகே.இல்லின்னா சனி காரகம் ஃபணால்.

கேது+புதன்
கேது =ஞானகாரகன் புதன் = ஒருங்கிணைத்தலுக்கு காரகன். நீங்க ஞானமே நோக்கமாக ஞானிகளையும் – சீக்கர்ஸையும் ஒருங்கிணைப்பதுல முழு மூச்சா இறங்கிட்டா ஓகே.இல்லின்னா புத காரகம் ஃபணால்.

கேது சுக்கிரன்:

காமத்திலிருந்து கடவுளுக்கு ,தந்த்ரா போன்ற புஸ்தவங்களை படிச்சு ட்ரை பண்ணலாம். இல்லின்னா மூச்சா போறதுக்கு கூட லுல்லா உதவாம போயிரும்.

இது கேதுவுடன் இதர கிரகங்களின் சேர்க்கைக்கு பலன். இதுல கேது  உங்க லக்னாதிபதியோட சேர்ந்தா பொளப்பு நாறிரும்(உங்க நோக்கம் உலக வாழ்வா இருந்தா) .இதை மறந்துராதிங்க.

நாளைக்கு சுக்கிரனுடன் இதர கிரகங்கள் சேர்ந்தால் என்ன பலன் என்பதை படு ஜிகாவா, கில்மாவா சொல்லப்போறேன். விட்டா சின்னதா தொடர் ஆரம்பிச்சுரலாமா?

மனிதர்களைன் செக்ஸ் வக்ரங்களுக்கெல்லாம் காரணம் இந்த தொடர்ல கவர் ஆயிரும். எப்படி வசதி?
கேது+சுக்கிரன்

எச்சரிக்கை:
ஜிமெயில்ல ஸ்டோரேஜ் லிமிட் தீர்ந்துருச்சு. இது சாதனையா பிரச்சினையா புரியலை

9 thoughts on “கிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்

  s.n.ganapathi said:
  May 2, 2013 at 7:43 am

  சாதனை

   sambargaadu responded:
   May 2, 2013 at 8:24 am

   அய்யா !
   வாங்க வணக்கம். ஜீமெயில் ஸ்டோரேஜ் தீர்ந்து போனதைதானே சொல்றிங்க. நன்றி ஐயா.

   ddff said:
   July 14, 2013 at 4:59 am

   ha:))ha:))

  piyes said:
  May 2, 2013 at 8:11 am

  அண்ணே!வணக்கம்ணே!, இப்போ உங்க ஜாதகத்துலே பத்துலே கேது. பத்துலே பாம்பு இருந்தா பணம் பறந்து வரும்ணு உங்க பதிவு ஒன்னுலே படிச்ச ஞா. ஆனா கேது இருந்தா நல்லதில்லேன்னு சொல்லியிருக்கீங்க.உண்மை நிலவரம் என்ன?

   sambargaadu responded:
   May 2, 2013 at 8:31 am

   வாங்க பொன்னுசாமி சார் !
   இடம்,பொருள்,ஏவல்,கால, தேச, வர்த்தமானம்னு எத்தனையோ இருக்கு. ஜஸ்ட் ஒரு சொலவடைய நம்பிரப்படாது. நம்ம ஜாதகத்துல பத்துல கேது இல்லை ராகுதேன்.

   ஆனா ஜீவனாதிபதியான செவ்வாயோட கேது சேர்ந்திருக்காரு. ஆக நீங்க சொன்னது ஒரு வகையில சரிதான். பத்துல கேது இருந்தா ஆராய்ச்சி மனப்பான்மை – புரட்சிமனப்பான்மை -புதுமையில வெறி இருக்கும். இதையெல்லாம் உலகம் அவ்ள சீக்கிரம் ரெகக்னைஸ் பண்ணுமா என்ன? ஊஹூம்.

   1990 மார்ச் மாசமே ஆஃபீஸ் போட்டாச்சு. ஆனாலும் நமக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்க (தகுதிக்கு மேலயே கிடைச்சுருச்சு) 7 வருசம் ஆச்சு.
   கேது =7.

   அதுவரை பொளப்பு நாறிருமில்லை. இதுவல்லாது கேது ஞான காரகன். ஒரு ஜோதிடனாக ” தானா எது நடக்குமோ அது நல்லதுக்கே .. நீயா அலைஞ்சு பறைசாத்தினா நாறிப்போறதுக்கு”ன்னு சொல்றேன்னு வைங்க.சனம் இவன் என்னய்யா சோதிடன் ..? எல்லாம் கிரகப்படி நடக்கும்னு தானே சொல்லனும்பாய்ங்க.

   கேது கொடுக்கிறது ஞானம் உலகத்துக்கு தேவை அறிவு (இன்ஃபர்மேஷன்) .இதனாலதேன் கெட்ட பலனை தந்திருக்கேன். இதுல தீனி,தூக்கம்,கில்மான்னு இருக்கிற பார்ட்டின்னா ஞானம் எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கெல்லாம் போகவேண்டி வந்துரும் (உ.ம் போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,சுடுகாடு)

  வினோத் said:
  May 20, 2013 at 8:48 am

  ஜிமெயிலின் பழய மெயில்களை புது மெயில் ஐடிக்கு பார்வர்ட் பண்ணிவிட்டு,
  பழய மெயில்களை டெலிட் செய்து விடவும்…

  அப்புரம் அதே ஐடியில் முதல் மெயிலில் இருந்து திரும்ப ஆரம்பிக்கலாம்

  நன்ரி,
  வினொத்

   sambargaadu responded:
   May 20, 2013 at 1:10 pm

   வாங்க வினோத் ஜீ !
   நல்ல யோசனையா இருக்கே.. தேங்க்ஸ்!

  தனசேகரன் said:
  March 9, 2017 at 10:51 am

  நல்ல தமிழில் எழுதுங்கள். எதுவும் புரியவில்லை. கேது+சுக்கிரன்

   sambargaadu responded:
   July 15, 2017 at 9:24 pm

   “அவா” ஆத்துக்கு போங்கோ .. திண்ணையில காக்க வச்சு “ஷொல்லுவோ”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s