கிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்

Posted on

Jaya sign Eng

அண்ணே வணக்கம்ணே !
சோசியத்துல ஆனா ஆவன்னா தெரியாதவுகளுக்கு கூட சனின்னாலே ஒரு கிலி. இந்த பார்ட்டி தனிய நின்னாலே பேதியாக்கிருவாரே. இதுல இவரோட கிரகங்கள் வேற சேர்ந்தா என்னாகுமோன்னு பீதியாயிராதிங்க. இடம்,பொருள்,ஏவல் -கால,தேச,வர்த்தமானம்னு எத்தனையோ இருக்கு.
எல்லாத்தையும் கூட்டி கழிச்சு  நெட் ரிசல்ட்டை கேட்ச் பண்ணனும். அதுக்கப்பாறம் பயந்தாலும் ஒரு லாஜிக் இருக்கும்.ச்சொம்மாவே கற்பனை பண்ணிக்கப்படாது.ஆமாம் சொல்லிப்புட்டன்.
சனி உங்க லக்னத்துக்கு சுபர்னு வைங்க. சுஸ்தானத்துல இருக்காருன்னு வைங்க. இவரு பலம் பெறனும். அப்போ யோகம் கதவை தட்டும். ஒரு வேளை சனி உங்க லக்னத்துக்கு பாவர்னு வைங்க. துஸ்தானத்துல இருக்காருன்னு வைங்க. இவர் பலமிழக்கனும்.
அட மேற்படி விதி எதுவுமே ஒர்க் அவுட் ஆகல்லை. கு.ப அவர் வக்ரம் பெற்றால் போதும் பலன் தலைகீழா மாறும். நம்ம ஜாதகம் (ஞா இருக்கும்னு நினைக்கிறேன்) கடகலக்னம், சனி 7 – 8க்கு அதிபதி. 9 ஆமிடமான பாக்ய ஸ்தானத்துல உட்கார்ந்தாரு. ஆனால் வக்ரம். எப்படியோ தப்பி பிழைச்சோம்.
இப்படி ஆயிரத்தெட்டு விதிகள் -உபவிதிகள் எல்லாம் இருக்கு. இங்கன சொல்லப்போற பலன்லாம் ப்ரிலிமினரிதான். இதை சுப்ரீம்கோர்ட் ஆர்டர் போல நினைச்சு பயந்துக்காதிங்க.
இப்பம் சனி இதர கிரகங்களோட சேர்ந்தா என்ன பலன்னு பார்த்துருவம்.
1.சனி+சூ:
பல் தலை எலும்பு,முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை வரலாம். சொம்படிக்கிறதுல  ஆர்வம் இருக்கலாம். ஜாதகர் பகல்ல பிறந்திருந்தா இது  அப்பாவுக்கு நல்லதில்லை. அவரோட விரோதம் வரலாம். உள்ளாட்சி அமைப்புகளால் பிரச்சினை வரலாம். அபராதம் ,தண்டனை கூட கிடைக்கலாம். கால்,நரம்பு ,ஆசனம்  பாதிக்கப்படலாம்
2.சனி+சந்திரன்:
பிறர் செய்ய விரும்பாத வேலைகளை அவிகளை வற்புறுத்தி செய்ய வைக்கிற குணம் இருக்கலாம்.பிறர் துன்பத்தில் இன்பம் காண்பார்கள். பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்கற அரசியல் வாதிங்க ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கலாம். சட்டுனு உ.வ படுவாய்ங்க.  நரம்பு மண்டலம் பாதிக்கும். கான்சிட்டிபேஷனும் -லூஸ் மோஷனும் மாறி மாறி கலாய்க்கும்.
3.சனி+செவ்:
ரத்த மூலம்,  நரம்பு பலவீனம், அங்கஹீனம் ஏற்படலாம். ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை ஏற்படலாம். சோதர ஹானி. சோதரர்களால் ஜாதகருக்கு ஆப்பு. வேலைக்காரன் கூட ஆபத்தை விளைவிக்க முடியும். சனி,செவ் காரகங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். இன்னும் சொல்லனுமா என்ன பல முறை தனிப்பதிவுகளே போட்டிருக்கேங்க.
4.சனி+ராகு:
இங்கே ராகுவுக்குத்தேன் பலம்.  சனி முழு வீச்சோட வேலை செய்ய முடியாது.சனி காரகம் கொண்ட தொழில்கள்ல சூதாட்டம் மாதிரி ஒரு  கேம் ஆடிப்பார்க்கலாம்.  உ.ம் கிரானைட்ஸ். எங்க பக்கத்துல ஊரான் வெட்டி வச்ச  கிரானைட்டை திருடி வித்தே பெரியாளு ஆன பார்ட்டி ஒன்னு உண்டு. இதுவும் சனி+ராகு காம்பினேஷனோட எஃபெக்டுதேன்.
ராகு காரகத்துல இறங்கும் போது சனி காரகங்களான தாமதம், தலித்,கூலிகளின்  எதிர்ப்புல்லாம் டைல்யூட் ஆயிரும்.
இந்த காம்பினேஷன் 3 ல் ஏற்பட்டா  தம்பி,தங்கை காலி,சவுண்ட் பாக்ஸ் அவுட்டு, 6 ல் நின்னா எதிரி,கடன் கொடுத்தவன்,இவிக மேல வழக்கு போட்டவன் அவுட்டு, 10ல நின்னா கூலியே இல்லாம வேலை பார்க்க சனம் வருவாய்ங்க.11ல நின்னா அக்கா,அண்ணா காலி. இப்படி ஒவ்வொரு பாவமா பார்க்கனும். லக்னத்துல நின்னா  என்னாகும்? தனபாவத்துல நின்னா என்னாகும்? வரிசையா பார்க்கனும்.
லக்னம் மகரம்/கும்பமா இருந்தா ராகு கேது 1-7 ல் உள்ள எஃபெக்ட் வந்திரலாம்.
5.சனி+குரு:
ஆசாரம்-அனாசாரம் ,ஆத்திகம் – நாத்திகம்லாம்   ஜாதகரை தலா ஒரு பக்கம் இழுக்கும். இதனால குற்றமனப்பான்மை கூட வரலாம். இவிக ஆத்திகத்தை விடறவரை குரு காரகங்கள் கண்ணா மூச்சி காட்டும். லக்னம் தனுசு,மீனமாக இருந்தால் இவிக ஜாதகத்துக்கு சொல்லும் பலன்கள் தலை கீழாக நடக்கும்.
6.சனி +புதன்:
சனி காரக தொழில்களில் ப்ரோக்கரேஜ் பண்ணலாம். உ.ம் விவசாயம்,ஐரன்,ஸ்டீல்,ஆயில். மருத்துவ தொழில்களில் செகண்ட் க்ளாஸ் துறையில  ஈடுபடலாம். உ.ம் வெட்டினரி. தலித் இலக்கியம்,நாட்டுப்புற இலக்கியம். சனி யோக காரகனா உள்ள லக்னங்களுக்கு புதனும் ஓரளவு அனுகூலமாத்தான் இருப்பாரு. இந்த சேர்க்கை சுமாரான இடத்துல ஏற்பட்டாலும் தூள் பண்ணலாம்.
7.சனி+கேது:
சனி ராகு சேர்க்கை வேறு சனி கேது சேர்க்கை வேறு . ஆசனப்புற்றுக்கு வாய்ப்புண்டு. நோய் கிருமிகளின் தாக்குதலாம்  கால், நரம்பு,ஆசனம்  பாதிக்கலாம். சனி காரக தொழில்களில் ஈடுபடும் போது லாஜிக் இல்லாம கோர்ட் கேஸுன்னு அலைய நேரிடும். திடீர்னு ஒரே நாள்ள தலைக்கு துண்டு வரலாம்.
8.சனி+சுக்கிரன்:
கலப்பு மணம் – வயதில் மூத்தவரை மணத்தல் -வீட்டு வேலைக்காரியுடன் சகவாசம். கால் தொடர்பான ஊனம் உள்ளவரை விரும்பி மணத்தல் . பின் பக்க புணர்ச்சியில் ஈடுபாடு.  பேக்யார்ட் மெயின்டெய்னென்ஸுக்கு தேவையான பொருள்களை தயாரிப்பது,விற்பது லாபம் தரலாம். உ.ம் சேனிட்டரீஸ், ஃபெனாயில்,ஆசிட். ஆட்டோமொபைல்ல டிங்கரிங் , விவசாயத்துக்கு தேவையான வாகனங்கள்,கருவிகள் தயாரிப்பு ஒர்க் அவுட் ஆகலாம்.
சனி இதர கிரகங்களுடன் சேர்ந்தால் ஏற்படக்கூடிய பலன்களை இதுவரை பார்த்தோம். நாளைக்கு புதன், நாளன்னைக்கு கேது, அப்பானாத்திக்கு சுக்கிரன் இதர கிரகங்களுடன் சேருதலால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்.
இந்த சீரிஸ் முடிஞ்சதும் கிரகங்கள் துவாதச பாவங்களில் நிற்கும் பலனை பார்ப்போம். ஓகேவா உடுங்க ஜூட்டு..

20 thoughts on “கிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்

  piyes said:
  May 1, 2013 at 7:55 am

  சகோ!, சனி+இதரர் தலைப்புலே இன்னாத்துக்கு சிஎம் சர்ட்டிபிகேட்.பாராட்டா?
  சனி+இதரர் இணைப்பு பாத்துட்டம்.சனி+இதரர் பார்வைய்க்கும் இதேன் பலனா? இல்லாகாட்டி மாறுமா? பதிவெல்லாம் சூடா கீது வாத்யாரே.பாராட்டுக்கள்.

   sambargaadu responded:
   May 1, 2013 at 11:50 am

   ஐயா,
   அதான் கட்டண சேவையில முழு பலனும் வரப்போகுதில்லை. வெய்ட் ப்ளீஸ்..பப்ளிக் ப்ளாக்ல இதுக்கு மேல டீப்பா போனா ஹிட் புட்டுக்கும்.

    b.sathis kumar said:
    May 23, 2014 at 4:46 am

    கும்பம்,லக்னத்திற்கு குரு-சனி சேர்க்கை 8 ல் என்னென்ன பலன்கள் கிடைக்கும் 06.02.1981 8.15am

  piyes said:
  May 1, 2013 at 7:59 am

  நம்மளோடது மிதுன லக்னம்.சனி 8,9 க்கு அதிபதி.துலாமில் உச்சம் அதிலும் வக்ரம்.
  உச்ச சூரியன் பார்வை+புதன் மேசத்லிருந்து. ஒன்னும் நிதானிக்க முடியலே.

  vino said:
  December 5, 2013 at 9:46 am

  எனக்கு கடக இலக்கணம் 5 இல் செவ்வாய் சனி சேர்கை பலன் ?

   sambargaadu responded:
   December 8, 2013 at 6:31 am

   வாங்க வினோ !
   கோபம் /கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள்,அவப்பெயர்,குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள்.அதே சமயம் ஒர்க்கஹாலிக்கா இருப்பிங்க. சக ஊழியை மனைவியாக வாய்ப்பு/மனைவி உங்களுக்கு தொழிலில் உதவியாக இருக்கலாம்.

    vino said:
    December 17, 2013 at 11:10 am

    எனக்கு பதில் அளித்ததுக்கு மிக நன்றி .

    கடக லக்கினம் 8இல் சூரியன், சுக்ரன், புதன்,குரு சேர்கை பலன் ?

    பொதுவாக 4 கிரககள் சேர்கை பலன் எப்படி இருக்கும்

  sai said:
  December 17, 2013 at 11:19 am

  எனது தோழிக்கு ரிசப லக்கினம் 8இல் சனி ,2 இல் செவ்வாய் ,குரு திசை முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது அவளுக்கு பர்திதிருகும் மாப்ளை ஜாதகம்
  மிதுன இலக்கணம் 8 இல் செவ்வாய் + சனி சேர்கை , ராகு திசையில் சனி புத்தி நடக்கிறது இதனால் என் தோழி உயர்கு ஆபத்து வரும் என கூறுகிறார்கள் சரியா?

   sai said:
   December 17, 2013 at 11:21 am

   இந்த திருமனத்தால் ஏதானும் பிரச்சனை வருமா ??

  BALA said:
  January 27, 2014 at 4:38 am

  எனக்கு கடக இலக்கணம் 5 இல் சுக்ரன், புதன், சனி சேர்கை பலன் ?

   sambargaadu responded:
   January 27, 2014 at 6:17 pm

   தாய் வீடு வாகனம் கல்விக்காக தவிப்பீர்கள்.கிடைப்பது கஷ்டம். எதிலும் லாபம் பார்ப்பீர்கள்..கிடைப்பது கஷ்டம்.

   அவப்பெயர்,அட்வென்சரஸ் தாட்ஸ்,உடன் பிறப்புகளால் அமைதியின்மை,தற்கொலை எண்ணம், நீ ச ஸ்த்ரீ சாங்கத்யம்

    BALA said:
    January 28, 2014 at 2:10 am

    நன்றி சார் எனக்கு ஒன்னும் புரியல, நான் ஒரு ஆராய்ச்சியாளர் மேலும் டெக்னாலஜி ல பட்ட மேற்படிப்பும் முனைவர் பட்டமும் வாங்கிருக்கேன். ஆனால் தாங்கள் கூறுவது சற்று முரண்பாடக உள்ளது.தயவு செய்து விளக்கம் தரவும்
    குறிப்பு: 4ல் செவ்வாய் & கேது, 6ல் சூரியன், 7ல் குரு, 10ல் சந்திரன் & ராகு

  jai ganesh said:
  February 24, 2014 at 5:34 pm

  எனக்கு சன்யாச யோகம் உள்ளதா.? 2.6.1990. 20:36 namakkal

  Krithika yadav said:
  December 29, 2017 at 8:47 am

  9இல் சனி மாத்தி சேர்த்து இருந்தல் என்ன பலன் சார்?

   sambargaadu responded:
   January 1, 2018 at 5:43 pm

   அப்பாவுக்கு நல்லதில்லை

  Senthil said:
  April 8, 2018 at 5:01 pm

  சிம்ம லக்கனம் மகரத்தில் சனி செவ்வாய் குரு சேர்க்கை நன்மையா அய்யா

  Prabu said:
  May 3, 2018 at 12:00 pm

  கன்னி ராசியில் சுக்கிரன் – சனி – குரு சேர்க்கை நல்லதா ?

  Karthika said:
  September 28, 2018 at 7:11 pm

  Sani+ maanthu

  umarani said:
  October 25, 2018 at 1:59 pm

  என் மகளுக்கு கடகலக்னம், 4ல் சனி உச்சம்,உடன் ராகு இருக்கு. மிதுனத்தில் குரு(வக்ரம்) 5ம் பார்வையாக பார்கிறது.7ல் சுக்ரன் (சனி,சுக்ரன் பரிவா்த்தனை) பலன் கூறுங்கள் ஐயா…………. நல்லதா?கெட்டதா????

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s