கிரக சேர்க்கை : செவ்+இதரகிரகங்கள்

Posted on

Image

அண்ணே வணக்கம்ணே !
நம்ம வினோத்ஜீ மிக குறைந்த செலவில்  ஒரே யூனிட்டில்  மின்சாரம்+மினரல் வாட்டர்+உப்பு தயாரிக்கும் ப்ராஜக்ட் ஒன்றை தாம் வடிவமைச்சிருக்கிறதாவும் அதைப்பற்றி நம்ம கன்னிமரா லைப்ரரியில எழுதறதாவும் சொன்னாரு. நிச்சயம் எழுதுவாரு.

இதை பத்தி பேசிட்டிருந்தப்போ (அதாங்க சாட்ல) நம்ம லைஃப்ல நாம பண்ண ஜி.டி.நாயுடு வேலைகள் எல்லாம் ஞா வந்துருச்சு.
எல்லாரும் வசதி வந்தா சொகம்மா வாழலாம்னு தேன் நினைப்பாய்ங்க.ஆனால் நம்ம பொருத்தவரை வசதி வந்துட்டா தாளி என்.டி.ஆர் மாதிரி விடியல் 3 மணிக்கு எந்திரிச்சு வேலை பார்க்க கூட ரெடி. அந்த வசதி வரனுங்கறதுக்காவத்தான் டிவி சீரியல் ரேஞ்சுக்கு கூட இறங்கிட்டம்.(சித்தப்பா,பெரியப்பா ரோலுக்கு கூட ரெடி) ஆனால் ஒன்னும் பேரலை.

 தப்பி தவறி அப்படி ஒரு வசதி வந்துட்டா ஒரே காம்பவுண்ட்ல லேத் முதல் வுட் கட்டிங் யூனிட் வரை வச்சுக்கிட்டு -சின்ன குடிசையில வாழ்ந்தபடி மக்களுக்கு அன்றாட வாழ்வில் உதவும்படியாக  புதுசு புதுசா ஐட்டங்களை தயாரிக்கனுங்கறது நம்ம கனவு.

இதுக்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சி புத்தி.இது எல்லா குழந்தைக்கும் இருக்கும். ஆனால் ஒரு கட்டத்துல ஃபணால் ஆயிருது. நம்மை பொருத்தவரை இன்னைக்கும் நாம பாப்பாதேன். இந்த ஆராய்ச்சி புத்தியால பல முறை நஷ்டப்பட்டிருந்தாலும் பல முறை லாபப்பட்டிருக்கம்ல. உ.ம் நம்ம வீட்டு வாஷிங் மிஷின். நாளிது வரை ஒரு பிரச்சினையுமில்லாம ஓடிக்கிட்டிருக்கு.

நம்ம வீட்ல உள்ள கம்ப்யூட்டர் டேபிள்,ட்ரஸ்ஸிங் டேபிள், சமையலறை கேபின்(?) எல்லாமே நாம தயாரிச்சதுதான். சரியான ஹெல்ப்பர் இருந்தா தூள் பண்ணலாம்.  நிற்க இந்த ஆராய்ச்சி புத்தியாலதேன் நம்ம தளம் முடங்கி போச்சு. ஒரு தாட்டி பண்ண தப்பை இன்னொரு தாட்டி பண்ணக்கூடாதுங்கறது நம்ம சித்தாந்தம். ஆனா விதி?

ஒரு தாட்டி வோர்ட் ப்ரஸ் வெர்சனை அப்டேட் பண்ண பார்த்து பல்பு. லேட்டஸ்டா தீம் அப்டேட் பண்ண பார்த்து பல்பு. எப்படியோ நம்ம சுகுமார்ஜியோட ஐடி -பாஸ் வோர்ட் வொர்க் அவுட் ஆக ஒரு அறிவிப்பு கொடுத்து வச்சிருக்கம். புதிய பதிவுகளுக்கு இங்கன வந்துருங்கன்னு.
மொக்கை போதும்.பதிவுக்கு வாங்கண்ணேங்கறிங்க.அப்படித்தானே. இதோ வந்துட்டன்.

1.செவ்+சூ:
ஏற்கெனவே இந்த சீரிஸ்ல  மொதல் பதிவுலயே சொல்லியிருக்கேன்.
2.செவ்+சந்திரன்:
இந்த சீரிஸ்ல ரெண்டாம் பதிவுல சொல்லியிருக்கன்.

3.செவ்+ராகு:
இது செவ் தோஷத்தை கண்ட் ரோல் பண்ணும்னு சொல்றாய்ங்க. ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வைரல் ஃபீவர் கூட வரலாம். அதே போல சதி எண்ணங்கள். எதிரிகளை நேர புகுந்து அடிக்காம உள்ளடி,முதுகுல குத்தறது இத்யாதி இருக்கலாம். சகோதர வர்கத்துக்கு ஆப்பு. சொந்த (வீட்டு) மனையில விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கலாம். சிலர் விஷயத்துல பாம்பு புற்றே கூட இருக்கலாம். யூனிஃபார்ம் போடாம வேலை செய்ற போலீஸ் கார் ஜாதகத்துல இந்த காம்பினேஷன் இருக்கலாம்.ரியல் எஸ்டேட் மேட்டர்ல குலுக்கல்,பம்பர் லாட்டரில்லாம் அறிமுகப்படுத்துவாய்ங்க.

4.செவ்+குரு:
ஃபைனான்ஸும் நல்லா இருக்கும். நில புலனும் ஓகே. கோவில் நிலத்துல அதுவும் சிவன் கோவில் நிலத்துல கைய வச்சுட்டா நாறிரும். தார்மிக குணம் கொண்ட போலீஸாவோ, டேர் டெவில் லாயர்/ நீதிபதியாகவோ கூட ஆகலாம்.  என்ன ஒரு லொள்ளுனா பொஞ்சாதி,பிள்ளைங்க எல்லாருமே கோவக்காரங்களா மாறலாம். ஜாதகருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.அல்சர் வரலாம்.

5.செவ்+சனி
சொல்லனுமா என்ன பல முறை தனிப்பதிவுகளே போட்டிருக்கேங்க.

6.செவ்+புதன்
தாய்மாமனுடன் விரோதம் வரலாம். கொதி நீர் -கொதி எண்ணெய் ,மின்சாரம்,நெருப்பால் தோலுக்கு பாதிப்பு. ஜாய்ன்ட்ஸ்ல,ஜங்சன்ல  கட்டி வரலாம்.  ப்ளட் க்ளாட் ஆகலாம் . அண்டம் தொடர்பான பாதிப்பு வரலாம் ( டெஸ்டிக்கல்ஸ்)

7.செவ்+கேது:
ஆரம்ப காலத்துல செவ்+ராகு காம்பினேஷனுக்கு சொன்ன மேட்டர் நடக்கலாம்.ஆனால் போக போக ஒரு வித ஃபிலசாஃபிக்கல் அவுட் லுக் வந்துரும் (வந்தா பிழைச்சாய்ங்க. இல்லின்னா கான்சர் கூடவரலாம்) .ஏக்கரா ஏக்கரா நிலத்துல ஆசிரமம் அமைக்கிற உண்மை சாமியார்கள் ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கலாம்.

8.செவ்+சுக்கிரன்:
சொல்லனுமா என்ன பல முறை தனிப்பதிவுகளே போட்டிருக்கேங்க.

4 thoughts on “கிரக சேர்க்கை : செவ்+இதரகிரகங்கள்

  piyes said:
  April 27, 2013 at 7:52 am

  சகோ!, ரொம்ப நல்ல பதிவுதேன்.எனிக்கி தெரிஞ்ச ஒரு ஜாதகத்திலே, கும்ப லக்னம்.
  செவ்+கேது 9ல்.சனி+புதன் 10ம் இடமான விருச்சிகதுலே. சூ+சுக் 11ம் இடமான தனுசு.
  குரு 12ல் நீச்சம். ராகு 3ம் இடமான மேசதிலே(சகோதரம் ஆப்பு).சந்திர ராசி மிதுனம்.
  இவிக வாழ்விலே ஏமாந்தது அதிகம். நடப்பு குரு திசை டிசம்பர் முடிவில்.
  இவிக வாழ்வில் ஏதும் நல்லது நடக்குமாண்ணே?.

   sambargaadu responded:
   April 27, 2013 at 10:26 am

   குரு தசை குரு புக்தியில ஓரளவு எதிர்ப்பார்க்கலாம்.

    piyes said:
    April 27, 2013 at 12:03 pm

    சகோ!,வணக்கம்.
    மேற்கண்ட ஜாதகத்தில் குரு தசை வரும் டிசம்பரில் முடிந்து, வரும் ஜனவரி 2014 ல் இருந்து சனி தசை ஆரம்பிக்கவுள்ளதுண்ணே.

  piyes said:
  April 27, 2013 at 12:04 pm

  DOB 27-12-1985.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s