கிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்

Posted on

tirupati_tirumala

சந்திரனோட எந்த கிரகம் சேர்ந்தாலும் அதை சமாகமனம்னு சொல்வாய்ங்க. சந்திரனுக்கு எந்த கிரகத்தோடும் பகையே இல்லைம்பாய்ங்க. சந்திரனோட சேர்ந்த எந்த கிரகம்னு நன்மை தரும்னும் ஒரு விதி இருக்கு. இதெல்லாம் பொதுவிதிதான். இப்பம் சந்திரனோட இதர கிரகங்கள் சேருவதன் பலனை பார்ப்போம்.
எச்சரிக்கை:
இந்த தொடர்ல கிரகம் என்ற கோணத்துல மட்டும் பார்க்கப்போறோம். அடுத்த தொடர்ல பாவாதிபதிகள் சேர்க்கைங்கற கோணத்துல பார்க்கப்போறோம். இதுவே ஃபைனல்னு நினைச்சுராதிங்க. இதெல்லாம் ஜஸ்ட் ப்ரிலிமினரிதான்.
சந்திரன்+சூ :
சூரியனுடன் இதர கிரகங்கள் சேருவதன் பலனை சொன்ன கடந்த பதிவில் ஏற்கெனவே சொல்லியிருக்கம் இல்லை.
சந்திர+செவ்:
ரியல் எஸ்டேட்ல ஸ்பெக்குலேட்டரா இருக்கலாம். அப்பப்போ ஸ்க்ரூ லூஸாயி லூஸு மாதிரி பிஹேவ் பண்ணலாம். நிலம் ,நீர் ரெண்டும் கை கொடுக்கும். சிலருக்கு சளியில ரத்தம் விழலாம்.
சந்திரன்+ராகு:
மனோவியாதி பீடிக்கலாம். சதி எண்ணங்கள். லங் இன்ஃபெக்சன், கிட்னி இன்ஃபெக்சன், டாஸ்மாக்ல சான்ஸ் உண்டு. கம்பெனி ட்ரிங்ஸ் ஏஜென்சி எடுக்கலாம்.
சந்திரன்+குரு:
ஆட்டை தூக்கி மாட்ல,மாட்டை தூக்கி ஆட்ல போட்டு ரொட்டேஷன் சக்கரவர்த்தியா இருக்கலாம். லைஃப்ல தன் தகுதிக்கு ஒவ்வாத வாழ்வை ஒரு 14 அ 15 வருசம் வாழவேண்டி வரலாம். பணம்,பதவில்லாம் எப்ப வரும் எப்ப போகும் தெரியாது.
சந்திரன்+சனி:
பிறர் செய்ய விரும்பாத வேலைகளை அவிகளை வற்புறுத்தி செய்ய வைக்கிற குணம் இருக்கலாம். சட்டுனு உ.வ படுவாய்ங்க.  நரம்பு மண்டலம் பாதிக்கும். கான்சிட்டிபேஷனும் -லூஸ் மோஷனும் மாறி மாறி கலாய்க்கும்.
சந்திரன்+புதன்:
நெல்ல பிசினஸ் மைண்ட் இருக்கும். மக்கள் தொடர்பில் வல்லவர். அந்த தொடர்புகளை வைத்தே தரகு தொழிலில் தாளிப்பார். மக்களுடன் நேரடி தொடர்பு இருக்கக்கூடிய எந்த தொழிலிலும் ஆர்வம் ஏற்படும். திரவ ரூப பொருட்கள், பேப்பர் மார்ட் ,மருந்து கடை ஏஜென்சி ஓகே.
சந்திரன் +கேது:
மனம் ,நுரையீரல்,சிறு நீரகம் பாதிக்கப்படலாம். செய்வினை , ஆவிகளால் பிரச்சினை (?) வரலாம்.
சந்திரன் +சுக்கிரன்:
சொல்லனுமா என்ன?

14 thoughts on “கிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்

  piyes said:
  April 25, 2013 at 12:36 pm

  சந்+குரு சேர்க்கை மிதுன லக்னத்தில்.கூடவே கேது சேர்க்கை.என்ன ஆகும்ண்ணே?.

   sambargaadu responded:
   April 26, 2013 at 3:53 am

   ஐயா,
   கேது இருக்கும் போது குரு சந்திரர்களின் காரகம் பாதிக்கப்படும். மனம்,நுரையீரல்,சிறு நீரகம் + பொருளாதாரம், வயிறு,இதயம்,திருமணம்,மனைவி,வாரிசுகள்

  selvaaa said:
  April 25, 2013 at 12:51 pm

  தலைவா சுக்கிரன்+சந்திரன் ப்ளீஸ்

   sambargaadu responded:
   April 26, 2013 at 3:53 am

   வாங்க செல்வா !
   சந்திரன் = மனோகாரகன் சுக்கிரன் =சிற்றின்ப காரகன்

  balachandran said:
  April 22, 2014 at 7:33 am

  கடக லக்கினம் 11 இல் ரிஷபத்தில் சுக்கிரன் + சந்திரன் + செவ்வாய் பலன் என்ன

   sambargaadu responded:
   April 27, 2014 at 8:19 am

   கடகலக்னத்துக்கு ரிஷபம் பாதகஸ்தானம், சுக்கிரன் பாதகாதிபதி.இவரோட லக்னாதிபதி சேர்ந்ததால் உடல்,மன நலம் பாதிக்கும். பஞ்சம,ஜீவனாதிபதி சேர்ந்ததால் நிம்மதி,குழந்தைகள்,தொழில் பாதிக்கும்.

  balachandran said:
  April 27, 2014 at 8:59 am

  அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்கும் ??(செக்ஸ் மற்றும் திருமணம் )

  piyes said:
  April 28, 2014 at 5:29 am

  சகோ!, நடப்பு காலம் கேது தசை குரு புத்தி. தொழில், பணம் எல்லாமே விரயம். நிம்மதி போன இடமே தெரியலை. நிலமை தேறுமா சகோ! மிச்சம் இருப்பது குழப்பம் மட்டுமே.
  (மிதுன லக்னத்திலே குரு+சந்+கேது), ராகு வின் பார்வை 7ல் தனுசு விலிருந்து. அனுபவ ஜோதிடம் சொல்லும் ஆலோசனை? ப்ளீஸ்….

   sambargaadu responded:
   May 7, 2014 at 5:43 pm

   நாத்திகராகிவிடுங்கள்.தர்கா,சர்ச் என்று செல்லுங்கள்.குரான்,பைபிள் படியுங்கள்

  VENGAIYAN said:
  May 30, 2014 at 7:28 am

  thulam laknam meshathil santhiran sukiran ragu serkai enna palan pls said

  MOHANRAJ said:
  August 12, 2014 at 10:23 am

  சிம்ம லக்கினம் 1ல் (சந்+சுக்கிரன்-பூரம் நட்சத்திரம்)+(கேது+செவ்வாய் +புதன்-மகம் நட்சத்திரம்)

  reply please sir

   sambargaadu responded:
   August 12, 2014 at 12:07 pm

   இது சிம்ம லக்ன ஜாதகம். லக்னத்துலயே விரயாதிபதியான சந்திரன் நின்னாரு. சந்திரன்னாலே இன்ஸ்டெபிலிட்டி,அன்செர்ட்டெனிட்டி,அப் அண்ட் டவுன்ஸ் தான். லக்னம்ங்கறது ஜாதகரோட உடல்,மன நிலைய காட்டற இடம். இதனால ஜாதகரோட உடல்,மனம் ரெண்டு விஷயமும் ஸ்டேபிளா இருக்காது. ரேப்பிட் சேஞ்ச் இருந்து கிட்டே இருக்கும்.மேலும் பகல் கனவு,ஆகாச கோட்டை, ப்ராக்டிக்காலிட்டி இல்லாம இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸ் எல்லாம் இருக்கும். (ஆனால் இது சந்திரனால ஏற்படற பலன் ங்கறதால இதுவும் ஸ்டேபிளா இருக்காது –மாசத்துல பாதி நாள் இதுக்கு நேர் எதிரிடையான பலனும் நடக்கலாம்.

  MOHANRAJ said:
  September 1, 2014 at 6:44 am

  சிம்ம லக்கினம் 5ல் சனி

  purusoth kishore said:
  November 11, 2016 at 3:24 pm

  சிம்மம் லக்கினம் 11ல் செவ்
  2ல் சந்/குரு
  4 ல் ராகு
  6 ல் சனி
  10 ல் சுக்/கேது
  11 ல் புத
  12 ல் சூரி
  ராசி கன்னி
  நட்சத்திரம் அஸ்தம்
  குரு திசை எப்படி இருக்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s