கிரக சேர்க்கை : சூ+சந்

Posted on

ninna monna nedu

அண்ணே வணக்கம்ணே !
தொழில் நுட்ப காரணங்களால் அனுபவஜோதிடம் சைட்டுக்குள்ள போயி புதிய  பதிவு போட முடியாத குறைக்கு இந்த வோர்ட்ப்ரஸ் தளத்துல இந்த தொடரை ஆரம்பிக்கிறேன்.
ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனுமாம். அப்படி சொந்த சைட் இருந்தாலும் இப்படி ப்ளாக்ல போடவேண்டியதாயிருக்கு. யாவும் நன்மைக்கே.
சைட்டு கதை ஒரு பக்கம். ஒரு தாட்டி வீட்டுக்குள்ள நாயை அவிழ்த்து விட்டுட்டு வெளிப்பக்கம் பூட்டிக்கிட்டு போயிருந்தாய்ங்க.  சாதாரணமா மன்சாளோட மூவ் ஆகி மன்சனை போலவே ஆயிட்ட அந்த பாமரேனியன் தேர்தலுக்கு பிறகான அரசியல் வாதி கணக்கா அதும்பாட்டுக்கு கிடக்கும்.
அன்னைக்கு எதுக்கென்ன சந்திராஷ்டமமா என்னனு தெரியலை. டென்ஸ் ஆயிட்டு கதவை காலால உதைச்சு உதைச்சா ..தேய்ச்சு தேய்ச்சா தெரியலை உள் பக்கம் தாழ்ப்பாள் விழுந்துருச்சு. வீட்டுக்காரம்மா பந்தாவா வந்து பூட்டை திறந்து கதவை திறந்தா திறந்தா தானே?
தாப்பா போட தெரிஞ்ச நாய்க்கு திறக்க தெரியலை. நடுத்தெருவுல நின்னம். அதுக்கப்பாறம் மாப்ளை வந்து ஜாக்கிச்சான் கணக்கா பக்கத்து மாடியிலருந்து லாங் ஜம்ப் எல்லாம் செய்து  திறந்து விட்டாரு.
இதை எல்லாம் எதுக்கு சொல்றேன்னா  நடக்கிறதை ஆக்செப்ட் பண்ணிரனும். மேலுக்கு -உப்புக்கு சப்பாவா ட்ரை பண்ணலாம் அது வேற கதை. கொய்யால .. நம்ம பையன் அனுபவஜோதிடம்னு ஒரு சைட்டை வைப்பான் பிழைச்சுக்குவான்னா எங்கம்மா என்னை பெத்திருப்பாய்ங்க? ஊஹூம்.
தாளி.. முப்பது முக்கோடி தெய்வங்களும் கை விட்டபிறவும் கூட – வாழ்க்கைய  ஒரு இருட்டு கருப்பா பயங்கரமா -பயங்கர கருப்பா சூழ்ந்து கிட்ட சமயத்துல கூட நம்ம கண்களே சூரிய சந்திரர்களாகி வழி காட்டின சந்தர்ப்பமெல்லாம் இருக்கு.
இந்த ஒலகத்துல -மனித வாழ்க்கையில எல்லாமே பொய் . மரணம் ஒன்னுதான் மெய். எதுனா  நடக்ககூடாதது நடந்தா உசுரு போயிருமான்னு ரோசிக்கனும். போகாதுன்னா ரிலாக்ஸ் ஆயிரனும். அப்படியே உசுரு போயிர்ர மேட்டரு – நம்மால ஒன்னும் செய்ய முடியாதுன்னு வைங்க உசுரு போன பிறகு என்ன மசுரு பிரச்சினை இருக்க போகுது.
நம்ம குறுகிய அனுபவத்துல தெரிஞ்சுகிட்ட சத்தியம் என்னடான்னா  நம்ம பக்கம் தர்மம் இல்லின்னா பயப்படனுமே தவிர இந்த மாதிரி முடக்கத்துக்கெல்லாம்  ரோசிக்கவே கூடாது. மேலும் இந்த முடக்கம் தான் உண்மையில நாம யாருங்கறது காட்டிக்கொடுக்கும்.
இதுக்கு மிந்தி தலீவன்னா ஆருன்னு ஒரு ஃபார்முலா சொல்வேன்  “தலீவன் மைனஸ் சகலம் = தலீவன் ”  இந்த சைட்டு தான் முருகேசன்னா முருகேசனுக்கு என்னா மருவாதி? வித் அவுட் அப்டேட்ஸ் அதுவும் ஏப்ரல் 19 லருந்து ஆயிரம்+ ஹிட்ஸ்.
வயசாயிருச்சா ..பாய்ண்டுக்கு வரவே பத்து நிமிசம் ஆகுது. மேட்டருக்கு வரேன். ஜாதகத்தில் கிரகசேர்க்கைக்கான பலன் இதான் தலைப்பு. இன்னைக்கு சூரியனோட பிற கிரகங்கள் சேர்ந்தா எஃபெக்டுன்னு ஒரு குன்ஸா சொல்றேன். பிறவு ஒரு சந்தர்ப்பத்துல இன்னம் விரிவா பார்ப்போம்.
சூ+சந்:
சூரியன் ஆன்ம காரகன் சந்திரன் மனோகாரகன். இவிக ரெண்டு பேரும் சேர்ந்தா நல்ல  கான்சன்ட்ரேஷன் கிடைக்கும்.  மத்தவுக நம்மை “வெறி பிடிச்சவனாட்டமா இருக்கான் பாரு” ங்கலாம்.அது வேற கதை. ஆனால் நாம எதுல அட்டெம்ப்ட் பண்றோங்கறது முக்கியமில்லையா?
சூ+செவ்:
தீவிபத்து,எலக்ட் ரிக் ஷாக் சர்க்யூட்டுக்கெல்லாம் வாய்ப்புண்டு.  நிரந்தர பிரிவுகள் கூட ஏற்படலாம். வனாந்திரத்துல நிலத்தை வாங்கி போடறது. ஷகரான ஏரியாவுல சைட் இருந்தும் கட்டாம இருக்கிறது, புது காலனியில மொத  ஆளா சைட்டு வாங்கறது நடக்கலாம்.
சூ+ராகு:
பல் தலை எலும்பு,முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை வரலாம். இல்லீகல் மேட்டர்ல ஆர்வம் இருக்கலாம். அப்பாவுக்கு நல்லதில்லை. அவரோட விரோதம் வரலாம். உள்ளாட்சி அமைப்புகளால் பிரச்சினை வரலாம். அபராதம் ,தண்டனை கூட கிடைக்கலாம்.
சூ+குரு:
வேதம்,புராணம்,இதிகாசங்களோட சாரத்தை கிராஸ்ப் பண்ணிக்கற கப்பாசிட்டி இருக்கும். (திப்பிய கொண்டு வந்து எக்சிபிட் பண்ணா நாலு அப்பு அப்புவாய்ங்க).கோவில்,குளம் இத்யாதியோட உண்மையான நோக்கத்தை கேட்ச் பண்ணிப்பாய்ங்க. பொளப்புக்காக அண்டும் அவாளை துரத்தி அடிப்பாய்ங்க. லீடர் ஷிப் குவாலிட்டிஸ் இருக்கும்.
சூ+சனி:
சூ+ராகுவுக்கு சொன்ன அதே பலன் கொஞ்சம் தாமதமா நடக்கலாம்.
சூ+புத:
இந்த சேர்க்கை மேஷம், சிம்மம்,கன்னி,மிதுனத்துல  நடந்து ரெண்டு பேரும் லக்னாத் சுபரா இருந்தா நல்ல பலன். படிக்காத மேதைன்னு சொல்லலாம். படிச்ச மேத்ஸ்,சைன்ஸு,ஜோதிடம்,மருத்துவத்துல கலக்குவாய்ங்க
சூ+கேது:
சூரியன் ஆத்ம காரகன். கேது ஞான காரகன். இவிக ஞானத்துக்கு ட்ரை பண்ணா பெறலாம். லோகாயதமா மன்சங்களை பிடிச்சுக்கிட்டு தொங்கினா உபயோகமில்லை. சூ+ராகு சேர்க்கைக்குண்டான பலன் நடக்கலாம்.
சூ+சுக்கிரன்:
ஈகோ இருக்கும். சாப்பாடு ,தூக்கத்துல ,அட பலான மேட்டர்ல கூட ப்ரஸ்டிஜ் பார்ப்பாய்ங்க. இந்த மென்டாலிட்டி காரணமா விந்து கூட வறண்டு போகும்னா பார்த்துக்கங்க.
நாளைக்கு சந்திரனோட பிற கிரகங்கள் சேருவதன் பலனை பார்ப்போம்.

Advertisements

12 thoughts on “கிரக சேர்க்கை : சூ+சந்

  MARUTHAPPAN said:
  April 24, 2013 at 2:28 pm

  what about சூ+புத+குரு

   sambargaadu responded:
   April 25, 2013 at 3:13 am

   வாங்க மருதப்பன் !
   இங்கு குருவை விட்டுட்டு சூ+புதனை மட்டும் கணக்கில் எடுங்க.கணக்கு கரெக்டா வரும்

  piyes said:
  April 25, 2013 at 12:32 pm

  அண்ணே வணக்கம்ணே!பதிவு நல்லா இருக்குங்கோ.சூ+பு சேர்க்கை மேஸத்திலருந்து, துலாம் சனியோட நேர் பார்வை கெடெச்சா என்ன ஆகும்ணே?.

   sambargaadu responded:
   April 26, 2013 at 3:55 am

   லக்னம் என்ன? அதை சொல்லுங்க மொதல்ல..

    piyes said:
    April 26, 2013 at 6:01 am

    வணக்கம்ணே! நான் உங்களுடைய எழுத்தை படித்ததில் இருந்து ரொம்பவுமே ஈர்க்கப் பட்டுவிட்டேன்.
    என்னுடையது மிதுன லக்னம்,மிதுன ராசி. லக்னதிலேயே குரு,சந்திரன்+கேது சேர்க்கை.5ல் சனி உச்சம்(வ), ஏழில் ராகு, பத்தில் சுக் உச்சம்.11ல் மேஸதில் உச்ச சூ+பு(அஸ்). 12ல் ரிச தில் செவ்வாய்.வேலைக்கு ஆப்பு, 10 மாதங்களாகி விட்டது.வேறு வேலைக்கு கடும் முயற்ச்சி.இதுவரை பலன் இல்லை.நிலைமை என்னவாகும்ணே?……

    sambargaadu responded:
    April 26, 2013 at 6:20 am

    ஐயா,
    உங்க வேலை போக காரணம் இதர மொழியனரா,இதர மதத்தவரா,பூனைக்கண்ணரா,ஓரப்பார்வை பார்ப்பவரா அல்லது பெண்,பெண் பெயர் கொண்ட ஆண் / அல்லது டைவர்ஷனா (பார்ட்டி,ஃபங்சன்,பிக்னிக்,கில்மா)அல்லது உங்களை விட வயதில் குறைந்த அ இளைய வயது தோற்றம் உடைய நபரா தெரிவித்தால் உடனே பரிகாரம் தருகிறேன்.இப்போ ..இங்கேயே.

    சூ+புத சேர்க்கையில் சூரியன் தான் பாதிக்கப்படுவார். இதை அஸ்தமனம்னு சொல்லப்படாது.

    piyes said:
    April 26, 2013 at 6:34 am

    ஐயா!,
    வேலை போக காரணம்,தெலுங்கர் மட்டுமல்லாது பூனைக் கண்ணரே.ஓரப் பார்வையும் உண்டு.அந்த மகான்தான் கம்பெனியின் எம்.டி. என்னை விட வயது குறைந்தவரே. எனது பிறந்த தேதி 27-04-1955 பகல் 11-24 மணி.ஹி..ஹி..(நாளை எனது 58 வயது முடிகிறது).தற்சமயம் ஹைதராபாத்தில் வாசம்.
    நன்றியுடன்,
    -psgowda

  piyes said:
  April 26, 2013 at 7:08 am

  ஐயா! வேறு வேலை எப்பொது கிடைக்கும்? தயவு செய்து தெரிவிக்கவும்.
  -Piyes

   sambargaadu responded:
   April 26, 2013 at 7:35 am

   பரிகாரம்:
   இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்

  piyes said:
  April 26, 2013 at 7:45 am

  வணக்கம்ண்ணே!, பரிகார பலன்கள் பாதியுடன் நிக்குதேண்ணே. வேற வேலை எப்போது கிடைக்கும்ணே.

   sambargaadu responded:
   April 26, 2013 at 8:14 am

   ஐயா,
   இந்த பரிகாரங்களை சின்சியரா செய்தா போதும் .. உங்க சின்சியாரிட்டிய பொறுத்து 9 நாட்கள் அ ஒன்னரை மாசத்துல வேலை கிடைச்சுரும்

  செந்தில் குமார் said:
  July 19, 2017 at 4:13 am

  ஐயா எனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம்.சந்திரா திசை புதன் புத்தி நடக்கிறது.4லசுக்ரன்,5ல் சூரியன்,ராகு,புதன்,6லகுறு,சந்திரன்,7ல் செவ்வாய்,சனி,11லகேது.வாழ்வில் பெரிய முன்னேற்றம் இல்லை.என்ன காரணம்.பரிகாரம் சொல்லுங்கள் ப்ளீஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s