நாளை முதல் கிரகசேர்க்கை பலன்: கவுன்ட் டவுன் ஸ்டார்ட்

Posted on

Image

அண்ணே வணக்கம்ணே !
நம்முது கடக லக்னம். லக்னத்துல குரு உச்சம். பத்துல ராகு. (இதை எத்தீனி தபா சொல்லியிருக்கேன்னு ஆருனா கணக்கு வச்சிருந்தா நான் அம்பேல்) பத்துல ராகு இருந்தா ச்சொம்மா மேஜிக் பண்ணனும். கல்லா கட்டிக்கிட்டு போகனும்.
லக்னத்துல குரு அப்படி இருக்க விடமாட்டேங்கிறாரு. சகட்டுமேனிக்கு கில்ட்டி வந்துருது. எதியாச்சும் உருப்படியா செய்யனும்ங்கற எண்ணம் வந்துருது. அந்த எண்ணத்தை செயலாக்க பார்த்தா பல்பு வாங்க வேண்டியதாயிருது.

அட .. ஜஸ்ட்  பாவாதிபதிகள் ஜாதகத்துல எந்த பாவத்துல நின்னா என்ன பலன்னு  எழுத ஆரம்பிச்சோம். மொத்தமே 12 பதிவு தான். அதுக்கே தாளி சைட்டு ரெண்டு தபா புட்டுக்குச்சு. ஒரு தடவை சரண் சார் மனசு வச்சாரு ஓகே. இரண்டாம் முறை இன்னம் செட் ரைட் ஆகலை.

1992 ல பஸ்ஸூல ஜெனரல் செக்கிங்கா இருந்தன். மொத்தம் ரெண்டு பஸ்ஸு. 20 சிங்கிள்ஸ். ஒரு சிங்கிளோட டைமிங்கும் தெரியாது. காலையில ஆஃபீஸ் போனா ஓனரோ -ஓனர் பையனோ மொத சிங்கிளோட டைமிங் சொல்லி – அதை எங்கன போனா கேட்ச் பண்ணலாம்னு ரூட் போட்டு அனுப்புவாய்ங்க. ஒரு நா கில்ட்டி வந்துட்டு சிகரட் அட்டையில 20 சிங்கிள்ஸுக்கும் டைமிங் எழுதிக்கிட்டன். வேலை போச்சு.

ஆக பத்துல ராகு தான் நமுக்கு அனுகூலம் போல. இந்த ஜன்ம குரு பண்ற லொள்ளு கொஞ்ச நஞ்சம் இல்லை.தாத்தாவுக்கு இல்லாத கில்ட்டி நமுக்கு வந்துரும். அம்மாவுக்கு இல்லாத நமக்கு வந்துரும். எதையாவது உருப்படியா செய்யனும்னு வெறி வந்துரும். கோதாவுல இறங்கினதுமே பல்புதான்.
நிற்க. பாவாதிபதிகள் நின்ற பலன் ஆயிருச்சு. கிரகங்கள் நின்ற பலனை சொல்லலாம்னா ஏற்கெனவே ஆடியோவுல போட்டு தாளிச்சுட்டாப்ல இருக்கு. ஆர்ச்சிவ் ஆர்க்ல போயி swamy7867னு தேடுங்க. ஆடியோ கிடைக்கும். (பால பாடம்ங்கற தலைப்புல தந்தோம்)

இப்பம் என்னத்தை எளுதலாம்? டபுள் ட்யூட்டி பார்த்தும் இன்னம் பத்து ஜாதகங்கள் கைப்படாத ரோசாவா இருக்கு.டச்சே பண்ணலை. இன்னைக்கு கவனிச்சுரனும். கு.ப பாதியாவது.

அனுபவஜோதிடம் டாட்காம்ல வித் அவுட் அப்டேட்ஸ் ஹிட்ஸ் அள்ளுது. இந்த வோர்ட் ப்ரஸ் தளம் போனியாக மாட்டேங்குது. தகவல் தெரியலை போல. நம்மாளுங்க  தங்கள் வட்டம் வரை ஷேர் பண்ணாலே போதும். அல்லாருக்கும் தகவல் தெரியும்.

நாளையில இருந்து என்ன எழுதலாம்?
கிரக சேர்க்கை? செமை சப்ஜெக்டுதான். பார்ப்போம். சூ+சந் ,சூ+செவ்,சூ+ராகு ,சூ+குரு,சூ+சனி,சூ+புத,சூ+கேது,சூ+சுக்கிரன் இப்படி 9 கிரகங்களுக்கும் எழுதினா எத்தனை நாள் ஓட்டலாம்? நாம கணக்குல கொஞ்சம் வீக்கு. ஆருனா கணக்கு போட்டு சொல்லுங்ணா.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s