லாப,விரயாதிபதிகள் ஜாதகத்தில் நின்ற பலன்

Posted on

Image

அண்ணே வணக்கம்ணே !
லக்னாதிபதி முதற்கொண்டு பாவாதிபதிகள் ஜாதகத்தில் நின்ற பலனை வரிசையா கொடுத்துக்கிட்டிருக்கன். ஏற்கெனவே கடந்த பதிவுகளில் சொன்னதை போல இவை ப்ரிலிமினரி மட்டும் தான். ஆக்யுரேட் ரிசல்ட் வேணம்னா ரெம்பவே மெனக்கெடனும். அதையெல்லாமும் எதிர்காலத்துல நிச்சயமா எழுதுவன். டோன்ட் ஒர்ரி.
லாபாதிபதி நின்ற பலன்:
1.லக்னத்தில் நின்றால் :
இரண்டு வித மனப்போக்கு இருக்கும் .ட்ரஸ் அப், ஹேர் ஸ்டைல்,பாடிலேங்குவேஜ்ல இருந்து எல்லாம் டபுளா இருக்கும். சமயத்தை பொருத்து வெளிப்படுத்துவாய்ங்க. ப்ராஃபிட் மோட்டிவ் இருக்கும்.
2.இரண்டில் நின்றால் :
இரண்டுவித வருமானம் இருக்கும். நிறைய பேசலாம் அ மாத்தி பேசலாம். விட்டா ரெண்டு ஃபேமிலி கூட இருக்கலாம்.
3.மூன்றில் நின்றால்
இளைய சகோதரம் இரண்டு பேர் இருக்கலாம். ஓ.டி செய்வாய்ங்க அ பார்ட்  டைம் ஜாப் இருக்கும்.சங்கீதத்துல இரண்டு வித ரசனை இருக்கும்.
4.நான்கில் நின்றால்
தாய் மட்டுமல்லாது சித்தி,பெரியம்மா போன்ற ஒருவரின் அன்பையும் பெற்றிருப்பார்கள், இரண்டு வீடு/இரண்டு தலைவாசல் உள்ள வீடு /டபுள் ஸ்டேர் ஹவுஸ் இருக்கலாம். வாகனமும் ஒன்னுக்கு ரெண்டா வச்சிருக்கலாம்.டபுள் டிகிரி.
5.ஐந்தில் நின்றால் :
ரெண்டு புத்தி, 1+1 வாரிசுகள்.இரட்டைக்குழந்தை கூட பிறக்கலாம். பெயர்புகழ் உண்டு.
6.ஆறில் நின்றால் :
கடன்,நோய்,விரோதம்,வழக்கு பெருகும்.
7.ஏழில் நின்றால் :
திருமணத்துக்கு முன் அ பின் வேறொரு பெண் இவர் வாழ்வில் குறுக்கிடலாம். பார்ட்னர்ஷிப் வியாபாரம் இருக்கலாம்.
8.எட்டில் நின்றால் :
மூத்த சகோதர நஷ்டம்.அல்லது அவர்களால் நஷ்டம் ஏற்படலாம். ஜெனரேட் ஆன லாபம் கைக்கு வராம போகலாம்.
9.ஒன்பதில் நின்றால்
அப்பா  மட்டும் அல்லாது பெரியப்பா,சித்தப்பா போன்ற ஓருவரின் அன்பை பெறலாம்.  தந்தை வழியில் சொத்துஆதாயம் உண்டு. தூர தேச பயணமோ ,தீர்த்த யாத்திரையோ ஒன்னுக்கு ரெண்டு தடவை செய்யலாம்.
10.பத்தில் நின்றால்
இரு வித தொழில் அல்லது ஒரு உத்யோகம் ஒரு தொழில் செய்யலாம்.
11.பதினொன்றில் நின்றால்
பிணத்தை கட்டியழும் போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மீது கண் வையடா தாண்டவக்கோனேங்கறாப்ல இவிக பிஹேவியர் இருக்கலாம். சிலர் அண்ணன் அ அக்கா கட்டுப்பாட்டில் இருக்கலாம்.
12.பனிரண்டில் நின்றால்
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தூக்கம்,செக்ஸ், விருந்துகளில் செலவழித்துவிடலாம். அல்லது சம்பாதனை கைக்கு வராம போகலாம்.
விரயாதிபதி நின்ற பலன்:
1.லக்னத்தில் நின்றால்
ஜாதகரின் உழைப்பு,புத்தி,சொத்து எல்லாமே பிறருக்கு தான் உபயோகப்படும். உடல் நலம் உள்ள நலம் பாதிக்கலாம்.
2.இரண்டில் நின்றால்
மெத்த செலவாளி.ஊமை,திக்குவாய், உண்மயே சொன்னாலும் அது அண்டப்புளுகா ஆயிரும். கொடுத்த வாக்கை காப்பாத்த முடியாது.குடும்பத்தை பிரிந்து வாழலாம்.
3.மூன்றில் நின்றால்
இளைய சகோதரம் நஷ்டம் . அல்லது அவர்களால் ஜாதகருக்கு நஷ்டம். வெட்டியா சுத்தி வருவாய்ங்க.செவிடு ஏற்படலாம்.
4.நான்கில் நின்றால்
தாய்க்கு நல்லதில்லை. பிறந்த இடத்தை விட்டு மாறிருவாய்ங்க. நடந்தே அலைய வேண்டி வரலாம். அல்லது வாகன விபத்து .கல்வியில் தடை.
5.ஐந்தில் நின்றால் :
மனைவிக்கு குறை பிரசவம்/அபார்ஷன்/ப்ரிமெச்சூர்ட் பேபி, குழந்தைகளை பிரிந்து வாழலாம். கிடைத்த நற்பெயரையும் இழந்துவிடுவார்கள். சொந்தசெலவுல சூனியம் வச்சுப்பாய்ங்க.
6.ஆறில் நின்றால்
கடன் தீரும், நோய் குணமாகும்,விரோதிகள் ஒழிவர்.வழக்கு ராஜி ஆயிரும்.
7.ஏழில் நின்றால்
மனைவியால் வீண் விரயம் அ அவிக ஹெல்த் ட்ரபுள் கொடுக்கும். அப்படி ஒரு ஆள் இருக்கிறதையே மறந்து ஜாதகர் செயல்படலாம்.
8.எட்டில் நின்றால்
ஆயுள் கூடும், செலவுகள் குறையும் ( எப்படின்னு கேட்காதிங்க பயந்துருவிக)
9.ஒன்பதில் நின்றால்
அப்பாவுக்கு நல்லதில்லை. பூர்வீக சொத்து விரயமாகும். தீர்த்த யாத்திரை ,தூர தேச பயணத்துல அல்லாடுவாய்ங்க. இவிக பணம் வெளி நாட்ல மாட்டிக்கலாம். சேமிப்பு,முதலீடு கூட கரைஞ்சுரும்.
10.பத்தில் நின்றால்
சேல்ஸ் லைன்ல இருந்தா பிழைச்சாய்ங்க. இல்லின்னா இவிக உழைப்பின் பலன்,அங்கீகாரம் ஆருக்கோ கிடைச்சுரும். அல்லது வேலை வெட்டி இல்லாம வெட்டியாவே வாழ்ந்துருவாய்ங்க.
11.பதினொன்றில் நின்றால்
மூத்த சகோதர நஷ்டம், அல்லது அவரால் ஜாதகருக்கு நஷ்டம். உழைப்பின் பலன் விரயம்.
12.பனிரண்டில் நின்றால்
விருந்து ,செக்ஸ், தூக்கம் இவற்றிற்கு அதி முக்கியத்துவம் தருவார். இதனால் முன்னேற்றம் பாதிக்கும்.

Advertisements

2 thoughts on “லாப,விரயாதிபதிகள் ஜாதகத்தில் நின்ற பலன்

  Vimalathithan said:
  April 22, 2013 at 7:17 am

  How can identify விரயாதிபதி for my horoscope

   sambargaadu responded:
   April 25, 2013 at 3:13 am

   வாங்க விமல் !
   லக்னத்தையும் சேர்த்து 12 எண்ணுங்க. 12 ஆவது ராசி தான் விரய பாவம். அந்த ராசிக்கு அதிபதிதான் விரயாதிபதி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s