சின்ன வீடும் அதன் பயன்களும்

Posted on Updated on

அண்ணே வணக்கம்ணே !
எங்க தாத்தா ஒரு டயலாக் விடுவாராம். (பாட்டி சொல்லி தான் தெரியும்) கிளி மாதிரி பொஞ்சாதி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு கூத்தியாரு இருக்கனுமாம்.
அனுபவஜோதிடம் மாதிரி ஒரு சைட் இருந்தாலும் அனுபவஜோதிடா மாதிரி ஒரு ப்ளாகும் இருக்கனும்னு இப்பத்தேன் புரியுது.
சமீபத்துல சைட்டு பல்பு வாங்கினப்போ இலவச மருத்துவ முகாம் கணக்கா இந்த ப்ளாகை ஆரம்பிச்சம். சைட்டு சரியா போச்சு. இப்பம் மறுபடி பிரச்சினை.
சின்ன வீடு வைப்பதால் பலன்கள்னு ஒரு பெரிய பட்டியலே போடலாம் தான்.ஆனால் ஏன் கூடாதுன்னு தலையணை சைஸுக்கு ஒரு புஸ்தவமே எழுதலாம்.
ஆகவே நாம அம்பேல்.  கில்மாவை எதிர்ப்பார்த்து வந்த தம்பிகள் கழண்டு கொள்ளலாம்.
இந்த ப்ளாக்ல மட்டும் நம்ம கட்டுரைய படிச்சுட்டு எப்படா புது பதிவு வரும்னு காத்திருந்தவுகளுக்கு டபுள் தமாக்கா . விடுபட்டுபோன பதிவுகளின் தொடுப்புகளை வரிசையா தந்திருக்கேன்.
பாவாதிபதிகள் ராசிகளில் நின்றபலன் தொடர்ல லேட்டஸ்ட் அத்யாயமான ஜீவனாதிபதி ராசிகளில் நின்ற பலனையும் இதே பதிவுல தந்திருக்கேன்.
சைட் ரெடியாகிற வரை இங்கயே சந்திப்போம்.

உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும்
http://anubavajothidam.com/brothers/
தாயா ? பேயா ?
http://anubavajothidam.com/mathrubava/
பிள்ளையோ பிள்ளை
http://anubavajothidam.com/puthra-bava/
ஆராலே ஆருக்கு ஆப்பு?
http://anubavajothidam.com/loans-litigancy/
சம்சாரம் அது மின்சாரம்
http://anubavajothidam.com/samsaram-minsaram/
சம்சாரம் அது மின்சாரம் : பகுதி 2
http://anubavajothidam.com/7thlord/
யாருக்கு யார் கையால சாவு?
http://anubavajothidam.com/death/
தொடை அழகும் சொத்து சுகமும்
http://anubavajothidam.com/astro9/
“அதுவே” தொழிலா ?
http://anubavajothidam.com/proffession-sex/

ஜீவனாதிபதி ராசிகளில் நின்ற பலன்

என்னமோ தெரியலை. கரீட்டான லைன் அப்பை பிடிச்சம்னு நினைச்சா ஒடனே எதுவோ ஒன்னு பிடுங்கிக்குது. தளங்களின் தளம் -புதிய களம்னு டேக் லைன் கொடுத்து ஒரு சைட்டை ஆரம்பிச்சம். அனுபவஜோதிடத்துக்கு மறுபடி பிரச்சினை வந்துருச்சு.

தீம்ல ஏதோ பிரச்சினை போல விட்ஜெட் வரமாட்டேங்குது – நிறைய ஆப்ஷன்ஸ் வேலை செய்யமாட்டேங்குதே தோற்றத்தை மாற்றலாம்னு ட்ரை பண்ணேன். பல்பு . ஒரு ஆறுதல் என்னடான்னா படிக்கலாம். நான் தேன் அப்டேட் பண்ண முடியாது. அதனாலதேன்  ஆபத்சகாய சைட்டான இந்த  சைட்ல இந்த பதிவை போட்டிருக்கன்.

சரி மேட்டருக்கு வந்துர்ரன். இன்னைக்கு ஜீவனாதிபதி பாவங்களில் நின்ற பலனை பார்ப்போம். தொழில் காரகன் சூரியன், ஜீவனாதிபதி, அவர் நின்ற இடம், நின்ற இடத்து அதிபதி , தனகாரகனாகிய குருவின் நிலை,ராஜகிரகங்களின் பலம் இப்படி பல விஷயங்கள் தொழில்,உத்யோக வியாபாரங்களை பிரபாவிக்கும்.இந்த தொடரின் ஆரம்பத்துலயே சொன்னாப்ல இங்கன சொல்றதெல்லாம் ப்ரிலிமினரிதான்.ஆக்சுவல் ரிசல்ட் வேணம்னா ராசி,நவாம்சம்,பாவம்,பரல்கள் வரை போயாகனும்.

ஜீவனாதிபதி லக்னத்தில் நின்றால்:
கொக்கு ஒன்றே மதிங்கறாப்ல கவனம்லாம் வேலை மேலயே இருக்கும். ஓரளவு உடலுழைப்பும் தேவைப்படற துறை/பிரிவில் இருப்பாய்ங்க. ஆனால் போக போக நல்ல அனுபவங்கள் கிடைச்சு டேபிள் ஒர்க்குக்கு போவாய்ங்க. பர்சனாலிட்டி டெவலப்மென்ட்,மோடிவேஷ்னல் க்ளாஸஸ் கூட கண்டக்ட் பண்ணலாம். பாடி ஃபிட்னெஸ்,உடல் நலம், மன நலம், மன மகிழ்ச்சி தொடர்பான துறைகள் கவரும்.

ரெண்டுல நின்னா:
பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள பணம் தொடர்பான துறை அனுகூலம் .மணி மேனேஜ்மென்ட், கமர்ஷியல் டாக்ஸ், இன் கம் டாக்ஸ்,ஆடிட்டிங்,அக்கவுண்டிங் போன்ற துறைகள் கவரும். புதபலம் உடைய சிலர் ஸ்பீச் தெரஃபி ,ஈ.என்.டி போன்ற ஸ்பெஷலைஸேஷன் செய்து துள் பண்ணுவாய்ங்க. குடும்ப  நல கோர்ட்டில் பணிபுரியலாம். ஹோம்சைன்ஸ் லெக்சரராகலாம்.

3 ல் நின்றால்:
பந்தயம் கட்டறது, ஷேர்மார்க்கெட் இத்யாதியில ஆர்வமிருக்கலாம். நேரம் நல்லாருக்கும் போது பைசாவும் வரும். டவுன் பஸ்,ஷேர் ஆட்டோ,கால் டாக்ஸி போன்ற துறைகளில் ஈடுபாடு ஏற்படும். நிம்மதியா,ரிலாக்ஸ்டா உட்கார்ந்து செய்ற தொழிலா மட்டும் இருக்காது. சேல்ஸ் ரெப், அட்வர்டைஸ்மென்ட் மாதிரி வேலை அமையலாம். சகோதரர்களுடன் சேர்ந்து தொழில் செய்யலாம்.

4 ல் நின்றால்:
தாய் வழி உறவுகள் ஈடுபட்டுள்ள துறை அனுகூலம். ஹவுசிங், ஹோம் நீட்ஸ்,ஆட்டோமொபைல்ஸ் தொழில் நலம் தரும். கல்வித்துறையும் நல்ல சாய்ஸ் தான் (ட்யுட்டோரியல்,ஸ்கூல் துவக்குதல்) புதபலம் உள்ளவர்கள் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் கூட ஆகலாம்.

5 ல் நின்றால்:
பூர்வ புண்ணியத்தின் காரணமாக இந்த பிறவியில் எவ்வித பயிற்சியோ ,முன் அனுபவமோ இல்லாத துறையில் கூட தூள் பண்ணுவார்கள்,சைக்காலஜி,ஜோதிடம் இத்யாதி கவரும். அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும் தொழில்களும் அனுகூலமே. இவர்கள் துவங்கும் தொழிலை வாரிசுகள் தொடர்வர்.வாழையடி வாழையாக தொழில் சாம்ராஜ்ஜியம் நிலைக்கும்.

6ல் நின்றால்:
கோர்ட்,போலீஸ், மருத்துவம்,வங்கி தொழில்களில்/துறைகளில்  இருக்கலாம். அப்படி இல்லாத பட்சம் கடன்,நோய்,வழக்குகளால் பாதிப்பு ஏற்படலாம்.

7 ல் நின்றால்:
மனைவி வழி உறவினர்களின் தொழிலுக்கு மாறலாம். மனைவியின் யோசனை பேரில் துறை /பிரிவு மாறலாம். மனைவி வழி சொத்தை முதலீடாக வைத்து தொழில் துவங்கலாம். அ பார்ட்னர்ஷிப்ல தொழில் செய்யலாம்.

8ல் நின்றால்:
கடுமையான உடல் உழைப்பு தேவைப்படலாம். டேபிள் ஒர்க்கா இருந்தா ரவுண்ட் தி க்ளாக் சோறு தண்ணி மறந்து வேலை செய்யவேண்டி வரலாம். மரணம் தொடர்பான தொழில்கள் செய்யவேண்டி வரலாம். பிறரை துன்புறுத்தி செய்யும் தொழில் (வட்டித்தொழில்)  அல்லது துன்பத்தில் உள்ளவர்களை அடிப்படையாக கொண்டு செய்யும் தொழில் அமையலாம்.

9 ல் நின்றால்:
அப்பாவின் தொழிலை தொடர்ந்து செய்வர். முதலீடு ,சேமிப்பு தொடர்பான தொழில். பத்திரிக்கை துறை,புக் பப்ளிஷிங்,வெப் டிசைனிங், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், வெளி நாட்டு வேலைவாய்ப்புக்கும் வாய்ப்புண்டு. வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்பு அல்லது அற நிலைய துறைகளில் வேலை செய்யலாம். தொண்டு நிறுவனம் துவங்கி செயல்படலாம். ஃபுல் டைம் ஆன்மீக ,மத பிரச்சாரம் .ஜனக மகரிஷி போல இக,பர சுகங்களுக்கு மினிமம் கியாரண்டி உண்டு.

10 ல் நின்றால்:
நடிகர் திலகம் சிவாஜியை போல தொழில் தவிர வெளியுலகம் தெரியாமல் இருந்துவிடலாம்.லக்னாதிபதி கு.ப ஆட்சி பெற்று இவரை பார்க்காது/  அவரால் இவர் பார்க்கப்படாது இருந்தால் ஓகே.இல்லை என்றால் தொழில் இவர்கள் வாழ்வை கமாண்ட் செய்யும். செக்கு மாடு போல சாகிற வரை உழைக்க வேண்டியதுதான்.லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் எல்லாம் எடுத்து  அவதிப்படுவாய்ங்க. ஆயுள் பலம் இருந்தா அதன் பலனை அனுபவிக்கலாம்.

11.ல் நின்றால்:
ஒரே நேரத்தில் இரண்டு தொழில்கள் செய்யலாம். அல்லது ஒரு உத்யோகம் +சைட் பிசினஸ். லாபமே நோக்கமாய் உறவுகளை , நட்பு வட்டத்தையும் அலட்சியம் செய்யலாம். மூத்த சகோதர,சகோதிரி வகையில் தொழில் அமையலாம்.

12 ல் நின்றால்:
சேல்ஸ் லைன்ல இருந்தா எஸ்கேப்.இல்லின்னா மரம் வச்சு தண்ணி பாய்ச்சி மரம் கனி கொடுக்கிற நேரம் வித்துப்போட்டுட்டு வீட்டுக்கு வந்துருவாய்ங்க. படுக்கையில கூட தொழில் தொடர்பான வேலைகளை செய்வாய்ங்க. டைனிங் டேபிள்ள கூட இதே பாவத்துதான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s