தனபாவாதிபதி நின்ற பலன்

Posted on

எப்பவோ ஒரு தாட்டி லக்னாதிபதி எங்கே நின்றால் என்ன பலன்னு பார்த்தோம். இன்னைக்கு தன பாவாதிபதி எங்கே இருந்தா என்ன பலன்னு பார்ப்போம்.
எச்சரிக்கை: இதெல்லாம் பொதுப்பலன் தான். மேற்படி பாவாதிபதி நைசர்கிக சுபரா? பாபரா?  உங்களுக்கு லக்னாத் சுபரா பாபரா? அவரோட பலம் என்ன? அவர் யாரோட சேர்ந்திருக்காரு.ஆரு பார்க்கிறாய்ங்க, எந்த நட்சத்திர பாதத்துல நின்னாரு, செவ்வாய்க்கு பின்னே இருக்காரா? முன்னே இருக்காறாங்கறதை பொறுத்து பலன் தலைகீழா மாறலாம்.
1.தனபாவாதிபதி லக்னத்துல நின்னா சம்பாதிக்கனுங்கற துடிப்பிருக்கும். சொந்த முயற்சியில பொருளீட்டுவார்கள். தனபாவாதிபதி பாபகிரகமா இருந்தா உடலுழைப்பு அதிகமா இருக்கும். சுபரா இருந்தா டேபிள் ஒர்க். பொருளீட்ட பேச்சு திறமையும் கை கொடுக்கும். குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைக்கும்.அழகான கண்கள் ,நல்ல பார்வை இருக்கும்.
2.த.பா தனஸ்தானத்துலயே நின்னா பணத்துக்கு முக்கியத்துவம் தருவாய்ங்க. லக்னம் மகரமா இருந்தா பிசுனாறியா இருப்பாய்ங்க.  இவிக பேச்சே பணமா மாறும். குடும்பத்தினரை விரட்டி விரட்டி வேலை வாங்குவாய்ங்க. தனபாவாதிபதி யாரோ அவர் காரகமுள்ள தொழில் செய்தால் அந்த தொழில் செய்தால் வரக்கூடிய வியாதிகள் வந்து ஆயுளை / அல்லது கையிருப்பை குறைக்கும்.
3.த.பா மூன்றாமிடத்தில் இருந்தால் ஓடி ஓடி உழைப்பாய்ங்க. நிறைய பயணம் செய்வாய்ங்க. ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரி, வில்லங்கம் ,ஊர் விவகாரங்களில் தலையிட்டு அது மூலம் கூட பணம் பண்ண பார்ப்பாய்ங்க. ப்ரதர்ஸோட பங்கையும் அமுக்க பார்க்கலாம். அவிக உழைப்பை சுரண்டுவாய்ங்க.
4.த.பா 4ல் நின்றால் தாய்,தாய் வழி உறவுகள் மூலம் பணம் வரும்.கற்ற கல்வி பொருளீட்ட கை கொடுக்கும். ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ், ட்யுட்டோரியல்ஸ்,பள்ளி துறைகளில் பொருளீட்டுவர். வீட்டை  கூட வித்து பணமாக்கி தங்கள் அறிவால் அதை பெருக்க பார்ப்பாய்ங்க.
5.த.பா 5 ல் நின்றால் அமாவாசை சோறு போல எப்பயோ ஒரு தாட்டி லாட்டரி,சூதாட்டத்துல பணம் கிடைக்கும். அதையே லட்சியமாக்கிக்கிட்டா  நோகாத நோன்பு கும்பிடனும்னு அலைஞ்சு பணப்பைத்தியமா மாறிருவாய்ங்க. ஒரு வேளை த.பா சுபரா இருந்து தொடர்ந்து இதே மார்கத்துல (அதிர்ஷ்டவசமா ) பணம் கிடைச்சுக்கிட்டிருந்தா கடேசியில காசு கொடுத்து வாரிசை வாங்கிக்கிற நிலை கூட வரலாம். அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு பெத்த பிள்ளைய தத்து கொடுக்கலாம். தங்கள் புத்திபலத்தால் பிறர் பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங்,கன்சல்ட்டன்ஸி தந்து பொருளீட்டலாம். சிலர் தங்கள் பெயர் புகழை விலை பேசி விற்கலாம்.
6.தனபாவாதிபதி 6 ல் நின்றால் கடன் கழுத்தை நெறிக்கும். வெகண்டையா பேசிக்கிட்டு ஊரையே பகைச்சுக்குவாய்ங்க. வாய் ,தொண்டை பகுதிகளில் நோய் வரலாம். வட்டிக்கு அட்டிகை வாங்கி ,அட்டிகை வித்து வட்டி கட்டற கேஸ்.
7.தனபாவாதிபதி 7 ல் நின்றால் மனைவியை விட அவள் கொண்டு வரும் சீர்,செனத்தி மேல அக்கறை காட்டுவாய்ங்க. அழகு,குணம் இத்யாதியை விட என்ன வேலை என்ன சம்பளம்னு விஜாரிப்பாய்ங்க.  இந்த பாவம் சுப பலமாய் இருந்தால் மனைவி மந்திரி கணக்கா ஐடியா கொடுக்கிறதோட ஜாதகரின் தொழில்,வியாபார,உத்யோக விஷயங்களிலும் உதவுவாய்ங்க. பார்ட்னர் ஷிப்ல தொழில் நடத்த சான்ஸ் இருக்கு.
8.தனபாவாதிபதி எட்டில் நின்றால் நஷ்ட ஈடு,உயில், எல்.ஐ.சி மூலம் பணம் வரலாம். மார்ச்சுவரி வேன், ஃப்ரீசர் பாக்ஸ் போன்ற மரணம் தொடர்பான தொழில் செய்யலாம்.(லட்டு தின்ன ஆசையாவுல சந்தானம் மாதிரி) கொடுத்தது திரும்பாதி,வாங்கினதை திருப்ப முடியாது.பணம் வருதுன்னா கொலை -தற்கொலைக்கும் தயங்க மாட்டாய்ங்க.இவிக ஊமையாவோ -திக்குவாயர்களாவோ -கண் பார்வை அற்றவர்களாவோ  இருந்தா  நிலை  பெட்டரா  இருக்கும். இவிக வயிறெரிஞ்சு எதுனா சாபம் விட்டா அது நடக்கலாம். குடும்பத்தை பிரிஞ்சு பொருள் ஈட்டுவாய்ங்க. அல்லது அவிகளை கசக்கி பிழிஞ்சு பணம் பண்ணலாம்.
9.தனபாவாதிபதி  9ல் நின்றால் அப்பா தொழிலை தொடர்ந்து செய்யலாம்.அப்பா வழி உறவுகள் உதவுவர். பூர்விக சொத்துக்கள் வருமானம் தரும். ரெவின்யூ இன்கம்மை  கூட இன்வெஸ்ட் பண்ணிட்டு அவதிப்படலாம். தூர தேச தொடர்புகள் ,உயர் அதிகாரிகள்,பெரிய மனிதர்கள் உதவியுடன் தொழில் நடத்தி மேன்மை பெறலாம்.இவர் பாவியா இருந்தா அப்பா மனசை நோகடிச்சு பங்கு பிரிக்க சொல்லி லந்து பண்ணி பணம் பார்க்க விரும்பலாம்.
10தனபாவாதிபதி 10 ல் நின்றால் பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள தொழில்,உத்யோகம் ,வியாபாரம். உ.ம் டீச்சர், லாயர்,பிரச்சாரகர்,சேல்ஸ் மென்,விளம்பர பிரிவு ,டப்பிங் இத்யாதி செய்வார்கள் .தங்கள் தொழிலில் குடும்பத்தாரையும் உழைக்க செய்வர்.
11.தனபாவாதிபதி 11 ல் இருந்தால் இரண்டு வழிகளில் வருமானம் வரும் (கிம்பளத்தை சொல்லலை) ரெண்டு ஃபேமிலி இருக்கலாம் ( அம்மா -மனைவின்னு கூட இருக்கலாமில்லையா .அல்லது தான் வெளியூரில் மேன்ஷன் ஹவுசில் தங்கி குடும்பம் சொந்த ஊரில் இருக்கலாமில்லையா) ரெண்டு வித பேச்சு இருக்கும். மூத்த சகோதரத்தால் லாபம் உண்டு.
12.தனபாவாதிபதி 12ல் இருந்தால்  இவர் பணத்தை பிறர் அனுபவிக்கலாம். பிக் பாக்கெட் ,கொள்ளை ,கொடுத்து வைத்து ஏமாறுதல்,வட்டிக்கு விட்டு ஏமாறுதல் இத்யாதி நடக்கலாம். கீழ் கண்ட பாட்டு சூப்பரா பொருந்தும்.
பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு
ஆவிதான் போயின பின்பு யாரோ அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்.
அல்லது எல்லாம் இருக்கிற வரை தானேனு அன்னன்னைக்கே மஞ்ச குளிச்சுருவாய்ங்க. ஆடம்பரம்,படாடோபம்,மது , கில்மான்னு கொண்டாடிருவாய்ங்க. பேச்சு கொடுத்துட்டமேனு மாட்டி நஷ்டப்படுவாய்ங்க. குடும்பத்தினர் இவர் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டாய்ங்க. பார்வை இழப்பும் ஏற்படலாம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s