ஹை அலர்ட் : துலாம் TO மீனம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல ஏப்ரல் 12 முதல் மே 23  சனி செவ்வாய்க்கிடையில் பார்வை ஏற்படப்போறதாவும்  அல்லாரும் ஹை அலர்ட்ல இருக்கிறது நல்லதுன்னும் சொல்லி  மேஷம் டு கன்னி ராசிக்காரவுகளுக்கு டீட்டெய்ல்ட் ப்ரிடிக்சன்ஸ் கொடுத்தேன் .
இன்னைக்கு துலாம் டு மீனம் பார்த்துரலாம்.

7.துலாம்:
இவிகளுக்கு செவ் 2/7 பாவங்களுக்கு அதிபதி. 7ல் ஆட்சி பெறுகிறார். இதனால் மனைவியின் கமாண்ட் சாஸ்தியாகும். 7ல் உள்ள செவ் உங்க ராசியையும் பார்க்கிறதால ரெண்டுபேருமே எரிமலை வாயில் உட்கார்ந்துக்கிட்டிருக்காப்ல எப்ப வெடிப்போம்னு தெரியாத விளிம்பு நிலையில இருப்பிங்க. டேக் கேர். கொஞ்சம் அசால்ட்டா இருந்தா தந்தியில செய்தியா வந்துருவிங்க.
மேலும் மனைவி வழி உறவினர்களால் பொருளாதார முன்னேற்றத்துக்கு வாய்ப்பிருக்கு. நீக்கு போக்கா நடந்துக்கிட்டா  தீய பலனை தவிர்க்கலாம் .நல்ல பலனையும் பெறலாம். கணவன் -மனைவி இருவருக்குமே ரத்தம்,எரிச்சல்,ரணம் (அல்சர்?) தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். கோபம் அதிகரிக்கும். தொப்புள் பகுதியில் கட்டி,வலி ஏற்படலாம்.
சனி 4-5 பாவங்களுக்கு அதிபதி. ராசியிலயே இருந்து வக்கிரம். சமூகத்துல அங்கீகாரம், நற்பெயர்  கருதி  வண்டி ,வாகனம், தாய், வீடு ,கல்வி ,வாரிசுகள் தொடர்பா  செலவழிச்சு சலிச்சு போயி விட்டு /கை கழுவி தொலைச்சுர்ர நிலைக்கு வந்திருப்பிங்க. கொஞ்சம் பொறுமையா இருந்துருங்க. சனி வக்கிரதியாகத்துக்கு பிறகு நிலை சீராகும். அதிர்ஷ்டத்தை நம்பி இறங்கின காரியத்தை மைண்டுல இருந்து எடுத்துருங்க. ஒர்க் அவுட் ஆனாலும் ஆகலாம்.
4-2 அதிபதி பார்வை காரணமா குடும்ப கலகம்,தன விரயம், நிஷ்டூர பேச்சு,கண் நோய் ஏற்படலாம். 5-2 அதிபதி பார்த்துக்கறதால மகன் அ மகளை காச்சுகாச்சுன்னு காச்சுவிங்க. 4-7 பார்வை  காரணமா அம்மா -மனைவி ரெண்டு பேரும் லொள்ளு பண்ணுவாய்ங்க. மகன் அ மகளும் இந்த அணியில சேர்ந்துருவாய்ங்க. மொத்தத்துல இது சோதனைகாலம்.
பரிகாரம்:
அம்மா,மனைவி ,மகன் மூவரையும் அரக்கு , நீல  நிற ஆடை அணிகல் அதிகம் உபயோகிக்க சொல்லுங்க. ரௌத்ர ரூபமா இருக்கிற அம்மனை தரிசிங்க. தியானம் பண்ணுங்க. 8+9 பேருக்கு சிம்பிளா ஒரு நான் வெஜ் டின்னர் அரேஞ்ச் பண்ணுங்க.
8.விருச்சிகம்:
செவ் 1-6 க்கு அதிபதி. இவர் 6 லயே இருக்காரு.சத்ரு ரோக ருண உபாதைகள் ஏற்படும். ரத்தம்,எரிச்சல்,ரணம் (அல்சர்?) தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். கோபம் அதிகரிக்கும். இன உறுப்பில்  எரிச்சல், புண், கட்டி,வலி ஏற்படலாம்.ஒடனே டாக்டரை பாருங்க.( கைனகாலஜிஸ்ட் தேவையில்லை. ஜெனரல் ப்ராக்டிஷ்னர் ஈஸ் எனஃப் – ஏற்கெனவே பிரச்சினை இருந்திருந்தா மட்டும்  கைனகாலஜிஸ்ட்)
சனி 3-4 க்கு அதிபதி. இவர் விரயத்துல இருக்கிறதால இளைய சகோதரம், தாய்,வீடு,வாகனம்,கல்வி விஷயங்கள் டென்சன்  கொடுக்கும். ரிஸ்க் எடுக்க வேண்டி வரும். அல்லல் அலைச்சல் ஏற்படும்.
1-3 பார்வை காரணமா தில்லு துரை ஆயிருவிங்க. ஆனாலும் ஹை ரிஸ்க் – ராஷ் ட்ரைவிங் வேண்டாம்.  தாய்க்கு உடல் நலம் பாதிக்கலாம். வீட்டுமேல கடன் வாங்கலாம்.
பரிகாரம்:
இந்த பார்வை காலம் முழுக்க ஒவ்வொரு நாளையும் கடன்ல ஆரம்பிச்சு கடன்ல முடிங்க. விவாத நேரம், நேர் பட பேசுவோம் மாதிரி ப்ரோக்ராம்ஸ் வாட்ச் பண்ணுங்க. பட்டிமன்ற டிவிடி கிடைச்சா பாருங்க. ஒரே சப்ஜெக்டை எடுத்துக்கிட்டு பாசிட்டிவா ஒரு பக்கம் ,நெகட்டிவா ஒரு பக்கம் எழுதுங்க. ரௌத்ர ரூபமா இருக்கிற அம்மனை தரிசிங்க. தியானம் பண்ணுங்க
9.தனுசு:
செவ் 5/12 க்கு அதிபதி .ராசிக்கு  5 ல் ஆட்சி.  கோபம்,அதி உஷ்ணம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்திக்க முடிஞ்சா சூப்பர் ஒர்க் அவுட்டுதான். ரியல் எஸ்டேட் மேட்டர் ஒன்னு பைசலாகும். ப்ரதர்ஸ் தொடர்பான மேட்டர் உங்களுக்கு லாபமா முடியலாம். மகன் /மகள் விஷயத்துல காரியம் பெருசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசுன்னு அடக்கி வாசிங்க.
சனி 2/3 க்கு அதிபதி.ராசிக்கு  11 ல் உச்சம் ஆனால் வக்ரம்.  கொடுக்கல் வாங்கல்ல அடக்கி வாசிங்க, அளந்து பேசுங்க, குடும்ப விஷயத்தை வீட்டம்மா கையில உட்டுருங்க(அவிகளோடதும் தனுசு ராசின்னா அம்பேல்), இளைய சகோதரர்/திரி மேட்டர்  கொஞ்சம் லொள்ளு பண்ணும்.
5-2 ,5-3 ,12-2 12-3 அதிபதிகளின் பார்வை அதிலும் 2/3 அதிபதி வக்ரம்லாம் நல்லதில்லை. இதுக்குண்டான பலன்லாம் மேற்படி ரெண்டு பாராலயே கவர் ஆயிருச்சு. ஐ டோன்ட் வான்ட் டு டூ கதை( கதை பண்ண விரும்பலை).
10.மகரம்:
ராசியாதிபதி வக்ரமாறது ரெம்ப ஆபத்து. உங்கள் இயல்புக்கு மாறான ரோசனைல்லாம் வரும். ஆருக்காக உழைக்கிறேன், என் உழைப்பின் பலன் யாருக்கு போகுதுன்னெல்லாம் எப்பவும் ரோசிக்காத நீங்க திடீர்னு ரோசிப்பிங்க. அது செயலானாலும் நல்லதுதான். ஆனல் செப்டம்பருக்குள்ள ஃபினிஷிங் டச் கொடுங்க. பாதியில விட்டா ரெண்டும் கெட்டான் கதை ஆயிரும். கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினை வரலாம். மூத்த சகோதரம் இடக்கு பண்ணலாம்.
ரெண்டுக்கு அதிபதியா சனி பத்துல  வக்ரமாறதால பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள துறை, லாவா தேவிகளில் ஈடுபடுவோர் சாக்கிரதை.தொண்டை,வாய் பகுதியில் பிரச்சினை வரலாம்.
செவ்வாய் 4/11 க்கு அதிபதி. இவர் 4 ல் ஆட்சி. தாய்,மூத்த சகோதரத்தின்  கோபம் ஆச்சரியம் தரும். அல்லது அவிகளுக்கு கோபம்,ரத்தம்,மஜ்ஜை தொடர்பான பிரச்சினைகள் தலை காட்டலாம். வீட்டில் ஷாக் சர்க்யூட் ,மினி தீவிபத்து,ரத்தசேதம் நடக்கலாம். பண விஷயத்துல ரெம்பவே நெருக்கடி ஏற்படலாம். இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் டேக் கேர். சிறு விபத்து நடக்கவும் சான்ஸ் இருக்கு. சாக்கிரதை.
1/2+4/11 அதிபதிகளின் பார்வை பொதுவா நல்லதுதான்.ஆனால் இதுல 1/2 அதிபதி வக்ரமா இருக்கிறதால அடைமழையில்  அண்டாவை கவுத்து போட்ட கதையா நற்பலனை பெற முடியாத நிலை.
பரிகாரம்:
சின்ன வயசுல உங்களோடு தொடர்பிலிருந்த  நபர்களை சந்திங்க. சொந்த ஊருக்கு போய் வாங்க. வழக்கமான ட்ரஸ் கோடை விட்டு காமா சோமான்னு ட்ரஸ் பண்னுங்க.
11.கும்பம்:
செவ் 3/10 க்கு அதிபதி. இவர் 3 ல் ஆட்சி பெறுவதால் இளைய சகோதரம் உங்க தொழில்,உத்யோகம்,வியாபார வகையில குழப்பலாம். அல்லது மேற்படி வகைகளில் அதிகம் பயணம் செய்யவேண்டி வரலாம்.
சனி 1-12 க்கு அதிபதி. இவர் 9 ஆவது ராசியில உச்சம் (அருமையான கிரக அமைப்பு)ஆனால் வக்ரம். நமீதாவுக்கு 16 கஜப்புடவை கட்டின மாதிரி ஆயிருச்சு. மகரத்துக்கான ராசி பலன்ல சொன்னாப்ல  ராசியாதிபதி வக்ரமாறது ரெம்ப ஆபத்து. உங்கள் இயல்புக்கு மாறான ரோசனைல்லாம் வரும். எதையும் லாபம் பார்த்தே செய்யற நீங்க எம்.ஜி.ஆர் வேலையில எல்லாம் இறங்கிருவிங்க. செய்ங்க. இதுவும் ஒரு பரிகாரம் தான்.
அப்பா,சொத்து,முதலீடு,சேமிப்பு வகையறாவுல டேக் கேர். தூர பயணங்கள் வேண்டாமே. முழங்கால்ல அடிபடலாம், அல்லது மூட்டு வலி. சில்லறையா முதலீடு செய்து மொத்தமா ஒரு சொத்தை சொந்தமாக்கிக்கலாம்னு போட்ட திட்டம் உங்களுக்கு வட்டம் வைக்கும். திரைக்கடலோடி திரவியம் தேடும் முயற்சியை தள்ளிப்போடுங்க. பாஸ் போர்ட் வேலைய மட்டும் நிறுத்தாதிங்க. இந்த வகையில செலவழிஞ்சா  நல்லதுதான்.
3-10 ; 1-12அதிபதிகள் பார்த்துக்கிட்டா ஒரு வகையில  நெல்லதுதான். ஆனால் லக்னாதிபதியே வக்ரமாயிர்ரதால காதலி ஐ லவ் யூ சொல்ற நேரம் பார்த்து நீங்க குவார்ட்டர் நண்பனோட கால்ல பிசியா இருந்திருவிங்களே. விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு இது மந்தமான காலம். இதர துறைகளில் உள்ளவர்கள் நிலை பெட்டர்.
பரிகாரம்:
மகரத்துக்கு சொன்னதையே ஃபாலோ பண்ணுங்க.ஏன்னா உங்களுக்கும் சனி ராசியாதிபதிதானே.
12.மீனம்:
சனி 11-12 க்கு அதிபதி இவர் எட்டுல வந்தது ஒரு வகையில நல்லது. 12-8 நிலை காரணமா செலவுகள் குறையும்.தூக்கம்,சாப்பாடு குறையும். ஆனால் அவர் வக்ரமாயிட்டதால இதெல்லாம் சாஸ்தியாகும். ஆனால் 11- 8 என்ற நிலை நல்லதில்லை.இவர் வக்ரமா இருக்கிறதால  கடந்த கால முயற்சிகளுக்கான லாபம் இப்போ கிடைக்கலாம்.
செவ் 2-9 க்கு அதிபதி .இவர் 2 ல் ஆட்சி. இதனால் முதலீடுகள் மீதான லாபம், எஃப்.டி மீதான வட்டிகள் செலவழிஞ்சுரும். ரியல் எஸ்டேட்,எலக் ட்ரானிக்ஸ் துறை லாபம் தரும். நீங்க நினைச்சதை விட சாஸ்தியும் வராது குறைவாவும் வராது. நெட்டா வரும்.
ஆனால் அதே நேரம் உங்க சூடான நிஷ்டூர  பேச்சால குடும்ப கலகம்,தன விரயம், கண் நோய் ஏற்படலாம்.
11/12 மற்றும் 2-9 அதிபதிகளின் பார்வை காரணமா பெருசா பணம் பண்ண போறோம்னு இருந்த உங்க நினைப்புல மண். அதே நேரம் முதலுக்கு மோசமிருக்காது. உங்க முதலீடு ,சொத்து மேட்டர்ல சின்ன ஜெர்க் வந்து போகும்.
பரிகாரம்:
கையில் வேல் தாங்கிய பால முருகன் டாலர் கழுத்துல போட்டுக்கங்க. முருகனின் மூல மந்திரத்தை வாய் விட்டு சொல்லுங்க. பர்ஸ்,கேஷ் பேக் அரக்கு நிறத்துல இருந்தா நல்லது. இதுலயும் பால முருகன் படத்தை வச்சுக்கங்க.
எச்சரிக்கை:
மெயின் சைட் முடங்கியிருக்கிறதால ஹிட்ஸ்ல பின்னடைவு. இதை பாலன்ஸ் பண்ண தான் இந்த கோசார பலன்லாம் அள்ளி விட்டுக்கிட்டிருக்கன். எல்லாம் ஸ்டெடி ஆன பிற்காடு நவகிரகங்களுடன் பேட்டி தொடர் ஆரம்பமாகும்.அதுவரை தேவை உங்கள் ஒத்துழைப்பும் – பொறுமையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s