அனுபவஜோதிடம் வலைதளம் முடக்கம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
என்னதான் நமக்கு ஜாதகத்துலயே  பத்துல ராகு இருந்தாலும் -பூனைக்குட்டி கணக்கா அசால்ட்டா ராப்பூரா விழிச்சிருந்தாலும் மென்டல் பேலன்ஸ் மிஸ் ஆகுதுண்ணே .
பேசிக்கலாவே நம்முது கடக லக்னம் . சஞ்சலம் இருக்கும். சிம்ம ராசி வேற ஓவர் கான்ஃபிடன்ஸூ வேற .சூரியன் உதிக்கும் போது எந்திரிச்சு -மறையும் போது படுக்க போன அந்த கால சனங்க ஆரோக்கியம் நமக்கேதுங்க?

ஏதோ ஒரு காலத்துல ஜிம் அது இதுன்னு பண்ணதாலயும் -தம்மு கட்டறதை தவிர வேற எந்த கெட்ட பழக்கமும் இல்லாததாலயும் ஏதோ ஒரு மாதிரியா சமாளிச்சுட்டு வர்ரம்.

கடந்த சனிக்கிழமை சைட்டுல ஐட்டம் போட்டுட்டு (கெட்ட வார்த்தை இல்லிங்ணா) டேஷ் போர்டை நோட்டம் விட்டுக்கிட்டிருந்தப்போ அப்டேட்னு ஒரு பட்டன் கண்ல பட்டது. படக்குனு அதை சொடுக்கிட்டம். அவ்ளதான் சைட்டை ஓப்பன் பண்ணா

Fatal error: Call to undefined function wp() in /home/anubavaj/public_html/j/wp-blog-header.php on line 14

என்ற வரிகள் தான் தரிசனம் கொடுக்குது. இது ஏதோ மொத தடவைன்னு நினைக்காதிங்க. நமக்கும் அனுபவம். நண்பரோட வலைதளமும் இதே  போல அப்டேட் பண்ண முனைஞ்சுதான் முடங்கி போச்சு. விதி ஆரை விட்டது.

டாக்டருக்கு நோய் வராதா என்ன? பல்பு வாங்கிட்டம். சாதாரணமா சரண் சார் 24 மணி நேரத்துல ஒர்க் அவுட் பண்ணிருவாரு.
அவருக்கு என்ன சந்தர்ப்பமோ தெரியலை. நானும் ஃப்ரீயா உட்டுட்டன். கடந்த நாலு நாட்களா நம்ம சைட்டை ஓப்பன் பண்ணவுகளுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.
இன்னைக்கு கூகுல் ட்ரைவை நோண்டினப்போ  என்னைக்கோ டவுன் லோட் பண்ணி வச்ச எக்ஸ் எம் எல் ஃபைல் மாட்டுச்சு. ஒடனே “அனுபவஜோதிடம்”ங்கற பேர்ல வோர்ட் ப்ரஸ்ல ஒரு ப்ளாக் கிரியேட் பண்ணி பேக் அப்பை அப்லோட் பண்ணிட்டன்.
ஒரு மாதிரியா பேக் அப் ஆன மாதிரிதான். எதுனா விடுபட்டிருந்தாலும் பிரச்சினையில்லை. எங்கயோ ஒரு இடத்துல இருக்கும். மேக் அப் பண்ணிரலாம். வெறுமனே இந்த புலம்பலை கேட்கவா வந்தம்னு நொந்துக்காதிங்க. ஐ வில் கிவ் யூ சம் ஸ்டஃப்.
ANUBAVAJOTHIDAM ங்கற பேருக்கு எண் கணிதப்படி 49 வருது. 4=ராகு ,9 =செவ்
செவ்வாய்ன்னா ரத்தம் – ராகுன்னா பிரச்சினை .கணக்கு சரியா போகுதா? ஸ்கின் ப்ராப்ளம் வந்துட்டு – வாழ் நாள்ள இத்தனை காலம் டச்சே பண்ணாத மாத்திரைகளை ஒட்டு மொத்தமா விழுங்கிக்கிட்டிருக்கன்.
அதுலயும் 4+9 என்றால் 13 . வோர்ட் கவுண்ட் இருந்து எண்ணினா தெரியும் எத்தீனி தபா மரணங்கற வார்த்தைய உபயோகிச்சிருக்கேன்னு .(இதுவும் ஒரு பரிகாரம்)
இதுல பாருங்க வோர்ட் ப்ரஸ்ல ஃப்ரீ ப்ளாக் கிரியேட் பண்ணும் போது உ.வசப்பட்டு அடிச்சதுல
கடைசியில M மட்டும் விழக்காணோம். இதுக்குரிய மதிப்பு 4 . மேற்படி 49 ல 4 போனா 45
நாலுன்னா ராகு , அஞ்சுன்னா புதன். புதன்னா தோல். ராகுன்னா பிரச்சினை. இப்பம் புரியுதா தாளி பேரை மாத்தினாலும் -தானா மாறினாலும்  ஒன்னும் பேராது.
கடந்த சனிக்கிழமை முதல் பதிவுகளை அனுபவஜோதிடம் ப்ளாக்லயும் , நிர்வாண உண்மைகள் ப்ளாக்லயும் போட்டுக்கிட்டிருக்கேன். மிஸ் பண்ணவுக இங்கே மற்றும் இங்கே சொடுக்கி அப்டேட் பண்ணிக்கலாம்.
முக்கியமா 2013 குரு பெயர்ச்சி பலனை மிஸ் பண்ணாதிங்கண்ணா. உடுங்க ஜூட்டு..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s