சர்ப்பதோஷம் :ஆருக்கு விடுதலை ?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு நம்ம வலையுலகத்துல சோசிய பதிவுகள் போடறவுகளை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு கட்டுச்சோத்தை பிரிச்சு பரிமாறிட்டிருந்தவுக. ரெண்டு இன்னமும் அதையே செய்துக்கிட்டிருக்கிறவுக. கட்டுச்சோறு எட்டு நாளைக்கும்பாய்ங்க. சொந்த சரக்கு இல்லின்னா இதான் நிலைமை. இதுல சந்தடி சாக்குல சுயம்புவா பிரகாசிக்கிற நம்மை வேற விமர்சிக்கிறாய்ங்களாம். ஹ..ஹா !

ஒரு வகையில அவிக விமர்சனமும் உண்மைதான். நாம ப்ளாக்லயும் -சைட்லயும் எளுதிக்கிட்டு வர்ர விஷயங்களை படிச்சுட்டு நிறைய பேரு இந்தாளு ச்சொம்மா பீலா விடறாண்டான்னு கூட பேசிக்குவாய்ங்க. ஆனால் நாம எழுதற ஒவ்வொரு பாய்ண்டுக்கும் ஆதாரமா பல ஆயிரம் வாழ்க்கை நம்ம மைண்ட்ல இருக்கு. நம்பறவுக தில்லா நம்பலாம். நம்பாத சனம்? அவிக குண்டலியில விழிப்பு வரலேன்னு அருத்தம் விட்டுருவம்.

இது என்ன பாஸூ திடீர்னு சோசியத்துலருந்து குண்டலிக்கு தாவிட்டிங்கன்னு கேப்பிக .சொல்றேன். குண்டலி மூலாதாரத்துல இருக்கிற வரை திங்கறது -கழியறது -ஹோமோ தவிர வேற ஒன்னும் செய்ய முடியாது.பால்யத்துல ஹோமோவுக்கு -லெஸ்பியனுக்கு ட்ரை பண்ணாத ஆண் பெண்ணே ரெம்ப குறைவுதேன். ஸ்தூலமா ட்ரை பண்ணலின்னாலும் சப் கான்ஷியஸா அது இருக்க போயி தான் சிறுமிகள் சிறுமிகளோடும் -சிறுவர்கள் சிறுவர்களோடும் மட்டும் க்ளோஸா மூவ் பண்ணுவாய்ங்க.
இயற்கையாவே இந்த 3 ஐட்டத்துலருந்து வெளிய வந்தா பிறவு தான் முறையான -செக்ஸ் . என்னதான் மண்ணாந்தையா இருந்தாலும் சைக்கிள் ஓட்ட கத்துக்கறச்ச படக்குன்னு பேலன்ஸ் கிடைக்க ஆரம்பிச்ச மாதிரி கால கிரமத்துல கெட்ட காரியத்துல ஒரு நிதானம் வந்துரும். வீரிய ஸ்கலிதத்து மேல கட்டுப்பாடு வந்துரும்.

வராதவன் தேன் பொஞ்சாதி முந்தாணைய பிடிச்சுக்கிட்டு அலைவான். அல்லது சின்ன வீடு – வேலைக்காரி கிட்டே சில்மிஷம்னு கிடப்பான்.
இன்னொரு முக்கியமான மேட்டர் என்னடான்னா குண்டலி மூலாதாரத்துல நித்திராவஸ்தையில இருக்கிறவரை இந்த பூமி மீதான பொருட்கள் மன்சனை மருள செய்யும். எப்போ குண்டலி ஸ்வாதிஷ்டான சக்கரத்தை நோக்கி நகருதோ அப்பம் ” கன்னியர் தம் கடைக்கண் பார்வை கண்டு விட்டால் மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”னு ஆயிரும்.

அதுக்கப்பாறம் மணிபூரகம் . வவுத்துப்பாடு ஆரம்பிச்சுரும். இந்த கட்டத்துல கடுமையான உழைப்பும் – ஊக்கமும் கொண்டு தன் பசி -தன்னவர் பசியாற்ற தெரிஞ்சுகிட்டா குண்டலியின் பயணம் தொடரும் .அனாஹத சக்கரத்தை தொடும். கஷ்டத்துல உள்ளவுகளை பார்த்து “அய்யோ பாவம் “ங்கற மென்டாலிட்டி வரும்.
இதனால செல்வமும் – செல்வாக்கும் பெருகி குண்டலி விசுத்தியை தொடும். அப்போ உங்க சொல்லே செயலா மாறும். இந்த நெடுந்தூர பயணத்திலும் கிரகங்களின் எஃபெக்ட் நிச்சயம் உண்டு. அவை போடும் தடைகளும் உண்டு. தடையை மீறி பயணம் தொடர்ந்தாலும் கிரகங்கள் உங்களை அப்பப்போ சீண்டி கிட்டே இருக்கும்.
குண்டலி ஆக்னாசக்கரத்தை தொடும்போதுதான் கிரகங்களின் பிடியிலிருந்து தப்ப முடியும். அப்படி தப்பனும்னா கிரகங்கள் எப்படி வேலை செய்யுது -பாவங்களோட காரகங்கள் என்ன? ஒருகிரகம் கெட்டால் அதனோட காரகம் எல்லாம் கெட்டுப்போகுதா? ஒரு பாவம் கெட்டா அந்த பாவத்தோட எல்லா காரகமும் கெட்டு போகுதாங்கற சூட்சுமம்லாம் தெரியனும்ல. ( கெடாதுங்கறதுதான் என்னோட பதில்)
இந்த சூட்சுமத்தை தெரிஞ்சுக்கிட்டா எதை விட்டா எதை பிடிக்கலாங்கற குன்ஸு தெரிஞ்சுரும்ல. இந்த குன்ஸு தெரிஞ்சு போச்சுன்னா நவகிரகங்களின் பிடியிலிருந்து விலகிரலாம்ல.
மூலாதாரத்துக்கும் -ஆக்னாவுக்கும் பல பிறவிகளின் இடைவெளி இருக்கும் போது நான் பாட்டுக்கு என் சரக்கை எல்லாம் அவுத்து விட்டா பீலா விடற மாதிரி தானே இருக்கும். எல்கேஜி படிக்கிற பையன் கிட்டே போயி பி.ஹெச்.டிக்கு தயாரிச்ச ஆராய்ச்சி கட்டுரைய கொடுத்தா என்ன ஆவும்? அதான் நடக்குது.
சரி ஒழியட்டும். நம்பறவுகளுக்கான மேட்டருக்கு போயிரலாம். நவகிரகங்களுடன் பேட்டி சீரிஸ்ல ராகு கேதுக்களை பத்தி எழுதிக்கிட்டிருக்கம்.
ராகு கேதுக்கள் ஜாதகத்துல கெட்டிருந்தா என்ன எஃபெக்டுன்னு சொல்லிட்டு வர்ரச்சயே ராகு கேதுக்கள் பெட்டர் ப்ளேஸ்மென்ட்ல இருந்தா என்ன எஃபெக்டுன்னும் சொல்லிர்ரன்.

மொதல்ல ஆறாமிடத்துல ராகு இருந்தா என்னபலன்னு பார்ப்போம். ஆறுங்கறது சத்ரு -ரோக -ருண ஸ்தானம். ராகு நிழல் கிரகம். தான் நின்ற பாவத்தோட பலத்தை உறிஞ்சி எடுத்துரும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஆகவே ஆறுல ராகு இருந்தா எதிரிகளோட பலம் போக போக குறைஞ்சுக்கிட்டே போகும். ராகு என்றால் ரகசியம். நீங்க வாங்கின கடன் ரகசிய கடனா இருந்தா பிரச்சினையே இல்லையே. நாலு பேருக்கு தெரிஞ்சாதானே பிரச்சினை.
ரோகஸ்தானம்னு பார்க்கும் போதும் இடுப்புக்கு மேல் பாகத்தை விட கீழ்பாகம் கொஞ்சம் குறுகலா இருக்கலாம். அப்படி இருந்துட்டா பிரச்சினையே இல்லை. ஒரு வேளை நார்மலா இருந்தா இடுப்புக்கு கீழ்பாகத்துல இனம் புரியாத பலவீனமோ – ரத்த ஓட்டத்துல தடையோ – வீக்கமோ ஏற்படலாம்.
எதிரிகள், கடன் மேட்டர்ல எந்தளவுக்கு உங்களுக்கு அனுகூலம் நடக்குதோ அந்தளவுக்கு உடல் நலத்துல பாதிப்பு ஏற்படலாமுங்கோ.

மேலும் இது தாய்மாமனை காட்டுமிடம் என்பதால் அவர் சட்டத்துக்கு புறம்பான செய்ல்களில் ஈடுபடுபவராக இருக்கலாம். அல்லது நீங்க பிறந்து வளர வளர அவர் இருட்டுக்கு போயிரலாம்.

12 ஆமிடத்துல உள்ள கேது என்ன செய்வாரு?
எதிரிகள் தானா ஒடுங்கி போறதை பார்த்து உங்களுக்குள்ள ஒரு ஃபிலசாஃபிக்கல் அவுட்லுக் ஏற்படலாம். கடன் மேட்டர்ல தானா ரத்தாயிர்ரது -வட்டி தள்ளுபடி ஆயிர்ரதுமாதிரி சம்பவங்களும் மேற்படி அவுட்லைக்கை அதிகரிக்கலாம். தனக்கு மிஞ்சி ஒரு சக்தி வேலை செய்யுதுங்கற ஃபீலிங் வரும்போது ஆட்டோமெட்டிக்கா உலகியல் சந்தோஷங்களான உணவு,செக்ஸ் இத்யாதி மேல ஆர்வம் குறைஞ்சுரும். தியானம் இத்யாதி மேல ஆர்வம் அதிகரிக்கலாம். சரியான பாதையில உங்க தியானம் தொடர்ந்தால் உங்க தூக்கமே தியானமாயிரும்.

மிச்சம் மீதி மேட்டரை நாளைக்கு பார்ப்போம். உடுங்க ஜூட்டு.