நாம் அனைவரும் தீவிரவாதிகளே!

Posted on

நாம் அனைவரும் தீவிரவாதிகளே!
இன்னைக்கு தீவிரவாதம்ங்கறது உலகளாவிய மேட்டராயிருச்சு. தீவிரவாதம்னா துப்பாக்கி தூக்கறதுதான் தீவிரவாதம்னு இல்லை. இரண்டு முனைகளுக்கு மத்தியில் இருக்கும் உண்மையை பார்க்காம ஏதோ ஒரு முனையில் தொத்திக்கிட்டு வாழ்க்கைய பார்க்கிற எல்லோருமே தீவிரவாதிகள் தான்.
நம்ம சனத்துக்கு தெரிஞ்சதெல்லாம் வச்சா குடுமி சிரைச்சா மொட்டை. ஒன்னு பிரம்மச்சரியம் -இல்லின்னா வச்சதை எடுக்காம அனுபவிக்கிறது .( மனசை சொன்னேங்க) ஒன்னு ஊதாரித்தனம் இல்லின்னா கஞ்சத்தனம்.
ஆனால் நல்லது -ஆரோக்கியமானது எல்லாமே மையத்துல தான் இருக்கு. ஓரல் செக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பிங்க. சில பார்ட்டிகளுக்கு பெண்ணின் கால் தான் கிளர்வுற செய்யுமாம். சிலர் செருப்பை மட்டும் வச்சுக்கிட்டு காரியத்தை முடிச்சுருவாய்ங்களாம்.
ஆக மேட்டர் மையத்துல தான் இருக்கு. பகவத் கீதையில கூட இதைத்தான் சொல்லியிருக்காய்ங்க. வவுறு முட்ட திங்கறவனுக்கும் யோகம் இல்லை. கொலைப்பட்டினியா கிடக்கிறவனுக்கும் யோகம் இல்லை. தூங்கி வழியறவனுக்கும் யோகம் இல்லை. கொட்ட கொட்ட விழித்திருப்பவனுக்கும் யோகமில்லை. எல்லாத்துக்கும் ஆசைப்படறவனும் முட்டாள் – எல்லாத்தையும் துறக்க துடிப்பவனும் முட்டாள். அந்த முனைக்கோ இந்த முனைக்கோ விரைபவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள் தான்.
எல்லாம் சரி .. திடீர்னு என்ன ஆச்சு இப்படி தத்துவமா கொட்டறிங்கனு கேப்பிக. சொல்றேன். இன்னைக்கு இந்திய நாட்டின் அரசியலில் உள்ள சாய்ஸ் ரெண்டு தேன். ஒன்னு என்.டி.ஏ ரெண்டு யுபிஏ. ஆனால் பாருங்க மெஜாரிட்டிய இழந்து ஊசலாடிக்கிட்டிருக்கிற யுபிஏ அரசுக்கு முட்டு கொடுத்துக்கிட்டிருக்கிற முலாயம் சிங் மூன்றாவது அணிக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கிறதா தகவல்.
நாமதேன் ஐடியா ஐயா சாமி ஆச்சே.. நாடு இன்னைக்கிருக்கிற நிலையில மிச்சம் இருக்கிறது 3 ஆவது அணி மீதான நப்பாசைதேன். அதனால இந்த 3 ஆவது அணி உருப்படனும்னா என்ன செய்யலாம்னு ஒரு ஸ்கெட்சை இங்கே தந்திருக்கன்.
என்.டி.ஏ -யுபிஏ இரண்டிலும் உள்ள கட்சிகளில் பல கட்சிகளும் விதி இல்லாம -வேறு ஆல்ட்டர்னேட்டிவ் இல்லாம தான் அந்த அணிகளில் குப்பை கொட்டிக்கிட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு ஆல்ட்டர்னேட்டிவ் கண்ணுக்கு தெரிஞ்சாலும் பிச்சுக்கிட்டு வரதுக்கு தயாரா பல கட்சிகள் இருக்கு.
இதுக்கான முன்னெடுப்பை முலாயம் எடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பினாலும் நம்ம தலை எழுத்து அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
மூன்றாவது அணியின் முன் உள்ள சவால்:
1.என்.டி.ஏவுக்கோ -யுபிஏவுக்கோ பத்து சீட் சாஸ்தி கிடைச்சா பிச்சுக்கிட்டு போக பல கட்சிகள் தயாரா இருக்கறது.
2.யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி. மோடி – ராகுலை சமாளிக்கக்கூடிய சரிஸ்மா இருக்கிற பார்ட்டி யாரு இருக்காய்ங்க?
3.மூன்றாவது அணியில் இணையக்கூடிய கட்சிகள் கட்சித்தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள். தேர்தலுக்கு மிந்தி யுபிஏ அரசு சிபிஐ -ய வச்சு ஃபிலிம் காட்ட கூடிய ஆபத்து.
4. எந்த கட்சிக்கு எத்தீனி சீட்டுன்னு ஒதுக்கறதுல சிக்கல்.
5.தப்பி தவறி மூன்றாவது அணி மெஜாரிட்டி பெற்றாலும் ஸ்டெபிலிட்டி இருக்குமா? கவிழாதுங்கறதுக்கு என்ன கியாரண்டி?
கடந்த கால வரலாற்றில் இருந்து அவிக பாடம் படிச்சாய்ங்களோ இல்லையோ நாம படிச்சிருக்கம். அதை வச்சு மேற்படி சிக்கல்களுக்கு நாம ப்ரப்போஸ் பண்ற தீர்வுகள்.
1.என்.டி.ஏவுக்கோ -யுபிஏவுக்கோ பத்து சீட் சாஸ்தி கிடைச்சா பிச்சுக்கிட்டு போக பல கட்சிகள் தயாரா இருக்கறது.
அ)
வெறுமனே 3 ஆவது அணின்னு ஏற்படும் போது இந்த சிக்கல் சாஸ்தி தான். இல்லேங்கலை.ஆனால் காங்கிரஸ் -பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஒன்னா சேர்ந்து ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கலாம். இரட்டை குடியுரிமை போல தொண்டர்களுக்கு இரண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கலாம்.
ஆ)
ஜஸ்ட் ..காங்கிரஸ் -பா.ஜ.கவுக்கு எதிராண அணிங்கற பாவத்து மட்டுமில்லாம ஒரு காமன் மினிமம் ப்ரோக்ராம் போட்டு அதுக்கு டைம் பவுண்டும் இருக்கிறாப்ல செய்யலாம்.
இ)
அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் செல்வாக்குள்ள பெரிய மனிதர்களை கொண்டு ஒரு பானல் ஏற்படுத்தி 3 ஆவது அணியின் உறுப்பினர்களாக உள்ள கட்சிகள் “எந்த நிலையிலும் காங்கிரஸ் /பா.ஜ.க பின்னே போவதில்லைன்னு அந்த பானல் முன்னாடி எழுத்து பூர்வமான டிக்ளரேஷனை வைக்கலாம்.

2.யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி. மோடி – ராகுலை சமாளிக்கக்கூடிய சரிஸ்மா இருக்கிற பார்ட்டி யாரு இருக்காய்ங்க?
காங்கிரஸ் இளைஞர் அணிக்கே தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுத்துட்டாய்ங்க. தனிக்கட்சியாக உருவெடுக்கும் 3 ஆவது அணியில் உள்ள கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தி பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியாதா?

3.மூன்றாவது அணியில் இணையக்கூடிய கட்சிகள் கட்சித்தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள். தேர்தலுக்கு மிந்தி யுபிஏ அரசு சிபிஐ -ய வச்சு ஃபிலிம் காட்ட கூடிய ஆபத்து.
அ)
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவரை நிரபராதியாகவே பார்க்கவேண்டும் அவர் உரிமைகளை பாதுகாக்கவேண்டுங்கறது நியாய சூத்திரம். தேர்தலுக்கு பிறவு தனி கோர்ட்டு அமைக்கப்படும். எல்லா வழக்குகளும் ஒரு வருட காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்னு வாக்குறுதி கொடுக்கலாம்.
ஆ)
காங்கிரஸ் -பா.ஜ.க வேணம்னா கிழிக்கட்டும்.ஆனால் எக்காரணத்தை கொண்டும் 3 ஆவது அணியில் உள்ள கட்சிகள் தம் அணியில் உள்ள கட்சிகளின் ஊழல் பற்றி வாயை திறக்கப்படாது.
இ)
சுப்ரீம் கோர்ட்டுக்கு போயி “த பாருப்பா நாங்க 3 ஆவது அணி ஆரம்பிச்சிருக்கம். இதனால அரசியல் காரணங்களுக்காக சிபிஐ எங்க மேல ஏவப்படலாம். இதனால தேர்தல் முடியற வரைக்கும் சிபிஐ எடுக்ககூடிய எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒரு ஸ்டே கொடுங்கன்னு கேட்டு வாங்கலாம்.

4. எந்த கட்சிக்கு எத்தீனி சீட்டுன்னு ஒதுக்கறதுல சிக்கல்.
கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைய /சதவீதத்தை அடிப்படையா வச்சுக்கிட்டு – அறிவியல் பூர்வமா சீட் ஒதுக்கினா பிரச்சினையே வராது.
பிரச்சினை வந்தா ஏற்கெனவே சொன்ன பெரிய மனிதர்கள் பானல் சிக்கலை தீர்த்துவைக்கலாம்.

5.தப்பி தவறி மூன்றாவது அணி மெஜாரிட்டி பெற்றாலும் ஸ்டெபிலிட்டி இருக்குமா? கவிழாதுங்கறதுக்கு என்ன கியாரண்டி?
கடவுள் தான்..

Advertisements