இனி எல்லாம் விஷமே !

Posted on

அண்ணே வணக்கம்ணே !
சத்தியமா நான் ட்ராக் மாறலிங்ணா. ராகுகேதுன்னாலே விஷம் தானே. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வர்ணத்தை குறிச்சிருக்காய்ங்க. உ.ம் குரு ,சுக்கிரன் = பிராமணர்கள் ,சனி = தலித், சந்திரன், புதன் = வைசியர் சூரி,செவ் =சத்திரியர். ராகு கேதுவுக்குரிய வர்ணம் எது?

ராகு -கேதுன்னா அன்னியர்கள் – அதாவது வெளி நாட்டினர் – அதாவது மிலேச்சர்கள்னு சொல்லப்பட்டிருக்கு. அன்னியர்களின் மதத்தை ஏற்றுக்கொண்டவர்களும் ராகு கேது கீழே வருவாய்ங்க.

அன்னியர் படையெடுப்புங்கறது எப்போ துவங்கியது? அலெக்சாண்டர்? கஜினி முகமது? பிரிட்டீஷார். அவிக பழக்க வழக்கங்களுக்கும் நம்ம பழக்க வழக்கங்களுக்கும் நிறைய்ய வித்யாசம். எல்லா கிரகமும் க்ளாக் வைஸ் போனா -ராகு கேதுக்கள் ஆன்டிக்ளாக் வைஸ் போறாய்ங்க இல்லையா? இதை வச்சுத்தேன் ராகு -கேது காரக மக்களை மிலேச்சர்கள்னு குறிச்சு வச்சிருக்காய்ங்க போல.

இன்னொரு தமாசு என்னடான்னா ராகு கேதுங்கறதே பிற்சேர்க்கை தான். ஆரம்ப காலத்துல ராகு கேதுவே கிடையாது.
எங்கேருந்து வந்தாய்ங்க ராகு -கேதுக்கள்?

மன்சன் மிருகமா வாழ்ந்த காலத்துல அவன் எதிர்கொண்டதெல்லாம் ஸ்தூலமான பிரச்சினைகள் தான். உடல் ரீதியான பிரச்சினைகள் தான் .
எப்போ காட்டை விட்டு -சஞ்சார வாழ்க்கை -அதையடுத்து ஸ்திரவாழ்க்கைன்னு வந்தானோ அங்கே இருந்து ஸ்தூல மான பிரச்சினைகள் கொஞ்சம் போல குறைஞ்சு அவனுக்கு மன ரீதியான பிரச்சினைகள் எதிர்பட ஆரம்பிச்சது.

காட்டை அழிச்சு நாட்டை உருவாக்கும் சமயம் எத்தனையோ அழிவு வேலைகளை அவன் கை கொள்ள வேண்டியதாயிருச்சு. எக்கலாஜிக்கல் பாலன்ஸ் ஃபணால் ஆயிருச்சு.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. எப்போ வெளியுலகத்துல எக்கலாஜிக்கல் பேலன்ஸ் தவற ஆரம்பிச்சதோ அது இவனோட உள் உலகத்துலயும் பிரதிபலிக்க ஆரம்பிச்சது.

காட்டுல வசிக்கும் போதோ சஞ்சார வாழ்க்கையின் போதோ கூட சில கிளைகளை வெட்டியிருக்கலாம், மிருகங்களை வேட்டை ஆடியிருக்கலாம், பாம்புகளை கொன்றிருக்கலாம். ஆனால் அது வாழ்வா சாவா போராட்டம் -அதுல அவனுக்கு எந்த ஒரு குற்ற மனப்பான்மையும் கிடையாது.
ஸ்திர வாழ்க்கையின் போது அவன் மேற்கொண்ட அழிவு வேலைகள் தவிர்க்க பட்டிருக்க கூடியவை. ஆனாலும் மேற்கொண்டான்.

நாயகன் காலகட்டத்துல நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவேணா பண்ணலாம்ங்கற டயலாக் ஃபேமஸ். தலையோட தலைமுறையில நமக்கு நல்லது நடக்கும்னா எத்தனை பேரை வேணா கொல்லலாம்ங்கற டயலாக் பிரபலம்.

நாயகன் காலத்துக்கும் மங்காத்தா காலத்துக்குமே இத்தனை வித்யாசம். அப்போ மன்சன் ஸ்திர வாழ்க்கைய துவக்கின காலத்துல எந்தளவுக்கு அவன் நோபிளா இருந்திருக்கனும்.அவனுக்குள்ள எந்த அளவு பாப பீதி இருந்திருக்கனும்.ரோசிங்க..

இன்னைக்கு விஞ்ஞானம் பெரிய அளவுல வளர்ந்திருக்கு. வேஸ்ட் மேனேஜ்மென்ட்,ட்ரெய்னேஜ், உலர் கழிவறைகள் இப்படி எத்தனையோ வந்திருக்கு.ஆனாலும் மக்கள் பெரிய அளவுல வசிக்கிற பகுதிகள் எல்லாம் நாறித்தான் கிடக்கு.

ஏதோ சின்ன சின்ன குழுவா சஞ்சாரத்துல இருந்த மக்கள் ஸ்திர வாழ்க்கைய துவக்கின பிறவு-அவிக பல்கி பெருக பெருக அந்த பகுதியின் காற்று -நீர் -நிலம்லாம் எந்தளவுக்கு பொல்யூட் ஆகியிருக்கும் ரோசிங்க.

இந்த காலகட்டத்துக்கு அந்த வாழ்க்கை சொர்கம் . ஆனால் அந்த கால கட்டத்துக்கு அவிக அதுக்கு மிந்தி வாழ்ந்த வன வாழ்க்கை -சஞ்சார வாழ்க்கைக்கு அந்த வாழ்க்கை நரகம்.

இப்படி பார்த்தா மனசுல குற்ற உணர்ச்சி – அப்படி பார்த்தா பொல்யூஷன் – இன்னொரு பக்கம் பார்த்தா எக்கலாஜிக்கல் பேலன்ஸ்ல குளறுபடி இதெல்லாம் சேர்ந்துதான் அவனோட ஹைப்போதலாமஸ் பாதிக்கப்பட்டு – அதனோட கட்டுப்பாட்ல இருக்கக்கூடிய சுரப்பிகள் பாதிக்கப்பட்டு – கெமிக்கல் இம்பாலன்ஸ் உருவாகியிருக்கனும்.
எந்த ஜாதகத்துல ராகு கேது கெட்டிருக்காய்ங்களோ அவிகளுக்கு ரத்த ஓட்டத்துல தடை ,வீக்கம் ,கட்டி இத்யாதி ஏற்படுது.

யாருக்கு ரத்த ஓட்டத்துல தடை ,வீக்கம் ,கட்டி இத்யாதி ஏற்படுதோ அவிக ஜாதகத்துல ராகு கேது கெட்டிருக்காய்ங்கனு அருத்தம்.

இவன் எக்கலாஜிக்கல் பாலன்ஸுக்கு தடை ஏற்படுத்தினா – அது இவன் ரத்த ஓட்டத்துல தடை ஏற்படுத்துது.அந்த தடை அவன் சிந்தனா போக்கையே மாத்திருது.
மேன் ஈஸ் எ சோஷியல் அனிமல். ஒரு கோழிப்பண்ணையில ஒரு கோழிக்கு நோய் கண்டா பண்ணையே காலி.ஏன்னா கோழிக்கு ஈகோ இல்லை.
குழுவா வாழ்ந்த மன்சனுக்கு ஸ்திர வாழ்க்கையின் போது பர்சனல் லைஃப்னு ஒன்னு ஏற்படுது. அவனுக்குள்ள ஈகோ வளருது. எப்போ மன்சன் தான் தனிப்பட்டவன்னு நினைக்கிறானோ உடனே ஒப்பீடு – உயர்வு மனப்பான்மை ,தாழ்வு மனப்பான்மை போன்ற முடிச்சுகளும் ஏற்படுது.

ஸ்திர வாழ்க்கை ,எக்கலாஜிக்கல் இம்பாலன்ஸ்,குற்ற மனப்பான்மை , ஈகோ இப்படி பல ஃபேக்டர்ஸ் ஒன்னு சேர்ந்து சனங்க உடல்லயும் ,மனசுலயும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த மாற்றம் ஏன் ஏற்படுதுங்கற கேள்வி பிறந்திருக்கனும். அதுக்குண்டான பதில் சூரிய சந்திரர்களுடைய நிழல்களா இருந்திருக்கலாம்.
காரணம் -காரணியாகி -அதுவே பல காரணங்களை உருவாக்கிருது. ஸ்திர வாழ்க்கைங்கறது காரணம் – அந்த ஸ்திர வாழ்க்கையிலருந்து பல காரணங்கள் உருவாகுது. அந்த காரணங்களே காரணிகளாகுது.

இவற்றால் பாதிக்கப்படும் மனிதனோட டி.என்.ஏ ல மாற்றங்கள் ஏற்படுது – ஜெனட்டிக் இஞ்சினீரிங் மாறுது – அடுத்த தலைமுறைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகுது.
நாம சோசியம் சொல்ல ஆரம்பிச்ச புதுசுல சர்ப்பதோஷ ஜாதகம் ,செவ் தோஷ ஜாதகம்லாம் ரெம்ப மைனர். இருபது ஜாதகம் வந்தா அதுல ஒரு ஜாதகம் தான் தோஷ ஜாதகமா இருக்கும். இன்னைக்கு இருபது ஜாதகம் வந்தா ஒரு ஜாதகம் சுத்த ஜாதகமா வர்ரது கூட குதிரை கொம்பா இருக்கு.

காற்று:
சுத்தமான காற்றுக்கு எங்கே போறது? சில வருடங்கள் போனால் இன்னைக்கு கேன் வாட்டர் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டர் போடுவாய்ங்க போல. இன்டர் படிக்க சொல்லோ எந்திரிக்கவே மணி எட்டாயிருமா குளிக்க நேரம் இருக்காது. சில சமயம் ஒரு வாரம் போல குளிக்காம இருந்திருக்கன். இன்னைக்கு? ஊஹூம்.
ஒரு பத்து வருசம் மிந்தி கூட வெளிய போய் வந்தா இமையில தூசு படிஞ்சிருக்கும். அவ்ளதேன். இப்பல்லாம் எண்ணெய் வடியுது. இன்னாடா மேட்டருன்னா வாகன பெருக்கம்,வாகன புகை .

நீர்:
நாம ஒன்னும் கடந்த நூற்றாண்டு சம்மம் கிடையாது. பிறந்ததே 1967 தான். ஸ்கூல்ல இன்டர்வெல் விட்டா தண்ணி குடிக்க தெருக்குழாய்க்கு ஓடுவம். (பகல் 11 மணி வரை தண்ணி வரும்) கொஞ்சம் போல ப்ளீச் போட்டு -ஓசோன் காட்டி அனுப்பின தண்ணி தான் .ஆனால் இன்னா டேஸ்டுங்கறிங்க. கொய்யால இன்னைக்கு 30 ரூ கொடுத்து வாங்கின கேன் தண்ணி கூட பஜ்னு தான் இருக்கு.

நிலம்:
சொல்லனுமா என்ன?
ராகு -கேது நம் காற்றில் ,உணவில் , நீரில் இருக்கும் விஷத்தனமையை மேனேஜ் பண்ற கப்பாசிட்டிய கொடுக்கிற கிரகங்கள்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
எல்லாம் விசமயமா இருக்க சொல்லோ ராகு கேதுவும் சரியில்லாம இருந்தா எப்பூடி சமாளிக்கிறதாம்? கடேசியா ஒன்னை மட்டும் சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.
எவன் தன்னை ஒளிச்சுக்க விரும்பறானோ – எவன் தன்னை பத்தி மட்டும் ரோசிக்கிறானோ – எவன் அன்னிய மதத்தை வெறுக்கறானோ அவன் ஜாதகத்துல நிச்சயம் ராகு கேது பல்பு வாங்கியிருப்பாய்ங்க.

இந்த மாதிரி கேஸுங்க இதர கிரகங்களின் பலத்தால் முடிவெடுக்க கூடிய நிலைக்கு வரும்போது நாடும்,சமூகமும் இன்னம் கொஞ்சம் விஷமயமாகுது.
இதை எல்லாம் எப்பூடி ஓவர் கம் பண்றதுங்கற மேட்டரை நாளைக்கு சொல்றேனே..

ராமகிருஷ்ணரும் ஓஷோவும் என்ற குரல் பதிவை கீழ்கண்ட ப்ளேயரில் கேட்டு பயன்பெறலாம்.

Advertisements