கனா கண்டேன் தோழி

Posted on

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSsKK_0dkqypJUT3uO4zmm8Pejr5GCtU2hnQukOXPQaYP_DUYZy

சமீபத்துல முக நூலில் கனவுகளை பத்தி வெகு சில விஷயங்களை எழுதினம். கனவுகளை பத்தி சைக்கலாஜிக்கலா சொல்லனும்னா ஆருக்கெல்லாம் வலி நிறைந்த இறந்தகாலம் இருக்கோ -ஆருக்கெல்லாம் நிகழ்காலம் ரணமா இருக்கோ ஆருக்கெல்லாம் எதிர்காலத்து மேல வெறி இருக்கோ அவிகளுக்கு கனவு வரும்.
சிக்மன் ஃப்ராய்ட் எல்லா கனவுக்கும் கில்மா தான் காரணம்னு சொல்லிவச்சிருக்காராம். அவரோட சிஷ்யர் ஒருத்தரு எல்லாம் கடந்த பிறவியின் நினைவுகள்னு இன்டர் ப்ரிட்டேட் பண்ணாராம். ஆனால் இதெல்லாம் டிப் ஆஃப் தி ஐஸ் பெர்க் மாதிரி தான்.
மனித மூளை சஸ்பென்ஸை விரும்பறதில்லை. திராட்டுல விட்ட சமாசாரங்களுக்கு ஏதோ ஒரு முடிவு கொடுக்க விரும்புதாம். அப்படி முடிவு தர்ர முயற்சி தான் கனவுன்னும் சொல்றாய்ங்க.
ஆருக்கு கனவு வரும்?
எவன்லாம் நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு-சொல்றது ஒன்னு ,செய்றது ஒன்னு -செய்றது ஒன்னு செஞ்சதா சொல்றது ஒன்னுன்னு வாழறானோ அவனுக்குள்ள காம்ப்ளெக்ஸிட்டி சாஸ்தி. அவனுக்கு கனா வரும்.
நாம வாழும் வாழ்க்கை நமக்கு பிடிச்சதா இருக்கனும் -இல்லின்னாலும் பரவால்லை அதை முழு மனசா ஏத்துக்கனும். (ஆக்செப்டன்ஸ்) .
முக்கியமா கில்மா மேட்டர்ல அப்படி சமாசாரமே தன் பாடியில இல்லைன்னு பந்தா பண்றவனுக்கு – இருக்கிற அந்த சமாசாரத்தை தான் அல்ப சங்கியைக்கு மட்டுமே உபயோகிக்கிறாப்ல சீன் போடறானோ அவனுக்கு கனவு வரும்.
மூளையில கான்ஷியஸ், சப்கான்ஷியஸ்,அன் கான்ஷியஸ்னு 3 ட்ரைவ் இருக்காம். கனவுங்கறதே இருக்கிற ஃபைல்ஸை ட்ரைவ் மாத்தற முயற்சிங்கறதும் என்னோட ஹஞ்ச்.
மேலும் சிலர் தின்னதுமே அப்படியே படுக்க போயிருவாய்ங்க. படுக்கிற போஸ்ச்சரும் இரைப்பை சுருங்கி விரிய தடை பண்ணக்கூடிய போஸ்ச்சரா இருக்கும். உ.ம் மல்லாந்து படுத்துர்ரது, கவுந்தடிச்சு படுத்துர்ரது.
இந்த மாதிரி சந்தர்ப்பத்துல நம்மை எழுப்பி விட்டு “சரியா படுங்க பாஸு”ன்னு சொல்ல மூளை செய்யும் முயற்சி கூட கனவா மாறலாம்.
இதுல எதுதான்யா உண்மைன்னா எல்லாமே உண்மைதான். சந்தர்ப்பத்தை பொருத்து மாறுதுங்க்கோ..
ஆக்சிடென்டலா நாம சோசியராவும் இருக்கிறதால சனங்க நம்ம கிட்டே கேட்கிற கேள்வி கனவுகள் எதிர்காலத்தை சொல்லுமா? சில சமயம் சொல்லும். உங்க கனவு எதிர்காலத்தை சொல்லனும்னா மேற்சொன்ன இன்னபிற காரணங்களை ஒழிச்சுரனும்.
உ.ம் நினைச்சதை பேசி,சொன்னதை செய்து ,செய்ததை மட்டும் சொல்லிக்கிட்டு “கொளந்த”கணக்கா வாழனும்.
கில்மா மேட்டர்ல ஹிப்பாக்கிரசி கூடாது. ஓஷோ சொன்னாப்ல நிமிடத்துக்கு நிமிடம்,நொடிக்கு நொடிக்கு வாழனும்.
அடுத்து தியானம். தியானம் கூட தேவையில்லை.தியானம் போல எதையாவது முயற்சி செய்தா போதும். ஏற்கெனவே சொன்னாப்ல மூளைக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது. தியானத்துக்கான உங்க முயற்சி உங்க தூக்கத்தையே தியானமாக்கிரும். அப்பம் வர்ர கனவுகள் எதிர்காலத்தை சுட்டலாம்.
கனவுங்கறது ஒரு அலாரம் போல வேலை செய்யுது. இந்த அலாரம் சகட்டுமேனிக்கு கச்சா முச்சான்னு அடிக்காது. முக்கியமா உசுருக்கு ஆப்பு வர இருக்கிற சமயம் பக்காவா அடிக்குது. பார்ட்டிக்கு அடிக்கலின்னாலும் சுத்தி உள்ள சனத்துக்கு அடிக்குது.
ஆரு டிக்கெட் போடப்போறாய்ங்களோ அவிக ஏற்கெனவே திருமணமானவரா இருந்தா அவருக்கு கண்ணாலம் நடக்கிறாப்ல கனா வரலாம். வேட்டியை அவுத்து விட்டுட்டு போறாப்ல வரலாம். கீரைதிங்கறாப்ல வரலாம்.
நமுக்கு ஒரு கட்டத்துல கனா கச்சா முச்சான்னு வரும். சின்ன வயசுல ஒரு ஓட்டையில கொம்பை விட்டு குத்தறாப்ல வரும். கொம்பை வெளிய எடுத்துட்டு பார்க்க ஒரு பேய் முகம் தெரியும்.
மேட்டர் என்னடான்னா வாசல்ல இருந்த சாக்கடையை எலிகள் அடிக்கடி தோண்டி விட்டுர்ரதால அடைச்சுக்கும்.அதை அப்பப்போ குத்திக்கிட்டே இருப்பாய்ங்க.
டீன் ஏஜ்ல “கேப்” விழுந்துருச்சுன்னா கில்மா கனவா வரும். அதுலயும் உச்சத்தை தள்ளிப்போட ஒரு பக்கா வியூகத்தோட தான் இருப்பம்.
எப்பம் கலப்பு கண்ணாலம் கட்டி அரிசி விலை பருப்பு விலை தெரிஞ்சு போச்சோ அங்கிருந்து பள்ளத்துல விழறாப்ல, தண்ணியில தத்தளிக்கிறாப்ல, நிறையகாசு பணம் கைக்கு வந்தாப்ல கனா வந்துக்கிட்டே இருக்கும்.
எப்பல்லாம் ஒரு லிஃப்ட் கிடைச்சதோ அதுக்கு மிந்தி சேத்துல விழுந்துட்டாப்ல,மலக்குழியில விழுந்துட்டாப்ல, ஒசரத்துல ஏறினாப்ல,பறக்கிறாப்ல கனா வரும்.
பொருளாதார ரீதியில ஒரு வித ஸ்டெபிலிட்டி வர ஆரம்பிச்ச பிறவு 2007 முதல் 2012 முழுக்க கனவுகளே வர்ரதில்லை. சமீப காலமா பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்த பிறகு ஃபோக்கஸ் ஆகக்கூடிய பிரச்சினைகள் காரணமா (உ.ம் பொஞ்சாதி,மவளோட இர்ரெஸ்பான்ஸ்பிலிட்டி எட்செட்ரா) சில்லறையா சில கனவுகள் வரும்.
நாலஞ்சு நாளைக்கு மிந்தி ஒரு கனா வந்தது. திருப்பதி தேவஸ்தானம் காரவுக நமக்கு அங்கவஸ்திரம்லாம் போட்டு கிஃப்ட் கூட தர்ராய்ங்க. அது பெருமாளோட பாஸ்போர்ட் சைஸ் விக்கிரகம்.
அதுல ஏதோ டேமேஜ் இருக்க அதை ராவி சரிபண்ணிரலாம்னு பார்க்கிறேன்.பார்த்தா மொத்தம் மாவாயிருது. கொய்யால நாமே புதுசா பண்ணிரலாம்னு ட்ரை பண்றேன். அந்த இர்ரிட்டேஷன் தாங்க முடியாம ரெம்ப ட்ரை பண்ணி முழிச்சுக்கிட்டன்.
நாம சைக்கலாஜிக்கலா ரெம்ப ஸ்ட்ராங்கு.எந்த அளவுக்கு ஸ்ட்ராங்குன்னா கனவுல பொய் சொல்லுவம். ஒரு கனாவுல தோத்துப்போறாப்ல வந்தா ஒடனே வேக் அப் ஆயிருவம்.மறுபடி தூங்கி அதே கனவை கன்டின்யூ பண்ணி கனால செயிச்சுருவம்.
ஸ்…..ஸ் .. அப்பாடா கனா புராணம் முற்றியது. (இந்த நவகிரகங்களுடன் பேட்டி தொடரை முடிச்ச பிற்காடு தொடர் ஜோலிக்கே போகப்படாது. தாலி கட்டிக்கிட்ட கதையாயிருச்சு)
எச்சரிக்கை:
செவ் தோஷம்+பரிகாரங்களை நாளையிலருந்து கன்டின்யூ பண்ணிக்கலாம்.

Advertisements