மைக்ரோசாஃப்ட் காரன் தற்கொலை செய்துப்பான்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு 9 ல் செவ்வாய் இருந்தா என்ன பிரச்சினை -என்ன தீர்வுன்னு சொல்லியிருக்கனும். கொஞ்சம் போல சொல்லிட்டு மைக்ரோ சாஃப்ட் காரன் மேட்டருக்கு வந்துரலாம்.
9ங்கறது அப்பா, அப்பாவழி உறவு,அவர் வழி சொத்து ,முதலீடு,தூர தேச தொடர்பு,பக்தி,குரு உபதேசம்,முழங்கால் இத்யாதியை காட்டும். இங்கன செவ் நின்னா மேற்படி மேட்டருக்கெல்லாம் எப்படி ஆப்படிப்பாருன்னு இப்போ பார்ப்போம்.
1.அப்பா:
அப்பா கோவக்காரராகலாம். எதிரியா மாறலாம். அவருக்கு மின்சாரம்,நெருப்பு,கொம்புள்ள பிராணிகளால் பிரச்சினைவரலாம். நில பிரச்சினை வரலாம்.
2.அப்பா வழி உறவு:
அப்பாவ வச்சுத்தானே அவ்வழி உறவு அதனால இதெல்லாம் கூட பல்பு வாங்கலாம்.
3.அவர் வழி சொத்து:
வில்லங்கம் வரலாம்,போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ஆட்கள் அவர் நிலத்தை ஆக்கிரமிக்கலாம். எரிஞ்சு போகலாம்.
4.தூரதேச தொடர்பு:
செவ் ஒரு வேளை யோககாரகனா இருந்தால் அப்பா மேட்டர் ஃபணாலாகி “பஞ்சம் பிழைக்க “ஜாதகர் வெளி நாடு போகலாம். அல்லது நைனா இமிசை தாங்க முடியாம பட்டணம் போயிரலாம்.
5.பக்தி,குரு உபதேசம்:
ஒன்பது நான்கு பாவங்கள் தொடர்பு கொண்டிருந்தாலே ஒழிய அம்மாவழியில பக்தி மேட்டர்லாம் குழந்தைக்கு கிடைக்காது.அது அப்பா டிப்பார்ட்மென்ட். அப்பா கோபக்காரரா இருந்து -பையன் அப்பாவை பார்த்ததுமே நடுங்கறான்னு வைங்க அவர் காட்டற பக்தி வழியும் அவனுக்கு கசக்கும். இதனால பையன் காட் ஃபாதர்,ஃபாதர்லி பர்சன்ஸை தேடிப்போக வாய்ப்பிருக்கு.
6.முழங்கால்:
ஃப்ளைட்ல பறக்கனும்னா கூட முழங்கால் வலிமையா இருக்கனும்லியா? இந்த பாவத்துல செவ் நின்னா மு.கால் காலி. கட்டி வரலாம்,காயம் ஏற்படலாம்.,தீப்புண் ஏற்படலாம். இதனால தூர தேச தொடர்பு தேசலாயிரும்.
ஒன்பதாம் பாவத்து செவ்வாயோட எஃபெக்டை பார்த்தோம்.இதுக்குண்டான பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம்.
இப்பம் மைக்ரோ சாஃப்ட் மேட்டருக்கு வருவம்.
நம்ம நண்பர் ஒருத்தரோட சிஸ்டத்துல பிரச்சினை. படக்குனு நீல நிற ஸ்க்ரீன் வந்துரும்.
1.ட்ரைவர்ஸ் கரப்ட் ஆயிருச்சு
2.ஆன்டி வைரஸ் கரப்ட் ஆயிருச்ச்
4.மெமரி போதலை
இதுல ஏதோ ஒன்னு ஆயிருச்சுன்னுரும்.
நமக்கு தெரிஞ்சதெல்லாம் விண்டோஸ் எக்ஸ்பி சிடியை போட்டு அப்கிரேட் பண்றதுதேன். அதுக்கும் நேரம் தராம படக்குன்னு நீல திரைவந்துரும்.
சரின்னு நம்ம ஆஸ்தான கம்ப்யூட்டர் சர்வீஸ் காரர்கிட்டே கொடுத்துட்டு வந்துட்டம். அன்னாருக்கு ஓ.எஸ் போடறது 5 நிமிஷ வேலை. ஆனாலும் அவருக்கும் பெப்பே.
ஒரு வாரம் கழிச்சு நேத்திக்கு நான் ட்ரை பண்ணவான்னு கேட்டு வீட்டுக்கு கொண்டு வந்துட்டன்.
நம்ம சிஸ்டத்துல உள்ள டிவிடி கேபிளை,வயரை பிடுங்கி பிரச்சினை இருக்கிற சிஸ்டத்தோட ஹார்ட் ட்ரைவுக்கு கனெக்ட் பண்ணேன்.
ஃபார்மெட் அடிக்க தெரியாத காலத்துல நம்ம சிஸ்டத்துல ரெண்டு மூணு ஓ.எஸ் எல்லாம் இருந்த காலம் உண்டு. விண்டோஸ் சிடியை போட்டு பிரச்சினைக்குரிய ஹார்ட் ட்ரைவ்ல ஓ.எஸ் போட சொன்னேன். கொய்யால .. 00.12 எம்.பியோ என்னவோ மெமரி இருக்குன்னு காட்டுது.
தாளி ..இதெல்லாம் இப்படி ஆகாது காட்டடி அடிக்க வேண்டியதுதான்னு .. என் ஹார்ட் டிஸ்க்ல சி ட்ரைவ்ல இருந்த விண்டோஸ் ஃபோல்டரை அப்படியே காப்பி பண்ணி பிரச்சினைக்குரிய ஹார்ட் டிஸ்க்ல பேஸ்ட் பண்ணிட்டன்.
சிஸ்டம் இஸ் ஓகே.. இதை மைக்ரோசாஃப்ட் காரனுக்கு சொல்லாதிங்க. தற்கொலை செய்துப்பான்..

Advertisements