திடீர் மரணம் -செவ் -பரிகாரம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஸ்தூலமா எதாச்சும் நெல்லது நடந்தா சூட்சுமத்துல ஏதோ வெற்றிடம் ஏற்பட்டுருது. அதை நிரப்ப அல்லது அது நிரம்ப ரெம்பவே மெனக்கெட வேண்டியதாயிருது.
ராமர் பட்டாபிஷேக சமயத்துல ராமர் எல்லாருக்கும் கிஃப்ட் கொடுத்து அசத்தினார். அப்பம் ஆஞ்சனேயருக்கு எதுவும் தரலின்னா ஜூவி -கழுகார் பகுதியில எதாச்சும் வில்லங்கமா எளுதிருவாய்ங்களேன்னு ஒரு முத்து மாலையை தூக்கி கொடுத்தாராம்.
ஒடனே ஆஞ்சனேயர் அந்த மாலையில உள்ள ஒவ்வொரு முத்தையும் கடிச்சு துப்ப ஆரம்பிச்சுட்டாரு. சனங்க “புத்தி போகுதாபாரு”ன்னு கமெண்ட் அடிச்சாய்ங்க. ராமர் “ஏன்? ஏன்? ஏன்டா இப்படி”ன்னு கேட்டாரு.
அதுக்கு ஆஞ்சனேயர் ” எந்த பொருள்ள ராம நாமத்தோட அதிர்வுகள் -ராம நாமத்தோட சுவை இருக்குதோ அதை மட்டும் தான் என்னால உபயோகிக்க முடியும்”னாராம்.
நம்முது அவரு ரேஞ்சு இல்லின்னாலும் ஒரு புது ஐட்டம் வந்தா அதை சாமானியத்துல நம்ம மைண்டு ஏத்துக்கறதில்லை. கொஞ்சம் நாள் பிடிக்குது.
இந்த லாப் டாப்பையே எடுத்துக்கங்களேன். மொத நாள் ” செமர்த்தியா மாட்டினோம்.. 20.5 தெண்டமா”ன்னு ஆயிருச்சு. ஆனால் இன்னைக்கு பட படன்னு அடிக்க முடியுது.
நான் என்ன நினைக்கிறேன்னா நம்ம வைப்ரேஷன் இந்த ஐட்டத்துக்குள்ள போயி வேலை செய்ய டைம் பிடிச்சுதோ என்னமோ?
இதை வாங்க நினைச்சதே சுற்றுப்பயணத்தை துவக்கத்தான். நோக்கம் மூனு.
1.ஜோதிட ம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஊட்டறது -இதை மசால் வடையா உபயோகிச்சு ஆன்மீகத்துக்கு இழுக்கறது. (மெயின்டெனென்ஸுக்கு கன்சல்ட்டன்சி ஃபீஸும் கிடைச்சுரும்ல)
2.ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தி சொல்லிட்டே போறது.(மொத பாய்ண்ட்டால வர்ர கருமமும் தொலையும் -ராத்திரியில நெல்ல தூக்கம் வரும்)
கடவுளுக்கும் நமக்கும் உள்ள அக்ரிமென்டே என்ன நீ பார்த்துக்க – நாட்டை நான் பார்த்துக்கறேன். கடவுளுக்கு ப்ரீச் ஆஃப் அக்ரிமென்டுன்னா ரெம்ப பிடிக்கும் போல. நாம நாட்டை காத்துல விட்டுட்டிருந்த சமயம்தான் நம்மை பார்க்கவே ஆரம்பிச்சாரு.
ஒரு வேளை 1986 முதல் 2004 வரை செய்த வேலைக்கான பில்லை 2007 லதான் பாஸ் பண்ண ஆரம்பிச்சாரோ என்னமோ?
ஆரு என்ன சொன்னாலும் -எடுத்தாலும் -எடுக்கலின்னாலும் சச்சினுக்கு பூஸ்ட் மாதிரி நமுக்கு ஆ.இ. இது மட்டுமில்லின்னா நமக்கும் ரஜினிக்கும் ,நமக்கும் கலீஞருக்கும் என்ன வித்யாசம்?
நிற்க. கடந்த பதிவுல 8 ல் செவ் இருந்தா என்ன நடக்கும்னு அதை எப்படி மாத்திக்கலாம்னு க்ளூ கொடுத்திருந்தேன்.
இன்னைக்கு கொஞ்சம் காட்டமான பரிகாரங்கள்:
1.ஆஞ்சனேயரை கெட்டியா பிடிங்க. ராம நாமம் சொல்லிக்கிட்டே இருங்க
2.இஃப் யுவார் மேரீட் உங்க மனைவியை மாசத்துல ஒரு வெள்ளிக்கிழமையாச்சும் லட்சுமி பூஜை பண்ண சொல்லுங்க. ஆறு சுமங்கலிகளை கூப்டு அவிகளுக்கு தாம்பூலத்துல டால்கம் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி மாதிரி நாவல்ட்டீஸ் வச்சு கொடுத்து அவிக ஆசிய பெற சொல்லுங்க.
3.ஏற்கெனவே உங்க டைனாஸ்டியில துர்மரணங்கள் -அகால மரணங்கள் நடந்திருந்தா காக்காய்க்கு சோறு வைக்காம சாப்பிடாதிங்க. பசுவுக்கு அகத்திக்கீரை கொடுங்க. ஊனமுற்றவருக்கு ( கால் ) சோறு போடுங்க.
4.சனம் நக்கலா சிரிச்சாலும் சரி சினிமா தியேட்டர் கணக்காவீட்டுல பயிட்டுல மணல், கார்பண்டை ஆக்சைடு சிலிண்டர் வச்சுக்கங்க.
5.நெல்ல எலக்ட்ரீஷினா கூப்டு ஹவுஸ் ஒயரிங் எல்லாத்தையும் ஒரு தாட்டி செக் பண்ணிருங்க. ட்ரிப்பர் ஏற்பாடு செய்ங்க. வெளியூர் போறச்ச மெயின் ஆஃப் பண்ணிட்டு போங்க.
6.வெள்ளிக்கிழமை விளக்கேத்தினா ஞாபகமா குளிரப்பண்ணிருங்க.
7.போலீஸ், மிலிட்டரி ,ரயில்வே இத்யாதி டிப்பார்ட்மென்ட்ல வேலை செய்துக்கிட்டிருந்தா தொடருங்க. சம்பளத்துல 9% மலை மேல இருக்கிற முருகன் கோவிலுக்குன்னு ஒதுக்கி வச்சிருங்க. முருகன் புண்ணியத்துல”எதுவும்” நடக்காம சகஜ மரணம் ஏற்பட்டா அந்த காசை கோவிலுக்கு செலுத்திர சொல்லி உயில் எழுதுங்க. எதுனா நடந்துட்டா செலவுக்காகும்ல.
8.ரத்தா தானம் கட்டாயம்.
9.உங்க ஏரியாவுல நெஜமாலுமே சேவைஸ்தாபனங்கள் எதுனா இருந்தா அவிகளுக்கு மின் பொருட்கள் உ.ம் இன்வெர்ட்டர் வாங்கி கொடுங்க.
10.சகோதரர்களுக்கு பங்கு பிரிக்க வேண்டியிருந்தா ஒ.ம கரீட்டா பிரிச்சு கொடுத்துருங்க.
11.ஆடு,மாடு வளர்க்காதிங்க.
12. சொந்த வாகனத்தை அவாய்ட் பண்ணுங்க. முடியாத பட்சம். ..செல்ஃப் ட்ரைவிங் வேண்டாம். ட்ரைவரை போட்டுக்கங்க.
13.மெடிக்கல் பாலிசி ஒன்னு எடுத்துருங்க.
இதுவரை சொன்னதெல்லாம் ஒரு ரேஞ்சு இனி வருவது .. நீங்களே படிக்க போறிங்கல்ல.
1.வெளியே பூட்டின அறையில் – லைட்ஸ் ஆஃப் பண்ணிட்டு காதுல பஞ்சு வச்சுக்கிட்டு சவாசனத்துல இருந்தபடி தியானம் பண்ணுங்க.
2. நட்பு உறவு வட்டத்துல மரணம் நடந்தா தவறாது போய் வாங்க. கடேசி வரை இருந்துட்டு வாங்க.
3.மரண கானா சிடி வாங்கி கேளுங்க.
4.தனிமையில இனிமை – ஒன் பாத்ரூம் போறச்ச கூடகம்பெனிய தேடாதிங்க.
5.மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்கங்க. கு.ப அந்த உடையாவது வாங்கி மாட்டிக்கிட்டு -அது தொடர்பான டிவிடிகள் பார்த்து ஆ ஊன்னு கத்திக்கிட்டு இருங்க. முக்கியமா நிஞ்சா .
6.உடலை வியர்வையில குளிப்பாட்டிட்டு அப்பாறம் தண்ணியால குளிப்பாட்டுங்க.
7.உங்க அக்கவுண்ட்ல எப்பயும் ஜீரோ பேலன்ஸ் இருக்கிறாப்ல மெயின்டெய்ன் பண்ணுங்க.
8.அரைஞாண் கயிறு கட்டாதிங்க -இருந்தா அறுத்துருங்க.
9.சவ ஊர்வலத்துல வீசற காசு கிடைச்சா ஒரு ஓட்டை போட்டு கழுத்துல போட்டுக்கங்க.
10.தர்காக்களை தரிசனம் செய்ங்க.

தற்சமயத்துக்கு இது போதும். இந்த பரிகாரத்துக்கும் அடங்கலின்னா மெயில் பண்ணுங்க .இன்னம் காட்டமான பரிகாரங்களை தரேன்.

Advertisements