மனைவி/கணவரை கொல்பவர் யார்?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி -செவ் தோஷம் – செவ் தோஷம் ஆண் பெண் வித்யாசம் – இதையெல்லாம் தட்டுத்தடுமாறி தாண்டி செவ் தோஷ பரிகாரங்களை தொடர்ந்துக்கிட்டிருக்கம். இந்த வரிசையில 7 ல் செவ்வாயை பத்தி சொல்லோனம்.

சோசியம் சோசியம்னு மாரடிக்கிறது உங்களுக்கு திகட்டுதோ இல்லியோ நமுக்கு ரெம்பவே திகட்டிப்போகுது. நம்முது கடகலக்னமாச்சா…………………………………… (புள்ளி இட்ட இடங்களை நிரப்பவும் -ஜா.ரா மட்டும் கட்டாயம்
தவிர்க்கவும்)

மேலும் 7 ல் செவ் கணவன் அ மனைவிக்கு திடீர் மரணத்தை தரலாம் – உஷ்ணம்,ரத்தம்,எரிச்சல் தொடர்பான வியாதிகளை தரலாம். செவ் காரகத்தில் வேறு வகையிலும் கண்டங்களை தரலாம். கொலைங்கறது கடைசி பட்சம் தான்.

ஆனால் என்ன பண்றது இப்படி எதையாவது அச்சாணியமா எழுதினாத்தான் ஹிட்ஸ் அள்ளுது. நியூஸ்பேப்பர்ல பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை அடுத்து தவறாது தென்படும் செய்தி தம்பதிகள் கொலைதான்.அதுவும் புருசன் பொஞ்சாதியை போட்டுத்தள்ளிர்ரது -பொஞ்சாதி புருசனை போட்டுத்தள்ளிர்ரது .

கள்ளக்காதல் எதிரொலி -மனைவி அடித்து கொலை – குடும்பம் நடத்த வராததால் புதுப்பெண் எரித்துக்கொலை
இப்படி வித்யாசம் இருக்குமே கண்டி போட்டு தள்றது தொடர்ந்து நடக்குது. அத்தீனி பேருக்கும் 7ல செவ்வாய் நின்னாரா? பார்த்தாரான்னா ஆரும் பார்க்கலை.

அதனால வேறுமனே சோசியத்தை வச்சு ஜல்லியடிக்கிறதுல எனக்கு விருப்பமில்லை. இங்கே பிரதானமா வர்ரது சைக்காலஜி.

மனைவியரை கொல்லும் கணவர்கள் – கணவர்களை கொல்லும் மனைவியர்னு ரெண்டு க்ரூப்புக்கு டிஃப்ரண்ட் சைக்காலஜி இருக்கு. அதை பார்க்கிறதுக்கு மிந்தி ப்ளாக் ஆரம்பிச்ச 31,ஜூலை,2000 த்துலருந்து சொல்லிட்டு வர்ர முடிவான தத்துவத்தை டெலிகிராம் லேங்குவேஜ்ல சொல்லிர்ரன்.

புதுவரவுகளும் புரிஞ்சிக்கனுமில்லையா?

1.சகல உயிர்களும் முதலில் ஓருடல் ஓருயிர் என்ற நிலையில் இருந்தன.( அமீபா)
2.பின் பரிணாம வளர்ச்சியில் பல உடல் பல்லுயிராக பிரிந்தன
3.மீண்டும் ஒன்று சேர துடிக்கின்றன.
4. அந்த மறு இணைப்புக்கு தத்தமது உடலே தடை என்று பிரமிக்கின்றன.
5. உண்மையில் அனைத்து உயிர்களையும் கண்ணுக்கு தெரியாத ஒரு தங்க நூல் சரிகை பிணைத்துத்தான் வைத்துள்ளது.
6.ஆனால் ஈகோ அதை உணர மறுக்கிறது. தான் பிரிந்தே இருப்பதாய் எண்ணச்செய்கிறது. ஒன்றிணைய துடிக்கச்செய்கிறது. அதற்கு தடை உடல் என்று பிரமிக்கச்செய்கிறது.
7.எனவே தான் மனிதர்கள் தம் உடலை உதிர்க்க துடிக்கின்றனர். அதனால் எச்செயலுக்கு பின்னும் மனிதனின் கொல்லும் அல்லது கொல்லப்படும் இச்சையே இருக்கிறது .
9.மனிதன் காடுகளில்வசித்தபோது சுதந்திரமாய் கொல்வதும் கொல்லப்படுவதுமாய் வாழ்ந்தான்.
10. ஓரளவு நாகரீகம் அடைந்த பிறகு கொல்வதும்,கொல்லப்படுதலும் குறைந்து போயின. பிறகு செக்ஸில் உச்சத்தின் போது கிடைக்கும் மரணமொத்த காலாதீத நிலை மீது கவர்ச்சி கூடியது. கொல்லுதல் கொல்லப்படுதல் என்ற இந்த இரண்டு இச்சைகளும் உடலுறவில் பிரதானமாக நிறைவேறின. எப்டி எப்டின்னு கேட்கிறவுகளுக்கு என் பதில் கடைசியில் .
11. ஸ்திரவாசம், பண்பாடு, நாகரிகம்,வாரிசுக்கான தவிப்பால் செக்ஸ் பெறுதலில் பிரச்சினை ஏற்பட்டது .
12. கூடுதல் விளைபொருட்கள்/பண்டமாற்று/தங்க வெள்ளி நாணயங்கள் /பணம்/செக்ஸுக்கான மாற்றாக பணம் மாறியது. தற்போது செக்ஸையே மறக்கடிக்குமளவுக்கு பணத்தின் மீதான கவர்ச்சி அதிகரித்துவிட்டது.

கொலை அ தற்கொலை விருப்பம் -செக்ஸாக மாறி -செக்ஸ் பணமாக மாறி -பணம் பண்ணும் கப்பாசிட்டியே பிரதானமாகி செக்ஸுவலா அன் ஃபிட் ஆயிட்டம்.

இருக்கிறது ஒரே சக்தி. அது காம சக்தி. அது எத்தனை விதமாத்தான் வேலை செய்யும்? இயற்கையின் பார்வையில் உப்பு ஊறுகாய்க்கு உதவாத விஷயங்களில் விரயமாவதால் இயற்கை தன் பவர் சப்ளைய குறைச்சுருச்சு. பேட்டரி வீக்.

முலைக்கு அழும் குழந்தை சூப்பானுக்கு சமரசம் செய்து கொள்வது போல பணம்,பதவி,கார்,வீடுன்னு சனம் திருப்தியடைய ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இதெல்லாம் கிடைக்கலின்னா ரெபல் ஆயிர்ராய்ங்க.

இதுல சரிய்யான கடைக்காலோட – செமை ஜீன்ஸோட பிறந்த ஜென்மங்கள் சூப்பானுக்கெல்லாம் மயங்கறதில்லை .அசலானதே வேண்டும்னு அடம் பிடிக்குதுங்க. ஆயிரம் சூப்பான் இருந்தாலும் “அம்மா எங்கே” ஜெபத்தை விடறதில்லை. அம்மா கிடைச்சதும் சூப்பானை சுக்கு நூறாக்கிட்டு போயிர்ராய்ங்க.

இது புரிந்துகொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டால் விவாகரத்துல முடியுது. அனுமதிக்கப்படலின்னா கொலையில முடியுது.

மொதல்ல செக்ஸுல என்னதான் நடக்குதுன்னு ஒரு க்ளான்ஸ் பார்த்துருவம்.

இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் பெறும் போது உச்சம் பெறும் வரை கொல்லும் இச்சையும் -உச்சம் பெற்றபின் கொல்லப்படும் இச்சையும் நிறைவேறிருது. ஃப்ரெஷ் ஆயிர்ராய்ங்க. அப்பாறம் சூப்பான் கணக்கான பைசா, ப்ரமோஷன் ,ஃபிரிட்ஜ், மிக்சிக்கெல்லாம் அடம்பிடிக்கிறதில்லை.

ஒரு வேளை கணவனுக்கு ப்ரிமெச்சூர்ட் எஜாகுலேஷன் -துரித ஸ்கலிதம் இருந்தா – ஸ்கலிதம் நடக்கும் வரை – ஃபார் எ ஷார்ட் டைம் -ஒரு பத்து பதினைஞ்சு சதவீதம் பெண்ணின் கொல்லப்படும் இச்சையும் ஆணின் கொல்லும் இச்சையும் நிறைவேறுகிறது.அவனுக்கு ஸ்கலிதமான பிறகு அவனோட கொல்லப்படும் இச்சையும் , அவளின் கொல்லும் இச்சையும் முழுமையாக நிறைவேறுகிறது.

அவளோட நிறைவேறாத 90 முதல் 85 சதவீத கொல்லப்படும் நிறைவேறாமலே போகுது. இதனால ஸ்தூலமா தன்னை கொல்லும்படி அவளே அவனை தூண்டுகிறாள் .

அவனால செக்ஸில் அவளை கொல்ல முடியலை (ஐ மீன் உச்சத்தை தரமுடியவில்லை) இதனால மனசளவில் சாவறான். அவனுக்குள்ள கொலை வெறி சப் கான்ஷியஸா இருந்துக்கிட்டே இருக்கு.

ஒருத்தி கொல்லப்படும் வெறியோடும் -ஒருத்தன் கொல்லும் வெறியோடும் இருந்தா என்னா நடக்கும்? கொலை தான் நடக்கும்.

இதுல இன்னொரு சூட்சுமம் இருக்கு. கொலைக்கு பயந்த ஜீனா இருந்தா தற்கொலை செய்துக்கவும் சான்ஸ் இருக்கு. ஒரு வேளை அவளோட ரத்தத்துல முன்னெச்சரிக்கை சாஸ்தியா இருந்தா அவன் போடறதுக்குள்ள இவ அவனை போட்டுத்தள்ளிர்ரா.

இப்பம் சோசியத்துக்கு வருவம். செவ்வாயை பத்தி இவ்ளோ நாளா படிச்சிட்டு வர்ர உங்களுக்கு அவரை பத்தி ஒரு ஐடியா வந்திருக்கும். சுபனாக உள்ள செவ்வாய் ரத்தம்,ரத்த சுத்தியை கொடுக்கிறாரு .உடலுறவுக்கு இது மினிமம் கியாரண்டிய கொடுக்குது. செக்ஸில் தோல்விக்கு இவர் மட்டுமே காரணம் அல்ல. செக்ஸுக்கு 9 கிரகங்களோட பலமும் தேவை. இதையெல்லாம் ஏற்கெனவே சலிக்க சலிக்க எழுதியாச்சு.

இந்த செவ் என்ன பண்றாருன்னா கோபத்தை கொடுத்துர்ராரு. யோசனையை ஃபணாலாக்கிர்ராரு இதான் மேஜர் ப்ராப்ளம். அதுலயும் இவரே 7 ஆமிடத்துல இருக்கும் போது கிரிட்டிகலாயிருது.

எனி ஹவ் . நாளைக்கு இதே மேட்டர்ல இன்னம் சில விஷயங்களை பார்த்துரலாம். மறு நாள் பரிகாரம் .ஓகேவா உடுங்க ஜூட்டு..

Advertisements