புத்ர தோஷம் – மிஸ்கேரி -அபார்ஷன்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

சத்தியமா இன்னைக்கு லக்னாத் அஞ்சுல செவ் இருந்தா செய்துக்க வேண்டிய பரிகாரங்களை கொடுத்தே உடறன். டோன்ட் ஒர்ரி.

நாட்ல ஆயிரம் நடக்குது. ஆனால் நாம கெரகங்களை பிடிச்சு தொங்கிக்கிட்டிருக்கமேன்னு ஒரு கில்ட்டி வரும்.உடனே ட்ராக் மாறி கரண்ட் அஃபேர்ஸுக்கு வருவம். ஒடனே ஹிட்ஸு,ரேங்கு எல்லாமே தொங்கிப்போயிரும். ( கெட்ட வார்த்தையில்லிங்கணா ..காத்தாடி விடறச்ச நூல் தொங்கிப்போய்ருச்சுன்னா சுத்துப்பக்க மாடிகள்ள உள்ளவுக சின்ன கல்லுக்கு நூலை கட்டி டாக்கா போட்டுருவானுங்கல்ல.அதுக்கு சொன்னேன்)

எல்லாம் தொங்கிப்போனபிறவு மறுபடி அடியை பிடிடா பரதப்பட்டான்னு ஆரம்பிப்போம். நாம ஒன்னும் ப்ளான் பண்ணி செய்யலின்னாலும் விழுவதும் -எழுவதுமாத்தான் இருந்தம் .ஆரம்பத்துல ஃபேஸ்புக்கை டைம் பாஸுக்குன்னு வச்சிருந்தம் . ஆனால் இப்பம் கரண்ட் அஃபேர்ஸுக்கு ஃபேஸ்புக் – கெரகங்களுக்கு வலைதளம்னு ஆயிருச்சு. ஃபேஸ்புக்கோட ரீச் பிரம்மாண்டம். அயனான ஐட்டம் போட்டு நம்ம நண்பர்களோட ஃபேன்ஸ் மட்டும் ஷேர் பண்ணாலும் 42 ஆயிரம் பேருக்கு சேர்ந்துரும்ங்கோ..( நண்பர்களின் எண்ணிக்கை 1250+னு நினைக்கிறேன்)

மேலும் ஆப்பரேஷன் இந்தியா 2000 வேலைய துவங்கிட்டமா கில்ட்டில்லாம் ஓடிப்போச்சு.அனேகமா ப்ரிண்டிங் இன்னைக்கு முடிஞ்சு முதல் கட்டமா தமிழக எம்பிக்களுக்கு அனுப்பிருவன் போல. ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல புதுசா சில காரியம்லாம் ஆரம்பிச்சிருக்கன் ( லெமன் டீ – டான்ஸு எட்செட்ரா) ரிசல்ட்டும் பரவாயில்லை போல வருது. சீக்கிரமே இன்னம் கொஞ்சம் ப்ரிஸ்காகிருவன்ங்கற நம்பிக்கை வந்துருச்சு. பார்ப்போம்.

நேத்து செவ் அஞ்சுல இருந்தா வரக்கூடிய பிரச்சினைகளை பற்றி சொல்லியிருந்தேன் .அதன் சுருக்கம்:

அபார்ஷன்,மிஸ் கேரி, குழந்தைங்க இல்லாம இருக்கிறது ,குழந்தைகளுக்கு புண்,ரணம்,கட்டி ஜாதகருக்கும் வாரிசுகளுக்கும் எதிரிகள் . அதி உஷ்ணம்,மின்சாரம்,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகளால் ஆபத்து. வாரிசுகள் கோபக்காரர்களாக இருக்கலாம்.அவமானங்கள் ஏற்படலாம்

ஜாதகம் இல்லாதவுகளுக்கு டிப்:
மேற்படி பிரச்சினைகள் உங்க லைஃப்ல இருந்தா செவ் அஞ்சுல இருக்காரு அ கு.ப அஞ்சை பார்க்கிறாரு அட .அதுவும் இல்லின்னா அஞ்சுக்கதிபதியாகி கெட்டிருக்காருன்னு அருத்தம். நீங்களும் இன்னைக்கு சொல்லப்போற பரிகாரங்களை செய்து பலன் பெறலாம்.

இப்பம் பரிகாரங்களுக்கு போயிரலாமா?

திருமணம் ஆகாதவுக ஆண் பெண்/ அதாங்க ப்ரைட் அண்ட் க்ரூம் ரெண்டு பேருக்கும் ரத்தப்பரிசோதனை செய்து எக்ஸ்பெர்ட் ஒபீனியன் வாங்கிக்கிட்டு கண்ணாலம் கட்டுங்க. (குறிப்பா RH நெகட்டிவ்னு ஒரு ஃபேக்டர் இருக்கு ..அது ஓக்கேவா பார்த்துருங்க)

கண்ணாலம் ஆனவுகளும் ர.ப செய்துக்கலாம். ஆனால் ஒன்னால நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டேன்னு புலம்பப்படாது. ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சுமத்தக்கூடாது.

கடவுள் என்ன சரவணபவன் ஓட்டல் சர்வரா டிஃபன் தரவேண்டியவுகளுக்கு மீல்ஸும் -மீல்ஸ் தரவேண்டியவுகளுக்கு டிஃபனும் கொடுத்துர. அவரு கரீட்டா தான் கொடுப்பாரு. கொடுத்திருக்காருன்னு புரிஞ்சுக்கனும்.ஏத்துக்கனும் .தீர்வு நோக்கி கிளம்பிரனும்.

நெருங்கிய சொந்தத்துல கண்ணாலம் கட்டாதிங்க. போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ,எலக் ட்ரானிக்ஸ் தொடர்பான பின்னணி உள்ள குடும்பத்துல பெண் எடுக்காதிங்க.

லக்ன செவ்வாய்க்கு சொல்லப்பட்ட பரிகாரங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க. பாடி,மைண்டு ட்யூன் ஆகும்.

யுத்தம்,சமையல், எலக் ட்ரானிக்ஸ் தொடர்பான புக்ஸ் படிங்க. படம் பாருங்க.சதுரங்க விளையாட்டு கத்துக்கிட்டு விளையாடுங்க. சமையல் செய்ங்க. ( அலார்ட்டா) படிச்சதை எல்லாம் காட்சியாக்கி மைண்டுல ஓட விடுங்க.

பன்னிரு கையனின் (முருகன்) உருவத்தை மனதில் நிறுத்துங்க. ரஜினி பட டைட்டில் கணக்கா ……..

ஓம்
நமோ
குஹ
ப்ரம்ஹனே
நமஹ
……………………அல்லது
ஓம்
ஸௌம்
சரஹண பவ

என்ற எழுத்துக்களை இமேஜின் பண்ணுங்க.

குழந்தை பிறந்தா அதுக்கு முருகன் பெயரை வைப்பதாய் கமிட் பண்ணிக்கங்க. அதை ஒரு காவலர் அ ராணுவ வீரராக்குவதாய் சபதம் எடுத்துக்கங்க.

உங்களுக்கு சொந்தமா வீட்டு மனை எதாவது இருந்தா வித்து தொலைச்சு பணத்தை ஃபிக்சட்ல போட்டுருங்க. வட்டியை கூட தொடாதிங்க. கொளந்தை பிறவு வட்டி பணத்தை எடுத்துக்கிட்டு அறுபடை வீடுகளுக்கு பஸ்ஸுல போயி அல்லாடிட்டு வாங்க. (சொந்த வாகனம் வேண்டாம்)

அண்ணன் தம்பிக்கு கொடுக்க வேண்டியது எதுனா இருந்தா ஒடனே கொடுத்து செட்டில் பண்ணிருங்க. நீங்க செவ் காரகமுள்ள தொழிலில் இருந்தா விலகிருங்க. (படை ,காவல் , எரிபொருள்,அக்னிமுக தொழில்)

சர்க்கிளை குறைங்க. முடிஞ்சவரை தனிமை. பொதுக்காரியத்துல ஈடுபடாதிங்க. எம்.ஜி.ஆர் வேலைகள் செய்தாலும் சீக்ரெட்டா செய்ங்க.

,குழந்தைகளுக்கு புண்,ரணம்,கட்டி வந்தால்:
மேற்படி பரிகாரரங்களை நீங்க தொடர்ந்து செய்ங்க. குழந்தைகளை லக்ன செவ்வாய்க்குரிய பரிகாரங்களை செய்ய வைங்க

கோபத்தை குறைங்க:

கோபம் எப்ப வருதுன்னு ரோசிங்க. காரியம் கை மீறி போயிருச்சு – அதை தடுக்க நம்மால முடியலை. ஆரம்பத்துலயே தடுக்காம முட்டாள் தனமா இருந்துட்டம், இதுல நம்ம பங்கும் இருக்குங்கற சிச்சுவேஷன்ல தான் கோபம் வருது. காரணத்தை பைசல் பண்ணுங்க. கோபம் காணாம போயிரும்.

கோபத்தால என்ன நடக்கும் ? என்ன நடந்துரும்னு கெஸ் பண்ணுங்க. ஒரு ம….னாவும் நடக்காதுன்னா படாதிங்க.
கோபம் நடிக்கப்படனும்.அப்பத்தேன் வேலை நடக்கும். நெஜமாலுமே கோபப்பட்டா நாறிரும்.

இது அசாத்தியம்னு தோனுதா ஓகே. கோபத்தை உங்களை பாதிக்காத டார்கெட்டுக்கு திருப்பி விட்டுருங்க.
எதாவது புனைப்பெயர் வச்சுக்கிட்டு பொதுபிரச்சினைகளை பற்றி லெட்டர் டு எடிட்டர் கடிதம் எழுதுங்க. ஃபேஸ்புக்ல எழுதுங்க. ஆனா எக்காரணத்தை கொண்டும் புனைப்பெயருக்கு சொந்தம் கொண்டாடாதிங்க..

நாளைக்கு வாழ்க்கை துணைய இழப்பது ,பிரிவது,போட்டு தள்ளிர்ரது ,அல்லது வாழ்க்கை துணையால் போட்டு தள்ளப்பட்டுவிடுவது போன்ற திகீர் பலனை தரும் 7 ல் செவ் கதையை பார்த்துருவம். உடுங்க ஜூட்டு..

Advertisements

4 thoughts on “புத்ர தோஷம் – மிஸ்கேரி -அபார்ஷன்

  MARUTHAPPAN said:
  March 5, 2013 at 6:45 am

  ஒருவருடைய ஜாதகத்தில் 3 குழந்தைகள் உண்டு என்றால், அவர்களுக்கு கடயம் 3 குழந்தைகள் பிறக்குமா?

  சப்போஸ் 2 குழந்தை அபாசன் ஆகிவிட்டால் அவர்களுக்கு 1 குழந்தைதான் உண்டா?

  இல்லை 3 குழந்தைகள் உண்டா?

  MARUTHAPPAN said:
  March 13, 2013 at 12:56 am

  anne no answer for my question?

  MARUTHAPPAN said:
  March 14, 2013 at 6:51 am

  ok. thanks, we will expect one post regarding this topic

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s