தற்கொலை ஜாதகங்கள்

Posted on

null

அண்ணே வணக்கம்ணே !

நவகிரகங்களுடன் பேட்டி – இதுல செவ் தோஷம் – செவ் தோஷத்துக்கான பரிகாரங்கள்ங்கற வரிசையில போயிட்டிருக்கம்.

இன்னைக்கு செவ் அஞ்சுல நின்னா என்னவிதமான பரிகாரங்கள் செய்யனும்னு சொல்லப்போறேன்.ஆனால் தலைப்பு தான் அச்சாணியமா அமைஞ்சுருச்சு.

அதனால தலைப்பை கொஞ்சம் போல ஜஸ்டிஃபை பண்ணிட்டு பதிவுக்கு போயிரலாம்.

ஜாதக்த்துல மரணத்தை காட்டும் பாவம் ஆயுள் பாவம் (8) . இந்த பாவாதிபதி லக்னாதிபதியை விட பலம் குன்றி 6-12 ல் நின்றால் நல்லதுன்னு சொல்றாய்ங்க.

ஆயுள் ஸ்தானாதிப்தி 6 ல் நின்றால் நோயால் மரணம் ஏற்படும் (கொலை தற்கொலைக்கு சான்ஸில்லாததே ஒரு யோகம்னு நினைச்சுட்டாய்ங்க போல) ,

அதே சமயம் 6 எதிரிகளை காட்டும் இடம்ங்கறதால இங்கே மரணத்த காட்டும் 8 ஆம் பாவாதிபதி நின்றால் எதிரிகள் செத்தே போயிருவாய்ங்க போல. ( தாய்மாமனையும் காட்டுதுங்கோ -அதனால தாய்மாமனுக்கும் ஆப்பு) . கடன் கொடுத்தவுக டிக்கெட் போட்டுரலாம். உங்க மேல வழக்கு போட்டவுக டிக்கெட் போட்டுரலாம். அதேசமயம் கடன் , நோய் ,வழக்க் விவகாரம்லாம் சீக்கிரமே ஒட்டு மொத்தமா முடிஞ்சுரலாம் போல.

ஜாதகனை காட்டும் பாவம் லக்ன பாவம். ஆயுள் ஸ்தானாதிபதி லக்னத்தோடு தொடர்பு கொள்ளாம இருக்கிறது ஆயுளை கூட்டும். தொடர்பு கொண்டால் தற்கொலைக்கு சான்ஸ் இருக்கு.

அவன் புத்தியை காட்டும் பாவம் ஐந்தாம் பாவம் இந்த பாவத்தோடும் ஆயுள் பாவாதிபதி தொடர்பு வச்சுக்காம இருக்கிறது நல்லது. தொடர்பு ஏற்பட்டா தற்கொலைக்கு சான்ஸ் இருக்குங்கோ.. அடுத்து ஆயுள் காரகனாகிய சனியின் நிலையும் தற்கொலைக்கு தூண்டலாம்.

சனி லக்னாத் பாபியா இருந்தா கெடனும். லக்னாத் சுபனா இருந்தா பலம் பெறனும். ஏறுமாறா இருந்தா அல்ப்பாயுசுதேன். இருக்கவேண்டிய இடத்துல இருந்தார்னா சாதாசஞ்சாரம் பெஸ்ட். இருக்ககூடாத இடத்துல இருந்தா வக்ரம் பெஸ்ட். இந்த ஆயுள் காரகன் லக்னம் -அஞ்சு பாவங்களோட தொடர்பு கொண்டா தற்கொலைக்கு சான்ஸ் இருக்கு.

டைட்டில் ஜஸ்டிஃபிகேஷன் ஓகே. பதிவுக்கு போயிரலாம்.

இன்னைக்கு அஞ்சுல செவ் இருந்தா என்ன பரிகாரம்ங்கறதுதான் பதிவு பொருள். இந்த பதிவுக்கும் தற்கொலைக்கும் என்ன சம்பந்தம்னா.. அஞ்சுல செவ் இருந்தா கோபம் சாஸ்தியா இருக்கும். கோபம்னாலே அது ஒரு வகை தற்கொலைதான். இதுல அந்த கோபம் ஒரு எல்லைய தாண்டினா தற்கொலையில கூட முடியலாம்.

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.”

திருவள்ளுவர் என்ன சொல்றாருன்னு பார்த்திங்கல்ல. ” மவனே …ஒன்னை நீ காப்பாத்திக்கனும்னு நினைச்சா கோவம் வராம பார்த்துக்க – இல்லினா அது ஒன்னையே போட்டு தள்ளிரும்”

வெற்றிகரமான தாதாக்களோட கேஸ் ஹிஸ்டரியை பாருங்க. எவன் பயப்படறானோ அவனை மட்டும் பயமுறுத்திக்கிட்டு வாழ்ந்திருப்பான். அங்கே ஒரு சோடா புட்டி -இங்கே ஒரு ஜோல்னா பைய போட்டு தள்ளியிருப்பான் “செல்லாவிடத்து சினம் தீது”

கோவம் எல்லாத்துக்குமே வரும். கோசாரத்துல செவ் கெட்டா கூட கோபம் வருது. ஆனால் ஜாதகத்துலயே செவ் கெட்டிருந்தா..

கோவப்படறது ஒரு கலை. நான் கோவக்காரன்னு அறிமுகப்படுத்திக்கனும் – கோபம் வந்துட்டாப்ல பில்டாப் கொடுக்கனும், ஒரு வேளை கோபமே வந்துட்டாலும் – அதை சானலைஸ் செய்து ஆருக்கு எந்தளவு கோவம் காட்டனும் அவ்வளவே காட்டனும். செவ் தோஷமிருந்தா இந்த பருப்பெல்லாம் மினரல் வாட்டர்ல கூட வேகாது.

கோவம் வர்ஜியா வர்ஜியமில்லாத வரும் . சகட்டு மேனிக்கு வரும் . எப்ப வரும்னே தெரியாது .எவன் மேல வரும்னு தெரியாது. விளைவுகளை அசெஸ் பண்ற நிலையும் இருக்காது.

அஞ்சாமிடத்துல உள்ள செவ் இப்டியெல்லாம் லொள்ளு பண்ணுவாரு. கோபம் வரும் போது ஆயிரம் ஆனை பலம் வந்தாப்ல இருக்கும். அடுத்த நொடி பாடியே துவைச்சு போட்ட பாடி மாதிரி ஆயிரும். கோபத்தின் புற விளைவுகள் கதை அப்பாறம்.

முதற்கண பாடி நாறிரும். கோபத்தை வெளிக்காட்டினா சில நோய்கள், உள்ளே அடக்கிக்கிட்டா வேறு சில நோய்கள். கோவம் வந்தா பதற்றம் வந்துரும். (பதறாத காரியம் சிதறாது -ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு) அஞ்சுல செவ் இருந்தா கோபம் வரும் அவ்ளதானேன்னு நினைச்சுராதிங்க. செவ் காரகமுள்ள எல்லா மேட்டரும் ஊத்திக்கும்.

முக்கியமா அவப்பேர், அமைதியின்மை ,அபார்ஷன், புத்ர நஷ்டம்லாம் கூட நடந்துருங்கோ.. பரிகாரம் சொல்லிரலாம்னு தான் ஆரம்பிச்சேன். பவர் கட் நேரம் நெருங்கிருச்சு (பவர் =செவ்) பரிகாரங்களுக்கு இன்னம் ஒரு நாள் வெய்ட் பண்ணவேண்டியதுதேன்..

உடுங்க ஜூட்டு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s