யாருக்கு வரும் ஹார்ட் அட்டாக்?

Posted on

null

அண்ணே வணக்கம்ணே !

ட்ராக் மாறலிங்ணா.. செவ் தோஷ பரிகாரங்களை தான் தொடரப்போறோம். 4 ஆமிடத்துல செவ் இருந்தா என்ன பரிகாரம்ங்கறதுதான் மேட்டரு. தலைப்பு கொஞ்சம் ஷாக்கிங்கா இருக்கட்டுமேன்னு பார்த்தேன் தட்ஸால்.

அதுக்குன்னு சீயக்காய்த்தூள் பாக்கெட் மேல புலி படத்தை போட்டுட்டு டீல்ல விட்ட மாதிரி இல்லாம கொஞ்சம் கோடியாவது காட்டறேனே.

ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டா இந்த ரிஸ்க் அதிகம்.

பல், நகம்லாம் சூரிய காரகம். ஆருக்கு பல் , நகம் சொத்தையா போகுதோ – அவிக ஜாதகத்துல சூரியன் வீக்குன்னு அருத்தம். (ஒத்தை தலைவலி /இன்சோம்னியா/ஜாய்ன்ட் பெயின் எல்லாம் கூட சூரியன் கெட்டா வர்ர பிரச்சினைகள் தான்)

அடுத்து இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இந்த பிரச்சினை சாஸ்தி . எக்கனாமிக்கல் ப்ளானிங், சிக்கனம்,சேமிப்பு இல்லாமை , டைம் மேனேஜ்மென்ட் இல்லாம இருக்கிறது,ஞா சக்தி குறைவு , அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தா உங்க ஜாதகத்துல குரு லேசா பல்பு வாங்கியிருக்காருன்னு அருத்தம்.

அடுத்து பார்க்கவேண்டியது நான்காமிடம். இதை இதயஸ்தானம்னும் சொல்றாய்ங்க. இந்த இடம் பல்பு வாங்கினா தாய் ,வீடு,வாகனம் ,கல்வில பாதிப்புகள் ஏற்படும்.கடைசி காலத்துல ஹார்ட் அட்டாக்கும் வரலாம்.

சரிங்ணா செவ் 4 ல் இருந்தால் என்ன பரிகாரம்னு பார்த்துரலாமா?

1.லக்ன செவ்வாய்ங்கற தலைப்புல இவர் 4 ஐயும் பார்க்கிறதால என்ன பரிகாரம் செய்துக்கனும்னு விரிவா சொல்லியிருக்கேன். அதை ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

2.சிறப்பா சொல்லனும்னா …….லக்ன செவ் தலைப்புல சொல்லப்பட்ட பரிகாரங்களை உங்க தாயும் செய்துக்கனும்.

3.வீடு மேட்டர்ல தலைவாசல், கதவுகளுக்கு டார்க் ப்ரவுன் நிற பெயிண்ட். வாசப்படியில வேல் பதிக்கிறது,

4.இதயம்னு பார்க்கும் போது அந்த பகுதியில டச் ஆகிறாப்ல வேல் உருவ டாலர். தியானம் பண்ணும் போது முருகன் கை வேல் இதயப்பகுதியில ஜொலிக்கிறதா கற்பனை பண்றது பெஸ்ட்.

5.வாகன மேட்டர்னு வரும் போது டார்க் ப்ரவுன் நிற வாகனத்தை ச்சூஸ் பண்ணுங்க. செகண்ட்ஸ்ல வாங்கறாப்ல இருந்தா போலீஸ்/மிலிட்டரி/ரயில்வே காரவுக கிட்ட வாங்கிக்கங்க நெம்பர் ப்ளேட்ல வேல் ஸ்டிக்கர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போலீஸ் ஸ்டேஷனை ஒட்டின இடத்துல பார்க் பண்ணுங்க.

6.கல்வின்னு பார்க்கும் போது எலக்ட்ரானிக்ஸ் பெஸ்ட் சாய்ஸ். அடுத்து ஜியாக்ரஃபி,மண் தொடர்பானவை பெட்டர்.

7.தாய் வழி உறவுகளொட சாஸ்தியா பூசிக்காதிங்க…..

4 ல் உள்ள செவ் 4-7-8 ஆம் பார்வைகளை கொண்டு 7 -11 – 12 ஆம் இடங்களை பார்த்துருவாரு.

ஏழை பார்த்தா எதிரி குடும்பத்து பெண்ணை மணக்க வேண்டி வரலாம். அல்லது திருமணத்துக்கு பிறகு மனைவி வழி உறவுகள் விரோதமாயிரும்.மனைவியோட முட்டல் மோதல் வந்த்க்கிட்டிருக்கும். கொஞ்சம் கண்ட்ரோல் மிஸ் பண்ணிங்கனா பொஞ்சாதி வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும். அவிகளுக்கு ரத்தம் ,எரிச்சல் ,அதி உஷ்ணம் தொடர்பான வியாதிகள் வரும். அவிகளுக்கு திடீர் மரணம் (விபத்து /தீவிபத்து /ஹார்ட் அட்டாக் ) ஏற்படலாம்.

இதுக்கு பரிகாரம்:

லக்ன செவ்வாய்க்கு சொன்ன பரிகாரங்களை மனைவி செய்துக்கனும்.

11 ஐ பார்த்தால் மூத்த சகோதர சகோதிரிக்கு கஷ்டம் ( நமக்கும் 4 ல் தான் செவ் அண்ணாரு ஹார்ட் அட்டாக்ல பூட்டாரு) .லக்ன செவ்வாய்க்கு சொன்ன பரிகாரங்களை உங்க எல்டர் ப்ரதர் /சிஸ்டர் செய்துக்கறது அவிகளுக்கு நல்லது.

உங்களுக்கு பூமி லாபம் /அ பூமி வித்த காசு லாபம். எதிரிகளே உங்க முன்னேற்றத்துக்கு உதவ வாய்ப்பிருக்கு.

12 ஐ பார்த்தால் சின்ன சின்ன எலக்ட்ரிக் ஷாக்/தீவிபத்து /கூர்மையான ஆயுதங்களால் பிரச்சினை /கொம்புள்ள பிராணிகளால் பிரச்சினை வரலாம்.

12 தூங்கற இடத்தை காட்டும். ராஜீவ் காந்தி செத்து போற தினம் சிகரட்டை சரியா அணைக்காம டஸ்ட் பின்ல போட்டுட்டு அது புகைஞ்சு அது ஒரு கூத்து .ஃபயர் இஞ்சின் வரலை அவ்ளதான்.

போட்டி -எதிர்ப்புகளால் தூண்டப்பட்டு ரியாக்ட் ஆகி செலவுகளை இழுத்து விட்டுவிக்குவிங்க.

நாளைக்கு ஐந்தாமிடத்து செவ்வாயை பார்ப்போம்.

Advertisements

2 thoughts on “யாருக்கு வரும் ஹார்ட் அட்டாக்?

  MARUTHAPPAN said:
  March 1, 2013 at 12:01 am

  செவ்வாய் 3ம் இடத்தில் இருந்தால் என்ன பரிகாரம் என்று சொல்லவில்லை.

   S Murugesan said:
   March 1, 2013 at 5:41 am

   வாங்க மருதப்பன் சார் !
   செவ் 3 ல் இருந்தால் தோஷம் இல்லை. எனவே பரிகாரம் தேவையில்லை.

   ஆனாலும் செவ் 3-6-10-11 ல் இருந்தாலும் ஒரு சில சைட் எஃபெக்ட்ஸ் இருக்கும்.

   இவற்றை தவிர்க்க என்ன விதமான ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கலாம்னு கடைசி பதிவுல சொல்றேனே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s