காசை கரியாக்கும் ஜாதகர்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஆராச்சும் காசு பணத்தை தாராளமா செலவழிச்சா “காசை கரியாக்கிறான்”னு சொல்வாய்ங்க. நெஜமாலுமே காசை கரியாக்கிறவுகன்னா அது செவ்வாயை தனபாவத்தில் கொண்ட ஜாதகர்கள் தான். (செவ் லக்னாத் யோக காரகனாகவோ – சுபனாகவோ இருந்தால் அவிக செலவழிக்கிற வேகத்துக்கு காசு வந்துக்கிட்டே இருக்கும். ஒரு வேளை செவ் லக்னாத் பாபி,மாரகனா இருந்தா ? கதை கந்தலுதேன்)

நவகிரகங்களுடன் பேட்டி தொடர் – செவ் தோஷம்ங்கற வரிசையில இன்னைக்கு செவ் இரண்டாமிடத்தில் உள்ளவர்களுக்கான பரிகாரங்களை இன்னை தரப்போறோம். ஆட்டத்துக்கு ரெடியா?

ஜாதகம் இல்லாதவுக:

ஜாதகம் இல்லாதவுக கீழே தந்திருக்கிற பலனை படிங்க. இது உங்களுக்கு பொருந்தினா உங்க ஜாதகத்துல செவ் 2 ஆமிடத்துல இருக்காரு. கு.ப அவருதேன் தன பாவாதிபதி அல்லது அவரு தனபாவத்தை பார்க்கிறாருன்னு ருசுப்படுத்திக்கலாம். கடைசியில கொடுத்திருக்கிற பரிகாரங்களை ஃபாலோ பண்ணலாம்.பரிகாரங்களை ஆரம்பிச்ச மொத 9 நாட்கள்ள கெட்டபலன் எக்கச்சக்கமா எகிறிச்சுக்குன்னா உங்க அசெஸ்மென்ட் கரெக்ட் – நீங்க ஆரம்பிச்ச பரிகாரம் பலன் கொடுக்க போகுதுன்னு அருத்தம்.

கொஞ்சம் வில் பவரோட பரிகாரத்தை தொடருங்க. நல்ல பலன் கிடைக்கும்.

மொதல்ல பலன்:
இது தனபாவம்ங்கறதால காசை கரியாக்குவாய்ங்க. அதுவும் போட்டி,விவகாரம்,போலீஸ் ஸ்டேஷன்,அடி தடின்னா வெல்லம். மேலும் செவ் காரகம் கொண்ட துறைகளில் நட்டப்படுவாய்ங்க. உ.ம் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,எலக்ட்ரானிக்ஸ். சகோதரர்களோட விவகாரம் இருக்கும்.கொடுக்கல் வாங்கல்ல வில்லங்கம் வரும். யூத்தோட நிறைய சகவாசம் வச்சுப்பாய்ங்க.அவிகளாலயும் ஆப்பு.

இது வாக்குஸ்தாங்கறதால இவிக பேச்சே யுத்தத்துக்கான அழைப்பு போல இருக்கும். வாய்,தொண்டை பகுதிகளில் ரணங்கள் ஏற்படலாம்,

இது குடும்ப ஸ்தானங்கறதால குடும்ப செலவுகள் பிச்சுக்கிட்டு போகும்.விபத்துகள்,ஆப்பரேஷன்ஸுக்கு செலவழிக்க வேண்டி வரலாம். இதனாலயே குடும்பத்துல அடிக்கடி கலகம் ஏற்படலாம். மாமிச பிரியர்களா இருப்பாய்ங்க. இதன் விளைவாக பி.பி,அல்சர்,பைல்ஸ் இத்யாதியும் வரலாம்.

இது நேத்திர ஸ்தானங்கறதால அதி உஷ்ணம் காரணமாய் . கண்கள் சிவந்திருக்கலாம். கண்ணில் அ கண்ணருகி அடிபடலாம்.

எட்டை பார்க்கிறதால:
மேற்படி பிரச்சினைகள் உசுருக்கே உலை வைக்கலாம். அடி தடி கொலையில கூட முடியலாம். சில சமயம் தற்கொலைக்கும் முயற்சிக்கலாம்.

நீங்க ஒரு பெண்ணாக இருந்தால் இது வைதவ்யத்தை கூட தரலாம். கணவரை போட்டு தள்ளிர்ர பெண்கள் ஜாதகத்துல இது போன்ற அமைப்பை பார்த்திருக்கேன். லக்ன செவ்வாய்க்கு செய்துக்க வேண்டிய பரிகாரங்களை உங்க கணவர் செய்வது நல்லது. ராம நாமம் ஜெபிக்க சொல்லுங்க. சனி /செவ் கிழமை ஆஞ்சனேயர் கோவிலுக்கு போக சொல்லுங்க.

நீங்களும் லக்ன செவ்வாய்க்கான பரிகாரங்களை செய்வது நல்லது.

5 ஐ பார்ப்பதால் :
அபார்ஷன்,மிஸ் கேரி, குழந்தைங்க இல்லாம இருக்கிறது ,குழந்தைகளுக்கு புண்,ரணம்,கட்டி ஜாதகருக்கும் வாரிசுகளுக்கும் எதிரிகள் . அதி உஷ்ணம்,மின்சாரம்,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகளால் ஆபத்து. வாரிசுகள் கோபக்காரர்களாக இருக்கலாம்.அவமானங்கள் ஏற்படலாம்.

9 ஐ பார்ப்பதால்:
அப்பாவுக்கு மேற்சொன்ன பிரச்சினைகள் வரலாம். கூசாம சொத்தை அடகு வைப்பாய்ங்க.பாதி விலைக்கும் விப்பாய்ங்க. வித்து வந்த காசையும் கரியாக்கிருவாய்ங்க..

இதுக்கெல்லலாம் என்னதான் பரிகாரம்?

இரண்டில் நின்றமைக்கு:

1.பிரவுன் நிற கூலிங்கிளாஸ் அணியவும்
2.கழுத்தில் செம்பு சங்கிலியில் பன்னிரு கையனின் டாலர் (இதுவும் செம்பா இருந்தா விசேஷம்)
3.முருகனின் மூல மந்திரத்தை வாய் விட்டு சொல்லுங்க
4.ராமாயணம்,பாரத நூல்களில் உள்ள யுத்த காண்டங்களை வாய் விட்டு படிங்க.
5.அக்னி முகமா தொழில் செய்வோருக்கு ( நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு ), மேஜர் ஆப்பரேஷன்,ஆக்சிடென்ட் நடந்தவுகளுக்கு ,தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு , அங்கம் அறுபட்டவர்களுக்கு முடிந்த உதவியை செய்யவும்.
6.முருகன் கோவில்கள், அனாதை குழந்தைகளுக்கு ( சிறார் = செவ்) எரியும் பொருட்களை தானம் செய்யவும்.

5 ஐ பார்ப்பதற்கு:

பன்னிரு கையனின் உருவத்தை தியானிக்கவும் – மார்ஷல் ஆர்ட்ஸ் தொடர்பான நூல்கள் படிக்கவும் -டிவிடி பார்க்கவும்.

சமைக்க கற்றுக்கொள்ளவும் -சமைக்கவும் -முக்கியமாய் மாமிசம் (ஆனா நீங்க சாப்பிடாதிங்க)

குழந்தைகளுக்கு முருகன் தொடர்பான பெயர் வைக்கவும்.

அவர்களை ஸ்போர்ட்ஸ்,மார்ஷல் ஆர்ட்ஸில் ஊக்குவிக்கவும்.

லக்ன செவ்வாய்க்கு சொல்லப்பட்ட பரிகாரங்களை செய்விக்கவும்.

9 ஐ பார்ப்பதற்கு:

முதலீடு ,சேமிப்பு தொடர்பான டாக்குமென்ட்ஸ் வைக்க ப்ரவுன் கலர் ஃபைல்/பேக் உபயோகிக்கவும்.அதில் பன்னிருகையனின் படம் .

தூர பயணம் செல்லும் போது ப்ரவுன் நிறை ஆடை,அணிகலன் அதிகம் உபயோகிக்கவும். தந்தை (இருந்தால்) அவர் லக்ன செவ்வாய்க்கு சொல்லப்பட்ட பரிகாரங்களை ஃபாலோ பண்ணனும்.

அப்பா வழியில் வந்த வீடு ,கடை இருந்தால் அதன் கதவுகளுக்கு ப்ரவுன் கலர் பெய்ண்ட். வாசற்காலில் வேல் உருவம் பதிக்கவும்.

தூர தேச தொடர்புகளுக்கு ப்ரவுன் நிற கவர் /ப்ரவுன் நிறத்தில் அச்சடிக்கப்பட்ட லெட்டர் ஹெட் உபயோகிக்கவும். அதில் பன்னிரு கையன் உருவம் அ வேல் உருவம் அச்சிட்டால் நல்லது.

மெயில் உபயோகிப்பவர்கள் செட்டிங்ஸ்ல போயி ப்ரவுன் நிறத்துக்கு மாறலாம். எழுத்துக்கள் கூட ப்ரவுன் நிறத்தில் இருந்தால் நல்லது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s