செவ் தோஷம் – பரிகாரங்கள்: முன்னுரை 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
செவ்வாய் தோஷத்துக்கான தீர்வுகளை அப்ளை பண்ணனும்னா ஒரு சில பலம்லாம் தேவைன்னு ஒரு பட்டியலை போட்டு அதில் சில விஷயங்களை நேத்து விளக்கியிருந்தேன்.

இன்னைக்கு மொதல்ல பெத்தவுக ஆசி,

பெத்தவுக நாம பெத்ததுங்க நெல்லா இருக்கனும்னு நினைக்கனும். அவிக உசுரோட இருந்தாலும் சரி .டிக்கெட் போட்டிருந்தாலும் சரி. அவிக நெனைக்கனும். அதான் ஆசி.

அவிக அப்படி நினைக்க ..ரெண்டு காரணத்தை சொல்லலாம்.

1.தெரிஞ்சோ தெரியாமயோ ஒரு சில பாவங்கள் செய்து அதுக்கான தண்டனைகளை அனுபவிச்சு -செய்த பாவங்களை உணர்ந்து -பகவானே ! நான் செய்தது என்னோட போவட்டும். என் தப்புக்கு என் பசங்களை தண்டிச்சுராதேங்கற ஸ்டேஜுக்கு வந்திருக்கனும்.

இந்த முதிர்ச்சி -தெளிவு இல்லாம மேலும் மேலும் தப்பு பண்ணிக்கிட்டே போற பார்ட்டிங்க ப்ளெஸ் பண்ணாதான் ரிஸ்க்.

இப்படியா கொத்தவுக கிட்டேருந்து ஏதோ ஒரு காரணத்தை காட்டி கழண்டுக்கறதே பெஸ்டு. அவிக தர்ர பாக்கெட் மணி -ஜாக்கெட் மணிக்கெல்லாம் குட் பை சொல்லிர்ரது நல்லது. (இது அவிகளுக்கும் நல்லதுங்கோ)

2.பழி பாவத்துக்கு அஞ்சி பணம் காசு மேட்டர்ல கோட்டை விட்டு அய்யய்யோ என் பிள்ளைகளுக்குன்னு ஒன்னத்தையும் சேர்த்து வைக்கலியே ..கடவுளே.. நீதான் என் பசங்களை பார்த்துக்கனுங்கற ஸ்டேஜுக்கு வந்திருக்கனும். இந்த கேட்டகிரி பெட்டர். ஆனால் இவிகளை பிரியறதும் ரெம்ப நல்லது. ( அவிகளுக்கும்)

இப்படி ரெண்டுல ஒரு நிலையில பெத்தவுக இருந்தா நிச்சயமா இதான் பெத்தவுக ஆசி. இது இருந்தா செவ் தோஷம் என்ன? ப்ராண கண்டமே இருந்தாலும் டேக்கா கொடுத்துரலாம்.

பெத்தவுக ஆசி இன்னொரு விதமா கூட கிடைக்கும். அவிக இருக்கும் போது அவிக மனசு குளிர்ராப்ல நடந்துக்கறது. அவிக சொல்றது அபத்தமாவே இருந்தாலும் -முட்டாள் தனமா இருந்தாலும் அவிக சொல்லை தட்டாம இருக்கிறது.

உடலோட இருக்கும் போதாச்சும் ஈகோ /ஜெனரேஷன் கேப் எல்லாம் டிஸ்டர்ப் செய்யும். கு.பட்சம் அவிக போன பிறகாவது தங்கள் குத்தம் குறைகளை தெரிஞ்சுக்கிட்டு யப்பா -யம்மா நான் அப்படி செய்திருக்கப்படாது.செய்துட்டேன். இப்பம் நீங்க தெய்வமாயிட்டிங்க. தெய்வத்துக்கு ஏது கோபம் கீபம்லாம் என்னை மன்னிச்சிருங்க. நான் நல்ல வழி காண உதவுங்கன்னு சின்சியரா ப்ரே பண்றது மூலமாவும் அவிக ஆசியை பெறலாம்.

இன்னாடாது நம்ம சீனா மூனா கூட இப்படி மொக்கை போட ஆரம்பிச்சுட்டாருன்னு நினைப்பிங்க. நானும் பல காலம் இதையெல்லாம் நெக்லெக்ட் பண்ண பார்ட்டிதான். ஆனால் நாம நம்ம அனுபவத்துக்கு ( மட்டும்) அடிபணியற பார்ட்டியாச்சே. அதனாலதேன் இந்த மொக்கை.

அடுத்து குரு மார் ஆசி ,குலதெய்வத்தோட துணை , பிதுர்களுடைய துணையும் கட்டாயம் தேவை. இல்லின்னா நாம சொல்ற பரிகாரங்களை ப்ரிண்ட் அவுட் எடுக்க போனா பவர் கட் ஆயிரும். இன்வெர்ட்டர் இருந்தா காயிதம் ப்ரிண்டர்ல சிக்கிக்கும். இதுல எங்கருந்து பரிகாரங்களை செய்யறது.

அடுத்து நூஸ்ஃபியர் இது எண்ணங்களால் ஆனது .( உங்கள் -உங்களை சேர்ந்தவர்கள் ) இதுவும் பெட்டரா இருக்கனும். இல்லின்னா பாதி கிணறு தாண்டின கதையாயிரும்.

கிரக தோஷத்தை ஃபேஸ் பண்றதை விட பரிகாரம் செய்றது பல மடங்கு ஆபத்தான மேட்டருன்னு அடிக்கடி சொல்லியிருக்கேன். ஞா இருக்கில்லை. பரிகாரம்லாம் செய்யனும்னா ஸ்ட்ராங் வில் இருக்கனும். அது இல்லின்னா முதலுக்கே மோசமாயிரும். டேக் கேர்.

நாளைக்கு செவ் தோசத்துக்கான அக்மார்க் பரிகாரங்களை pont to pont ஆடியோ ஃபைலா போடப்போறேன். சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிருங்க..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s