எங்கும் எதிலும் வெற்றிக்கு குறுக்கு வழி

Posted on

அண்ணே வணக்கம்ணே !

செவ்வாயை வச்சு இத்தீனி நாளு பயம் காட்டியாச்சு. இன்னைக்காச்சும் செவ் தோஷத்துக்கான தீர்வுகளை கொடுக்கலின்னா நீங்க ரெம்ப கடுப்பாயிருவிங்க. அதனால இன்று முதல் தீர்வுகள்.

எந்த ஒரு காரியத்தை சாதிக்கனும்னாலும் கிருக பலம்,கிரக பலம் , தெய்வ பலம் , பூர்வ புண்ணியபலம்,பெத்தவுக ஆசி, குரு மார் ஆசி ,குலதெய்வத்தோட துணை , பிதுர்களுடைய துணை , நூஸ்ஃபியர் ( நம்+ நம்மை சுற்றி உள்ளவர்களின் எண்ணங்களால் ஏற்படும் சூழல்) இப்படி பல விஷயங்கள் தேவைப்படுது.

ஜஸ்ட் செவ் தோஷத்துக்கான தீர்வுகளை தெரிஞ்சுக்கிட்டு ஃபாலோ பண்ணி ரிலீஃப் பெறுவதற்கு மட்டுமல்ல எந்த காரியமானாலும் – அதை சாதிக்க இதெல்லாம் தேவைப்படுது. மொதல்ல இந்த மேட்டரை எல்லாம் செட் ரைட் பண்ணிக்கங்க அப்பத்தேன் தீர்வுகளை ஃபாலோ பண்ண முடியும் பலன் பெற முடியும்.

கிருக பலம்:

கிருகம்னா வீடு . உங்க வீட்டுக்கான வாஸ்து உங்க காரியத்துக்கு அனுகூலமா இருக்கனும்.ஆக்னேயத்துல வெட்டு, ட்ரெய்ன் பைப்பு வச்சுக்கிட்டு வீட்டு பெண்களை கரை தேத்தறேன்னு இறங்கப்படாது, நைருதியில,ஜூனு , பள்ளத்தை வச்சுக்கிட்டு தலீவனாகனும்னு அலையப்படாது. , வாயு மூலையில சமையலறைய வச்சுக்கிட்டு சிக்ஸ் பேக்குக்கு ட்ரை பண்ணப்படாது,

ஈசான்யத்துல மாடிப்படி, செப்டிக் டாங்கை வச்சுக்கிட்டு பண வேட்டைய துவங்க கூடாது. தெற்கு திசையில ,காலியிடம் ,தெருவை வச்சுக்கிட்டு ஊர்பஞ்சாயத்துக்கு போகப்படாது ,மேற்கு திசையில காலியிடம் தெருவை வச்சுக்கிட்டு பொஞ்சாதியை அடக்கி காட்டறேன்னு கோதாவுல இறங்கப்படாது. வடக்கு ,கிழக்கு திசையில மேடு , மாடிப்பபடிகளை வச்சுக்கிட்டு கொடுக்கல் வாங்கல் செய்யப்படாது.

ஆக காரிய ஜெயத்துக்கு கிருக பலமும் முக்கியம். அதுவும் இந்த செவ் தொடர்பான பரிகாரங்களை செய்ய தெற்கு திசை கரீட்டா இருக்கனும். ஆக்னேயம் பக்காவா இருக்கோனம்.

கிரகபலம்:

ஜாதகத்துல செவ் கெட்டிருந்தாலும் பரிகாரத்தை துவங்கற சமயம் செவ் கோசாரத்துலயாச்சும் 10,11 ல இருக்கிறாப்ல ப்ளான் பண்ணிக்கனும். இந்த 3 மாசம் ஆன்டிசிபேட்டரி பெயில் கையில இருக்கிறாப்ல கணக்கு. இந்த நேரத்துலயே சாட்சிகளை கலைக்க பார்க்கனும்.

ஐ மீன் அடிச்சு பிடிச்சு பரிகாரங்களை செய்துரனும். (இப்பத்தேன் செய்ய முடியும்) இப்படி செய்துட்டிங்கனா 61 ஆவது நாள்ளருந்து நடக்கவேண்டிய தீய பலன் எந்தளவுக்கு குறையுதுன்னு அசெஸ் பண்ணிக்கிட்டு பரிகாரத்தோட டோசேஜை கூட்டறதா குறைக்கிற்தான்னும் டிசைட் பண்ணலாம்.

தெய்வ பலம்:

தெய்வ பலத்தை பெற ஒரே வழி அவரோட ஒர்க் ப்ரஷரை குறைக்கிறது. அவருக்கு ரெண்டு வேலைகள் இருக்கு. 1. நல்லவுகளை காப்பாத்தறது 2. கெட்டவுகளை அழிக்கிறது. ( சிஷ்ட ரக்ஷணம்,துஷ்ட சிக்ஷணம்) கெட்டவுக ஜோலிக்கு போனா நம்ம ஜோலியை முடிச்சுருவானுவ. அதனால நல்லவுகளை காப்பாத்தற வேலையில நாமளும் பங்கெடுத்துக்கலாம்.

உ.ம் நல்லவுக சோத்துக்கில்லாம இருந்தா ஒரு வேளை சோறு போடலாம்,கட்டத்துணியில்லாம இருந்தா ஒரு வேட்டி துண்டு வாங்கி கொடுக்கலாம். மானவ சேவா மாதவ சேவா , ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா.

இருக்கிற பிரச்சினைகள் கழுத்தை நெறிச்சுக்கிட்டு இருந்தாலும் இதையெல்லாம் செய்துக்கிட்டே கட்வுள் கிட்டே “யப்பா.. இத்தனை லொள்லுலயும் சின்சியரா இதையெல்லாம் செய்றேன் பார்த்தியா ..எனக்கு கொஞ்சம் ரிலீஃப் கொடு இன்னம் பெட்டரா செய்யறேன்னு ” பேரம் பேசலாம்.

பூர்வ புண்ணியபலம்:

இது இருக்கா இல்லியான்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள். உங்க வம்ச விருட்சத்தை ஒரு தாட்டி திரும்பி பாருங்க.

ஆருக்கும் ஒன்னுக்கு ரெண்டு கண்ணாலம் நடக்கலை, ஆரும் அகால மரணம் ,துர்மரணத்துக்கு ஆளாகலை, அல்லாருக்கும் காலாகாலத்துல கண்ணாலம் நடந்து அல்லாருக்கும் வாரிசு /அதுவும் ஆண் வாரிசு இருக்குன்னு வைங்க உங்களுக்கு பூர்வபுண்ணியம் இருக்குன்னு அருத்தம்.

நிலைமை இதுக்கு உல்டாவா இருந்தா கருமத்தை தொலைக்க கோதாவுல இறங்கிர வேண்டியதுதான். எதையாச்சும் தேவையுள்ளவனுக்கு, அதை வாங்கற சக்தி இல்லாதவனுக்கு இலவசமா கொடுத்தா கருமம் தொலையும், எதையாவது இலவசமா வாங்கினா கருமம் கூடும். இதான் சூட்சுமம்.

ஓட்டை விழுந்த படகுல இருந்து எவ்ள அவசரமா லக்கேஜை ஆத்துல வீசுவாய்ங்களோ அவ்ள வேகமா தொலைச்சுரனும்.

பெத்தவுக ஆசி, குரு மார் ஆசி ,குலதெய்வத்தோட துணை , பிதுர்களுடைய துணை , நூஸ்ஃபியர் இந்த மேட்டரை பத்தி எல்லாம் நாளைக்கு சொல்றேனே..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s