செவ்வாய்க்கு ஏன் இந்த முக்கியத்துவம் : 3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கடந்த 2 நாட்களாக செவ்வாய்க்கு ஏன் இந்த முக்கியத்துவம்னு சொல்லிக்கிட்டு வரேன். செவ் பலமில்லாதவுகளால – செவ் பலமில்லாதவுகளுக்கு என்னென்ன இம்சை எல்லாம் ஏற்படுதுன்னு சொல்லிக்கிட்டு வரேனில்லையா. அதுல மிச்சம் மீதிய இன்னைக்கு பைசல் பண்ணிருவம். அதுக்கு பிறவு தீர்வுகளை பார்ப்போம்.

கூலிப்படைகள்:
செவ் அக்னிதத்துவ ராசி. அக்னியோட இயல்பு மேனோக்கி பாயறது. ஒரு தீப்பந்தத்தை தலைகீழா பிடிச்சாலும் ஜுவாலை மேல் நோக்கி தான் திரும்பும்.

செவ் பலம் உள்ளவன் மைண்ட்ல ஒரு நம்பிக்கை இருக்கும். பொறுமை இருக்கும். என்னைக்கோ ஒரு நாள் மேலுக்கு வந்துருவம்ங்கற உள்ளுணர்வு இருக்கும். அதனால அவன் லீகல் மெத்தட்ஸ்ல ,மோரலோட மேலுக்கு வர பார்ப்பான்.

ஆனால் செவ் பலமில்லாதவனுக்கு மைண்ட்ல அவ நம்பிக்கை இருக்கும். தாழ்வு மனப்பான்மை இருக்கும். நாம ஏமாந்தா தரையோட தரையா தேச்சு அரக்கிருவானுவங்கற பதட்டம் இருக்கும். இப்ப விட்டா எப்பவும் மேலுக்கு வரமுடியாதுங்கற பரபரப்பு இருக்கும்.

இப்படியா கொத்தவுக தான் இல்லீகல் மெத்தட்ஸுக்கு டைவர்ட் ஆயிர்ராய்ங்க. மொதல்ல அவனை இவனை வெட்டுவான்.ஆனால் இது இவன் வெட்டப்படறதுக்கு காரணத்தை உருவாக்கத்தேங்கறது அவனுக்கு தெரியாதுல்ல.

மேலும் செவ் கௌமார தசைக்கு காரகன்.அதாவது இளமை காலத்தை ரெம்ப எஃபெக்ட் பண்ணுவார். இன்னைக்கு கூலிப்படையில உள்ளவுக மெஜாரிட்டி மீசை கூட சரியா முளைக்காதவுக தான்.

ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு:
செவ் ரத்தத்துக்கு காரகன்.செவ் கெட்டா ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு வர்ரதெல்லாம் சகஜமப்பா.. இதையெல்லாம் கண்டுக்காம விட்டுட்டா இதய நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக்ல முடியவும் வாய்ப்பிருக்கு.

மூலம்:
உராய்வின் போது / இயக்கத்தின் போது வெப்பம் உண்டாகும் இது பொதுவிதி. நம்ம பாடியிலயும் எத்தனையோ இயக்கங்கள் அதனால வெப்பம் ஏற்படுது. கொழுப்பு எரிக்கப்படுவதால் வெப்பம் ஏற்படுகிறதுங்கறாய்ங்க.

ஹ்யூமன் பாடி ஒரு அற்புதமான தானியங்கி இயந்திரம். உடல் வெப்பம் அதிகரிக்கும் போது அதை குறைப்பதற்கான ஏற்பாடு பாடியில இருக்கு.. இல்லேங்கலை. ஆனால் இதையும் மீறி வெப்பம் அதிகரிக்கும் போது ………?

உணவுகளில் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளும் உண்டு.வெப்பத்தை தணிக்கும் உணவுகளும் உண்டு. பாடியிலயும் ஹீட்டு ,கூல் உண்டு.

இது மட்டுமில்லிங்ணா உணர்வுகளுக்கும் பாடியோட டெம்பரேச்சரை பாதிக்கிற நேச்சர் உண்டு. முக்கியமா கோபம் அதிகரிக்கும் போது டெம்பரேச்சர் எகிறிக்கும். ( நமக்குன்னா கீழ இருந்து மேல வரை காய்ஞ்சுரும். கண்ணெல்லாம் பொங்கும். ) இன்னொரு சந்தர்ப்பத்துலயும் எகிறிக்கும்.அது என்னனு சனத்துக்கு தெரியும்.
அந்த மேட்டர்ல க்ளைமேக்ஸ்ல இரட்டிப்பா கூல் ஆயிரும். நோ ப்ராப்ளம்.

அல்லாபத்தியில சூடு,சீதளம்லாம் இல்லைம்பாய்ங்க. இதுக்கெல்லாம் கண்ணதாசன் ஏற்கெனவே பதில் சொல்லியாச்சு. அதனால நாம அம்பேல்.

சாதாரணமா செவ் பலமில்லாத ஜாதகர்கள் அவசரக்குடுக்கைகளா இருப்பாய்ங்க. இது அவிக உணவெடுக்கும் முறையிலும் பிரதிபலிக்கும். லபக்கு லபக்குன்னு விழுங்கிருவாய்ங்க. ( நொறுங்க தின்றால் நூறு வயது)

நொறுங்க தின்னாலுமே வவுத்து பகுதியில வெப்பம் உருவாகும். இதுல அள்ளி தின்னா எந்த அளவு உருவாகும்?

மேலும் இவிகளுக்கு வன்முறையில விருப்பம் இருக்கும். இது மாமிச உணவுகளின் மீது விருப்பமாக வெளிப்படும். கோழி ,ஆடுல்லாம் ஹீட்.

பூமிக்கடியில விளையற பொருட்கள் உடல் உஷ்ணத்தை எகிறச்செய்யும். செவ் பூமிகாரகனில்லையா.. அதனால செவ் பலமில்லாத ஜாதகர்கள் தங்களில் இல்லாத தாதுக்கள் கிடைக்கும்ங்கற உள்ளுணர்வுல இந்த உணவுகளை அதிகம் சுவைக்கலாம்.

இது போன்ற பல காரணங்களால் மூலம் (பைல்ஸ்) ஏற்பட வாய்ப்பிருக்கு.

கருக்கலைப்பு -கருச்சிதைவு:

கரு கலையவோ ,சிதையவோ மெடிக்கலா பல காரணங்கள் இருக்கலாம். அந்த காரணங்களுக்கு பிள்ளையார் சுழி போடறதென்னவோ செவ்வாய் பலமின்மையால் ஏற்படும் ரத்த சோகை , ரத்த கொதிப்பு, அதி உஷ்ணம் , கோபம் , அதி .. காரம் ( அதாங்க காரம் அதிகமா சேர்த்துக்கறது)

கணவன் மனைவி இடையிலான விவகாரங்கள் கொலையில் முடிவது:

செவ்வாய் மட்டுமில்ல மற்ற எட்டு கிரகங்களும் கூட கணவன் மனைவி இடையில பிரச்சினைகளை உருவாக்கலாம். கொலை ரேஞ்சுக்கு கொண்டு போறது மட்டும் செவ்வாய் தான். (கமுக்கமா விசம் வச்சு காரியத்தை முடிக்கறதுல ராகு -கேதுக்கள் பெசலிஸ்டுங்க )

அது ஏன்?

சூரியன்னா ஈகோ. மனைவி உங்க ஈகோவை சீண்டறாய்ங்கன்னா நீங்க அவிக ஈகோவை சீண்டலாம். சந்திரன்னா மனம் . மனைவி உங்க மனசை நோகடிச்சா நீங்க அவிக மனசை நோகடிக்கலாம். Tit for Tat !

ஆனால் செவ்வாயை பொருத்தவரை ஒரு வித்த போரை துவக்கி வச்சுருவாரு. (யுத்தகாரகன்) இத்தனாம்பெரிய தொடரை செவ் பத்து எளுதிக்கிட்டிருக்கம் . ஸ்போர்ட்ஸுக்கும் செவ் தான் காரகன்னு சொன்னேனா இல்லையா தெரியலை.

மொத உலக யுத்தம் ஆரம்பிக்க ஒலிம்பிக்சை பார்க்க போன ஆஸ்திரிய இளவரசர் கொல்லப்பட்டதுதான். விளையாட்டே யுத்தத்துல முடியறப்போ .. யுத்தம் கொலையில முடியறதெல்லாம் சகஜமப்பா.

ஒரு ஆண் பெண் செக்ஸ்ல ஈடுபடறாய்ங்கன்னா ஒருத்தர் மேல அடுத்தவருக்கு கொலை வெறி இருக்குன்னு அருத்தம். ஸ்தூலமா நடக்கிறது உடலுறவுன்னாலும் – சைக்கலாஜிக்கலா நடக்கிறதென்னவோ கொலை தான்.

உடலுறவு ஆழமானதாக – இருவரும் சம காலத்தில் உச்சம் பெறுவதாக அமைந்துவிட்டால் கொலை உடலுறவிலேயே அரங்கேறிவிடும்.பிரச்சினையே இருக்காது.

ரத்தம் கெட்டு இருப்பதாலோ -உஷ்ண கோளாறுகளாலோ உடலுறவில் சிக்கல் ஏற்பட்டு அரைகுறையாக முடிந்தால் கொலை வெறி மிச்சமிருக்கும். யுத்தம் துவங்கிரும். யுத்தம் கொலையில் முடியும்.

உடலுறவும் ஒரு யுத்தம் தான்:

யுத்தத்துல எப்படி வியூகங்கள் இருக்குமோ உடலுறவிலும் வியூகங்கள் உண்டு. முதலில் கண்களால் , உடல் வெப்பத்தால் , பேச்சால் துவக்கபப்டனும்.

பிறகு லேசான தொடுகை ,தடவல்,உரசல் , முற்றுக்கை , கோட்டை கதவை உடைத்தல் ,படை உட்புகுதல் இப்படி எல்லாமே ஒரு யுத்தம் போல தான் நடக்கனும். ஒரு வியூகப்படி நடக்கனும்.

செவ் பலமில்லாத ஜாதகர் என்னத்தை கிழிக்க முடியும்?

எனவே உடலுறவில் கொலை வெறி ,வன்முறை தாகம்லாம் தீரவே தீராது. குடும்ப வாழ்வில் வெடிக்கும்.

கள்ள தொடர்புகள் காரணமாய் கொலைகள்:

ஒரு கணவன் -மனைவி – அவிகளுக்கு இடையில “எல்லாம்” பர்ஃபெக்டா நடக்குதுன்னு வைங்க . எல்லாம்னா உடலுறவு – உட்பட.

அந்த கணவனோ மனைவியோ இன்னொரு உறவை தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை. அட .. அப்படியே தேடிப்போறாருன்னு வைங்க.

அடுத்தவருடைய உணர்ச்சி எப்படி இருக்கும்? கோபம் வருமா? ஊஹூம்.. எல்லாம் பர்ஃபெக்டா தானே இருந்தது .ஏன் இப்படிங்கற கழிவிரக்கம்தான் தோணும். ச்சீன்னு ஆயிரும்.

இதே மேற்படி சோடியின் இடையில் எதுவுமே பர்ஃபெக்டா நடக்கலை. முக்கியமா தாம்பத்யத்துல குறை இருக்கு. இன்னொரு தொடர்பை தேடிப்போறாய்ங்கன்னா என்னா ஆகும்?

இருட்டுல நடந்த/ நடக்காத மேட்டரை வெளிச்சத்துக்கு கொண்டுவர்ரியாங்கற ஆத்திரம் பிறக்கும். இது ஏறக்குறைய கொலை. கொலைக்கு ரியாக்சன் என்ன ? கொலை தானே..

ஓகே ஓகே… நாளைக்கு இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வுன்னு பார்த்துட்டு நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல ராகு -கேதுக்களை பற்றி பார்க்க ஆரம்பிச்சுரலாம். உடுங்க ஜூட்டு..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s