செவ்வாய்க்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்: 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல செவ்வாய்க்கு ஏன் இந்த முக்கியத்துவம்னு நேத்திக்கு சில விஷயங்களை சொன்னேன்.

நவகிரகங்கள் இருந்தாலும் செவ் ஒருத்தரை சாலாக்கா டேக்கிள் பண்ணிக்கிட்டம்னா ஒட்டு மொத்த உலக போக்கே மாறிரும். ஏன்னா அவருதேன் கமாண்டர் ஆஃப் தி ப்ளேனட்ஸ். நம்ம நாட்ல முப்படைகளுக்கு தலீவரு ஆரு தெரீமா? சனாதிபதி.

இன்னைக்கிருக்கிற சனாதிபதி ஃபோர்ஜரி பண்ணவரு – இதுக்கு மிந்தி இருந்த சனாதிபதி டிஃபால்ட்டர் எல்லாம் நம்ம தலை எழுத்து. யுத்தம்னு வந்தா தலீவரு கை.எ போடறதோட சரி. யுத்தத்தை நடத்தறது ஆரு? கமாண்டர் தானே.

அதனால செவ் மேட்டர்ல ரெம்ப அலார்ட்டா இருக்கனும். இந்த செவ் மட்டும் சுக்கிரனை போல மாசத்துக்கு 9 மாசம் அனுகூலமா இருக்கிறாப்ல இருந்தா எவ்ளோ நெல்லாருக்கும். நாம சோசியம் சொல்ல வந்த புதுசுல தோஷ ஜாதகம்லாம் ரேர் ஆ வரும். இப்பம் சுத்த ஜாதகங்கள் தான் ரேரா வருது.

என்னடா மேட்டருன்னா தனிக்குடித்தனம் – நல்லது கெட்டது சொல்ல பெரியவுக கிடையாது. மூடு கிளம்பினா ஒடனே கதவை தாள் போட்டு -ஷோ போட்டுர்ராய்ங்க. பிறக்கறதுங்க இந்த மாதிரி குண்டக்க மண்டக்க ஜாதகத்துல பிறந்துருதுங்க. மேலும் பிறப்பு விகிதம் எகிறிருச்சு. (செகண்டுக்கு ஒரு கொளந்தையாமே ) இறப்பு விகிதம் குறைஞ்சுருச்சு..

இதுக்கெல்லாம் தீர்வே இல்லியா? மதத்தின் பேரால -சாதியின் பேரால வெட்டிக்கிட்டு சாகவேண்டியதுதானா? நோ.. இதை சொல்ல சீனா மூனா தேவையில்லை. நாம அல்ட்டிமேட் சொல்யூஷன் தருவமில்லை.

இன்னைக்கு செவ் கெட்டால் ஏற்படக்கூடிய விபரீதங்களை தொடர்ந்து பார்ப்போம். சொல்யூஷன் இந்த பட்டியல் முடிஞ்ச பிறவு .

குரூர மிருகங்களின் சஞ்சாரம்:

காட்ல இருக்கவேண்டிய மிருகங்கள் நாட்டுக்குள்ள வர என்ன காரணம்? ஒரு காலத்துல பசுமை புரட்சின்னு காடுகளை எல்லாம் விளை நிலமாக்கினாய்ங்க. இன்னைக்கு ரியல் எஸ்டேட் பூம்னுட்டு விளை நிலங்களை எல்லாம் வீட்டு மனைகளாக்கிக்கிட்டு வர்ராய்ங்க. காட்டுக்குள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மிருகங்கள் நாட்டுக்குள்ள சஞ்சரிக்க வேண்டியதாயிருச்சு. திருமலை பாலாஜி நகர்ல சிறுத்தை குட்டிகள் கேட் வாக் நடத்தினதை மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.

பெண்ணாசை ,மண்ணாசை,பொன்னாசைகள் காரணமா சனம் பெருத்து போச்சு – வாழ்விடங்கள் அதிகரிச்சுருச்சு,காடுகள் காணாம போயிருச்சு. ஏற்கெனவே சொன்ன பாய்ண்டுதான் .மறந்திருப்பிங்க.

செவ் கெட்டா ரத்தம் கெடும். ரத்தம் கெட்டா ஆண்மை குறையும். ஆண்மை குறைஞ்சா மன்சன் செக்ஸுக்கு மாற்றான பணத்துக்கு டைவர்ட் ஆயிர்ரான். ஈசியா பணம் கிடைக்குதுங்கறதுக்காவ ரியல் எஸ்டேட்.

செக்ஸ் மூலமா பரவ வேண்டியவன் நிலம் ,வீட்டு மனைகள் மூலமா பரவ தவிக்கிறான்.ரியல் எஸ்டேட். செக்ஸ் மூலமா குழந்தைய உருவாக்க வேண்டியவன் வீட்டை உருவாக்கறான். சோனிகளுக்கு ஈகோ அதிகமா இருக்கிறதை பார்த்திருப்பிங்க.

ஒரே ஒரு டிச்சி,கொடக்கான் குடுத்தா போதும் பேதியாயிரும்.ஆனால் பேச்சு மட்டும் கிழியும். இந்தமாதிரி கிராக்கிங்க ஈகோ காரணமா படைப்புடனான “லிங்க்” தொலைஞ்சு போயி இன் செக்யூரிட்டிக்குள்ளாகி எலி வளைன்னாலும் தனி வளைன்னு தத்துவம் பேசி -செயலாக்க சிங்கம் புலியெல்லாம் ஊருக்குள்ள வர ஆரம்பிச்சுருச்சு.

மின் கசிவு:
மின்சாரத்துக்கு காரகன் செவ். என் வீட்டுக்கு ஒய்ரிங் பண்றேன்னா எனக்கும் செவ் பலம் இருக்கனும்.ஒய்ரிங் பண்ற எலக்ட் ரீஷியனுக்கும் செவ் பலம் இருக்கனும். மின் பொருட்களை தயாரிப்பவனுக்கு செவ் பலமிருக்கனும். இதுல ஒருத்தருக்கு செவ் பலம் இல்லின்னாலும் மின் கசிவு கியாரண்டி.

செவ் பலமில்லாதவன் தான் செவ் காரகமுள்ள விஷயங்கள்ல லாப மீட்டனும்னு துடிப்பான்.
( இயற்கையான் உடல் வாசம் இல்லாதவர்கள் பாடி ஸ்ப்ரேவை விரும்பறாபல) லாப மீட்டனும் -செலவை குறைக்கனும்னு தரமில்லாத ரா மெட்டீரியல்ஸ் உபயோகிச்சா ப்ராடக்ட் கோவிந்தா – அதிக கமிஷன் கிடைக்கும்னு அதை வாங்கினா பர்ஃபெக்சன் கோவிந்தா. பர்ஃபெக்சன் போச்சுன்னா மின் கசிவு ,தீவிபத்து .

மின் பற்றாக்குறை:

ஆளுவோர் ,அதிகாரிகள் முதற்கொண்டு அதை கன்ஸ்யூம் பண்ற நாம வரை எல்லாருக்கும் செவ் பலம் இருக்கனும் இல்லின்னா மின் பற்றாக்குறை கட்டாயம். தமிழ் நாட்டை பொருத்தவரை அம்மா ஜாதகத்துல செவ் ரெண்டிலருந்து எட்டை பார்க்கிறாரு. எப்படி விளங்கும்?

வியூகம் வகுக்க செவ் பலம் அத்யாவசியம். மின் பற்றாக்குறைன்னே இல்லை எந்த பிரச்சினைய தீர்க்கனும்னாலும் ஒரு வியூகம் இருக்கனும். வாடகை கொலையாளிகள் பாஷையில சொன்னா ஸ்கெட்ச் இருக்கனும்.

அது இல்லின்னா எல்லாமே பற்றாக்குறைதான்.

மின் வினியோகத்தில் லைன் லாஸ்:
கடந்த பத்தியிலயே இதுக்கான விளக்கம் அடங்கிருச்சு.ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு..உபரியா சொல்லனும்னா செவ்வாய்க்குரிய உலோகம் செம்பு. மின் வினியோகத்துக்கு செம்பை உபயோகிச்சா கண்டக்டிவிட்டி பெட்டரா இருக்கும். லைன் லாஸ் குறையும். செய்றது ஆரு?

செவ் பலம் புஷ்கலமா இருந்தா செவ் காரகமான மின்சாரம் வீணா போறதை அனுமதிக்கமாட்டாய்ங்க. முக்கிய்மா செவ் என்றால் மாத்ரு பூமி. அன்னை பூமின்னு வசனம் பேசறானுவளே கண்டி ஒரு புல்லை கூட பிடுங்கமாட்டேங்கிறாய்ங்க. செவ் பலம் இல்லாதவர்கள் தலைமை வகிச்சா இந்த கதிதேன்.

லைன் லாசை குறைச்சா நிலக்கரி இறக்குமதி தேவையில்லை .அன்னிய செலவாணி கை இருப்பு கூடும். . இதனால மின் பற்றாக்குறை குறைஞ்சா தொழில் வளர்ச்சி பெட்டராகும் .அன்னிய செலாவணி வரத்து அதிகரிக்கும்.

முக்கியமா அவனவன் வேலை வெட்டி பார்த்துக்கிட்டிருந்தா வன்முறை குறையும் .ரத்தசேதம் குறையும்.

சாலை விபத்துகள்:
செவ் =ரத்தம் , ராகு =ஆல்கஹால். செவ் ராகு சேர்க்கை ஏற்பட்டா செவ்வாயின் பலத்தை ராகு சக் பண்ணி எடுத்துருவாரு. அதே போல ரத்தத்துல கலந்த ஆல்க்கஹால் ரத்தத்தை நாறடிச்சுருது.கை,கால்களை கட்டுப்படுத்தற சிறு மூளையை (ஒட்டு மொத்த மூளையையும் தான்) பாதிச்சு சரியான நேரத்துல செயல்பட முடியாம செய்து விபத்துக்களை உண்டாக்குது.

ஜாதகத்துல செவ் கெட்டிருக்கிறவுகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் மறுக்கப்படனும். லைசென்ஸ் பெற்றவர்களும் கோசாரத்துல செவ் கெட்டிருக்கிற சமயம் -கு.ப மிருகசீர்ஷம் ,சித்திரை ,அவிட்டம் போன்ற செவ் குரிய நட்சத்திரங்கள்ல வாலண்டியரா டிரைவ் பண்ணாம இருக்கனும். இந்த சின்ன மேட்டரை ஃபாலோ பண்ணாலே எத்தனையோ விபத்துகளை தவிர்க்கலாம்.

இன்னம் எட்டு மேட்டர் இருக்கு. இதையும் பைசல் பண்ணிட்டு தீர்வுகளுக்கு போகலாம். உடுங்க ஜூட்டு.
அதுவரை கீழ் காணும் அம்சங்களுக்கும் செவ்வாய்க்கு என்ன தொடர்புன்னு ரோசிச்சி வைங்க.வரேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s