என்கவுண்டர் -லாக் அப் டெத் : ஒரு ஜோதிட பார்வை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டிங்கற தொடர் செவ்வாய் விஷயத்துலயே ஏன் இப்படி நொண்டியடிக்குதுன்னு ஒரு சலிப்பே கூட வந்திருக்கலாம்.

இன்னைக்கு நாட்டு நடப்பை பார்க்கும் போது ………….எங்கே பார்த்தாலும் .. என்னைக்கு பார்த்தாலும் …..யாரை பார்த்தாலும்

என் கவுண்டர்:

லாக் அப் டெத்:

தீவிபத்து:

தீக்குளிப்பு:

தேச துரோகம்:

நில அபகரிப்பு:

குரூர மிருகங்களின் சஞ்சாரம்:

மின் கசிவு:

மின் பற்றாக்குறை:

மின் வினியோகத்தில் லைன் லாஸ்:

சாலை விபத்துகள்:

கூலிப்படைகள்:

ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு:

மூலம்:

இதய நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக்:

கருக்கலைப்பு -கருச்சிதைவு:

கணவன் மனைவி இடையிலான விவகாரங்கள் கொலையில் முடிவது:

கள்ள தொடர்புகள் காரணமாய் கொலைகள்:

பட்டாசு தயாரிப்பில் விபத்துகள்:

இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு? எந்த நஷ்டமானாலும் ஈடு கட்டிரலாம். உசுரு போயிருச்சுன்னா? மேற்படி பட்டியல்ல உள்ள அம்சங்கள் எல்லாம் செவ் பிரதிகூலமா இருக்கிறவுகளுக்குத்தான் – செவ் பிரதிகூலமா இருக்கிற காலகட்டத்துல தான் நடக்கும். பின்னே இதையெல்லாம் தவிர்க்கவே முடியாதா?

கருவில இருக்கும் போது போடற தடுப்பூசிகள்ளருந்து – பொது வினியோகத்துல இருந்து -இலவச கல்வியிலருந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாடு எவ்ளோ செலவழிக்குது? ஒரு குடிமகன் செத்துப்போயிட்டா எவ்ளோ நஷ்டம்>

செத்தது ஒரு குடும்பத்தலைவனா இருந்தா அவனோட மனைவியோட கதி என்ன? அந்த குடும்பத்தோட கதி என்ன? செத்தது ஒரு பெண்ணா இருந்தா (அட ஹவுஸ் வைஃபாவே இருந்தாலும்) அந்த குடும்பத்துக்கு புதுசா ஒருத்தி வருவா.. வந்தவ நல்லவளா இருந்தா சரி இல்லின்னா அந்த குடும்பத்து குழந்தைகளோட கதி என்ன?

இதையெல்லாம் யோசிச்சுத்தான் செவ்வாய் செவ்வாய்னு புலம்பிக்கிட்டிருக்கம்

1.என் கவுண்டர்:
இன்னைக்கு நடக்கிற என்கவுண்டர்ல 99.99 சதவீதம் ஃபேக். எங்கயோ பிடிச்சு -அடிச்சு சித்திரவதை பண்ணி போட்டு தள்ளிட்டு சீன் கிரியேட் பண்ணிர்ரதுதான்.

போலீஸ்,ரவுடி,நக்சல் 3 க்ரூப்புமே ஆயிதம் ஏந்தறாய்ங்க.ரவுடி ,நக்சல் சட்டத்துக்கு எதிரானவுக.ஆனால் போலீஸ் அப்படியில்லை. சட்டத்தின் பிரதிநிதிகள்.

ஒரு ஜாதகத்துல செவ் நெல்ல இடத்துல உட்கார்ந்துட்டா அவனே ஆயுதம். ஆயுதத்தை ஏந்தவேண்டிய அவசியமே வராது. அப்படியே அவன் ஏந்தினாலும் அது ஜஸ்ட் ஒரு அலங்காரம் தான்.

அவன் ஆயுதத்தை கையில் ஏந்தாமலே – உபயோகிக்காமயே அவனால் அவன் கடமையை ஒழுங்கா செய்ய முடியும்.

எந்த ஜாதகத்துல செவ் கெட்டிருக்கோ அவன் எப்பவும் பதட்டத்துல இருப்பான். அவன் கையில எவ்ளோ பார் ஃபுல் வெப்பன் இருந்தாலும் தன்னை அவன் வீக்காவே ஃபீல் பண்ணுவான். மொத அட்டாக் அவன் பக்கமிருந்துதான் துவங்கும்.

ஒரு ஜாதகத்துல செவ் பக்காவா உட்கார்ந்திருந்தா அவன் வியூகம் பக்காவா இருக்கும். எல்லா மேட்டரும் அவனுக்கு விரோதமா இருந்தாலும் அவன் வியூகம் வெல்லும்.காரியம் கச்சிதமா முடியும்.

எப்போ வியூகம் தவறாப்போகுதோ – எப்போ தன் வியூகத்தின் மேல மன்சன் நம்பிக்கை இழக்கிறானோ அப்பத்தேன் கோபம் வரும். கோபம் வரும்போது பாலன்ஸ் தவறிரும் . பதறின காரியம் சிதறும். அப்படிப்பட்ட சிதறல் தான் என்கவுண்டர்.

உண்மையான என்கவுண்டர்கள் மட்டும் வலுவான செவ்வாய் தரும் நல்ல பலனுன்னு நினைச்சுராதிங்க. ஒரு இடத்துல ரத்தம் சிந்துதுன்னா நிச்சயமா அங்கே ஒரு செவ் தோச ஜாதகன் இருக்கான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்.

லாக் அப் டெத்:
எவன் ஜாதகத்துல செவ் கெட்டிருக்கோ அவன் ஜாதகத்துல ரத்தம் கெட்டிருக்கும் எவன் பாடியில ரத்தம் கெட்டிருக்கோ – ரத்தம் சுண்டியிருக்கோ அவன் “பலான”மேட்டர்ல வீக்கா இருப்பான். ஆனால் அதுல கிடைக்கிற “உச்சம்” மீதான தாகம் மட்டும் சப்கான்ஷியசா லைவா இருக்கும். அந்த உச்சம் வன்முறையில கிடைக்கிறதை ஒரு விபத்து போல ஒரு தாட்டி டேஸ்ட் பண்ணிட்டா அது தொடரும். பாலன்ஸ் மிஸ் ஆகித்தொலைச்சா லாக் அப் டெத்/லாக் அப் மரணங்கள்..

தீவிபத்து:
நெருப்பை சக்ஸஸ் ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்னா செவ் பலம் அவசியம். இல்லின்னா விபத்துதேன். கருகி சாவுன்னு செய்தியில வந்திருவம்.

அதுலயும் ஊரான் வண்டி,ஊரான் பெட்ரோல்ல மஞ்ச குளிக்கிற பார்ட்டிகளுக்கு,புறம்போக்கு நிலத்தை ,கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கிற ஆசாமிகளுக்கு இந்த ரிஸ்க் அதிகம்.

தீக்குளிப்பு:
தற்கொலை எண்ணம் வேறு – தீக்குளிக்கிறது வேறு. தற்கொலை எண்ணம் இல்லாத -ஒரு கணமேனும் வராத மன்சனே பூமியில கிடையாது. அந்த எண்ணத்தை செயலாக்கிற வேக்குவத்தை கொடுக்கிறது மட்டும் செவ்வாய் தான். அதுவும் தீக்குளிப்புன்னா பஞ்சாயத்தே கிடையாது.செவ்வாயோட உபயம் தான்.

மேலும் உயரமான இடத்துலருந்து குதிச்சு தொலைக்கிறது ,கைய வெட்டிக்கிறது ,கழுத்தை வெட்டிக்கிறதெல்லாமும் செவ்வாயோட வேலை தான்.

தேச துரோகம்:
செவ் பூமி காரகன். எந்த ஒரு ஜாதகத்துல செவ் சுபபலமா இருக்காரோ அந்த ஜாதகன் சர்வ நிச்சயமா தேசபக்தனா இருப்பான். அவன் எல்லைக்கு போயி துப்பாக்கி தூக்க தேவையில்லை. ஆனால் இந்த ஜாதகர்கள் இருக்கும் வரை தேச துரோகிகளோட பப்பு வேகாது.

நில அபகரிப்பு:

சமீபத்துல புரட்சிமணி ஒரு பதிவ போட்டிருந்தாரு. ஹ்யூமன் பாடிக்கு இயற்கையிலயே ஒரு ஸ்மெல் இருக்குமாம்.அது இல்லாதவுக தான் பாடி ஸ்ப்ரேல்லாம் யூஸ் பண்ணுவாய்ங்களாம்.

நம்ம வாதத்துக்கு வலு சேர்க்கும் கண்டுபிடிப்பு இது. ஆனால் இந்த வாதத்தை ஆதிகாலத்துலருந்து சொல்லிக்கிட்டிருக்கம்.

நம்ம ஜாதகத்துல ஒரு குரு உச்சம்.ஆனால் இதுவரை தங்கம்னு வாங்கினதுல்ல.வாங்கினாலும் வாரம் பத்து நாள் உடனே செட்டியார் கடைக்கு படிக்கபோயிரும். ஒரு மாசம் ரெண்டு மாசம் வித்தே போயிரும்.

இதுல ஒரு சீக்ரெட் இருக்கு. அது என்னடான்னா குரு தொடர்பான அதிர்வுகளை நம்ம பாடி டைரக்டாவே கிராஸ்ப் பண்ணிக்குது போல.அதனால தனியா தங்கம் தேவைப்படறதில்லை.

ஆனால் குரு பலம் இல்லாத பார்ட்டிங்களுக்கு சப் கான்ஷியஸா தங்கத்தின் மேல ஒரு வெறியே இருக்கும். அதே சமயத்துல அவிக கிலோ கணக்கா தங்கம் வச்சிருந்தாலும் குரு தொடர்பான அதிர்வுகளை அந்த தங்கம் சேகரிச்சுக்கிட்டே இருந்தாலும் -அதன் மூலமா (வாச்சும்) அந்த அதிர்வுகளை சேகரிச்சுக்கற கப்பாசிட்டி அவிக பாடிக்கு இருக்காது.

இதே தியரியை செவ் – நிலம் மேட்டர்ல பொருத்திப்பாருங்க. கணக்கு கரீட்டா வரும். எவன் ஜாதகத்துல செவ் பலமிழந்திருக்காரோ அவனுக்குத்தான் ஏக்கரா கணக்கா நிலம் வச்சுக்கற வெறி வரும்.

அடுத்தடுத்து செவ் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிச்சுட்டே போயி ரத்த நாளங்கள் வெடிச்சு சாகிற அளவுக்கு ஆயிரும். இது மூளையில நடந்தா கோமா..

மத்த விஷயங்களை பத்தி நாளைக்கு பார்ப்போம். ச்சொம்மா பிரச்சினைகளை மட்டும் பட்டியல் போட்டுட்டு கழண்டுக்கிற பார்ட்டி நாம இல்லை. அல்ட்டிமேட் சொல்யூஷனும் கொடுப்போமில்லை..

உடுங்க ஜூட்டு..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s