செவ் தோஷம் : உயிருக்கு உலை?

Posted on

அண்ணே வணக்கம்ணே !

செவ் தோஷம்னா என்ன? ஜாதகத்துல செவ் 3,6,10,11 தவிர எங்கருந்தாலும் தோசம் தேன். செவ் தோசம்னா செவ் காரகமுள்ள மேட்டர்ல எல்லாம் பல்பு வாங்கறதுதேன். ஆனால் இதுனால எல்லாம் உசுரு போயிருமான்னு இன்னைக்கு பார்ப்போம்.

ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன். ஜாதகத்துல உள்ள ஒரே அம்சத்தை வச்சுக்கிட்டு பலன் சொல்லிரப்படாது. எல்லாத்தையும் கூட்டுக்கழிச்சுத்தேன் பலன் சொல்லனும்.. இப்படி பதிவுல போடறதை எல்லாம் வேத வாக்கா எடுத்துக்கிட்டு காபரா ஆயிரப்படாது.

உங்களுது என்ன லக்னம் / செவ் எந்தெந்த பாவங்களுக்கு ஆதிபத்யம் பெறுகிறார், லக்னத்துக்கு அவர் சுபரா -பாபரா அவர் நின்ற ராசியில அவருக்குள்ள பலம் என்ன? -அவரோட இன்னம் என்னென்ன கிரகம்லாம் சேர்ந்திருக்கு – அந்த கிரகங்களுக்கு அங்கன என்ன பலம் -செவ்வாயோட என்ன உறவு -அந்த கிரகங்களின் பார்வை எங்கன விழுது இப்படி ஆயிரத்தெட்டு மேட்டரை பார்த்தாகனும்.

இது ஜஸ்ட் ஒரு பதிவு. ஒன்னமே தெரியாதவுகளுக்கு ஏதோ கொஞ்சமாச்சும் தெரியட்டும்னு செய்ற விஷய தானம்.

வடிவேலு சாம்பிள் வாங்கியே கடை வச்சுர்ராப்ல சிலரு நாம இங்கன போடற நுனிப்புல் பதிவுகளையே சுட்டு -காப்பி பேஸ்ட் எல்லாம் பண்றாய்ங்க.

அதனால ச்சொம்மா மேட்டரை தெரிஞ்சுக்க படிங்க. ரோசிங்க. எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு அப்பாறம் தேன் முடிவுக்கு வரனும். ஓகேவா..

1.லக்ன செவ்:

சான்ஸ் ..இருக்கு. செவ் காரகங்களான மின்சாரம், நெருப்பு,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகள் வகையறாவுல ஆபத்து ஏற்படலாம். உடல் ரணமாகலாம் /எரியலாம்/கருகலாம். எதிரிகளால் தாக்குதல் கூட நடக்கலாம். செவ் லக்னத்துல நின்னா 4-7-8 பாவங்களை பார்ப்பாரு.

4 ஐ பார்ப்பதால் தாய்க்கு /தாயால் -வீட்டில்/வீட்டால் வாகனத்தில் /வாகனத்தால் தீங்கு ஏற்படலாம்.

7 ஐ பார்ப்பதால் காதலிக்கு/காதலியால் -மனைவிக்கு/மனைவியால் தீங்கு ஏற்படலாம்.

8 ஐ பார்ப்பதால் உயிருக்கு,இன உறுப்புக்கு பாதிப்பு ஏற்படலாம்.

2.தன பாவ செவ்:

இவர் ரெண்டுல இருக்கிறதால கண்,வாய்,தொண்டை பாதிக்கலாம். மானாவரியா காரம் திங்கற பழக்கம் இருக்கலாம்.

இவர் ஏழாம் பார்வையா எட்டை பார்க்கிறதால உசுருக்கு உலையும் வச்சுரலாம்.

4.மாத்ரு பாவ செவ்:

தாய்க்கு /தாயால் -வீட்டில்/வீட்டால் வாகனத்தில் /வாகனத்தால் தீங்கு ஏற்படலாம். இதுல என்ன ஒரு வில்லங்கம்னா வயசான காலத்துல ஹார்ட்டு புடுக்கலாம்.

5.புத்தி செவ்:

இது ஹை ரிஸ்கு . ஒரு கணத்துல அடுப்பங்கரையில நுழைஞ்சு தீக்குளிச்சுர்ர கேஸ். ஏற்கெனவே ஒன்னு ரெண்டு மிஸ் கேரி,அபார்சன் நடந்திருந்தா பரவால்லை. இல்லின்னா உ.உ க்கு வாய்ப்பிருக்கு.

7.களத்திர செவ்:

காதலிக்கு/காதலியால் -மனைவிக்கு/மனைவியால் தீங்கு ஏற்படலாம். செவ் காரகமுள்ள பெண்ணையே மணந்தால் ஓரளவு ஓவர்கம் பண்ணலாம்.

8.அஷ்டம செவ்:

இதுவும் ரிஸ்கான மேட்டருதேன். செவ் காரகங்களில் இருந்து விலகி வாழ்ந்தா தப்பலாம்.

9.பாக்ய செவ்:

இது அப்பா,அப்பா வழி சொத்துக்கு தீங்கு தரலாம். சொத்து மேட்டர்ல வில்லங்கமிருந்தா விட்டு கொடுத்து செட்டில் பண்ணிக்கிட்டு தூர வந்துர்ரது பெட்டர். தூரபயணங்களின் போது உல்வா பஸ்ஸு/ஸ்லீப்பர்களை தவிர்ப்பது நலலது .

12.விரய செவ்:

கொஞ்சம் அசால்ட்டா இருந்தாலும் நிலம் பறி போயிரும், போலீஸுக்கு கூலிப்படைக்கெல்லாம் செலவழிக்க வேண்டி வந்துரும். செலவானாலும் பரவால்லை. தூங்கற நேரம் பார்த்து அட்டாக் நடக்கவும் சான்ஸ் இருக்கு.

Advertisements

5 thoughts on “செவ் தோஷம் : உயிருக்கு உலை?

  ISMAIL said:
  February 9, 2013 at 8:43 am

  அண்ணே,

  ரெண்டு நாளைக்கு முந்தி மரணத்த பத்தி பிணாத்திண்டு இருந்தீங்க. எல்லாம் சரியாய்ட்டா. செவ்வாயை (உடன்பிறப்பு) சாதாரணமா எடுத்துறாதீங்கண்ணே. அவர் கேதுவுடன் உள்ளார். கோச்சாரத்துல அந்த இடத்துல சனி+ராகு சேர்க்கை. கந்தசஷ்டியை படிங்க. உசுருக்கு கவசமாக இருக்கும். 

  அய்யய்யோ. கமெண்ட் போட வேண்டிய இடத்துல பரிகாரம் சொல்லிட்டேனே. சரி போகட்டும். அப்டியே ஒரு நூத்தம்பத நம்ம அக்கவுண்டுக்கு தள்ளி விட்ருங்க.

   S Murugesan said:
   February 9, 2013 at 10:18 am

   அட ராமா ! வேலயத்த …பூனை தலையை ………மாதிரி என்ன இது?

  Sugumarje said:
  February 9, 2013 at 4:06 pm

  ஐயா,

  இஸ்மாயில் அவர்கள் உங்களுக்கு ஏதோ சூசகமாக உணர்த்துகிறார் என்று நினைக்கிறேன். உங்களுக்கு புரியவில்லையா?

  Sugumarje said:
  February 9, 2013 at 4:08 pm

  இஸ்மாயில் அவர்களே,

  நீங்கள் ஏதோ சொல்ல வருகின்றீர்கள் என்பது மட்டும் புரிகின்றது. ஆனால் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது மட்டும் புரியவில்லை. தெளிவாக சொல்லுங்களேன்.

  Mani said:
  February 9, 2013 at 4:11 pm

  அண்ணே,

  நீங்க இன்னும் பழைய ராமன் போதைல இருந்து மீளவில்லையா? நீங்க நினைப்பது போல் அவர் ராமனும் இல்லை, லட்சுமணனும் இல்லைன்னு நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s