பிணத்துக்கு ஏன் கால் கட்டு?

Posted on

பாடி வந்துருச்சு விளக்கேத்து .. கற்பூரம் கொளுத்து .தேங்கா உடைச்சு வை..கொய்யால அந்த காலத்துல பவர் இல்லை..ஊரே காடா இருந்திருக்கும் . நாய் நரி வந்து பிணத்தை பிடுங்கிர போகுதுன்னு இப்படி ஒரு சம்பிரதாயத்தை வச்சிருக்கலாம். இப்பத்தேன் காக்கா,குருவிய கூட இல்லாத பண்ணிட்டமே.

ஃப்ரீசர் பாக்ஸ் வரதுக்குள்ள எறும்பு ஏறாம இருக்க கமாக்சின் போடுங்கடான்னு சொன்னா அருத்தம் இருக்கு. பிணம் விழுந்த வீட்டு முன்னே நாலு கட்டைய போட்டு எரிக்கிறதுக்கு கூட இதான் காரணமா இருக்க முடியும். ( நாய் நரி வந்துராம) ஊதுவத்தி ஏத்தறது நாறாம இருக்க. இப்பத்தேன் ஃப்ரீசிங் பாக்ஸ் வந்துருச்சுல்ல. பவர் கட் பயம் இருக்கிறதால ஜெனரேட்டருக்கு வேணம்னா சொல்லலாம்.

காலை ஏன் கட்டனும்? பிணம் ஓடிப்போயிரப்போகுதா? நோ .. கழிவு ஏதும் வெளியேறிடக் கூடாதுங்கறதுக்காவ இருக்கலாம். வாய்ல வெத்திலை பாக்கு ? இதுக்கும் அதே காரணம் தேன். தலைக்கு ஏன் கட்டு போடறாய்ங்க? வாய் பிளந்துரக்கூடாதுன்னு.

தூக்கு தூக்குன்னு நடு ரோட்ல வச்சு நாப்பது பேர் பிணத்தோட தலைக்கு எண்ணெய் வைக்கிறாய்ங்க. சீக்காய் வைக்கிறாய்ங்க. ஒரு 3 குடம் தண்ணிய ஊத்தி நாறடிச்சு பாடையில வச்சுர்ராய்ங்க.

ஏன் வெளி நாடு போல அதுக்குன்னு ஒரு சிஸ்டம் ,நெட் ஒர்க் ஏற்படுத்திக்க கூடாது. ஷாம்பூ வாஷ் பண்னி, குளிப்பாட்டி ட்ரஸ் பண்ணி பாடி ஸ்ப்ரே அடிக்கலாம்ல. ( போறச்சயாவது வாசனையா போவட்டுமே) நமுக்கு இதெல்லாம் கூட கடுப்பில்லை. தெரியாத்தனம் – மடத்தனம். ..பழசை மாத்திக்க முடியாத கேரக்டருங்கன்னு விட்டிரலாம்.

இறந்தவனோட மனைவியை கொண்டு வந்து நடுத்தெருவுல பிணத்து பக்கத்துல உட்கார வச்சு கால் கிலோ மஞ்சளை பூசி , ஒரு கூடை பூவை வச்சு , டஜன் டஜனா வளையலை போட்டு.. இதெல்லாம் பக்கா சாடிசம்.

அடுத்து இந்த மேள தாளம்? நான் என்ன நினைக்கிறேன்னா அந்த காலத்துல ஒரு மன்சன் டிக்கெட் போட்டாச்சுன்னு கன்ஃபர்ம் பண்றதுக்கு சரியான பார்ட்டி அவெய்லபிளா இல்லாம இருந்திருக்கலாம். இப்படி ஹை டெசிபல்ஸ்ல மேளம் அடிச்சா எந்திரிச்சா -எந்திரிச்சுரட்டும்னு இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.

மேலும் ஊரே காடா இருக்கச்சொல்ல சுடுகாடு எப்படி இருந்திருக்கும்? பெருங்காடா இருந்திருக்கனும். பிணத்தை தூக்கிக்கிட்டு போறவுகளோட பாதுகாப்புக்காக -மிருகங்களை விரட்டறதுக்காவ இந்த மேள தாளம்னு நினைக்கிறேன்.

எல்லாம் சரி.. இந்த சம்ஸ்கிருத மந்திரங்கள் தான் ரெம்ப வெறுப்பேத்துது. நாம தெலுங்குல புலிங்கறதால -பஞ்சாங்க மேட்டர்லாம் ஓரளவு தெரியுங்கறதால அரைகுறையா புரியுது. மத்தவன் என்ன பண்ணறது?

என்னைக்கேட்டா ஏற்கெனவே நான் சொன்னதை போல பாடியை ப்ரிப்பேர் பண்ணி ஸ்ட்ராங் வில் ,ஓரளவு மேட்டர் தெரிஞ்சவுக , இறந்தவன் மேல உண்மையான அன்பு இருக்கிறவுக அதை சுத்தி நின்னுக்கிட்டு

” த பாருப்பா.. திடீர்னு பாடியோட லிங்க் கட் ஆனதும் டென்சன் ஆயிட்டிருப்ப..இதெல்லாம் சகஜம்..இந்த மேரி எத்தீனி தபா பிறந்தே.. எத்தீனி தபா டெத் ஆனே ..எல்லாம் ஒனக்கு இப்ப ஞா வந்திருக்குமே.

மறுபடி பிறக்கத்தான் போறே.கருமத்தை தொலைக்க வந்தே.. ஆனா வந்த எய்மை திராட்ல விட்டுட்டு கருமத்தை சேர்த்துக்கிட்டே .. இப்பயாச்சும் ..அடுத்த பிறவியிலயாச்சும் கருமத்தை தொலைக்கப்போறேன்னு கமிட் பண்ணிக்க.

இந்த பாசம், நேசம்,சாதி ,மதம்லாம் பாடியோட போச்சு. இப்பம் நீ ஃப்ரஷ்ஷாயிட்டே.. பழைய வாசனை கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணும்.. உதறிரு..

ஒன்னால முடிஞ்சா ஒன்னை சேர்ந்தவுக கருமத்தை தொலைச்சு நல்ல வழி காண உதவு”னுட்டு மானசீகமா பேசினாலே போதும்னு நினைக்கிறேன்..

அடுத்து இந்த சுடுகாடு மேட்டர்.. திட்ட கமிஷன் ஆஃபீஸ்ல கக்கூஸு கட்டவே எத்தனயோ லட்சங்க செலவழிக்கிறானுவ.. நல்லா வாழத்தான் விடலை.செத்தபிற்காடாச்சும் கவுரதையா நடத்தலாம்லியா?

தூத்தேரிக்க..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s