அவள் ! அவளே !! அவளே தான் !!!

Posted on

சின்ன வயதில் அண்ணனும் நானும் வேலைக்காரனின் தோளில் ஏறி ஸ்கூலுக்கு போனது ஞா வந்தது. அக்காக்களின் கல்யாண களேபரங்களாலும் -ஒவ்வொருத்தியாய் விதவையாகி நிற்க ஒவ்வொருத்திக்கும் ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம் ஏற்படுத்த அண்ணன் மெனக்கெட்டது நினைவு வந்தது.

இந்த கூத்தில் அண்ணனின் கல்யாணம் தமாதமாகிக்கொண்டே போக அப்பா எனக்கு கல்யாணம் செய்து வைத்து செத்துப்போனது கல்யாணமான 3 ஆவது மாதமே . அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்தது நினைவுக்கு வந்தது.

அப்பாவின் பல சரக்கு கடைய அண்ணன் நடத்தி வரும் போது ” என்னங்க.. ஆனாலும் உங்க அண்ணன் வேலைக்காரனை விரட்டறாப்ல விரட்டறாரு’ என்ற பெண்டாட்டி பேச்சை கேட்டு தனிக்கடை போட பங்கு கேட்டது பளிச் என்று மின்னியது.

கடைக்கு குறுக்கே சுவர் எழுப்பி அவனுக்கு பாதி எனக்கு பாதி என்று தனித்தனியே கடை நடத்தினோமே தவிர – வீடு விஷயத்தில் மொத்த வீட்டையும் நானும் -மனைவியுமே ஆண்டு வந்தோம். மாடியில் இருந்த அறைக்கு வெளிப்புறம் படி வைத்து அண்ணன் இருந்து கொண்டான். அம்மா எங்களுடன்.

மார்க்கெட் சுற்று வட்டாரத்தில் அப்பாவுக்கு சொந்தமாக இருந்த வீடுகளை இன்னார்க்கு இது என்று பாகம் பிரிக்கவில்லை. வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்து போக புதிதாய் யாரும் குடி வரும் வரை காலியாக உள்ள வீடுகளை இருவரும் கொடவுனாக உபயோகித்துக்கொள்வது வழக்கமாக இருந்தது.

அண்ணனுக்கும் எனக்கும் அடிப்படையிலேயே வித்யாசம்.

அவன் உடலமைப்பே வேறு உயரத்தில் என்னை போலத்தான்.ஆனால் பலசாலி. அவன் முரடன். நிறையவே கோபப்படுவான். நிறையவே உழைப்பான். நிறையவே செலவழிப்பான். நிறையவே சம்பாதிப்பான்.

நான் பூஞ்சை உடம்பு. நாலு மூட்டையை நகர்த்தி வைத்தால் இடுப்பு பிடித்துக்கொள்ளும். எனக்கென்னவோ அண்ணனை பார்க்கும் போது முட்டாள் முட்டாள் கொஞ்சம் மூளைய உபயோகிடா என்று கூவ தோன்றும்.

நான் மூளையை ( ! ) உபயோகித்து வியாபாரம் செய்து வந்தேன். அண்ணன் அப்பா காலத்து கடை .அந்த பேரை காப்பாத்தினா போதும் என்று பினாத்திக்கொண்டு காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மல்லாடுவான்.

நான் அரிசி விலை உயரப்போகிறது என்று தெரிந்து வாங்கி அடுக்கினேன். 1975 ல எமர்ஜென்சி வந்தது.
கூடவே ரெய்டும் வந்தது. வீடுகளை பாகம் பிரிக்காதது வசதியாய் போனது.பிடிபட்ட கணக்கில் வராத சரக்கு எல்லாமே அண்ணனோடது தான்னு சாதிச்சிட்டென்.

ஒரு கட்டம் வரைக்கும் மறுத்த அண்ணன் என்ன நினைத்தானோ சரக்கு தன்னோடதுதான்னு ஒத்துக்கிட்டு செயிலுக்கு போயிட்டான்.

எமர்ஜென்சி முடிவுக்கு வரதுக்குள்ள குறுக்குசுவரை இடிச்சு மொத்தக்டையையும் சொந்தமாக்கிக்கிட்டேன். கடை பேரை மாத்தினேன். லைசென்ஸை என் பேருக்கு மாத்தினேன்.எல்லா வீட்டையும் என் பேருக்கு மாத்திக்கிட்டேன். எதிர்ப்பே கிடையாது. ஜஸ்ட் மூளைய உபயோகிச்சேன். அவ்ளதான்.

இந்த இடத்துல என் பொஞ்சாதியை பத்தி கொஞ்சம் சொல்லனும்.சொந்தக்கடை அண்ணனுக்கு ஒத்தாசையா இருக்கான்னு சொன்னா ஜமீந்தார் பெண்ணையா கொடுப்பாங்க. ஃபைனான்ஷியா ஒன்னும் பேக் கிரவுண்டு கிடையாது. பார்க்க ஜீனத் அமன் மாதிரி ஒரு ஸ்ட்ரக்சர். நல்ல நிறம்.எந்த விஷயத்துல எப்படியோ அந்த விஷயத்துல எங்களுக்குள்ள நல்ல பொருத்தம். எனக்கு தினம் தினம் வேணும். நினைச்ச போது வேணும்.எல்லாம் சரியா நடந்துக்கிட்டிருந்தாலும் “விசேஷம்”தான் ஒன்னுமில்லை.டாக்டர் கிட்டே போகலாம்னா பயம்.

ஸ்டேட்ல காங்கிரஸ் ஆட்சி போயி தெலுங்கு தேசம் வந்தது.ரெண்டு ரூபாய்க்கே கிலோ அரிசின்னு ஒரு ஸ்கீம் கொண்டு வந்தாரு என்.டி.ஆர். மத்த விவகாரங்கள்ள மனுஷன் எப்படி அரசாண்டாரோ நமக்கு தெரியாது.ஆனால் இந்த ரைஸ் ஸ்கீம்ல மட்டும் பக்கா.

வெறும் அரிசிய வச்சுக்கிட்டு நாக்கை வழிக்கவா அவனவனுக்கு எத்தனையோ கெட்ட பழக்கம் அரிசி வேணும். ரேஷன் கடையில வாங்க வேண்டியது நம்ம கடையில வந்து வித்துட்டு பணத்தை எண்ணிக்கிட்டு போக வேண்டியது. அஞ்சுக்கு வாங்கினாலும் பன்னென்டுக்கு விக்க முடிஞ்சது. அதையே பாலிஷ் பண்ணி வித்தா 20 க்கு கூட விக்க முடிஞ்சது. வித்தேன். மூளைய உபயோகிச்சா பைசா பார்க்கலாம். நான் மூளைய உபயோக்கிக்கிறவன். அப்பங்காலத்து கடைன்னு நாக்கு வழிக்கிறதா?

எவனோ எடுபட்ட பைய கரெக்டா போட்டுக்கொடுத்துட்டாப்ல இருக்கு ரெய்டு .கடைக்கும் கொடவுன் களுக்கும் சீல் வச்சுட்டாங்க. பொஞ்சாதியே உலகம்னு இருந்துட்டனா எவனையும் தெரியலை. செயிலுக்கு போக வேண்டியதாயிருச்சு.

ஜெயிலுக்கு போன அண்ணன் வட நாட்டு பக்கம்லாம் பித்தம் பிடிச்சாப்ல அலைஞ்சு திரும்பி வந்தான். ஜெயில்ல வந்து பார்த்தான். யார் யாரையோ பார்த்து கோர்ட்டு கேஸுன்னு அலைஞ்சு கடைக்கும் ,கொடவுனுக்கு சீல் எடுக்க வச்சு வியாபாரத்தை மறுபடியும் துவக்கினான்.

நான் ஜெயில்லருந்து திரும்பி வந்தேன். நான் கடையில செய்து வச்சிருந்த வேலை (குறுக்கு சுவரை இடிச்சது) எனக்கே ஆப்பாயிருச்சு.பஜார்ல “உன்னை போல உண்டா”ன்னு சொம்படிச்ச சும்பன் எல்லாம் அண்ணன் கிட்டே தலை சொரிஞ்சு நிக்கிறான். இவனுங்களை நம்பி என்னத்தை பஞ்சாயத்து பண்றது?

சரி பிள்ளையா குட்டியா என்னைக்கோ ஒரு நாள் சாகத்தான் போறான். பிறவு மொத்தம் நமக்குத்தானேன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். விஷயம் என்னடான்னா ராத்திரி கடை சாத்தின பிறவு நிறையவே குடிப்பான். கூத்தடிப்பான். எங்க ஜாதியில கவிச்சே தொடமாட்டோம். ஆனால் இவன் வெளுத்து வாங்குவான். அதுக்குன்னு ஒரு வட்டம். மறுபடி காலையில அஞ்சுக்கெல்லாம் கடை திறக்க ஆரம்பிச்சுருவான்.

ஒரு தடவை சீக்கிரமே சாகட்டும்னு பக்கெட் தண்ணியில சயனைட் போட்டு வச்சேன். நாலு முன் பல் உதிர்ந்ததோட சரி. நான் தான் சில்மிஷம் பண்ணினேன்னு தெரியும்.எதுக்கோ கண்டுக்கலை. சரி அவனா சாகட்டும்னு விட்டுட்டன்.அதுவரைக்கும் என்ன பண்றது? கடை திண்ணையில கம்பு ,கேழ்வரகு,நொய்யின்னு கூடையில வச்சு விக்க ஆரம்பிச்சேன்.

சொந்த கடையில அண்ணனுக்கு ஒத்தாசையா இருந்த காலத்துலருந்தே கொஞ்சம் கொஞ்சமா பணத்தை ஒதுக்கி வச்சது நல்லதா போச்சு. கடைய பிரிச்ச பிறவு முதலுக்காச்சு. அண்ணன் செயிலுக்கு போனதும் மொத்தத்தையும் ஆட்டைய போட்டு அரசாண்ட காலத்துல ஃபிக்சட் டெப்பாசிட் எல்லாம் போட்டு வச்சேன்.

தே.மவனுங்க ஒவ்வொருத்தனா ஊரை விட்டு ஓட ஆரம்பிச்சான். பித்தம் பிடிக்கிறாப்ல ஆயிருச்சு. இடையில இந்த ரம்மி வேற தொத்திக்கிச்சு. சுருக்கமா சொன்னா அண்ணன் பொஞ்சாதி மூலமா படியளந்தா தான் பொழப்புங்கற நிலைக்கு வந்துட்டன். இருந்தாலும் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்ங்கற எண்ணம் மட்டும் அப்படியே இருந்தது. அதுக்கும் ஒருத்தி ஆப்பா வந்து நின்னா.

கடையில அரிசி புடைக்கிறதுக்குன்னு வேலைக்கு சேர்ந்தவ.. மாடிக்கு போய் பெருக்கறேன்,ஒட்டடை அடிக்கிறேன், பூஜை சாமான் துலக்கிறேன்னு ஆரம்பிச்சு அண்ணனுக்கு தாலிகட்டாத பொஞ்சாதியா ஆயிட்டா.

இத்தனைக்கும் அவளுக்கு கண்ணாலமாகி புருசன் வேற இருக்கானாம். மரத்துலருந்து விழுந்து இடுப்பு நொறுங்கி கிராமத்துல கிடக்கிறான். இவள இங்கே ஆட்டம் போடறாள். ராத்திரியில தங்கவே ஆரம்பிச்சுட்டா. ஒரே குடி கூத்து.

அண்ணனோட லூப் ஹோல் இதுன்னு தெரிஞ்சதுமே சொந்தம் பந்தத்துக்கெல்லாம் பத்த வச்சேன். இவன் இந்த மாதிரி ஆட்டம் போட்டா நாங்க எப்படி இங்கே குடித்தனம் பண்ண முடியும்ங்கறது தீம். என் பொஞ்சாதிக்கு சொல்லி அம்மாவுக்கு பண்ற சிஸ்ருஷையை நிறுத்த சொன்னேன். அவள் அதையும் செய்ய ஆரம்பிச்சாள்.

கிழவியை அப்படியே அள்ளி தூக்கிக்கிட்டு போயி குளிப்பாட்டுவா. படுக்கை விரிப்பை மாத்துவா போரிக் பவுடர் போட்டு விடுவா. என்னென்னமோ பண்ணுவா.. அம்மா இருந்த ஹால் பேய் பங்களா மாதிரி இருளோன்னு இருக்கும்.அதை ஜகஜ்ஜோதியா ஜொலிக்க விட்டு போர்ட்டபிள் கலர் டிவி வச்சு என்னென்னமோ சினிமால்லாம் காட்டினா.

அவள் சாதிய சொல்லி வண்டை வண்டையா திட்டுவேன். அவன் கிட்டே துட்டிருக்குன்னு தானே வரே நானும் தரேன் வாம்பேன். ஒரு பக்கம் அண்ணன் காதுல போட்டுட்டா எப்படிங்கற பயம் இருந்தாலும் எரிச்சல்ல வாய்க்கு வந்தபடி கேட்பேன். ஊஹூம்.

ஒரு தடவை அந்த பொம்பளை தன் புருசங்காரனை பார்த்துக்க ஏற்பாடு பண்ண பொம்பளை வெளியூர் போயிருச்சுன்னு ஒரு வாரம் போல கடைக்கும் வரலை வீட்டுக்கும் வரலை.

பெருந்தீனியாலயோ – பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே கிடந்தாதலயோ அண்ணன காரனுக்கு
மூலம் வந்துருச்சு. தின்னா வெளிக்கு போகனும்னு பயந்து நாலஞ்சு நாளு போல திங்காமயே கிடந்திருக்கான். கடையும் திறக்கலை.மாடிய விட்டு கீழே இறங்கியும் வரலை. நாலாவது நாள் மெல்ல ஏறிப்போயி பார்த்தேன். அப்பவோ இப்பவோன்னு இருக்கு. நைசா இறங்கி வந்துட்டன். ஏழாவது நாள் அந்த பொம்பள வருது.இவன் பேச்சு மூச்சில்லாம கிடக்கிறதை பார்த்துட்டு திம் திம்னு படியிறங்கி வந்து என்னை பார்த்தா பாருங்க ஒரு பார்வை. குலை நடுங்கி போயிட்டேன்.

வெளிய வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தி வச்சுட்டு அண்ணனை அப்படியே அள்ளிக்கிட்டு வரா . சலைனு குளுக்கோஸுன்னு ஏத்தி தேத்தி கொண்டு வந்துட்டாளே . எனக்கு சீ போன்னு ஆயிருச்சு.
என் புலம்பலை இவ்ள நேரம் கேட்டுக்கிட்டிருந்த உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். அண்ணனுக்கு மூலம் வந்ததை போல எனக்கு ஷுகர்.

போன மாசம் தான் மொத முறையா ஃபீல் பண்ணேன். சாப்பாடே ஏல மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு குமட்டிக்கிட்டு வருது. அண்ணன் கடைக்கும் மாடிக்கும் ஏறி இறங்கறச்சல்லாம் “என்னடா திங்கறயா இல்லையாட்டா .. ஈன்னு போயிக்கிட்டிருக்கே.. தின்னு தொலைடா”னு திட்டிக்கிட்டே போவான். ஊஹூம்.

ஒரு நாள் கடுப்பாயி கார் வச்சு சி.எம்.சிக்கு அனுப்பினான். அவங்க லிவர் பத்து பைசாவுக்கு உதவாதுன்னு சொல்லிட்டு என்னென்னமோ மருந்து மாயம்லாம் கொடுத்து அனுப்பிச்சாங்க. இடையிடையில ஞாபகம் வேற பிசக ஆரம்பிச்சு. மறுபடி சி.எம்.சிக்கு ஓட எம்.ஆர்.ஸ்கான் எடுத்ததுல மூளையில் ரத்தம் கட்டியிருக்குனு சொல்ட்டானுங்க

இந்த நாலஞ்சு நாளா தொடர்ச்சியா சிந்திக்கவே முடியலை. என் யோசனை எல்லாமே அபத்தமா இருக்கு. ஆனால் அதை நிறுத்த முடியலை. இல்லைன்னா அந்த தேவடியாளை அம்மான்னு நினைச்சு பேசிக்கிட்டிருப்பேனா. என் பொஞ்சாதிய தேவடியான்னு திட்டுவனா. திடீர்னு நினைவுகள் எல்லாம் ஜாம் ஆயிரும். கொஞ்ச நாழி கழிச்சு விலகும்.

ஒரு அரைமணி நேரத்துக்கு மிந்தி மூச்சு முட்டுது. மார் எல்லாம் கனக்குது. சன்னலை திறந்து விட சொல்லி சைகை காட்டறேன். நாக்கு வறளுது. தண்ணி தண்ணின்னு ஜாடை காட்டறேன்.ஊஹூம். யாரோ நான் படுத்திருந்த சோஃபாவை தாண்டி போறாப்ல இருந்தது.

அவள் .. ஒரு பூதம். அவள் என்னை புதையலை எடுத்து செல்லும் பூதம் போல் அள்ளினாள். பூதகணங்களுக்கெல்லாம் தலைவனையே பெற்றவள் அல்லவா?

அவள் ஒரு பேய் பிணத்தை தூக்கும் பேயை போல் என்னை தூக்கினாள் பேயாண்டியை மணந்தவள் அல்லவா?

அவள் ஒரு ராட்சசி. அவள் பலம் ராட்சஸ பலம். ஆம் பூதனை பால கிருஷ்ணனை அள்ளி மார்போடணைத்து கொண்டது போல் என்னை அணைத்துக்கொண்டாள்.

அவள் அன்னை. அவளுக்கு வயசுடன் வேலையில்லை. அவள் பார்வையில் அசூயை இல்லை. என் அண்ணனை அன்று எப்படி அள்ளிக்கொண்டு இறங்கி வந்தாளோ அப்படியே இன்று என்னை.அவளில் அவன் இவன் என்ற பேதம் இல்லை.

மார்போடு அணைத்து பால் ஊட்டுகிறாள். அவள் ஜகன் மாதா. மாதாவின் மடி சேர்ந்த பின் இந்த மகவுக்கு உயிர் இரண்டாம் பட்சம். அடுத்த நொடி அவள் மடியை பிரிய வேண்டி வரலாம். இதைவிட என் உயிர் பிரிவது நன்று. இந்த உலகை நான் பிரிவது நன்று.

சர்வம் மாத்ருமயம் ஜகத்

Advertisements

8 thoughts on “அவள் ! அவளே !! அவளே தான் !!!

  Mohan Ram said:
  February 6, 2013 at 6:13 am

  என்னா கதை இது ஒன்னுமே புரியல, யாரு கதையை சுட்டு இங்க போட்ருக்கிங்க?

   S Murugesan said:
   February 6, 2013 at 6:29 am

   அட ராமா ! என்ன வாக்காளர் பட்டியல் எதாச்சும் பக்கத்துலயே இருக்கா என்ன?

  ரவி said:
  February 6, 2013 at 11:05 am

  அருமையான கதை. எழுத்து நடை பிரமாதம். நல்ல வேகம்.

  MANI said:
  February 6, 2013 at 1:34 pm

  அண்ணே,

  கமல் மாதிரி என்னத்த பினாத்திக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு கமலுக்கு குரல் குடுத்த மாதிரி உங்களுக்கும் குடுக்குறோம்.

   S Murugesan said:
   February 7, 2013 at 4:43 am

   ஜானகி ரமா மணி ?

  S.Sivakumar said:
  February 7, 2013 at 1:14 am

  ஏதாவது பழைய பாலகுமாரன் கதையிலிருந்து சுடப்பட்ட பக்கமா? ஒன்னும் புரியாம மண்டை காயுது.

   S Murugesan said:
   February 7, 2013 at 4:34 am

   சிவாயசிவ! ராம!

  S.Sampath said:
  February 7, 2013 at 10:12 am

  fine

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s