ராமகிருஷ்ண பரமஹம்சரின் பலான உபதேசம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

பதிவோட தலைப்புல பலான ,கில்மா இந்த மாதிரி எதுனா ஒரு வார்த்தை இருந்தாதான் ஹிட்ஸ் அள்ளுது. உபரி ஹிட்ஸை சேர்த்து வச்சுத்தேன் உபயோகமான பதிவை போடவேண்டியிருக்கு. ராமகிருஷ்ண பரமஹம்சரை படிக்கிறதுக்கு மிந்தி நிறைய சாமியார்ங்களை பத்தி படிச்சிருக்கம்.

பெரும்பாலும் வாழ்க்கை வரலாறுகள். உ.ம் சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமணர் . இந்த வா.வரலாறுகள்ள உள்ள சிக்கல் என்னடான்னா எழுதறவரு ஆத்து ஆத்து எழுதியிருப்பாரு. அதுல உசுரே இருக்காது. ஒரு விடலை பையன் தன் காதலியை பத்தி எழுதினாப்ல தான் இருக்கும். கி.ஆ.பெ.விஸ்வநாதம் சார் கூட இதே கேட்டகிரி தான்.(பூண்டி மகானை பத்தி எழுதினதா ஞா)

ராமகிருஷ்ண பரமஹம்சரோட ப்ளஸ் பாய்ண்ட் என்னடான்னா அவரு சுயம்பு. மண்ணின் மைந்தன். அவரோட உபதேசங்கள்ள பலது அருவறுப்பா கூடா இருக்கும்.ஆனால் நெத்தியடியா இருக்கும். ஏட்டுப்படிப்பு இல்லாதது பெரிய ப்ளஸ்.

ஏட்டுப்படிப்பு சொல்லவந்த விஷயத்தை டைல்யூட் பண்ணி மொன்னையாத்தான் வெளியிடும்.ஆனால் பட்டறிவு அப்படி கிடையாது.

மூளையில அறிவு -பாலுணர்வு மையங்கள் பக்கத்து பக்கத்துல இருக்காம். ஒன்றில் ஏற்படும் அதிர்வு அடுத்ததை டச் பண்ணுமாம். இதனால சுன்னத் அறிவு மையத்தை தூண்டும்ங்கறதுல மிகை எதுவும் இல்லை.

மனிதர்கள் -ஆண் பெண் யாரா இருந்தாலும் அவிக மைண்டுல ஓடுறதெல்லாம் பலான மேட்டருதேன்.ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து எதை செய்துக்கிட்டிருந்தாலும் சைக்கலாஜிக்கலா அவிக செய்றது “அதை”த்தான்னு கூட எழுதியிருக்கேன்.

இப்படி பலான மேட்டர்லயே சுத்தி சுத்தி வர்ர மைண்டை படக்குன்னு இழுத்து நிக்க வைக்கனும்னா பலான மேட்டரை வச்சுத்தான் சொல்லவேண்டியிருக்கு.

ரா.கி உலகவாழ்க்கை -ஆன்மீக வாழ்க்கைய எப்படி பேலன்ஸ் பண்றதுங்கற கேள்விக்கு சூப்பரா பதில் சொல்லியிருப்பாரு.

ஒரு பெண் தன் கணவனுக்குரிய கடமைகளை பக்காவா செய்துக்கிட்டிருந்தாலும் அவளோட மனசு எப்படி கள்ளக்காதலனையே நினைச்சிட்டு இருக்குமோ அதே போல இந்த உலக கடமைகளை பக்காவா செய்துக்கிட்டிருந்தாலும் உன் மனசு மட்டும் கடவுளையே நினைக்கனும்.

பலான உபதேசம் :

புகழ்ந்து பாடுவது , ஜால்ரா போடறது ,சொம்படிக்கிறதுன்னு எந்த வார்த்தையில சொன்னாலும் மேட்டர் ஒன்னுதேன்.

அல்லாருக்கும் அதுவும் முக்கியமா இந்த புலவர் பசங்களுக்கும் சோடாபுட்டி கண்ணாடிகளுக்கும் ஒரு ஃபோபியா.

அவிகளுக்கு எவனாச்சும் காசு பணம் உள்ளவனுக்கு சொம்படிச்சா எதுனா தேறும் அதை வச்சு பெருசா சாதிச்சுரலாம் அல்லது செட்டிலாயிரலாம்னு ஒரு எண்ணம் உண்டு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல போல பிச்சைக்காரவுக வேணம்னா பிரியாணிக்கு காசு கொடுக்கலாமோ என்னமோ.. ஆனா காசுள்ளவன் கிட்டே கால் காசு வாங்கறதுக்குள்ள தாவு தீர்ந்துரும்.

ஏன்னா அவனுக்கு நெல்லா தெரியும். தன் கிட்டே காசை தவிர வேற எதுவும் இல்லைன்னு. அதை கொடுத்துட்டா கதை ஓவர். வந்தவன் காணாம போயிருவான்னும் தெரியும். அதனால சாமானியமா மூட்டைய அவுக்கவே மாட்டான்.

நமக்குத்தேன் நாக்கு தள்ளிரும். இப்பம் ரா.கி சொன்ன பலான உபதேசத்துக்கு போயிரலாம். ( மேட்டர் இன்னாவோ ரா.கியோடதுதான் .. பில்டாப்பு நாம கொடுத்திருக்கம்)

ஒரே ஒரு ஊர்ல ஒரு நரி . அது ஒரு நாள் புல்வெளியில படுத்து புரண்டுக்கிட்டிருந்தது. அந்த சமயம் பார்த்து ஒரு எருது அங்கன வந்து நரியை தாண்டி போனது.

அண்ணாந்து படுத்திருந்த நரியோட கண்ணுக்கு எருதோட விதைகள் (Testicles) ரெம்ப கவர்ச்சிகரமா தெரிஞ்சது. அந்த விதைகளோட மினுமினுப்பும்,தளதளப்பும் நரியோட பசியை தூண்டி விட்டுருச்சு.

சரி எப்படியும் இந்த விதைகள் உதிரத்தான் போகுது . விடப்படாது. இதுகளை சுவைச்சே ஆகனும்னு முடிவு பண்ணிருச்சு நரி.

அவ்ளதான் அந்த எருது பின்னாடியே அலைஞ்சுக்கிட்டிருந்தது. எருது தண்ணி குடிக்க போனா குளம் குட்டை ,மேயப்போனா புல்வெளின்னு செமை அலைச்சல். இப்படியே ஒரு வாரம் அலைஞ்ச பிறவு அந்த நரிக்கு புரிஞ்சுதாம். கொய்யால .. இது உதிரவும் போறதில்லை .. நாம பசியாறவும் போறதில்லைன்னு.

பணக்காரனுக்கு சொம்படிச்சு பைசா பார்க்க நினைக்கிறதும் இது போன்றதுதான்னு ரா.கி சொல்றாரு.. இந்த உபதேசம் உங்க மைண்டுல பச்சக்குன்னு ஒட்டிக்கும்.

ஏன்னா மனித மனதின் -உடலின் மையம் செக்ஸு.

Advertisements

3 thoughts on “ராமகிருஷ்ண பரமஹம்சரின் பலான உபதேசம்

  Kavignar Thanigai said:
  February 4, 2013 at 9:30 am

  difference of writing. best wishes.

  MARUTHAPPAN said:
  February 5, 2013 at 6:53 am

  good thought

  rajaudaiyar said:
  February 12, 2013 at 5:11 am

  very nice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s