உடலுறவுக்கு உகந்த நாட்கள்
உடலுறவு என்பது வெறும் உடலுறவாக இருந்தால் கண்ட நாட்களில் நிகழ்வதால் ஆண்மைக்குறைவு, உடல் நலிவு போன்றவை மட்டுமே ஏற்படும்.இதுவே உடலுறவு குழந்தை பிறப்புக்காக நிகழ்வதானால் -அது கருத்தரிக்கும் நாட்களாக இருந்து கரு உருவாவதானால் பிறக்கும் குழந்தையோட எதிர்காலம் ரெம்ப கிரிட்டிகலாயிரும்.
அட மத்த கிரகங்களை விடுங்க கண்ட நேரத்தில் ஆண் பெண் சங்கமித்து -அதனால் பிறக்கப்போற குழந்தைக்கு கு.பட்சம் செவ் தோஷம்,சர்ப்பதோஷம் மாட்டிக்கிட்டாலும் லொள்ளுதானே.
செவ் தோஷம் தர்ர இமிசை ஒரு பக்கம்னா பிறக்கப்போகும் குழந்தையின் ஜாதகத்துல சுக்கிர செவ் தொடர்பு ஏற்பட்டு விட்டால் அந்த ஜாதகர் பாலியல் வன்முறையில் ஈடுபடலாம்.ஆல்லது அதற்கு இலக்காகலாம். ஒரு முறை இலக்காகிவிட்டால் பின் அமைதியான வாழ்வு கிடைக்கலாம்.(தோஷம் கடுமையா இருந்தா பாலியல் வன்முறைக்கு இலக்காவது தொடரவும் வாய்ப்பிருக்கிறது) அதே நேரம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் சர்வ நிச்சயமாய் பாலியல் வன்முறைக்கு இலக்காக வாய்ப்பிருக்கிறது.
சுக்கிர செவ் தொடர்பு இல்லாது செவ் மட்டும் பிரதிகூல நிலையில் இருந்தால் ஜாதகர் வன்முறையில் ஈடுபடலாம்.அல்லது வன்முறைக்கு இலக்காகலாம்.
இதையெல்லாம் தவிர்க்க முடியுமா?
செவ்வாயை பற்றி எழுத எழுத புதிய புதிய விஷயங்கள் ஸ்பார்க் ஆயிட்டே இருக்கு.( தர்கத்துக்கும் புரட்சிக்கும் காரகர் ஆச்சே)
நாம கணக்குல வீக்கு இருந்தாலும் சின்னதா ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். மொத்தம் 12 ராசி/லக்னம். செவ் 3,6,10,11 லருந்து தோஷமில்லை.
ஒரு நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 4/12 பேருக்கு தான் தோஷமிருக்காது. மத்த 8/12 பேருக்கு தோஷம் நிச்சயம். ஒரு ஒரு மிசத்துக்கு நாலு குழந்தை பிறக்குதுன்னு வச்சிக்கிட்டா ஒரு லக்னம்(சுமாரா) ரெண்டு மணி நேரம் -அதாவது 120 நிமிஷம் – 120×4 480 குழந்தைகள். அப்போ செவ் பிரதி கூலமா இருக்கக்கூடிய எட்டு லக்னங்களில் 480X8 = 3,840 குழந்தைகள் பிறக்கிறார்கள்.
ஆக செவ் அனுகூலமான நிலையில் உள்ள லக்னங்களில் மட்டுமே குழந்தைகள் பிறந்தால் எத்தனை பிரச்சினைகள் அவாய்ட் ஆயிரும்? இது சாத்தியமா?
எச்சரிக்கை:
செவ்வாய் 3,6,10,11 ல இருந்துட்டா மட்டும் போதாது.அவர் லக்னாதிபதி, சுக ஸ்தானாதிபதி,பஞ்சமாதிபதி,களத்ராதிபதி,அஷ்டமாதிபதி, விரயாதிபதி ஆகியோருடன் சேரக்கூடாது.(ஒரு சில லக்னங்களுக்கு இதனால பெரிய நஷ்டமில்லாது போகலாம். மத்த லக்னக்காரவுகளுக்கு)
நவகிரகங்களுடன் பேட்டின்னு ஆரம்பிச்சம். சூரியன்,சந்திரனுடனான பேட்டி முடிஞ்சு செவ்வாயை கலாய்ச்சுக்கிட்டிருந்தம். அந்த பதிவுலதான் என்னடா இது ஆண்,பெண் வித்யாசமே இல்லாம செவ் தோஷத்தை பத்தின மேட்டர் மொட்டையா போயிட்டிருக்கேன்னு தோனுச்சு. படக்குன்னு செவ் தோஷம் ஆண் பெண் வித்யாசம்னு ட்ராக் மாறிட்டம்.
இந்த பதிவுல மேற்படி தோஷங்களே இல்லாம குழந்தைகள் பிறக்க வாய்ப்பே இல்லையாங்கற கேள்வி பிறக்குது.
ஒரு 24 மணி நேரத்துல பிறக்கிற 5,760 குழந்தைகளில் 3,840 குழந்தைகள் செவ் தோஷத்தோட பிறக்கிறாய்ங்க. ஆக தேமேன்னு வாழ்ந்துட்டு போற குழந்தைகள் 1920 பேர் தான். ஏன் வன்முறை வெடிக்காது?
டவுட்டு:
ஒரு பத்து வருசத்துக்கு மிந்தி கூட இத்தனை வன்முறை கிடையாதே ..இப்பம் மட்டும் ஏன் இத்தீனி ரத்தக்களறி. அப்போ தோஷ ஜாதகர்களே அதிகமா பிறக்கிறாய்ங்களோ அதுக்கென்ன காரணம்னு கேப்பிக.
பத்து வருசத்துக்கு மிந்தி கூட தனிக்குடித்தனங்கள் குறைவு. இப்பம் சாஸ்தியாயிருச்சு. கண்ட நேரத்துல கதவை தாப்பா போட்டு ஷோ போட்டுர்ராய்ங்க போல. தப்பித்தவறி அந்த சமயம் கரு நின்னா தோஷ ஜாதகர்கள் தான் பிறப்பாய்ங்க.
இதையெல்லாம் தவிர்க்க எதுனா வழி இருக்கான்னா நிச்சயமா இருக்கும். ஏற்கெனவே சொன்னாப்ல நாம கணக்குல வீக்கு ( புதன் பகைங்கோ) .ஆனால் பெரியவுக இந்த மாதிரி ஜாதகர்கள் பிறப்பதை தவிர்க்க எத்தனையோ வழி முறைகளை ஃப்ரேம் பண்ணி வச்சிருக்காய்ங்க.
உடலுறவுக்கு உகந்த நாட்கள்னு தலைப்பை வச்சிருக்கோமே அதான் மேட்டரே. உடலுறவுக்கு முக்கியமா கருத்தரிப்புக்கு உகந்த நாட்கள் எதுன்னு பார்ப்போம்.
கருத்தரிப்புக்காக உடலுறவு நிகழ வேண்டிய காலத்தை நிர்ணயிக்க சில விதிகள் எல்லாம் தரப்பட்டிருக்கு அந்த விதிகளை இப்போ பார்ப்போம்.
அதுக்கு முன்னே தலையாய டிப்ஸ் சிலது:
குழந்தை பிறக்க இருக்கும் காலம் தை முதல் ஆறு மாதங்களாக இருந்தால் நல்லது – பகலில் பிறந்தால் நல்லது – வளர்பிறையில் பிறந்தால் நல்லது. கிரகணங்கள் ஏதும் சம்பவைக்க கூடாது.
ஏன்னா இந்த காலகட்டங்களில் சுபகிரகங்களுக்கு பலம் அதிகம்.
முக்கியமா சேரக்கூடாத கிரகங்கள் சேர்ந்திருக்ககூடாது உம் .சந்திரன்+ கேது, சூரியன்+சனி/ராகு சனி+செவ் ,குரு+ராகு/கேது/சனி
விதிகள்:
அன்றைய நட்சத்திரம் ரோகிணி,உத்திரம், அஸ்தம்,அனுஷம்,உத்திராடம்,திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி ,ரேவதியாக இருக்கவேண்டும் ( இது ஃபர்ஸ்ட் க்ளாஸ்)
அல்லது அஸ்வினி,மிருகசீர்ஷம்,புனர்வசு,பூசம்,சித்திரை,அவிட்டமாக இருந்தாலும் பரவாயில்லை (இது செகண்ட் க்ளாஸ்)
எச்சரிக்கை:
முக்கியமான மேட்டரு மேற்படி நட்சத்திரங்கள் உங்கள் ஜன்ம நட்சத்திரமாக இருக்கக்கூடாது.
அன்றைய திதி துவிதியை,திரிதியை,சஷ்டி,சப்தமி, தசமி, ஏகாதசி,துவாதசி ,திரயோதசி ஆக இருக்கவேண்டும்
உடலுறவுக்கான சமயத்தில் மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய லக்னங்கள் உதயமாகி இருக்கவேண்டும். சுபர்களின் பார்வை இருந்தால் மற்ற லக்னங்களும் பரவாயில்லையாம்.
மேற்படி லக்னத்துக்கு 1-7-8 பாவங்கள் காலியா இருக்கனுமுங்கோ.
February 3, 2013 at 12:52 am
ஒரு டவுட்டு முருகேசன் அவர்களே. ஒருவர் வெளிநாடு செல்ல ஜாதகத்தில் கிரக அமைப்பு இருப்பது அவசியமா? முன்னெல்லாம் யாரோ ஆயிரத்தில் ஒரு பணக்காரர் அல்லது பிசினஸ் மேனுக்கு வெளிநாடு போகும் யோகம் இருக்கும். இந்த ஐட்டி வந்த பிறகு மிக மிக சாதாரணமாக இருந்தவர்களெல்லாம் அனாவைசிய்மாக அமெரிக்க சென்று வருகிறார்கள். பி ஈ படித்த பெண்களெல்லாம் ஒரு ஐ டி கார பையனை கல்யாணம் செய்துகொண்டு அமரிக்கா சென்று விடுகிறார்கள். திடீரென்று இந்த கால கட்டத்தில் மட்டும் வெளிநாடு செல்லும் யோகம் உள்ள ஜாதக காரர்கள் இத்தனை ஆயிரம் பேர் எப்படி பிறக்கிறார்கள் ?( வெளிநாடு செல்ல ஜாதக அமைப்பு அவசியம் என்றால் 0
February 3, 2013 at 5:52 am
வாங்க சிவா !
நம்ம முக நூல் பக்கத்துக்கு வாங்க ( ஒரு லைக் போட்டாலும் நல்லதே) அங்கே சொல்றேன்