கமல் அரசியலுக்கு வருவாரா : புதிய தகவல்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
விஸ்வரூபம் படத்துக்கு சிக்கல் வந்தப்போ என்னங்கடா இது லாஜிக்கே இல்லாம இவ்ளோ பிரச்சினையா? பர்த் டீட்டெய்ல்ஸ் கிடைச்சா எதுனா ஆராயலாமேன்னு நினைச்சேன்.அது இப்பம் கிடைச்சது .

இந்த ஜாதகம் கமலோடதா இருக்க வாய்ப்பிருக்கான்னு பார்க்கனுமே. பார்த்துரலாம். துலா லக்னம். லக்னாதிபதியான சுக்கிரனே ரெண்டுல வக்ரம் (அஷ்டமாதிபதியும் இவர் தான்). லக்னாதிபதி ஜாதகரை குறிக்கும் கிரகம். ஜாதகனும் ஒரு உசுருதானே.

எந்த உயிரும் தன்னை தான் அழித்துக்கொள்ளாது. காப்பாத்திக்கவே ட்ரை பண்ணும். ஆனால் அந்த காப்பாத்திக்கிற முயற்சிகளே அதை அழிச்சுரும்.

லக்னாதிபதி வக்ரமான ஜாதகர்களோட வாழ்க்கை டிஃப்ரன்டா இருக்கும்.அவிக செய்ல்பாடுகளை பார்த்தால் இத்தோட ஒழிஞ்சான்யான்னு தோனும்.ஆனால் நிமிர்ந்து நின்னுருவாய்ங்க. என்னைக்கு அவிக செட்டில் ஆகலாம்னு பார்க்கிறாய்ங்களோ அன்னைக்கு கதை கந்தலாயிரும்.

லக்னத்துல சனி உச்சம் , இவர் களத்ர ஸ்தானமான 7 ஐ பார்ப்பாரு. வாணிகமல் முகத்தை பார்த்திருக்கிங்களா? ஒரு முழம் இருக்கும் ( அஃதாவது முதுமை) -மேலும் பிரிவு வேற -சரிகாவும் இதே கேட்டகிரி தான்.

இவர் தொழில் ஸ்தானமான 10 யும் பார்க்கிறாரு. கமல் எப்படியா கொத்த உழைப்பாளின்னு அல்லாருக்கும் தெரியும்.

மேலும் இவர் ஊனமுற்றவராக் / மனவளர்ச்சியற்றவராக நடித்த ரெண்டு படமும் ரெண்டு மைல் ஸ்டோன். (சனி = ஊனம்)

இதுல சனி 4,5 க்கு அதிபதி .4= வித்யாஸ்தானம் இதுக்கு சனி அதிபதியானதால படிப்பு காலி. 4 = தாய் ,அவிக பாட்டியான பிறகு கமலுக்கு தாயானது தெரிஞ்ச கதைதேன். ( சனி =முதுமை) ,5 = புத்ரஸ்தானம் ( கமலோட புத்ரிகாரத்னங்களை அழகோ அழகுன்னு சொல்றாய்ங்க. எனக்கென்னமோ பாட்டிங்க மாதிரி தான் தெரியுது)

லக்னத்துல லாபாதிபதியான சூரி நீசம் , டிவி சீரியல்ல நடிச்சே காம்ப்ளெக்ஸ் கட்டிட்டவுக மஸ்தா பேரு இருக்காய்ங்க.ஆனால் கமல்?

லக்னத்துலயே வக்ர ஸ்திதியில புதன் இருக்காரு. புதன் 9-12 க்கு அதிபதி. 9 க்கு அதிபதி லக்னத்துல நின்னா சொத்து சேர்க்கனும்.வக்ரமானா? சொத்தை அழிக்கனும். புதன் லக்னத்துல நின்னா பிசினஸ் மைண்டு. அவர் வக்ரமா நின்னா ………….

3- 9 ல ராகு – கேது , 3 தைரிய ஸ்தானம் . 9 = பித்ரு ஸ்தானம் . கமலோட அப்பா ஒரு விஞ்ஞானிகணக்கா பண்ண ஆராய்ச்சிகளை எல்லாம் குமுதத்துல படிச்சிருப்பிங்க. மேலும் அவரு ஒரு ஞானியாவே வாழ்ந்துட்டதா சொல்லலாம்.

நான்கில் செவ் (இவர் 2- 7 க்கு அதிபதி) 4 ல் செவ் இருந்தா தரித்திரயோகம்னு ஒரு தாட்டி முக நூல்ல சொன்னாப்ல ஞா. ஆனால் அதே சமயம் செவ்=யுத்தம் , 4 = இதயம் . மனிதன் தன் இதயத்தை – தன்னை ஜெயிக்கனும் அது ஆதர்சம். ஆனா நிதர்சனம்? இந்த கலாட்டாவுல உலகவாழ்க்கைய கோட்டை விட்டுருவாய்ங்க போல.

2 க்கு அதிபதி 4 ல் நின்றால் சொல் இதயத்துலருந்து வருதுன்னு அருத்தம். பணம் வித்தையிலருந்து (STUFF) வரும்னு அருத்தம்.

7 க்கு அதிபதி 4 ல் நின்றால் 7 = மனைவி , 4 = தாய் . மனைவியில் தாயை காணும் பக்குவத்தை அடைவாருன்னு அருத்தம் .(இந்த வயசுக்கு அடைஞ்சே உட்டிருக்கலாம்)

10 க்கு அதிபதி சந்திரன் இவர் ஆறுல இருக்காரு ( மீன ராசிங்கோ – கமல் சார் கண்ணை பாருங்கோ ) 10 = தொழில், 6 = கடன், வழக்கு விவகாரம். இதனாலதேன் நம்மவர் எடுக்கிற ஒவ்வொரு படமும் வில்லங்கமாயிட்டே வருது.

ஆனால் கவனிக்க வேண்டிய மேட்டர் என்னடான்னா சந்திரன் instable planet. மினிமம் ரெண்டேகால் நாள் மேக்சிமம் 15 நாள் தான் பிரச்சினையே.

நல்ல நேரம் சதீஷ் கமலோட ராசிய வச்சு எல்லா பழியையும் தூக்கி அஷ்டம சனி மேல போட்டுட்டாரு. மீனத்துக்கு சனி 11 ,12 க்கு அதிபதி.

11 க்கு அதிபதிங்கறதால லாபம் லாக் ஆகும். (மூத்தவுகளுக்கு நெல்லதில்லிங்கண்ணா) 12 க்கு அதிபதிங்கறதால இவர் எட்டுல மறைஞ்சா ராஜயோகமுங்கோ..

மேலும் நம்ம பஞ்சாங்கப்படி ஜனவரி 30 வரை ( டுடே) ராசியாதிபதி குரு வக்ரம். இன்னைக்கு அவரு வக்ர நிவர்த்தி. இதை விடுங்க. தசாபுக்தியை எடுங்க.

இப்போ 18/Feb/2011 முதல் => 20/Oct/2013 வரை சுக்கிர தசையில குரு புக்தி நடக்குது. குரு தேவகுரு. சுக்கிரன் ராட்சச குரு. பொதுவாகவே சுக்கிரதசையில் குருபுக்தி,குருதசையில் சுக்கிர புக்தி வரக்கூடாது. வந்தால் சிக்கல் என்று கூட சொல்வதுண்டு. இது போன்ற தசா புக்தியில் தான் என்.டி.ஆர் சந்திரபாபுவால் மோசம் போனார்

அதுலயும் கமல் ஜாதகத்துல இன்னொரு ஆபத்தான அமைப்பு இருக்கு. அதான் கடகத்துல குரு உச்சம் பெற்று – லக்னத்தில் உச்சம் பெற்ற சனியால் பார்க்கப்படுவது. உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை கூட கிடைக்காது என்பது ஜோதிட விதி.

இதுல ஒரு ஆறுதலான அம்சம் என்னடான்னா சனி சூரியனாலயும் ,சூரியன் புதனாலயும் கட்டுப்படுத்தப்படறாய்ங்க.. குரு மட்டும் ஃப்ரெஷ்ஷா இருக்காரு. ராஜ கிரகமான குரு துலா லக்னத்துக்கு பாவி. இதனாலதேன் அரசு இந்த அளவுக்கு கமலை கலாய்ச்சு விட்டுருச்சு. ஏதோ கமல் நாத்திகரா இருக்கிறதால பொளைச்சாரு( குரு சனி பார்வை) .அவர் மட்டும் ஆத்திகரா இருந்திருந்தா தாளி .. ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்
( குரு =இதயம்).

இன்னொரு ராஜ கிரகமான சூரியன் சனியோட சேர்ந்ததும் இந்த மோதலுக்கு ஒரு காரணம். கமலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுகளுக்கும் இதுவே காரணம்.

20/Oct/2013 க்கு பிறகு வர்ர சுக்கிர தசையிலான சனி புக்தி மட்டும் லைஃப் டைம் அச்சீவ்மென்டை நிச்சயமா கொடுக்கும். ஏழேழு தலைமுறைகளுக்கும் அழியாத சொத்தை கமல் சம்பாதிப்பாரு.

கர்மகாரகன் மற்றும் பிதுர்களுக்கு காரகனான சனி லக்னத்துல உச்சம் பெற்று ஆத்ம காரகனாகிய சூரியனோட சேர்ந்து வக்ரம் பெற்ற வித்யாகாரகனான புதனோட சகவாசம் பண்றதால கமல் ஒரு ஃபிலாசஃபரா தன்னை நிலை நிறுத்திக்குவாரு. உலக புகழை அடைவார். தனிப்பட்ட முறையில திரைப்பட கலைக்கு குருகுலம் மாதிரி ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கு. புதன் = உலக வாழ்க்கைக்கான கல்வி. அவர் வக்ரம் பெற்றதால் = அவ்வுலக வாழ்க்கைக்கான கல்வி.

கமல் அரசியலுக்கு வருவாரான்னு தலைப்பை வச்சுட்டு கடைசி பாராவரைக்கும் சொல்லலின்னா எப்படின்னு கேப்பிக . சொல்றேன். கமல் அரசியலுக்கு வரமாட்டாரு.ஆனால் உலக அரசியல்வாதிகள் எல்லாம் கமலோட ஆட்டோகிராஃபுக்கு க்யூவுல நிப்பாய்ங்க.

Advertisements

7 thoughts on “கமல் அரசியலுக்கு வருவாரா : புதிய தகவல்கள்

  arul said:
  January 30, 2013 at 8:05 am

  timely post anna

  Fire said:
  January 30, 2013 at 11:09 am

  ni onnum aaniya pudunnka vanaam

  Saran said:
  January 30, 2013 at 11:34 am

  நான் கமலோட ஜாதகத்தை வெச்சு அதிகமா யோசிச்சு பார்க்கலை. என்னுடைய பிறந்த தேதி அக்டோபர் 7. கமல் – நவம்பர் 7. இப்போ விஸ்வரூபம் படத்துக்கு நடந்த பிரச்சனைகளை பார்த்ததும் அவரோட கடந்த கால தொழில் அனுபவங்களை லேசா முடிச்சு போட்டுப்பார்த்தேன்.

  மற்றவங்க லிப்ட்டுல 10வது மாடிக்கு ஈசியா போயிடுவாங்க. ஆனா 7ம் தேதி காரவுங்க ஏறிப்போக மாடிப்படி கூட கிடைக்காது. ட்ரைனேஜ் பைப்பை புடிச்சு மூஞ்சு முகம் பெயர்ந்துதான் ஏறியாகணும். அதே மாதிரி எந்த காரியம் தொடங்கினாலும் காரியத்தடை. புறமுதுகிட்டு ஓடாம உறுதியான நிலைப்பாடு அல்லது சில விஷயங்களில் லேசான சமரசம் செய்துகொண்டால் வெற்றி நிச்சயம்.

  அதே மாதிரி நாம நேர்மையா இருக்குற மாதிரி எதிராளியும் இருப்பாங்கன்னு நினைச்சு ஏமாறுவது கைவந்த கலையாக இருக்கும். புகழ்பெற்ற பழமொழி ஒன்று சொல்வார்கள். நாம் என்ன ஆயுதம் எடுப்பது என்பதை எதிராளிதான் தீர்மானிப்பான் என்று.

  பட ரிலீசுக்கு முன்னால் தனி அமைப்புகளுக்கு போட்டுக்காண்பித்தால் எல்லார் மனமும் குளிர்ந்து விடும். பட ரிலீசில் பிரச்சனை இருக்காது என்று நினைத்தார். இப்போது விஸ்வரூபம் ரிலீசுக்கு முன்பே பெரிய விஸ்வரூபம் எடுத்ததற்கு முக்கிய காரணம் இதுவாக அமைந்து விட்டது.

  கடந்த 23.01.2013ஆம்தேதி திருவாரூரில் ஒரு திருமணம். 1000 தாம்பூலப்பை ஆர்டர். திருவாரூரில் கொள்முதல் செய்ய முடியாமல் சில காரணங்களால் சென்னையில் ஏற்பாடு செய்தேன். இவ்வளவுக்கும் 26.12.2012 ஆம் தேதியே பை தயாரிப்பாளர்களிடம் பேசி பொங்கல் விடுமுறை ஒருவாரம் காலியாகிவிடும். அதனால் 12ஆம்தேதி கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டு 20ஆம் தேதி இரவு வரை உருப்படியான பதில் கொடுக்கவில்லை.

  மற்ற ஆர்டர் என்றால் தாமதம் மன்னிக்கப்படும். 23ஆம்தேதி கல்யாணத்துக்கு 22ஆம்தேதி மாலை 6 மணிதான் அதிகபட்ச கெடுவாக இருக்க முடியும். அந்த அக்கறை பை தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் என்று நம்பியது தவறாகிவிட்டது. ஆனால் என் உள்மனது எச்சரித்தது. அதனால் 20ஆம் தேதி இரவு சென்னை கிளம்பி போய் 21ஆம் தேதி பகல் முழுவதும் இருந்து இரவு 8 மணிக்கு நானே ஒரு லாரி பார்சல் சர்வீசில் புக் செய்து விட்டு திரும்பினேன். 21 இரவும் பேருந்து பயணம். பொதுவாக எனக்கு பஸ், ரயில் பயணங்களில் தூக்கம் வராது. அதனால் அதிகாலை 4மணிக்குமேல்தான் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் வேறுவழியின்றி இரண்டு நாட்களும் இரவுப்பயணம். இதனால் என் அலுவலகத்தை 21சென்னையில் இருந்த காரணத்தாலும், 22 பகல் முழுவதும் தூங்கியதாலும் திறக்க முடியவில்லை.

  ஆனால் என் மனதில் இருந்த ஒரே எண்ணம், நான் யாரிடம் ஏமாந்தாலும் பரவாயில்லை. என்னை நம்பி யாரும் ஏமாறக்கூடாது என்பதுதான்.

  இந்த ஆர்டரால் இரண்டு நாள் வருமான இழப்பு, அலைச்சலுக்குரிய கூலி, மன உளைச்சலால் சுமார் 2,500 ரூபாய் நஷ்டம். …ப்பூ இவ்வளவுதானா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் என் அலுவலகத்துக்குரிய வாடகை 1,500 மற்றும் மூன்று கடன் களில் வங்கி கடன் ஒன்றுக்கு மாத தவணை 1000 ரூபாயும் பிப்ரவரி மாதத்தில் என்னால் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னைப்பொறுத்தவரை இது பெரிய அடி.

  நானும் துலா லக்னம்தான். கமல் ரேஞ்சில் பல கோடி என்றால் என் அளவுக்கு 2500 பெரிய சிக்கல்.

  இன்னும் ஆராய வேண்டும்.

  antonybosco said:
  January 30, 2013 at 9:51 pm

  best calculation.keep it up murugesan sir.god bless you.

  MARUTHAPPAN said:
  January 31, 2013 at 12:22 am

  super!

  S.Sivakumar said:
  January 31, 2013 at 2:12 am

  விஸ்வரூபம் படத்ன்த்னை அடிமாட்டு விலைக்கு ஜெயா டிவிக்கு வித்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காதே. அதுக்கு எந்த கிரக அமைப்பு காரணமோ தெரியலியே/

  Thirumalaibaabu said:
  February 7, 2013 at 7:43 am

  Super Brother…Clear discussion and perfect post

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s