ஆருக்கு "அது" அறுபடும்?

Posted on

அண்ணே வணக்கம்னே !
நவகிரகங்களுடன் பேட்டி > செவ் தோஷம் ஆண் பெண் வித்யாசம்ங்கற சீரிஸ்ல சுக்கிர செவ் சேர்க்கை பண்ண கூடிய சேட்டைகளை கடந்த பதிவுல சொன்னேன்.

சுக்கிரன் =இன உறுப்பு , செவ் =ஆயுதங்கள் .ஆக இன உறுப்பு ஆயுதங்களால சேதமடையனும். இந்த நிலை எப்போ வரும்? ஏதாவது ஆப்பரேஷன் இத்யாதி நடக்கலாம். அல்லது ஆயுதத்தை வச்சு வேலை செய்யும் போது எக்கு தப்பா படாத இடத்துல பட்டுரலாம்.

இந்த நிலை வரதுக்கு இன்னொரு சீக்வென்ஸ் இருக்கு.

ஒருத்தன் ஊருல உள்ளவளை எல்லாம் கணக்கு பண்ணி – படுக்க போட்டு -ஏமாத்தி விட்டுர்ரான்னு வைங்க. அந்த பெண்களுக்கு சம்பந்தப்பட்ட அண்ணனோ தம்பியோ மேட்டர் தெரிஞ்சு நம்மாளை எதாச்சும் பண்ணனும்னு கோதாவுல இறங்கறான்னு வைங்க.

என்ன ஆகும்? கொய்யால “அதை” வச்சுக்கிட்டு தானே இத்தீனி ஆட்டம் போடறேன்னு அதை அறுத்தெரிஞ்சுருவான்.

இந்த சுக்கிர செவ் மேட்டருக்கு அயனான பரிகாரங்கள் தர்ரதா சொல்லியிருந்தேன். இந்த பதிவுல நிச்சயம் தரேன்.அதுக்கு மிந்தி தீர்த்துவைக்க வேண்டிய மேட்டருங்க நிறைய இருக்கு. விமல் சார் மெயில்ல ஓஷோவை பத்தி ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

ஆராரை பத்தியோ எளுதியிருக்கன்.ஆனால் நம்ம லைஃபுக்கு ஒரு ஃபைனல் டச் கொடுத்த ஓஷோ பத்தி எதுவுமே எழுதலியேன்னு உரைச்சது.( அவரோட கொட்டேஷன்ஸை ஆங்காங்கே தெளிச்சு விட்டதை தவிர) அதனால ஓஷோவை பற்றிய நம்ம பார்வையை எளுதியே உடறதா முடிவு பண்ணி எளுதியே உட்டேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க.

அடுத்து ஜோதிடம் 360 நூல் க்ளியரன்ஸ் சேல் பத்தி ஒரு ஆஃபர் கொடுத்திருந்தேன். அதுக்கு மொத ரெஸ்பான்ஸ் வந்திருக்கு. நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ பற்றிய மொத விமர்சனம். இதை படிக்க இங்கே அழுத்துங்க.

இப்போ சுக்கிர செவ் சேர்க்கை/சகவாசத்துக்கான பரிகாரங்களை பார்ப்போம்.

பெட் ரூம்ல யுத்த காட்சி கொண்ட சீனரிகள் வைக்கலாம். வசதி இருந்தா சரித்திர படம் செட்டிங் மாதிரி ஒரு கேடயத்துல ரெண்டு வாட்களை கூட வைக்கலாம். கணவன் மனைவி மார்ஷல் ஆர்ட்ஸ் ப்ராக்டிஸ் பண்ணலாம் (முடியாதவுக காராத்தேவுக்கான ஆடைகள் அணிந்து தலையணை சண்டை போடலாம்-

தலையணைல வாள் படம் எம்பிராய்டரி பண்ணிரலாம்.ஃபேப்ரிக் பெய்ண்ட்ல வரைய வச்சுக்கலாம்.

மெழுகை உருக்கி கலை பொருள் தயாரிக்கிற (பத்திக்?) முயற்சி செய்யலாம். இந்த சேர்க்கை எந்த பாவத்துல ஏற்பட்டிருக்கோ அதுக்குரிய அங்கத்தின் மீது ஆயுதங்களின் வடிவங்களை பச்சை குத்திக்கலாம்.

நெற்றி அ கண்ணத்தில் வாட்டர் கலரில் ஏதேனும் ஒரு ஆயுதம் வரைந்து கொள்ளலாம். அ இந்த வடிவத்தில் ஸ்டிக்கர் பொட்டு கிடைத்தால் ஸ்ரேஷ்டம். லட்சுமி நரசிம்மரை வழி படவும்( மடியில லட்சுமி மஸ்ட்) ஆண்கள் . இடுப்புல அரணாக்கயிறுல ஏதேனும் ஆயுத வடிவ டாலர் அணியவும்.

எச்சரிக்கை:
அண்ணே .. இது பொதுப்பலன் தேன். பை மிஸ்டேக் உங்க ஜாதகத்துல இந்த சேர்க்கை இருந்தா உஅனே டர்ராயிராதிங்க. உங்க லக்னம் எது, லக்னத்துக்கு சுக்கிரன் செவ்வாய்ல யாரு யோககாரகர்,யாரு பாவி இப்படி 108 பாய்ண்ட்டை அலசித்தேன் முடிவு பண்ணனும் ..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s