பாலியல் வன்முறை பெண்கள் மீது மட்டும் தானா?

Posted on

அண்ணே வ்ணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி /இதுல செவ் தோஷம் ஆண் பெண் வித்யாசம் இப்படி இழுத்த இழுப்புக்கெல்லாம் தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கிற உங்களுக்கு மிக்க நன்றி. இதுவும் செவ்வாயை பற்றிய பதிவுதான். தலைப்பு பொருத்தமா இருக்கவே பாலியல் வன்முறை பெண்கள் மீது மட்டும் தானாங்கறதை ஆப்ட் பண்ணிட்டன். சென்சேஷனும் வேணமில்லையா?

மொதல்ல மேட்டரை ஒடைச்சுர்ரன். ஜாதகத்துல சுக்கிர செவ் சேர்க்கை /தொடர்பு இருந்தால் ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் பாலியல் வன்முறைக்கு சான்ஸ் இருக்கு.

இவன் அவளையோ -அவள் இவனையோ டார்ச்சர் பண்றது மட்டுமில்லை -இவிக உலகத்தை மறந்து இருக்கிறப்போ – தேர்ட் பார்ட்டி என்ட்ரி கொடுத்து டார்ச்சர் பண்றதுக்கும் சுக்கிர செவ் தொடர்பு முக்கிய காரணம்.

கேஸ் ஸ்டடி 1:
ஆண் மூட்டை தூக்கும் தொழிலாளி. கொஞ்சம் போல குட்டையா இருந்தாலும் செமை பாடி. சரக்கடிக்கிற பழக்கம் உண்டே தவிர சாக்கடையில விழுந்து படுத்துக்கிடக்கிற கதையெல்லாம் கிடையாது.வேலையிலருந்து வந்ததுமே கரீட்டா கூலி பணத்தை பொஞ்சாதி கையில கொடுத்துட்டு தான் கடைக்கே போவான்.ஆசைக்கு ஒரு பெண்,ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு உபரியா . பொஞ்சாதிக்கு லூக்காடர்மா வேற. தினசரி அவிக அம்மாக்காரி வீட்டுக்கு வந்துருவா. ஆத்தாளும் பொண்ணும் சேர்ந்துக்கிட்டு கேள்வி மேல கேள்வி .பேச்சாலயே அவனை திரு நங்கையாக்கிருவாய்ங்க.

இவ்ள எதுக்கு பலான நேரத்துல கூட பசுமை புரட்சிதேன். அதையும் மீறி செயல்படறான்னா அவன் ஆண்மையின் சிகரமாத்தான் இருக்கனும். அந்த நேரத்துல பளார் பளார் கூட உண்டு .(ஒண்டு குடித்தனங்கள்ள ப்ரைவசில்லாம் ஏதுங்ணா)

கேஸ் ஸ்டடி:2
ஆண் கார்ப்பெண்டர். லேசா திக்குவாய் உண்டு. மாமியார் காரி இவன் பொஞ்சாதியையும் நாலு வீட்ல பத்து பாத்திரம் கழுவ கூட்டிப்போயிருவாள்.இங்கயும் மொத கேஸ் கதையே தான். செமை ஜீனுங்ணா. மச்சான் காரன் கொலை கேஸுல உள்ளாற போயிட்டான்னா பார்த்துக்கங்க. புருசங்காரனை மென்ஷன் பண்றதே அந்த ஊமைகான் எங்கேன்னு தான்.இத்தனைக்கும் அவன் நல்லா வேலை தெரிஞ்சவன். நாள் தவறாம கை நிறைய கூலியோட தான் ஊட்டுக்கு வருவான். இங்கயும் பலான நேரத்துல கூட அடி உதை ஏச்சு பேச்சுல்லாம் உண்டு.

கேஸ் ஸ்டடி:3
இவன் ஒரு ட்ரைவர். ஒரு டாக்டர் கிட்டே வேலை செய்துக்கிட்டிருந்தான். டாக்டர் பொஞ்சாதி இவனை கூட்டிக்கிட்டு 3 தாட்டி ஊரை விட்டு போயிருச்சு. 3 தாட்டியும் ட்ரைவருக்கு செமை பூசை..டாக்டரு பொஞ்சாதிய மறுபடி சேர்த்துக்குவாரு. ட்ரைவரை வெளிய விட்டா குடும்ப மானம் கப்பலேறிரும்னு தன் கிட்டயே வச்சுக்குவாரு. இதுல டாக்டர் ஜாதகம் -ட்ரைவர் ஜாதகத்தை பார்த்தே ஆகனும். நேரம் வரட்டும்.

கேஸ் ஸ்டடி:4

இவன் ஒரு தத்து பிள்ளை. தத்தெடுத்தவரோட குடும்ப தொழிலை கன்டின்யூ பண்ணிட்டு இருந்தான். கண்ணாலமான ஆன்ட்டி ஒன்னு இவனை தள்ளிக்கிட்டு போயிருச்சு. இவனாண்டை பைசா காலியானதும் கழட்டி விட்டுட்டு தர்ஜாவா ஊருக்கு தனிய வ்ந்துருச்சு. நம்மாளு கையெல்லாம் வெட்டு காயம்,ஆசிட் காயத்தோட ஒரு ரயில்வே ஸ்டேஷன் குப்பை தொட்டியாண்டை கிடந்தான்.சனம் பார்த்து தூக்கி போட்டுக்கிட்டு வ்ந்தாய்ங்க.

சம்பவம்:1
திருப்பதி ,லேடீஸ் ஹாஸ்டல்ல நடந்ததா சொல்லப்பட்ட சம்பவங்களை பட்டியலிட்டா நாறிரும்.எத்தனையோ வாட்ச் மேன்,எலக்ட்ரீஷியன்,ப்ளம்பரை குத்துயிரும் குலை உயிருமா மீட்டிருக்காய்ங்க.

வேணம்னே எலக்ட் ரிக் ஒயர்களை பிடுங்கி விட்டுர்ரது, வேணம்னே பைப் லைனை ப்ரேக் பண்ணிர்ரது ஆளை வரவழைக்க வேண்டியது.

சம்பவம்:2 சம்பவம்:3 சம்பவம்:4 ?????????? இதை படிக்கிற உங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரவேண்டாமா அதனாலதேன் காலியா விட்டிருக்கம்.

இதுவே போதுமா இன்னம் கொஞ்சம் வேணமா? ஆக பாலியல் வன்முறைங்கறது பெண்களுக்கே உரித்தானதுல்ல. ஆண்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாயிட்டுதான் இருக்காய்ங்க. ஒடைச்சு சொன்னா நம்மை காரணமே இல்லாம ஒரு பெண் டார்ச்சர் பண்றான்னா அவள் நம்மை கூப்பிடறான்னு அருத்தம்.

எச்சரிக்கை:
பெண்கள் மீதான பாலியல் வன்முறைய ,அதன் தீவிரத்தை நான் குறைச்சு மதிப்பிடறதா முடிவு பண்ணிராதிங்க.இப்படியும் நாட்டு நடப்பு இருக்குன்னு காட்டறதுதேன் நம்ம நோக்கம்.

மறுபடி இந்த சுக்கிர செவ் மேட்டருக்கு வருவம்.

சுக்கிரனுடைய காரகத்வத்தையும், செவ்வாயுடைய காரகத்வத்தையும் ஒரு ஓட்டு ஓட்டீங்கன்னா இந்த சேர்க்கையோட விளைவு என்னனு புரிஞ்சுரும்.

மொதல்ல பாசிட்டிவ்:

செவ்- வீட்டு மனை சுக் – வீடு, செவ்- மரம் சுக் -ஃபர்னிச்சர், செவ்- நெருப்பு சுக் -விருந்து

இப்ப நெகட்டிவ்:

செவ்-ரத்தப்போக்கு சுக் – இன உறுப்பு , செவ்- யுத்தம் சுக் – காதல் , செவ் – போர்க்களம் சுக்: பெட் ரூம் , செவ் – சகோதரர்கள் சுக் – மனைவி/காதலி , செவ் -கோபம் சுக் – கில்மா,

சுக்கிர செவ்வாய் சேர்க்கையால ஊடல்ல இருந்து மஹிளா ஸ்டேஷன்ல புகார்,ஃபேமிலி கோர்ட்ல விவகாரம் வரை சகட்டுமேனிக்கு நடக்குது. சிலர் விஷயத்துல கைனகாலஜிக்கல் காரணங்களால் அறுவை சிகிச்சைய கூட தருது.

தக்காளி சட்னி வழிய வழிய புருசன் பொஞ்சாதி பஞ்சாயத்து நடக்குதுன்னா அங்கே நிச்சயமா செவ்,சுக் சேர்க்கை/தொடர்பு இருக்கும்.

அல்லது இவன் எக்கச்சக்க மூடோட இயங்கும்போது அவளுக்கு மாதவிலக்கு ஏற்படலாம்.அல்லது அங்கே மிஷின் ரெடி ரிப்பன்ல ஓடும்போதே இவனுக்கு மூடு கிளம்பலாம்.

இதுமட்டுமில்லிங்கனா உடலுறவின் போது உறுப்புகளில் ரத்தக்கசிவு கூட ஏற்படலாம். உறவுக்கு பிறகு சொட்டு மூத்திரம்,கடுமையான் வயிற்றுவலி இத்யாதிக்கும் வாய்ப்பிருக்கு. இதெல்லாம் செவ் தோசத்துக்கும்,சுக்கிர ,செவ் தொடர்புக்கும் அறிகுறிகள்.

சண்முக கவசத்துல எங்கெல்லாம் ,எப்போல்லாம் முருகன் வந்து காப்பாத்தனும்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு. அதுல ஒரு வரி “மால் விளையாட்டின் போதும்”னு வருது.

மால் விளையாட்டுன்னா என்ன? கில்மாதேன். கில்மாவின் போது கூட ஆபத்து வருமான்னா வரும். அது பார்ட்னராலயும் வரலாம். அல்லது உ.வ பட்டு புரளும் போது படாத இடத்துல அடி படலாம். அல்லது தேர்ட் பார்ட்டி என்ட்ரி கொடுக்கலாம்.

பிரச்சினைய சொல்லியாச்சு. இதுக்கு பரிகாரம் ? ஹி ஹி ..நாளைக்கு சொல்றேனே. ப்ளாகருக்கு வந்துட்டிருந்த ஹிட்ஸை கூட தியாகம் பண்ணியாச்சுல்ல . இந்த வலைதளத்துக்காச்சும் ஹிட்ஸை கூட்ட வேண்டாமா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s