செவ் தோஷம்: ஆண் பெண் வித்யாசம் 6

Posted on

செவ் தோஷம் ஆண்பெண் வித்யாசம்: 6
அண்ணே வணக்கம்ணே !

சமீப காலமா நம்ம வலை தளத்துல நவகிரகங்களுடன் பேட்டி – அதே சீரியல்ல செவ் தோஷம் ஆண் பெண் வித்யாசம்னு ஒரு உப சீரியல் ஓடிக்கிட்டிருக்கு.

கடந்த பதிவுல கண்ணால மேட்டருக்கு குரு,செவ்,சுக்கிரன் என்ற 3 கிரகங்களோட பலம் முக்கியம்னு சொல்லியிருந்தேன். மேஷம் டு மீனம் ஒவ்வொரு லக்னத்துக்கும் யார் எல்லாம் சுபர்,யார் எல்லாம் பாபர்னு ஒரு பட்டியலை கொடுத்திருந்தேன். எந்த லக்னத்துக்குமே மேற்படி 3 கிரகமும் அனுகூலமா இல்லேன்னு தோனுது. இதையெல்லாம் மீறித்தான் தம்பதிகள் வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க.

கடந்த பதிவுலயே உபரியா சர்ப்பதோஷம். லக்னாதி,குடும்பாதிபதி, சுகஸ்தானாதிபதி,பஞ்சமாதிபதி,களத்ராதிபதி, பெண்கள் ஜாதகத்துலன்னா பாக்யாதிபதி போன்றவுக 6,8,12 ல மாட்டறது – நீசம் – அஸ்தங்கதம் அல்லது இந்த பாவாதிபதிகளோட சகவாசம் வச்சுக்கறது. இப்படி எத்தனையோ வில்லங்கமிருக்குன்னும் சொல்லியிருந்தம்.
இதெல்லாம் மேற்படி தொடருக்கு சம்பந்தமில்லாத மேட்டரு.ஒரு ஃப்ளோவுல வந்துருச்சு.

நேத்திக்கு சுக்ர செவ் சகவாசம் தான் ரத்தக்களறி ரணக்களறி வரைக்கும் கொண்டு போயிருது. இவிக ரெண்டு பேரும் சேர்ந்து தொலைச்சாலோ – ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலோ -ஒருத்தர் வீட்ல அடுத்தவர் உட்கார்ந்தாலோ பல்புதான். அட செவ்வாய்க்கு களத்ராதிபத்யம் கிடைச்சாலே பல்பு மாட்டிக்கிதுங்ணான்னு சொல்லியிருந்தேனே இதான் இந்த சீரியலுக்கு தொடர்புள்ள செமை மேட்டரு.

மேலும் தில்லி கேங் ரேப் நடந்த தினமே இதை தீர்த்து வச்சிருக்கனும். கொஞ்சம் லேட்டாயிருச்சு.பெட்டர் லேட் தேன் நெவர் !

இன்னைக்கு பார்த்துருவம்.

அட செவ்வாய்க்கு களத்ராதிபத்யம் கிடைச்சாலே பல்பு மாட்டிக்கிதுன்னு சொன்னேன். இந்த அமைப்பு எந்தெந்த லக்னத்துக்கு வருதுன்னு பார்த்தா ரிசபத்துக்கு 7 ஆவது ராசி விருச்சிகம், துலாத்துக்கு 7 ஆவது ராசி மேஷம். மேஷ,விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ் .தெரியுமோன்னோ? ஆக ரிசப,துலா ராசிக்காரவுகளுக்கு களத்ராதிபதி செவ்வாய்.

செவ் எதிரிகளுக்கு காரகன். 7ங்கறது மனைவிய காட்டும் இடம். இவிக கண்ணுக்கு மனைவி எதிரியா தெரிவாய்ங்க போல. இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது. செவ் வயதில் இளையவர்களை அல்லது உருவ அமைப்பில் இளையவர்களாய் தோன்றுபவர்களை காட்டும் கிரகம்.

பத்து பனிரண்டு வயசு சின்ன பெண்ணை மணக்கவும் வாய்ப்பிருக்கு. இந்த வித்யாசத்தோட கண்ணாலம் கட்டற பார்ட்டி மெச்சூர்ட் மைண்டா இருந்தா மனைவிய ஒரு மகளா ட்ரீட் பண்ற இன்ஸ்டிங்ட் வந்துரும் பெருசா பிரச்சினை இருக்காது. மேற்படி மெச்சூரிட்டி,இன்ஸ்டிங்ட் இல்லின்னா முட்டல் மோதல் தேன்.

அட வயசு வித்யாசம்லாம் இல்லை.அப்பம் என்ன ஆகும்? ஒரு வேளை இவன் தொந்தியும்,பிருஷ்டமுமா கிழவாடியா மாறிட்டு வர்ர சமயம் கூட அவள் மட்டும் என்றும் இளையவளாய் தோற்றம் தர அதனால வர்ர இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கூட மனைவியை எதிரியா பாவிக்க வைக்கலாம்.

இன்னொரு பாய்ண்டு என்னன்னா இந்த மாதிரி களத்ராதிபத்யம் செவ்வாய்க்கு கிடைத்த ஜாதகர்கள் விரோதமாயிட்ட சொந்தத்துல கண்ணாலம் கட்டறதை பார்க்க முடியுது. விரோதம்ங்கறது -அதுவும் சொந்தத்துல வர்ர விரோதங்கறது என்னைக்கும் முழுக்க தீர்ரதில்லை. அது நீறு பூத்த நெருப்பா இருந்துக்கிட்டே தான் இருக்கும்.

புதுசா நெருப்பை தயாரிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு சாம்பிராணி புகை போடற பார்ட்டிகளுக்கு தெரியும். நீறு பூத்த நெருப்பை எப்படி ஜ்வலிக்க வைக்கிறதுன்னு இஸ்திரி பெட்டியில இஸ்திரி போடற பார்ட்டிகளுக்கு தெரியும்.இதனாலயும் பல்ப் மாட்டிக்கலாம்.

அசலான மேட்டரு என்னடான்னா களத்ராதிபத்யம் செவ்வாய்க்கு கிடைக்கும் போது மனைவிக்கு திடீர்மரணம் ஏற்படவும் வாய்ப்பிருக்கு. அந்த பெண்ணுக்கு அவள் ஜாதகப்படி திடீர் மரணம் இல்லைன்னு வைங்க. அது அவள் உள்ளுணர்வுக்கு தெரிஞ்சுரும்.

இவனோட வாழ்ந்தா டிக்கெட்டு கியாரண்டிங்கற செய்தி ஒரு வர்ணனாதீத மோட்ல அவ மைண்டுக்கு சேர்ந்து போயிருது.அதனால முட்டி மோதி வெளியேறிர்ரா. ரெண்டு பேருக்கும் இதே நிலைன்னாலும் பிரிவுக்கு வாய்ப்பிருக்குங்கோ.

செவ்வாய்க்கு களத்ராதிபத்யம் கிடைச்சாலே இந்த கதி. இதுல சுக்கிர செவ் சேர்க்கை ஏற்பட்டு தொலைச்சா என்ன ஆகும்?

ஏற்கெனவே இதை பத்தி விரிவா எளுதியிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க. நம்ம ப்ளாகர் வலைப்பூக்களை ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி ஆப்ஷனுக்கு மாத்திட்டதால நாம ஏற்கெனவே அழைத்தவர்கள் மட்டுமே படிக்கமுடியும். உங்களால படிக்க முடியலின்னா உங்க இமெயில் ஐடிலருந்து ஒரு மெயில் பண்ணுங்க.உடனே இன்வைட் பண்றேன்.

நாளைக்கு இந்த சுக்கிர +செவ் சகவாசத்தை பத்தி இன்னம் கொஞ்சம் டீப்பா பார்ப்போம்.

# ஜோதிடம் 360 க்ளியரன்ஸ் சேல்

2000,ஜூலை ,31 முதல் நாம வலையுலகத்துல எழுதிக்குவிச்ச ஜோதிட ஆய்வு கட்டுரைகளோட சாரத்தை ஜோதிடம் 360 ங்கற பேர்ல ஒரு புத்தகமா வெளியிட்டது ஞா இருக்கலாம்.(பக்கங்கள் : 80 சைஸு: ஆனந்த விகடன் சைஸுங்கோ)

மொத ஆயிரம் பிரதி வித்துப்போனதுல ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகி மறு அச்சு செய்தமா கொஞ்சம் போல பிரதிகள் தேங்கிப்போச்சு.

இப்பவும் ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னு போயிட்டு தான் இருக்கு. ஆனாலும் நமக்கு பெஸ்ட் செல்லர்னு ஒரு ஃபீலிங்கு.அது புடுங்கிக்கிட்டதால தேன் இந்த க்ளியரன்ஸ் சேல்.

ஆரம்பத்துல நம்மாளுங்க 423 பேர் வரைக்கும் ரூ.250 கட்டி முன்பதிவெல்லாம் பண்ணிக்கிட்ட புஸ்தவம்ணா. இதை மறந்துராதிங்க. அவிகளுக்கு தலா 2 பிரதி அனுப்பி நம்ம ஹானஸ்டிய நிரூபிச்சாச்சு.

இருக்கிற பிரதிகளை க்ளியர் பண்ணிரனும். இதனால இதுவரை ஜோதிடம் 36ல் ஐ வாங்காதவுக பெருவாரியா வாங்கனும்.அதே சமயம் நாட்டுக்கும் உபயோகம் இருக்கனும். என்ன பண்ணலாம்?

இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாம ப்ரப்போஸ் பண்ணிக்கிட்டிருக்கிற
ஆப்பரேஷன் இந்தியா 2000 .பற்றிய உங்கள் கருத்துக்களை (பாசிட்டிவா இருந்தாலும் சரி நெகட்டிவா இருந்தாலும் சரி 100 வார்த்தைகள் தமிழ்ல நம்ம மெயிலுக்கு அடிச்சு விடுங்க. மாபெரும் விலைகுறைப்பை பெறுங்க.

ஆமாம் இதுவரை ரூ.75 க்கு விற்கப்பட்ட ஜோதிடம் 360 உங்களுக்கு ரூ.50 க்கே அனுப்பப்படும். (கூரியர் செலவு தனிங்கோ) இந்த சலுகை பிரதிகள் உள்ளவரை மட்டுமே.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தி இன்னம் தெரியாதுன்னா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டுங்க..

எச்சரிக்கை:
புத்தகம் அனுப்ப வேண்டிய விலாசத்தை உங்கள் மெயிலில் தவறாது குறிப்பிடவும். நூலின் சலுகை விலையான ரூ50+கூரியர் கட்டணம் ரூ.30 ஐ எப்படி அனுப்பறது தெரியலியா? அதையும் உங்க மெயில்ல குறிப்பிடுங்க.

Advertisements

One thought on “செவ் தோஷம்: ஆண் பெண் வித்யாசம் 6

    arul said:
    January 26, 2013 at 1:49 am

    nice post anna

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s