முஸ்லீம் பெயர் தாங்கிகளும் -விஸ்வரூபமும்

Posted on

என்.டி.ஆரை ஆதரித்தேன் ( அவரது ட்ரமட்டிக் பிஹேவியரை அல்ல -அதை சரித்திரம் பதிவு செய்து கொள்ளவே இல்லை ) ஆனால் நான் நாயுடு அல்ல.

ஜகனை ஆதரிக்கிறேன் (அவர் ஊழலை அல்ல. அதை கோர்ட் பார்த்துக்கும்.) ஆனால் நான் ரெட்டி அல்ல.

விஸ்வரூபம் மேட்டர்ல நான் கமலை ஆதரிக்கிறேன். நான் இஸ்லாம் எதிர்ப்பாளனும் அல்ல. இந்துத்வ வாதியும் அல்லன்.கு.ப பிராமணனும் அல்ல. அட கமல் ரசிகன் கூட இல்லிங்க.

மறுபடி சொல்கிறேன். நான் கமலை, கலைஞனின் படைப்பு சுதந்திரத்தை, கருத்துரிமையை , ஜன நாயக நாட்டில் அரசியல் சாசனம் அளித்துள்ள ரைட் டு ஒப்பீனியன் என்ற அடிப்படை உரிமையை ஆதரிக்கிறேன்.

விஸ்வரூபம் சினிமாவில் இடம் பெற்றுள்ளதாய் சொல்லப்படும் ஆட்சேபகர காட்சி/வசனங்களை அல்ல.. இவற்றை மக்கள் நிராகரிப்பார்கள். அதே நேரத்தில் இந்த தடை ,எதிர்ப்பு எல்லாம் பனி மூட்டம் மாதிரி.

இப்பல்லாம் தியேட்டர்லயே படங்களை எடிட் பண்ணிர்ராய்ங்க .தெரியுமில்லை. உடையறது அவிக சேர், நாற்காலிங்கறதால. எத்தனையோ படங்கள் ஆப்பரேட்டர் கைவண்ணத்தால் பாடாவதி படங்கள் எல்லாம் பேர் சொல்லும் படங்களாகியிருக்கின்றன.

மொதல்ல கமல் ஒரு கலைஞன். உண்மை கலைஞன். சினிமாவில் ஈட்டியதை சினிமாவில் இழக்க துணிந்த நேர்மையான கலைஞன். தமிழன். மண்ணின் மைந்தன். எல்லாரும் வேலை வெட்டிய விட்டுட்டு இப்படி கத்திரியை தூக்கிக்கிட்டு அலைஞ்சா பல்ஸ் போலியோ சொட்டு மருந்து பத்தி கூட படம் எடுக்க முடியாது.

ஒரு இஸ்லாமியன் தான் ஒரு இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தால் விஸ்வரூபத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை நான் ஏற்கமாட்டேன். இந்த மாஸ் மென்டாலிட்டி ரெம்ப டேஞ்சரு. யோசிப்பையே தடுத்துரும்
மதமோ -சாதியோ நம்மை அடிமைப்படுத்த கூடாது.

என்ன சொல்லப்படுகிறதுன்னு மட்டும் பார்க்கனுமே தவிர யார் சொல்றாய்ங்கன்னு பார்த்து அதுக்கப்பாறம் ரூம் போட்டு யோசிக்க கூடாது. ரஜினி பால் தக்கரேவை சந்திச்சப்போல்லாம் – மோடிக்காக கவலைப்பட்டப்போல்லாம் நாம என்ன பண்ணோம்னு யோசிக்கனும்.

கலெக்டர்கள் தடை விதிப்பது ஃபேஷனாகிட்டாப்ல இருக்கு. இது ஜன நாயக நாடு. இங்கே மக்கள் தேர்ந்தெடுத்த மக்கட் பிரதி நிதிகள் முடிவுகளை எடுக்கனுமே தவிர ப்யூராக்ரட்ஸ் இல்லை.

மக்கள் பிரதி நிதிகள் எடுக்கக்கூடிய தப்பான முடிவுகளை விட ப்யூராக்ரட்ஸை முடிவெடுக்க விடுவது அது சரியான முடிவாகவே இருந்தாலும் ஜன நாயகத்துக்கு ஆபத்து. இந்த மேட்டர்ல தாத்தாவின் கருத்து 100 சதம் கரெக்டு.(அவரு உத்தேசம் எதுவா இருந்தாலும்)

சென்சார் போர்டுன்னு ஒன்னை வச்சிருக்காய்ங்க. அவிக தப்பா சர்ட்டிஃபை பண்ணிட்டாங்கனு நினைச்சா நீங்க சென்சார் போர்டுக்கு புகார் பண்ணனும். நாட்ல ,சமுதாயத்துல நடக்கிற ஒவ்வொரு சம்பவமும் யாரோ ஒருத்தரையாச்சும் பாதிக்கத்தான் செய்யும். அதுக்காவ அவிகல்லாம் ரோட்டுக்கு வந்துட்டா என்ன ஆகும்?

எந்த ஒரு சினிமாவும் யாரோ ஒருத்தரோட மனதை புண்படுத்தத்தான் செய்யும். அதுக்காவ எல்லாரும் ரோட்டுக்கு வந்து கூவ எல்லா சினிமாவையும் தடை பண்ணிட்டா எப்பூடி?

வெறுமனே இஸ்லாம் பெயரால் குரல் கொடுக்கும் நபர்கள் இன்றைய இஸ்லாமியர்கள் அனைவரும் உண்மையான இஸ்லாமைத்தான் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்தனும். தங்கள் உழைப்பை இந்த விஷயத்தில் கொடுத்து ஒவ்வொரு இஸ்லாமியனும் உண்மையான இஸ்லாமியனாக உருவாக பாடுபடனும்.

வெறுமனே ” இஸ்லாமிய பெயர் தாங்கிகளாக ” முஸ்லீம்கள் தொடரும் நிலையில் இப்படிப்பட்ட மாஸ் ஸ்ட்ரேட்டஜி எடுப்பது ஆபத்தானது.

சாமானியனுக்கு அல் குரான் பற்றியோ – முகமது நபி (சல்) பற்றியோ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால் முஸ்லீம்கள் தங்கள் சகிப்பு தன்மை மூலம் சாமானியர்களுக்கு இஸ்லாம், அல் குரான் , மற்றும் இஸ்லாம் குறித்த உயர்ந்த மதிப்பீடுகளை உணர்த்தமுடியும்.

கமல் சார் ! டோன்ட் ஒர்ரி. இங்கே மோகன்பாபுவோட படத்துக்கும் இதே நிலை ஏற்பட்டது. பிராமணர்கள் இழிவுப்படுத்திருச்சுன்னு ஏக அலப்பறை பண்ணாய்ங்க.

மானில அரசு தடை விதிக்கலின்னாலும் “வெட்டுக்களை” தீர்மானிக்க கமிட்டி போட்டாய்ங்க. மோகன்பாபு உடனே ஹை கோர்ட் போனாரு.

ஹைகோர்ட்ல சென்சார் சர்ட்டிஃபை பண்ணியாச்சுல்ல. மேட்டர் ஓவருன்னு தீர்ப்பு கொடுத்துட்டாய்ங்க.

ஹை கோர்ட் கதவை தட்டுங்க.. உடனே

Advertisements

6 thoughts on “முஸ்லீம் பெயர் தாங்கிகளும் -விஸ்வரூபமும்

   S Murugesan said:
   January 24, 2013 at 7:39 am

   ஐயா,
   வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  raju said:
  January 24, 2013 at 5:55 am

  visavaroopam showing in singapore without any problem

  MINNAL said:
  January 24, 2013 at 6:54 am

  நான் கமலை ஆதரிக்கிறேன்.

  S.Sivakumar said:
  January 25, 2013 at 3:35 am

  வீரமணி கருணாநிதி போன்றவர்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களை கேலி செய்தும் முஸ்லிம்களை அவர்களது வோட்டு வங்கிக்காக காக்காய் பிடித்து ஏற்றி விட்டதால்தான் இன்றைக்கு அவர்கள் அடாவடி அராஜகம் செய்கிறார்கள். முஸ்லிம் நாடுகளில் தீவிரவாதம் நடப்பது உண்மைதான் அதைகாட்டினால் இங்கிருக்கும் முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வர வேண்டும். அதாவது நாட்டை காட்டிலும் மதம்தான் இவர்களுக்கு பெரியது. அப்துல் கசாப் கூட்டம் மும்பையில் படுகொலை செய்தது; அப்சல் குரு பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினான் : ஒசாமா கூட்டம் அமரிக்காவில் தாக்குதல் நடத்தியது போன்ற செய்திகளை பத்தரிகைகளில் போடக்கூடாது அதனால் முஸ்லிம்கள் மனம் புண்படும் என்று கூட போராட்டம் நடத்துவார்கள் போலிருக்கிறது. அரசியல் வாதிகள்தான் வோட்டு வங்கிக்காக முஸ்லிம் அராஜகங்களை கண்டு கொள்ளாமல் தேச துரோகிகளாக இருக்கிறார்கள் என்றால் நீதிமன்றமும் இந்த அராஜக வாதிகளுக்கு துணை போவது வெட்க கேடு.

  TechBeeWeb said:
  January 26, 2013 at 7:18 am

  I support Kamal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s