செவ் தோஷம் :ஆண்,பெண் வித்யாசம் 5

Posted on

ஆணா பெண்ணா என்று நிர்ணயிக்கும் ஜீன் தான் அறிவு கூர்மையையும் நிர்ணயிக்குதுன்னு எங்கயோ படிச்சேன். இதை பல முறை கோட் பண்ணதான் கூட ஞா. கம்ப்யூட்டரோட மல்லாடறதுலயா அல்லது ஹார்ட் டிஸ்க் ஃபுல்லாயிருச்சா அல்லது அலட்சியமா தெரியலை லேட்டஸ்ட் டெவலப்மென்ட்ஸ் மைண்ட்ல ஸ்டோரே ஆகமாட்டேங்குது.

ஒரு ஆண் பெண்ணையும் ,ஒரு பெண் ஆணையும் குறித்து கொண்டுள்ள பார்வையே அவர்களுடைய ஓவர் ஆல் அறிவு,ஆட்டிட்யூட் ,சோஷியல் லைஃப் எல்லாத்தையும் தீர்மானிக்குதுங்கற நம்பிக்கை எனக்கு உண்டு.இந்த நம்பிக்கைய ஊட்டினதாலயே மேற்படி துணுக்கு செய்தி பத்திரமா நம்ம மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு.

எதிர்பாலினரை எந்த வித ஃபோபியாவும் இல்லாம எதிர்கொள்வதும் -புரிந்து கொள்வதும் -அவர்களோட உறவாடுவதும் எல்லாருக்கும் சாத்தியமில்லை. இது சாத்தியப்பட்டா தான் மேரீட் லைஃப் க்ளாக்வைசா இருக்கும். மேரீட் லைஃப் க்ளாக் வைஸா இருந்தா தாளி ..வீடு ,வாசல், பணம் ,பதவி இப்படி எது இருந்தாலும் இல்லின்னாலும் அசால்ட்டா வாழ்ந்துரலாம்.

ஜோதிடப்படி எடுத்துக்கிட்டா 12 லக்னம் இருக்கு. கண்ணாலத்துக்கு குரு,சுக்கிரன் ரெம்ப முக்கியம்ங்கறாய்ங்க. இதுல இந்த செவ் வேற டாமினேட் பண்ணுவாரு. குருவும் ,செவ்வாயும் அனுகூலமா இருந்தா பொன்,பொருள்,செல்வாக்கு இத்யாதி ஓகே. செவ் அனுகூலமா இருந்தா இதைத்தானே அரை டஜன் பதிவுகள்ள சொல்லிட்டு வர்ரேன். மறுபடியும் ரிப்பீட் பண்றது எனக்கே போரடிக்குது.இந்த சுக்கிரன் அனுகூலமா இருந்தா வீடு,வாகனம், கில்மா எல்லாம் ஓகேங்கறது பொது விதி.

எனக்கென்னமோ இந்த வீடு ,வாகனம் ரெண்டும் செக்ஸ் பவருக்கு ஆப்படிச்சுர்ரதா ஒரு ஹஞ்ச் இருக்கு.வாகனத்தை பத்தி ஏற்கெனவே விரிவா சொல்லியிருக்கேன். (98.4 டிகிரி -உடலுக்கு வெளியே
எட்செட்ரா ) .ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.

வீட்டை பொருத்தவரை கட்டி முடிக்கிறதுக்குள்ளாறவே ஏழை, மிடில் க்ளாஸ் பார்ட்டி எல்லாம் இழந்த சக்தி வைத்தியரை தேட வேண்டியதாயிரும் போல ..தப்பித்தவறி அசால்ட்டா கட்டி முடிச்சாலும் அட்டாச் மென்ட் காரணமா அதை மெயின்டெய்ன் பண்ற டென்ஷன்லயே புருசன் -பொஞ்சாதிக்குள்ள முட்டல் மோதல் வந்து கில்மா – இழவான்னு ஆயிரும் போல.

இதெல்லாம் சொந்த வீட்டை பத்தி தான். அதுக்குன்னு வாடகை வீட்ல இருந்தா ஆண்மை விளக்கு கம்பம் கணக்கா இருக்கும்னுல்ல. வாடகை தர வேண்டிய தேதி நெருங்க நெருங்க இனப்பெருக்க மண்டலமே அரசு இயந்திரம் போல முக்க ஆரம்பிச்சுரும்.

நான் சொல்ல வந்தது இதை விட சீரியசான மேட்டரு. இந்த பூமி சூரியனின் குழந்தை. நாம் இந்த பூமியின் குழந்தைகள். நாம ஆடை , செருப்பு அணிய ஆரம்பிச்சதுலயே சூரிய சந்திரர்களோடும், பஞ்ச பூதங்களுடனுமான பாதி தொடர்பு விட்டுப்போச்சு.இதுல ஹெல்மெட், தொப்பி அணியறவுக கதை எப்படியோ?

ஒரு தோராயமா கணக்கு போட்டு பாருங்க ஒரு 24 மணி நேரத்துல எத்தனை மணி நேரம் நாம திறந்தவெளியில இருக்கோம்?

ஜோதிடப்படி எடுத்துக்கிட்டா 12 லக்னம் இருக்குன்னு ஆரம்பிச்சு திருமணம்,தாம்பத்யத்துக்கு குரு,சுக்கிரன்,செவ் பலம் அவசியம் தேவைன்னு சொன்னேன்.

இதுல ஒவ்வொரு லக்னமா பார்ப்போம்.

1.மேஷம்:
சூரியன் ,குரு நன்மை செய்யும் கிரகங்கள்.ஆனால் இவர்களுக்கு சனியோட தொடர்பு ஏற்பட்டால் பல்பு தேன். சூரிய குரு சேர்க்கை யோகத்தை தரும். 5க்கதிபதியான சூரியன் 9 க்கு அதிபதியான குருவோட சேரும்போது குரு மங்கி போயிருவாரு. அதாவது பல மேட்டர்ல அப்பாவை பீட்பண்ணிருவிங்கன்னு அருத்தம். ( நிபந்தனை: சேர்க்கையில ரெண்டு பேருக்கும் ஓரளவுக்காவது பலம் இருக்கனும் – இந்த சேர்க்கை 6,8,12 போன்ற *துஸ்தானங்களில் ஏற்பட்டிருக்கக்கூடாது)

புதன்,சுக்கிரன்,சனி பாபிகள். சனி ,புதன் மாரகர்கள். ரெண்டாம் பாவாதிபதியானாலும் சுக்கிரன் டிக்கெட் போடமாட்டாரு. சனி புதன் போட்டுருவாய்ங்க. இவிக மாரக ஸ்தானங்களான 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கொப்பான கெண்டம்.

2.ரிஷபம்:
சூரியனும்,சனியும் நல்லவர்கள். சனி நெல்லவருன்னா லாஜிக் இருக்கு .( 9-10 க்கு அதிபதிங்கறதால) சூரியன் எப்படி நல்லவருனு கேப்பிக.சொல்றேன். இவரு நாலுக்கு அதிபதி. வித்யாஸ்தானாதிபதி. சூரியன் உதிச்ச பிற்பாடு கயிறா பாம்பாங்கற சந்தேகமே வராதுல்லியா.அதைப்போல இவிகளோட அறிவு சூரியனை போல பிரகாசிக்கும்.அந்த வெளிச்சத்துல நெல்லது -கெட்டதுல்லாம் பக்காவா புரிஞ்சி சாலாக்கா நடந்துப்பாய்ங்க.

சனி யோக காரகன். சந்திரனும் வியாழனும் ,சுக்கிரனும் பாபிகள். இது இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. லக்னாதிபதியே பாபியான்னு கேப்பிக.

சுக்கிரன்னா கில்மா. லக்னம்னா மனம்,உடல் பார்ட்டியோட உடல் ,மனம் பூரா கில்மா மயமா இருந்தா முன்னேற்றம் பாதிக்கப்படுமா இல்லியா?மேலும் சுக்கிரன் 6 க்கு அதிபதி. அதுனாலதேன் சுக்ரன் பாபின்னு சொல்லிப்புட்டாங்கோ.

மேலும் சந்திரன் ஏன் பாபி? சந்திரன் 3 ஆமிடத்துக்கு அதிபதியாறாரு. மூணுங்கறது மாரகஸ்தானமாச்சே .அதனால பாபி. மேலும் சந்திரன் நிலையில்லாத கிரகம். 3ங்கறது தைரியஸ்தானம். தைரியம் பர்மனன்டா இருந்தாலே மவனுங்க பல்பு குடுத்துர்ரானுங்கோ. இதுல சந்திரன் அப்பப்போ லீவு போட்டுட்டா பேதியாயிரும்ல.குரு ஏன் பாவின்னா இவரு அஷ்டமாதிபத்யம் வாங்கிக்கிறாரே.அதனாலதேன்.

சந்திரன் குரு செவ் மாரகர்கள்.புதன் கொல்லார். வியாழன் முதலானோர் கொல்வர். 2,3,7,8,12 பாவங்களில் பாபி/மாரகர்கள் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

குறிப்பு:
மேஷம் ரிஷபம் லக்னங்களுக்கு விளக்கியதை போல மத்த ராசிகளுக்கும் விளக்க ஆசைதான்.ஆனால் அளவா ஆசைப்படனுங்கறது நம்ம ஸ்டாண்ட். அதனால மத்ததை அடுத்த பதிப்புல பார்ப்போம்.

3.மிதுனம்:
சூரியன்,செவ்,குரு கொடிய பாபிகள்.குரு செவ் சேர்க்கை நல்லதில்லை.( நோட் திஸ் பாய்ண்ட் . குரு செவ் சேர்க்கையை பொத்தாம் பொதுவா குருமங்கள யோகம்னு ஊத்தி விட்டுருவாய்ங்க. நம்பாதிங்க) சுக்கிரன் யோககாரகர்.. சந்திரன் தனபாவாதிபதியானாலும் மாரகம் கொடுக்கமாட்டார். சூரியன்,செவ்,குரு 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் ஏற்படும்.

4.கடகம்:
குரு,செவ் சுபர்கள், செவ் யோககாரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்தால் யோகம்.சூரியன் கொல்லான்.சுக்கிரன்,புதன் பாபிகள்.புத சுக்கிரன் சனி மாரகர்கள். இவர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

5.சிம்மம்:
சூரியன் செவ் சுபர்கள்.புதன்,சுக்கிரன் பாபிகள்.செவ் சுக்கிரன் யோககாரகர்கள். ஆனால் செவ் சுக்கிரன் கூடியிருந்தால் தீயபலன். சனி சுக்கிரன் மாரகர்கள்.புதன் கொல்லான். மாரகர்கள் மாரகஸ்தானமாகிய 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

6.கன்னி:
சுக்கிர,சனி சுபர்கள், சந்திரன் செவ் குரு பாபிகள்.புத சுக்கிரர்கள் யோககாரகர். இவர்கள் கூடினால் யோகம். சந்திரன்,செவ்,குரு மாரகர்கள்.சுக்கிரன் தனபாவாதிபதியானுலும் கொல்லார். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

7.துலா:
சனி,புத,சுக்கிரன் சுபர்கள்.சூரி,செவ்,குரு பாபி.சந்திர,புதர்கள் யோககாரகர்கள் இவர்கள் கூடினால் யோகம்.சூரியன்,குரு மாரகர்கள். செவ் சப்தமாதிபதியானாலும் கொல்லான். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் தருவார்.

8.விருச்சிகம்:
சூரியன்,சந்திரன்,குரு சுபர்கள்,செவ் ,புத ,சுக்கிரன் பாபிகள்.( செவ் லக்னாதிபதியானாலும் பாவிங்கறாய்ங்க.ஏன்னு கேப்பிக. செவ் யுத்த காரகர். வாழ்க்கையில எப்பயோ ஒரு தாட்டி ஃபைட் பண்ணா பரவால்லை. வாழ்க்கை முச்சூடும் போராடினா நாஸ்திதானே)

சூரி,சந்திரர்கள் யோககாரகர்கள். இவர்கள் கூடினால் யோகம். ( சந்திரனால் வரும் யோகம் என்பதால் நிலைத்த ,நீடித்த பலன் கிடைக்காது.) புதன்,செவ்,சுக்கிரன் மாரகர்கள். குரு சனி கொல்லார்.புதன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

9.தனுசு:
சூரிய,செவ் சுபர். சுக்கிரன் ஒருவனே பாபி. சூரியனும் புதனும் கூடினால் யோகம். (இது எப்டி ஒர்க் அவுட் ஆகும்? சூரியன் 9 க்கு அதிபதி. புதன் 7 ,10 க்கு அதிபதி – 9+10 அதிபதிகள் சேரும்போது தர்ம கர்மாதிபதி யோகம் வரும் போல..ஆனால் இந்த யோகம் ஒர்க் அவுட் ஆகிற விஷயத்துல நமக்கு சில சம்சயங்கள் உண்டு) சுக்கிரன் புதன் மாரகர்கள். சந்திரன் ,சனி கொல்லார்.சுக்கிரன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

10.மகரம்:
செவ் புதன் சுக்கிரன் சுபர்கள்.சந்திரன் குரு பாபிகள்.சுக்கிரன் ஒருவனே யோககாரகன்.சுக்கிரனும் புதனும் கூடினால் ராஜயோகம். சூரி,சனி கொல்லார்.சந்திரன் வியாழன் மாரகர்கள்.2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

11.கும்பம்:
சுக்கிரன் புதன் சனி சுபர்கள். சந்திரன் செவ் குரு பாபிகள்.சுக்கிரன் யோககாரகன். சுக்கிரன் செவ் கூடினால் யோகம்.( சுக்கிர செவ் சேர்க்கைய பற்றி தனி சாப்டரே இருக்குங்கோ – அதையும் ஒரு மூச்சு படிச்சுருங்க -கும்ப லக்னத்துக்கு மட்டும் ஓரளவு நன்மைய தந்தாலும் அவிகளுக்கும் சேர்த்து ஆப்படிக்க கூடிய கிரக ஸ்திதி இது ) குரு தனபாவாதிபதியானாலும் கொல்லான்.சந்திரன் செவ் கூடினால் யோகம்.சந்திரன் செவ் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

12.மீனம்:
சந்திரன் செவ் சுபர். சூரியன் புதன் சுக்கிரன் புதன் சனி பாவிகள்.செவ் குரு யோககாரகர்கள்.செவ்வாய் குரு கூடினால் யோகம் சூரியன் புதன் சுக்கிரன் சனி மாரகர்கள்.செவ் கொல்லார்.சூரியன் முதலானவர்கள் கொல்வார்கள் .மாரகர்கள் (செவ் தவிர) 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

இதுல எத்தீனி லக்னத்துக்கு குரு,சுக்கிரன்,செவ் மூன்று பேரும் சுபரா இருக்காய்ங்க? தமிங்கிலீஷில் 9985087583 க்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்க பார்ப்போம்.

இது போதாதுன்னு செவ் தோஷம் வேற இருக்கு. உபரியா சர்ப்பதோஷம். லக்னாதி,குடும்பாதிபதி, சுகஸ்தானாதிபதி,பஞ்சமாதிபதி,களத்ராதிபதி, பெண்கள் ஜாதகத்துலன்னா பாக்யாதிபதி போன்றவுக 6,8,12 ல மாட்டறது – நீசம் – அஸ்தங்கதம் அல்லது இந்த பாவாதிபதிகளோட சகவாசம் வச்சுக்கறது. இப்படி எத்தீனி வில்லங்கமிருக்கு.

இதையெல்லாம் மீறி ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழறாய்ங்கன்னா கோவில் கட்டோனம். சுஜாதா கோட் பண்ண மேட்டர் ஒன்னு ஞா வருது.

இந்த உலகத்துல உள்ள புருசன் பொஞ்சாதியை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். ஒன்னு பிரிஞ்சுட்டவுக.ரெண்டு பிரிய முடியாதவுக.

அதுலயும் இந்த சுக்ர செவ் சகவாசம் தான் ரத்தக்களறி ரணக்களறி வரைக்கும் கொண்டு போயிருது. இவிக ரெண்டு பேரும் திமுக -அதிமுக மாதிரி.இவிக ரெண்டு பேரும் சேர்ந்து தொலைச்சாலோ – ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலோ -ஒருத்தர் வீட்ல அடுத்தவர் உட்கார்ந்தாலோ பல்புதான். அட செவ்வாய்க்கு களத்ராதிபத்யம் கிடைச்சாலே பல்பு மாட்டிக்கிதுங்ணா.

இதையெல்லாம் எப்படி ஓவர் கம் பண்றது? வேற என்ன அடுத்த பதிவுல பார்ப்போம். ப்ளாகர் வலைப்பூக்களுக்கு வித் அவுட் அப்டேட்ஸ் வந்துக்கிட்டிருந்த 400+300 ஹிட்ஸை வாலண்டியரா துறந்ததுக்கான பலனா அல்லது ரெம்ப நாளைக்கு அப்பாறம் அம்மன் சத நாமாவளியை படிச்சதாலயா அல்லது ரோஹிணி நட்சத்திர மகிமையா அல்லது எல்லாமுமேவா புரியலை. ரெம்ப நாளைக்கப்பாறம் வேலை ஜரூரா நடந்தது.

சொல்ல மறந்துட்டேன் நவகிரக சொற்பொழிவுங்கற தலைப்புல நாம தர்ர இலவச ஜோதிட ஆலோசனைக்கு இங்கே அழுத்துங்க ப்ளீஸ்.

Advertisements

One thought on “செவ் தோஷம் :ஆண்,பெண் வித்யாசம் 5

    arul said:
    January 23, 2013 at 2:43 am

    thoughtful post

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s