நவகிரக சொற்பொழிவு: 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இலவச ஜோதிட ஆலோசனைன்னு அறிவிச்சாலும் அறிவிச்சம் சனம் ஸ்டாண்டிங் அண்ட் ப்ளேயிங். ஏதாச்சும் வெப் சைட்ல ஒரு ஜாதகம் போட்டு அதை அட்டாச் பண்ணிட்டு கேள்வி கேளுங்கன்னு சொல்லியிருந்தம்.

சிலர் வெறும் பர்த் டீட்டெய்ல்ஸ் கொடுத்துர்ராய்ங்க. இல்லின்னா போட்ட ஜாதகத்தை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிர்ராய்ங்க.இல்லின்னா குறைஞ்சது அரைமணி நேரம் செலவழிச்சு வோர்ட்ல டைப் பண்ணி அனுப்பறாய்ங்க.வோர்ட்ல ஆயிரத்தெட்டு வெர்சன் இருக்கு. அது ஓப்பன் ஆகிறதில்லை. சிலர் அய்யர் மாருங்க வாக்கிய பஞ்சாங்கப்படி கையால எழுதின ஜாதகத்தை அனுப்பிர்ராய்ங்க.

நாம உபயோகிக்கிறது திருக்கணிதம். மேலும் அந்த ஜாதகத்துல பர்த் டீட்டெய்ல்ஸ் பலான சகாப்தம், பலான தமிழ் மாசம், பலான தமிழ் மாச தேதின்னு இருக்கும். இதுவும் பரவால்லை.தாளி பிறந்த நேரத்தை நாழிகை வினாழிகைன்னு கதை பண்ணியிருப்பாரு அய்யரு. அதை மணி நிமிசத்துக்கு மாத்தறதுக்குள்ள கிளிஞ்சுரும்.

இப்படி எத்தனையோ லொள்ளு. அதையெல்லாம் மீறித்தான் இலவச ஜோ.ஆலோசனை தந்துக்கிட்டிருக்கம்.

கடந்த காலத்துல முழுப்பலனுக்கு ரூ.250 வாங்கிக்கிட்டிருந்தம். ஜாதக வரத்தை குறைக்க அதை ரூ.500 ஆக்கிட்டம். நம்ம ஜாதகத்துல வீக்கா இருக்கிற ப்ளேனட்டே புதன் தான். ஆனால் நம்ம புத காரக தொழில் மற்றும் இன்கம் தான் தேடி வருது. ப்ளாக் எழுதறது, பத்திரிக்கை நடத்தறது,புஸ்தவம் போடறது எல்லாமே புத காரகம் தான்.

என்னடா இது ஓவரா போயிட்டிருக்கம்னு நினைச்சிட்டே இருந்தன். ஸ்கின் ப்ராப்ளம் வந்து ஆப்படிச்சுருச்சு. (இதுக்கும் புதன் தான் காரகம்) . டாக்டர் கொடுத்த மாத்திரையை ஒரு ரெண்டு நாள் நிப்பாட்டினாலும் நிலைமை ரெம்ப மோசமாயிருது.ஏறக்குறைய ஆல்க்கஹாலிக் கணக்கா அவதி. இதனால்தேன் கு.ப நாம பார்க்கிற ஜாதகங்களோட எண்ணிக்கைய குறைச்சுக்கலாம்னு தேன் ஃபீஸை அதிகரிச்சம்.

மறுபடி கில்ட்டி வந்துருச்சு. அதனால ரூ.250 டாரிஃபை அப்படியே விட்டுட்டு அதுக்கு பத்து கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தர்ரதா தீர்மானம் செய்தேன். அப்படியும் கில்ட்டி குறையலை.

கடந்த காலத்துல இலவச ஜோதிட ஆலோசனையில ஒரு ஜாதகத்துக்கு ஒரே கேள்விக்கு மட்டும் பதில் தந்துக்கிட்டிருந்தம். அதை மாத்தி தினசரி ஒரு ஜாதகத்துக்கு 10 கேள்விகள் இலவசம்னு அறிவிச்சுட்டம். நிபந்தனை: பர்த் டீட்டெய்ல்ஸ் – கேள்விகள் – மற்றும் பதில் அனுப்பவேண்டிய மெயில் ஐடிய குறிப்பிட்டு போஸ்டு கார்ட் எழுதனும்.ஆனால் இதையும் சனம் மதிக்கிறதில்லை.

எச்சரிக்கை:
இனி இலவச ஜோதிட ஆலோசனைக்கு தபால் மூலம் வராத ஜாதகங்களை பார்க்கிறதா இல்லை.

சனங்களோட கேள்விகளுக்கான பதில்களை அன்னைன்னைக்கு – அவிகவிகளுக்கு ஆடியோவா அட்டாச் பண்றதுல நிறைய குழப்பம்.அதனால இந்த பகுதிக்கு வந்த ஜாதகங்களை எல்லாம் -ஜாதகரின் பெயர்களை குறிப்பிடாம கொத்தா விஸ்தாரமா அனலைஸ் பண்ணி ஒரே ஆடியோ ஃபைலா போட்டிருக்கன். இதனால ஒளிவு மறைவில்லாத -ரஃப் ஒர்க்குடன் கூடிய நம்ம அனலைஸை கேட்டு ஜோதிடம் கற்க விரும்பறவுகளும் பலன் பெறலாம்.

ஏற்கெனவே இதே செனேரியோல நவகிரக சொற்பொழிவுங்கற பேர்ல ஒரு பதிவு போட்டதா ஞா. ஜோதிடம் கற்கும் ஆர்வம் கொண்டவர்கள் கேட்டு பயன் பெறலாம்.

இன்னைக்கு பவர் கட்டோட மல்லாடி ரெண்டு ஜாதகத்தை தான் அனலைஸ் பண்ண முடிஞ்சது. இங்கே அழுத்திய பிறகு திறக்கும் பக்கத்தில் உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டு பயன் பெறலாம்.

ஆடியோவுல ராகு கேதுக்கள் 2- 8 ல் இருக்கிறதுக்குண்டான பலன்+பரிகாரத்தை இதே பதிவுல தந்திருக்கிறதா சொல்லியிருக்கன்.

அது கீழே:

2ல் கேது 8ல் ராகு:

இது தங்களை ரகசியங்களுக்குள் புதைத்துவிடும். ஒரு காலத்துல அரசாங்க ரகசியங்கள் வெளி நாட்டுக்கு லீக் செய்யப்பட்டதாய் பரபரப்பு ஏற்பட்டது ஞா இருக்கலாம்.

கண்டதையும் ரகசியம் என்று குறிப்பிட்டு தொலைத்ததால் – ரகசிய காப்பு இயலாத ஒன்றாய் போனதால் இது இப்படி நிகழ்ந்தது

தாங்கள் கண்டதுக்கும் ரகசியம் மெயின்டெய்ன் செய்பவராக இருக்கலாம். ரகசியம்னா “எல்லாத்துலயும்” இது ஏறக்குறைய ராகு ஜன்மத்தில் இருப்பது போன்ற எஃபெக்டை தரலாம்.

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்
கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s