செவ் தோஷம் -பெண்கள் -ஏ பிரச்சினைகள் :3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இந்த பதிவுக்கு ஆக்சுவலா மாதவிலக்கு சக்கரமும் பெண்களின் செக்ஸ் உணர்வும்னு தலைப்பை வச்சிருக்கனும்.ஆனால் கன்டின்யுட்டி போயிருமேன்னு வைக்கலை. நாட்ல என்னென்னமோ நடக்குது. டீசல் விலை அதிகரிச்சுருச்சு. மாசாமாசம் அதிகரிக்க போறாய்ங்களாம். ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்ங்கறதே சந்தேகாஸ்பதம். மேலும் நஷ்டத்தை ஈடுகட்ட பல வழிகள் இருக்கு.

ஆயில் நிறுவனங்களோட வெட்டியான நிர்வாக செலவுகளை குறைக்கலாம். கன்சம்ப்ஷனையே குறைக்கலாம். தாளி நார்த் இண்டியால தயாரிக்கப்படற பொருட்களை அவன் உபயோகிக்கமாட்டான். சவுத் இண்டியாவுக்கு ட்ரான்ஸ்போர்ட் பண்ணனும் . சவுத் இண்டியால தயாரிக்கப்படற பொருட்களை அவன் உபயோகிக்கமாட்டான். நார்த் இண்டியாவுக்கு ட்ரான்ஸ்போர்ட் பண்ணனும் .ஃபேக்டரி காரனுகளோட பேசி ஃபேக்டரிகளையே சவுத் டு நார்த் மாத்தி தொலைக்கனும்.

மேலும் டீசல் லிட்டருக்கு அம்பது பைசா கூடினா கொத்துமல்லி கட்டு 2 ரூவாயிலருந்து அஞ்சு ரூபாய்க்கு எகிறிருது. இதையும் கவனிக்கனும்.

காங்கிரஸ் காரவுக ரோசிக்கறாய்ங்களாம்.கொய்யால.. லிஸ்டட் கம்பெனி முதலாளிக மட்டும் ஓட்டுப்போட்டா போதும்னு ஆட்சி நடத்திட்டு ரோசிச்சா மட்டும் என்ன ஆயிரப்போவுது.எய்ட்ஸுக்கு பென்சிலின் போட்டாப்ல விவசாய கடன் தள்ளுபடி -உங்க பணம் உங்களுக்கேன்னு ஜல்லி அடிச்சுட்டு எலீக்சனுக்கு போயிரப்போறானுவ.

தெலுங்கானா மேட்டர்ல என்ன செய்தாலும் பக்கவாதம் கியாரண்டி. என்னை கேட்டா தெலுங்கானா பகுதியில ஓட்டிங் வச்சிரனும். சேர்ந்திருக்கிறியா – கழண்டுக்கறியா ரெண்டே கேள்வி. அதே போல ஹைதராபாத். தெலுங்கானாவுக்கு தலை நகரமா இருக்கனுமா? கூட்டு தலை நகரமா? யூனியன் டெர்ரிடரியா? தீர்ந்தது கதை.

அதை விட்டுட்டு விளக்கெண்ணெயில கழுவி கழுவி நாறடிக்கிறானுவ. லேட்டஸ்ட் அப்டேட் என்னடான்னா
கூடுதல் மத்திய காவல் படையை வரவழைச்சுருக்காய்ங்க.

இதையெல்லாம் பார்க்கும் போது செமை கடுப்பாயிருது.எவனோ பண்ற தப்புக்கு நாமல்லாம் டார்ச்சர் அனுபவிக்க வேண்டியிருக்கு.

இதுவரை பக்கத்தை க்ளோஸ் பண்ணலின்னா நீங்க அதிர்ஷ்ட சாலின்னு அருத்தம். பதிவுக்கு போயிருவம். இன்னைக்கு மேட்டர் மா.வி சக்கரமும் பெண்களின் செக்ஸ் உணர்வும்.

இயற்கையின் முக்கிய நோக்கம் ஆணும் பெண்ணும் வச்சதை எடுக்காம ( உதடுகளை சொன்னேன்) அனுபவிக்கனுங்கறதுல்ல. ஜஸ்ட் இனப்பெருக்கம்.

ஆணில் விந்து ஊறினா செக்ஸ் உணர்வு ஏற்படும். பெண்ணில் புதிய முட்டைக்கரு வெளிபப்ட்டு கருப்பையில காத்திருந்தா மத மதன்னு இருக்கும். ஏக பத்தினி விரதனா வாழ்ந்தா ரெண்டு பாடியும் சிங்கரனைஸ் ஆகி அவளுக்கு முட்டை கரு வெளிப்படும் போது இவன்லயும் விந்து உற்பத்தி ஜரூரா இருக்கும். இல்லின்னா எக்கு தப்பாத்தான் நடக்கும்.

இவனுக்கு வயாக்ரா இல்லாமயே கத கதன்னு இருக்கிற சமயம் அங்கே டைப்ரைட்டர் ரெட் ரிப்பன்ல ஓடிக்கிட்டிருக்கும். அவளுக்கு மத மதன்னு இருக்கிற சமயம் நம்மாளு இழந்த சக்தி வைத்தியர்களின் பேட்டியை சின்சியரா பார்த்துக்கிட்டிருப்பான்.

செவ்வாய்க்கும் மா.வி சக்கரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா சொன்னேன். புருசன் பொஞ்சாதி ரெண்டு பேருக்கும் செவ் தோசமிருந்தா பிரச்சினையில்லை. தோசத்துல பல ரகம் இருக்குங்கோ.

பிரதானமானது பக்கா தோஷம் அடுத்தது பரிகார தோஷம். பக்க தோஷமிருந்தா ரெண்டு பேருக்கும் இருக்கோனம். பரிகார தோஷம்னாலும் அஃதே.

ரெண்டுமே பக்கா தோஷ ஜாதகம்னாலும் அதே விதமான தோஷமிருக்கனும். உ.ம் 7ல செவ்வாய்னா ரெண்டு பேருக்கும் 7 ல செவ். ஒருத்தருக்கு 7 ல அடுத்தவருக்கு 8 லன்னாலும் பிரச்சினைதான்.

இப்டியெல்லாம் நிபந்தனை போடறது கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆயிரும்ங்கறதுக்காவ இல்லை. கெட்டா ரெண்டுமே கெட்டு ஒழியும்.தட்ஸால்.இல்லின்னா ஒரு பாவமும் அறியாத சுத்த ஜாதகரும் கெட்டு சீரழியனுமில்ல.

ஆக ஜாதகத்துல செவ் பெட்டர் பொசிஷன்ல இருந்தா மா.வி சக்கரம் பெட்டரா இருக்கும். மா. சக்கரம் பெட்டரா இருந்தா பெண்ணின் காம உணர்வுகளும் பெட்டரா இருக்கும்.

ஜாதகத்துல செவ் கெட்டா எல்லாமே குண்டக்க மண்டக்க இருக்கும். மத்த கிரகங்களும் கெட்டிருந்தா வேலி தாண்டிய வெள்ளாடு கதையா மாறிரும்.அப்பாறம் குத்து கொலை வெட்டு (இதுவும் செவ் காரகம் தான்)

மன்சன்ல இருக்கிறது ஒரே சக்தி. அது காம சக்தியா வெளிப்படறது ஈஸி. சக்தி ஜெனரேட் ஆனதும் வெளிப்பட்டுரனும். இல்லின்னா அது வன்முறையா வெளிப்படும்.

பெண்ணாச்சும் பரவால்லை .ரெசிப்டிவ். வந்தியா வா . இல்லியா ஒழி. ஏன்னா இவன் வந்து சொர்கத்துக்கான மேப்பை கூட காட்டப்போறதில்லை.(இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தும்) 7 -23 தெரியும்ல. தெரியாதுன்னா நம்ம சைட்லயே தேடிப்பாருங்க.

ஆனால் ஆண் விஷயம் அப்படியில்லை. சக்தி ஜெனரேட் ஆகிட்டே இருக்கும். ஜெனரேட் ஆன சக்தி வெளித்தள்ளப்படனும்.இல்லின்னா எல்லா மேட்டர்லயும் மக்கர் பண்ண ஆரம்பிச்சுருவான்.வாழ்க்கை நரகமாயிரும்.

இது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. அவளுக்கு கிடைக்கலின்னா அது விதியாம். அவனுக்கு கிடைக்கலின்னா அடிச்சு நொறுக்குவானாம்.

பெண்ணுக்கு மா.வி சக்கரத்துல பிரச்சினை இருந்தா “அது”க்கு எப்ப ரெடின்னு கெஸ் பண்றது சிரமமாயிரும். இவள் ரெடியா இல்லாத சந்தர்ப்பத்துல அவன் சுரண்டினா நாறிரும். ஒரு வேளை “கூப்டா போய் தாண்டி ஆகனும்”ங்கற பெருசுங்க அறிவுரைய பின் பற்றினா போதுமான தளர்ச்சி இல்லாம – தசைகள் இறுகி –போதுமான லூப்ரிகேஷன் இல்லாம உடலுறவே ஒரு நரகமாயிரும்.

இந்த நரகத்தை அவள் பகல்ல அவனுக்கு காட்டினா என்ன ஆகும்.? யோசிச்சு வைங்க . திங்கள் கிழமை சொல்றேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s