செவ் தோசம் -பெண் – A பிரச்சினைகள் 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு கிரிஷ்ணகிரி வரைக்கும் ஒரு திடீர் பயணம். செஞ்சோற்று கடன் தீர்க்கிற மாதிரி வச்சுக்கங்களேன்.

நள்ளிரவு ஊரு வந்து சேர்ந்து –அலைச்சல்ல காலை 8.55 க்கு தேன் எந்திரிக்க முடிஞ்சது. 9 மணிக்கு பவர் கட். இதோ 11 மணிக்கு பவர் வந்தது. பதிவுக்கு வந்துட்டன்.

நவகிரகங்களுடன் பேட்டில ஆரம்பிச்சு , செவ்வாய் தோஷம்னு ட்ராக் மாறி ,செவ்வாயும் பலான பிரச்சினைகளும்னு சைடு வாங்கிட்டம். கடந்த பதிவுல செவ் தோஷம் பெண்களுக்கு தரும் பலான பிரச்சினைகளை தொட்டோம். இன்னைக்கு கொஞ்சம் விலாவாரியா பார்ப்போம்.

எந்த கிரகம் கெட்டிருக்கோ அந்த கிரக காரகம் தான் நம்மை அட்ராக்ட் பண்ணும். ஒத்திக்கு ரெட்டியா அந்த கிரக காரகங்கள் வந்து சேரும்னு சொல்லியிருந்தேன்.

செவ்வாய்க்குரிய முக்கிய காரகம் ரத்தம் – ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்..

மேற்படி விதியை செவ் தோஷ ஜாதகரோட ரத்தம் –ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களுக்கு பொருத்திப்பாருங்க. ரத்த உற்பத்தி அமோகமா இருக்கிறது – நோய் எதிர்ப்பு சக்தி உச்சத்துல இருக்கிறது கூட சாத்தியமே.

ரத்த உற்பத்தி அமோகமா இருந்தா சீக்கிரமே வயசுக்கு வந்துரலாம். நோய் எதிர்ப்பு சக்தி உச்சத்துல இருந்தா சாதிகலவரத்துக்கு ராணுவத்தை வரவழைச்சாப்ல. ராணுவம் போனதுமே ஊரு பத்தி எரியும். நோ.எ சக்தி உச்சத்துல இருந்தா அலர்ஜி- மெடிக்கல் ரியாக்சன் மாதிரி பிரச்சினைகள் வந்து உசுருக்கே கூட உலை வச்சுரலாம்.
சீக்கிரமே வயசுக்கு வந்துர்ரதால சீக்கிரமே மெனோஃபஸ் வரலாம். அந்த நேரத்துல ஒன்னோ ரெண்டோ பெத்து இறக்கி தொலைச்சிருந்தா கருப்பை, ஓவரிஸ் எல்லாத்தையும் கிள்ளி எரிஞ்சுரலாம். ஆனால் இப்பத்துல அரைக்கிழவி ஆனபிறவுதானே வரனே பார்க்க ஆரம்பிக்கிறாய்ங்க.அதனால சிக்கல் இன்னம் சிக்கலாகும்.

ஹெல்த்தியான பாடியில இந்த மா.வி சக்கரம் ஆரம்பத்துல இர்ரெகுலரா இருந்து போகபோக செட் ரைட் ஆகும். ஆனால் செவ் தோச ஜாதகர்கள் மேட்டர்ல இது தலைகீழா இருக்கும்.

அடுத்து செவ் காரகமுள்ள இதர விஷயங்கள்ள ஸ்போர்ட்ஸ் ,போட்டி,கோபம், மார்ஷெல் ஆர்ட்ஸ் இத்யாதியில அதீத ஆர்வம் ஏற்படும்.

கையில ரெண்டு லட்டு இருந்தா ஆளுக்கொன்னு கொடுத்துரலாம். ஒரே லட்டு இருந்தா பிச்சுத்தானே கொடுக்கனும். ஹ்யூமன் பாடி -அதுவும் செவ் தோஷமுள்ள பாடின்னா ரெம்ப டெலிக்கேட்டுங்ணா. இந்த அழகுல மேற்சொன்ன செவ் காரக மேட்டருங்கள்ள அதீத ஆர்வத்தை ஜாதகர் காட்டும் போது அதுக்குண்டான சக்தியை வழங்க பாடி ததிங்கிணத்தோம் போடும்.கடேசியில பாடியில உள்ள இனப்பெருக்க மண்டலத்தோட கோட்டால கைய வச்சுரும்.
இதனால செக்ஸுவல் பார்ட்ஸ் போஷாக்கை இழக்க ஆரம்பிக்கும். (உ.ம் மார்பகம் , பிருஷ்டம், இடுப்பு) இதனோட க்ளைமேக்ஸ் என்னடான்னா மா.வி சக்கரமே தாறுமாறாயிரும். சில கேஸ்ல சுத்தமா நின்னே போயிரும்.

நாம இங்கே பேசிட்டிருக்கிறது செவ் தோஷ ஜாதகர்களை பற்றி செவ் நெல்ல இடத்துல இருந்தா ஷைனி ஆப்ரஹாம் மாதிரி , சானியா மிஸ்ரா மாதிரி டூ இன் ஒன்னா தூள் கிளப்பலாம். இல்லின்ன பிடி உஷா ரேஞ்சுக்கு பாடி வந்துரும்.

என்னதான் இமையில கார் இழுக்கிற ஜூரிங்க இருந்தாலும் மனித உடல் ரெம்ப நொய்மையானது. எண்ணங்களால் உடனே பாதிக்கப்படுவது. அதிலும் ஆணில் இந்திரிய உற்பத்தி , பெண்ணில் மா.வி சக்கரம் மிக எளிதாக பாதிக்கப்படும்.

செவ் தோச ஜாதகருக்கு போட்டின்னா சர்க்கரை கட்டி ,கோபம்னா குலாப் ஜாமூன், எதிரின்னு ஒருத்தன் எதிர்ப்பட்டா அதிரி புதிரியா தூள் பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க. கு.ப மனதளவிலாவது (எண்ணங்கள்)

ஆரு ஜாதகத்துல செவ் தூள் பொசிஷன்ல இருக்காரோ அவிகளுக்கு எதிரியே இருக்கமாட்டான். அப்படியே உருவானாலும் அவனே சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டு காலி. மத்த கிரகங்கள் பலகீனப்பட்டு ஒரு எதிரியோட யுத்தமே செய்ய வேண்டி வந்தாலும் வாத்தியாரு ஸ்டைல்ல “சிறிது நேரம் விளையாடிவிட்டு வருகிறேன்”னு தான் சொல்வாய்ங்க.

செவ் கெட்டிருந்தா உலகமே எதிரியாத்தான் படும். நெருங்கிய நண்பனை கூட எதிரியாக்கிட்டுத்தான் மறுவேலை. இவிக லைஃபே ஒரு மெகா -கிகா யுத்தத்துக்கான முஸ்தீபாத்தான் இருக்கும்.. இந்த இழவுல இ.பெ.மண்டலம் எங்கருந்து ஒழுங்கா வேலை செய்றது?

பெண்கள் மேட்டர்ல மா.வி.சக்கரத்துக்கும் அவிகளுக்கு “மூட்” வரதுக்கும் லிங்க் இருக்கு. அதை பத்தி – இது மேல செவ் தோசத்தோட எஃபெக்ட் பத்தி நாளைக்கு பார்ப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s